Connect with us

என்ன கேட்காமல் அந்த பாட்டை எப்படி நீக்குனீங்க!.. கடுப்பான சிவாஜி கணேசன்!.. திரைத்துறையை விட்டு நீங்கிய பாடகர்!.. அடக்கொடுமையே…

sivaji ganesan and madurai somu

Cinema History

என்ன கேட்காமல் அந்த பாட்டை எப்படி நீக்குனீங்க!.. கடுப்பான சிவாஜி கணேசன்!.. திரைத்துறையை விட்டு நீங்கிய பாடகர்!.. அடக்கொடுமையே…

cinepettai.com cinepettai.com

Sivaji Ganesan : தமிழ் திரை நடிகர்களில் மிக முக்கியமானவர் என்றால் அது நடிகர் சிவாஜி கணேசன். இந்தியாவிலேயே அவரது காலத்தில் அவருக்கு இணையாக நடிக்கக்கூடிய இன்னொரு நடிகர் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் நடிகர் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவரைப் போலவே திறமையுள்ள மற்ற கலைஞர்களுக்கும் அதிக மதிப்பு கொடுத்தார். அவர்களின் பெரிய ரசிகராகவே சிவாஜிகணேசன் இருந்தார்.

Sivaji-Ganesan
Sivaji-Ganesan

உதாரணமாக கவிஞர் கண்ணதாசனுடன் (Kavingar Kannadasan) அடிக்கடி சண்டை ஏற்பட்டாலும் கூட கண்ணதாசனின் பெரிய ரசிகர் சிவாஜி என கூறலாம். அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தவர்கள் அதேபோல  பாடகர்களில் மதுரை சோமு மீது அதிக பற்று கொண்டவர் சிவாஜி கணேசன்.

மதுரை சோமுவிற்கு தமிழ் சினிமாவில்  அவரை அவமானப்படுத்தும் விதமாக ஒரு விஷயம் நடந்த பொழுது அதற்காக குரல் கொடுத்தவர் சிவாஜி கணேசன் சம்பூர்ண ராமாயணம் (Samboorva ramayanam) என்கிற திரைப்படம் தமிழில் எடுக்கப்பட்ட பொழுது அதற்கான பாடல்களை மதுரை சோமு பாட வேண்டி இருந்தது.

அதில் ஒரு பாடலை அவர் மிக வேகமாக பாடியிருந்தார் அதில் நடிக்கும் நடிகராலேயே அந்த பாடலை அவ்வளவு வேகமாக பாட முடியவில்லை அதனால் அந்த பாடலை மட்டும் படத்தில் மாற்றி விடலாம் என்று பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் அந்த பாட்டு பிரமாதமாக வந்திருந்தது இதனால் கடுப்பான சிவாஜிகணேசன் அந்த பாடலை தூக்கக்கூடாது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மதுரை சோமு அந்த ஒரு பாடலை எடுப்பதாக இருந்தால் நான் பாடிய எல்லா பாடலையும் படத்திலிருந்து எடுத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட பாடக் குழுவினர்கள் மதுரை சோமு பாடிய அனைத்து பாடல்களையும் படத்திலிருந்து எடுத்துவிட்டு புதிய பாடல்களை பாடி படத்தை வெளியிட்டு இருக்கின்றனர். இதனால் கோபமான மதுரை சோமு பிறகு சில காலங்கள் சினிமாவிற்கே வரவில்லையாம் சிவாஜி கணேசனும் கூட இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

To Top