தமிழ் சினிமாவில் எப்படி சித்ரா சின்மயி மாதிரியான பாடகிகள் அதிக பிரபலமாக இருக்கிறார்களோ அதே போல ஹிந்தியில் மிக பிரபலமானவர் பாடகி ஸ்ரேயா கோசல். ஹிந்தியில் இவரது குரலை விரும்பாதவரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழில் சித்ராவிற்கு இருக்கும் அதே அளவிலான குரல் வளத்தை கொண்டவர் ஸ்ரேயா கோஷல்.
இதனால் அவருக்கு இந்தியா முழுவதுமே அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் கூட சில பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல். இந்தியாவில் பாடகியாக நினைக்கும் பலருக்கும் ஒரு இன்ஸ்ப்ரேஷனாக ஸ்ரேயா கோஷல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவரிடம் இந்த பாடலை பாடியிருக்கவே கூடாது என எந்த பாடலிலாவது நீங்கள் நினைத்ததுண்டா என கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்ரேயா கோஷல் ஆமாம் அப்படி ஒரு பாடல் உண்டு.
ஹிந்தியில் வெளியான அக்னி பாத் திரைப்படத்தில் சிக்கனி சிம்மேலி என்கிற ஒரு பாடலை பாடினேன். அது முழுக்க முழுக்க இரட்டை அர்த்தம் உள்ள ஒரு பாடல். ஆனால் அது நன்றாக ஹிட் ஆனது. அப்படியான பாடலை பல குழந்தைகள் அதன் அர்த்தம் தெரியாமலே பாடுவதை பார்க்க முடிந்தது.
அப்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த பாடலை நாம் பாடியிருக்க கூடாது என நான் நினைத்தேன் என கூறியுள்ளார் ஸ்ரேயா கோஷல்