Tag Archives: அமீர்

சங்கிகளின் வேலை இது.. தக் லைஃப் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏனெனில் 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினமும் கமல்ஹாசனும் இணையும் ஒரு திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருக்கிறது, மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்தான் கமலுக்கு எதிரி கதாபாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த இயக்குனர் அமீர் தற்சமயம் படம் பார்த்துவிட்டு வந்த அமீர் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் பேசிய பத்திரிக்கையாளர்கள் எப்போதுமே கமல்ஹாசன் குறித்த விஷயங்களில் அவருக்கு முதலில் ஆதரவாக நீங்கள்தான் பேசுகிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமீர் கூறும்போது நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். விஸ்வரூபம் விஷயத்திலும் சரி, இப்போதும் சரி கமல்ஹாசன் விஷயத்தில் எந்த தவறும் இல்லை. அவர் திராவிட மொழிகள் எல்லாம் ஒன்று என்கிற ரீதியில்தான் பேசியிருந்தார்.

அதை சில சங்கி குழுக்கள் மாற்றி பேசி வருகின்றன என கூறியுள்ளார் அமீர். மேலும் அமீர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் படம் தயாராவது குறித்து கமல்ஹாசனிடம் பேசுவதாகவும் அமீர் கூறியுள்ளார்.

 

அரசியலில் விஜய்யும் ரஜினியும் ஒண்ணு கிடையாது.. சூப்பர் ஸ்டாரை வைத்து செய்த இயக்குனர் அமீர்..!

Vijay, a famous actor in Tamil, started a party called T.V.K. After the party’s name and flag had already been announced, Vijay recently announced the party’s policies. Director Aamir has commented on this

தற்சமயம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஒரு பக்கம் விஜய்யின் அரசியல் நுழைவுக்கு ஆதரவுகள் இருக்கின்றன.

மற்றொரு பக்கம் அதை எதிர்த்தும் பலரும் பேசி வருகின்றனர் விக்ரவாண்டியில் விஜய் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார் மேலும் மக்கள் எதிர்பார்க்காத வகையில் பேச்சு ஒன்றை கொடுத்திருந்தார் விஜய்.

vijay tvk

பெரும்பான்மையான மக்களுக்கு விஜய்யின் இந்த பேச்சு பிடித்திருந்தது என்றாலும் அரசியல் சார்ந்து இருப்பவர்களுக்கு அது பிடிக்கவில்லை அவர்கள் பெரும்பாலும் கூறும் பொழுது சினிமாவில் வசனங்கள் பேசுவது போலவே மேடையிலும் வந்து பேசி இருக்கிறார் விஜய் என்பது அவர்களது குற்றச்சாட்டாக இருந்தது.

அமீர் கூறிய விஷயம்:

இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் வகையில் தான் விஜய்யின் பேச்சுக்கள் இருந்தன. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் அமீர் பேசி இருந்தார். அவர் கூறும் பொழுது விஜய் முன்னெடுக்கும் அரசியல் ஆரோக்கியமானதாக தெரிகிறது.

அவர் அம்பேத்கர் பெரியார் அஞ்சலை அம்மாள் போன்றவர்களை தன்னுடைய தலைவர்களாக முன்னெடுக்கிறார். ஆனால் இதற்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அவர் ஆன்மீக அரசியல் என்று கூறினார்.

ameer

அதற்காக ராகவேந்திர ஸ்வாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் இவர் ராகவேந்திராவை இங்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மிக சொற்பமான நபர்கள் தான் ராகவேந்திரரை வணங்கி வந்தனர். எனவே அவரது அரசியல் தலைவராகவே ரஜினிகாந்த் ராகவேந்திராவை முன்னிருத்துகிறார். அந்த வகையில் பார்க்கும் பொழுது விஜயின் பார்வை தெளிவாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் அமீர்.

மூஞ்சுல அடிச்ச மாதிரி இருந்துச்சு.. பிச்சைக்காரன் கற்றுக்கொடுத்த பாடம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் அமீர்..!

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் சமூக அக்கறை கொண்ட ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அமீர் அதற்கு பிறகு தனியாக திரைப்படம் இயக்கத் தொடங்கினார்.

எப்போதுமே சமூகத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை நடக்கும்பொழுது அது குறித்து குரல் கொடுத்து வந்துள்ளார். அப்படியாக சமீபத்தில் அவருக்கு நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சமீபத்தில் நான் காரில் வெளியில் சென்று கொண்டிருந்தேன்.

அப்பொழுது வயது முதிர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் என்னுடைய கண்ணாடி கதவை தட்டினார். அவரை பார்க்கும் பொழுதே அவர் மிகவும் வறுமையில் இருக்கிறார் என தெரிந்தது. எனவே அவரிடம் ஒரு 50 அல்லது 100 ரூபாய் கொடுக்கலாமென்று என்னுடைய காரில் தேடினேன்.

அமீர் கூறிய விஷயம்:

ஆனால் என்னிடம் சில்லறையே இல்லை 500 ரூபாய் நோட்டுகள் தான் இருந்தது. உடனே அந்த பிச்சைக்காரன் என்னை பார்த்து காசு இல்லைனா விடுங்க தம்பி என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ameer

அப்பொழுதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. இவ்வளவு ரூபாய் காசு இருந்தும் அவருக்கு ஒரு 500 ரூபாய் கொடுக்க மனம் இல்லையே நான் பிச்சைக்காரனா? அல்லது அவர் பிச்சைக்காரரா என்கிற கேள்வி எழுந்தது.

