• About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Tamil Cinema News
  • Tamil Cinema News
  • நருட்டோ – Naruto
No Result
View All Result
No Result
View All Result
No Result
View All Result

இனிமே என் படத்துல உனக்கு வாய்ப்பு கிடையாது.. மணி சார் ஸ்ரீகாந்தை பார்த்து கோபப்பட இதுதான் காரணம்..!

by yugen
July 8, 2024
in News, Tamil Cinema News
0

srikanth maniratnam

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றவர் நடிகர் ஸ்ரீகாந்த். 2002 ஆம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அந்த முதல் திரைப்படத்திற்கு ஐ.டி.எஸ்.ஏ வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் ஸ்ரீகாந்த். அதன் பிறகு அவர் நடித்த ஏப்ரல் மாதத்தில் மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றன.

முதல் படமே வெற்றி:

அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்றார் ஸ்ரீகாந்த். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கான வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. அதன் பிறகு எப்படியாவது திரும்ப கதாநாயகனாக வலம் வர வேண்டும் என்று நினைத்தார் ஸ்ரீகாந்த்.

விஜய்யுடன் சேர்ந்து நண்பன் திரைப்படத்தில் நடித்தார் நண்பன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட அதற்கு பிறகும் அவருக்கு வாய்ப்புகள் என்பது பெரிதாக கிடைக்கவில்லை.

இது குறித்த ஒரு பேட்டியில் அவர் பேசும் பொழுது ஏன் அதற்குப் பிறகும் வாய்ப்புகள் வரவில்லை என்பது எனக்கே தெரியாத விஷயமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

மணிரத்தினம் பட வாய்ப்பு:

இந்த நிலையில் மணிரத்தினம் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தும் கடைசியில் நடிக்க முடியாமல் போன அந்த சூழ்நிலையை விளக்கி இருக்கிறார் ஸ்ரீகாந்த்.

மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் ஒரு விபத்துக்கு உள்ளானார்.

அதனால் அவர் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து அவரை ஏற்கனவே புக் செய்து இருந்த தயாரிப்பாளர் என்னுடைய திரைப்படத்தை முடித்து கொடுத்துவிட்டுதான் மணிரத்தினம் திரைப்படத்திற்கு நீ நடிக்க செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்.

இதனால் மணிரத்தினத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த். இதனால் கோபமான மணிரத்தினம் இனி ஸ்ரீகாந்த்தை வைத்து திரைப்படமே இயக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார். இந்த நிகழ்வை ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். 

Tags: srikanthtamil cinematoday newsதமிழ் சினிமாஸ்ரீகாந்த்
Previous Post

ஊதுப்பத்தி கொழுத்துறதுக்குள்ள கடைல அலப்பறை.. கடுப்பாகி கேப்டன் செய்த வேலை!.. பகிர்ந்த காமெடி நடிகர்..!

Next Post

ஹோம்லி ரோலா தறாங்க.. அந்த மாதிரி நடிக்க ஆசை! – ஓப்பனாக ஆசையை சொன்ன சாய் பல்லவி!

Next Post

ஹோம்லி ரோலா தறாங்க.. அந்த மாதிரி நடிக்க ஆசை! - ஓப்பனாக ஆசையை சொன்ன சாய் பல்லவி!

  • மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!
  • இன்னும் எனக்கே படத்தின் கதை முழுசா தெரியல.. ஷாக் கொடுத்த காந்தாரா இயக்குனர்.!
  • மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!
  • மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!
  • தெய்வம்தான் என்ன காப்பாத்துனுச்சு… காந்தாரா படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்.!
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Tamil Cinema News
  • Tamil Cinema News
  • நருட்டோ – Naruto

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Tamil Cinema News
  • Tamil Cinema News
  • நருட்டோ – Naruto

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Exit mobile version