Tag Archives: அட்டக்கத்தி தினேஷ்

ஒரு படத்தில் நடிச்சு அந்த கஷ்டப்பட்டுட்டேன்.. உடம்பே மாறி போயிடுச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த அட்டக்கத்தி தினேஷ்

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அட்டக்கத்தி தினேஷ் இருந்து வருகிறார். அட்டக்கத்தி திரைப்படத்தில் இவர் நடித்தப்போது இவர் பெரிதாக பிரபலமாகவில்லை. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தன.

இந்த நிலையில் வித்தியாசமான கதை அமைப்பில் அட்டக்கத்தி தினேஷ் நடித்த திரைப்படம் குக்கூ. அந்த திரைப்படத்தில் கண் தெரியாத கதாபாத்திரமாக அவர் நடித்திருப்பார். அதற்காக அவரது விழிகளை மாறு கண் போல வைத்து கொண்டு நடித்தார்.

பிறகு அது அவருக்கே பிரச்சனையாக முடிந்தது, அதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது குக்கூவில் நடிக்கும் போது கண் தெரியாத நபர்களின் ஆசிரமத்திற்கு சென்று வந்தோம். அந்த சமயத்தில் கண் தெரியாதவர்கள் குறித்து நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.

குக்கூவில் ஆரம்பத்தில் நடிக்கும்போது கண்ணை சரியாக வைத்துதான் நடித்தேன். ஒரு நாள் நடிக்கும்போது கண்களை மாறு கண் போல வைத்தேன். அது நன்றாக உள்ளது அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் என இயக்குனர் கூறிவிட்டார்.

அதற்கு பிறகு படப்பிடிப்பு 2 வருடம் நடந்தது. அந்த தப்பை நான் அப்போது செய்திருக்க கூடாது. அதற்கு பிறகு எனக்கு எக்கச்சக்க பிரச்சனைகள் வந்தன. அதிலிருந்து சரியாக எனக்கு பல வருடங்கள் ஆனது என்கிறார் அட்டக்கத்தி தினேஷ்.

தங்கலானுக்கு பிறகு பா.ரஞ்சித்தின் புது முயற்சி!.. லோகேஷ் கனகராஜ் கூட பண்ணுனது கிடையாதே!..

தமிழில் சமூகநீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். பெரும்பாலும் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களில் படத்தின் கதையில் அரசியல் ரீதியாக ஏதாவது ஒரு விஷயத்தை பேசியிருப்பார்.

மேலும் அந்த படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்துவிடும். ஆனால் நட்சத்திரம் நகர்கிறது மாதிரியான சில திரைப்படங்கள் அவருக்கு அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித்.

Pa-Ranjith-

பழங்குடி இன மக்களுக்கு தங்கம் எடுக்க வரும் கும்பலுக்கும் இடையே நடக்கும் கதை இது என பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த படத்தை பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் இருவருமே மலை போல நம்பியிருக்கின்றனர். ஏனெனில் விக்ரமிற்கும் இதற்கு முன்பு பெரிதாக வெற்றி படங்கள் அமையவில்லை.

பா.ரஞ்சித்தின் அடுத்த திட்டம்:

இந்த நிலையில் தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் இயக்க போவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறாராம். மேலும் ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நடித்த நடிகர்களைதான் இந்த படத்திற்கும் அவர் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

thangalaan1

பொதுவாக பெரிய பட்ஜெட்டில் ஹிட் கொடுத்துவிட்டால் அந்த இயக்குனர்கள் அடுத்த படத்தை இன்னும் பெரிய பட்ஜெட்டில்தான் இயக்குவார்கள். லோகேஷ் கனகராஜ் மாதிரியான பெரும் இயக்குனர்களே அப்படிதான் படம் இயக்கி வருகின்றனர்.

ஆனால் அதற்கு மாறாக பா.ரஞ்சித் அடுத்து குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகப்பட்சம் இந்த படத்தை பா.ரஞ்சித்தே தயாரிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடிச்சே அவன் முதுகு தோள் கிழிஞ்சுட்டு!.. படப்பிடிப்பில் வெற்றிமாறன் செய்த சம்பவம்!. அடுத்த பாலாவா இருப்பார் போல.

சினிமாவைப் பொறுத்தவரை சில நடிகர்கள் ஏதோ நடித்தால் போதும் என்று சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிலர் உயிரைக் கொடுத்து நடிப்பார்கள். உதாரணத்திற்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச்சான் ஒவ்வொரு திரைப்படத்திலும் எந்த டூப்பும் போடாமல் அவரே அனைத்து சண்டை காட்சிகளும் நடிப்பார்

இதனால் அவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் ரசிகர்களுக்காக அப்படி ஒரு விஷயத்தை செய்வார். அதேபோல தமிழ் சினிமாக்களும் மக்களுக்காக பாடுபட்டு நடிக்கும் நடிகர்கள் பலர் இருக்கின்றனர்.

அதில் அட்டகத்தி தினேஷ் முக்கியமானவர். அவரை நடிக்க வைப்பது குறித்து பெரிதும் யோசித்து இருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் தினேஷ் நடிக்க துவங்கிய பிறகு அட்டக்கத்தி தினேஷ் தவிர அந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்கிற அளவிற்கு அவர் சிறப்பாக நடித்துள்ளார்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு காட்சியில் வாழை மட்டையை வைத்து அட்டகத்தி தினேஷை போலீஸ் அடிப்பது போன்ற காட்சி வரும் அந்த காட்சிக்கு நிஜமாகவே வாழை மட்டையை வைத்து அடிக்க வைத்துள்ளார் வெற்றிமாறன்.

ஏனெனில் அப்போதுதான் பார்ப்பதற்கு அந்த காட்சி நிஜமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அப்படி அடிக்கும் பொழுது நிஜமாகவே அட்டகத்தி தினேஷிற்கு முதுகு தோல் உரிந்து விட்டது. அதனைப் பார்த்து படக்குழுவே அதிர்ச்சியில் இருக்கும் பொழுது சிறிது நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பில் நடிப்பதற்காக சகஜமாக நின்றுள்ளார் அட்டகத்தி தினேஷ்.

அப்பொழுது இவ்வளவு கஷ்டங்களை ஏன் தாங்கிக் கொள்கிறீர்கள் என வெற்றிமாறன் கேட்கும் பொழுது இது ஒரு நிஜக் கதை சார் இதில் 20 சதவீதத்தை தான் நாம் படமாக்குகிறோம். நமக்கே இப்படி என்றால் உண்மையாக இந்த அடிகளை வாங்கியவர்களுக்கு எப்படி இருக்கும் அதோடு ஒப்பிடும் பொழுது நான் வாங்குவது ஒன்றும் பெரிய ஆடி இல்லை என்று கூறியுள்ளார் அட்டகத்தி தினேஷ். இந்த விஷயத்தை வெற்றிமாறன் பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.