ஒரு உணவகத்திற்கு சென்று சாப்பிடுகிறோம் என்றால் டிப்ஸ் ஆக ஒரு பெரிய தொகையை கொடுக்கிறோம். அப்படி என்றால் இந்த சமூகத்தில் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் ஒரு நிர்ணயத்தை வைத்திருக்கிறோம்.

பிச்சைக்காரன் என்றால் அவனுக்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் அதுவே வெயிட்டர் என்றால் நமது அந்தஸ்தை காட்ட வேண்டும் என்பதால் நிறைய கொடுக்க வேண்டும் ஏன் ஒரு பிச்சைக்காரனுக்கு 500 ரூபாய் கொடுப்பதில் என்ன கெட்டு விடப் போகிறது என்று கேள்வியை எழுப்பி இருந்தார் அமீர்.

இல்லடா வெண்ணைகளா!.. அரசியல் விமர்சகர் குறித்து பேசிய அமீர்!..

ஜாபர் சாதிக் போதை கடத்தல் குற்றம் தொடர்பான பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட துவங்கிய காலக்கட்டம் முதலே இயக்குனர் அமீர் குறித்தும் அதில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஜாபர் சாதிக் தமிழில் தயாரிப்பாளராக இருந்து வந்தவர். அவரது தயாரிப்பில் ஒரு சில திரைப்படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் இயக்குனர் அமீரும் அவரது தயாரிப்பில் திரைப்படம் இயக்கி வந்தார். ஆனால் பிறகுதான் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர் என அறியப்படுகிறது.

ஆனால் இதில் அமீருக்கும் தொடர்புண்டு என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமீர் பேசிய வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறும்போது ”யூ ட்யூப்பில் இவர்கள் பேசுவதை எல்லாம் பார்க்கும்போது கொஞ்ச நாளைக்கு யூ ட்யூப் பக்கமே போகாமல் இருப்பது நல்லது என தோன்றுகிறது.

ameer

ஏனெனில் அதில் ஒருத்தர் கூட உண்மையை பேசுவதில்லை. ஏதோ கையில் கொஞ்சம் காகிதங்களோடு உட்கார்ந்துக்கொள்கின்றனர். டெல்லியில் இருந்து தனக்கு தகவல் வந்ததாக கூறுகின்றனர். டெல்லியில் இருந்து உண்மையிலேயே இவர்களுக்கு தகவல் கிடைக்கிறதா என்பதே தெரியவில்லை.

ஏதோ உளவுத்துறை மாதிரி பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேனியில் கைது செய்யப்போவதே அவர்களுக்கு தெரியவில்லை. அவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கா என்று கேட்டால் ஆமாம அவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. ஆனால் அவர் மேல் சாட்டியிருக்கும் குற்றத்தோடு எனக்கு தொடர்பு இருக்கா என கேட்டால் இல்லடா வெண்ணைகளா என தைரியமாக கூறுவேன்.

என்னை சந்தேகப்படுங்கள் வேண்டாம் என்று நான் கூறவில்லை. ஆனால் எனக்கு தீர்ப்பெழுத உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என கூறியிருந்தார் அமீர். சமீபத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்தான் அமீர் குறித்து இப்படி பேசினார். எனவே அவரை தாக்கிதான் அமீர் பேசியுள்ளார் என பரவலாக பேச்சு உள்ளது.

இஸ்லாமுக்கு துரோகம் செஞ்சவந்தான நீ!.. இவ்வளவு பேசலாமா?.. அமீர் குறித்து பயில்வான் ரங்கநாதனின் குற்றச்சாட்டு!.

Bailvan ranganathan: மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஆறுமுகமானவர் இயக்குனர் அமீர். பெரும்பாலும் அமீர் இயக்கும் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அவரது முதல் திரைப்படமான மௌனம் பேசியதே திரைப்படம்  நல்ல வெற்றியை கொடுத்த பிறகு அடுத்து அமீர் இயக்கிய திரைப்படம்  பருத்திவீரன்.

பருத்திவீரன் திரைப்படம் முதன்முதலாக கிராமப்புறங்களில் இருக்கும் அடிதடி வாழ்க்கையை மிக இயல்பாக காட்டக்கூடியதாக இருந்ததால் அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் அமீர் மதுரையை சேர்ந்தவர் என்பதால் அந்த விஷயங்களை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

ameer

அதன் பிறகு சில திரைப்படங்களில் அவர் இயக்குனராக பணிப்புரிந்த பிறகு வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக நடிகராகவும் நல்ல வரவேற்பை பெற துவங்கினார். தற்சமயம் கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பயில்வான் ரங்கநாதனின் குற்றச்சாட்டு:

இந்த நிலையில் அமீர் இயக்கும் இரண்டு திரைப்படங்களை ஜாபர் சாதிக் எனும் தயாரிப்பாளர் தயாரித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் மீது போதை கடத்தல் குற்றம் பதிவு செய்யப்பட்டு போலீசார் தற்சமயம் அவரை தேடி வருகின்றனர்.

bayilvan-ranganathan

இந்த நிலையில் அமீருக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குமா என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்த நிலையில் தனக்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அமீர் கூறி இருந்தார். இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறும் பொழுது அமீர் எந்த ஒரு விஷயத்தை பேசும் பொழுதும் அதற்கு துணையாக இஸ்லாத்தை இழுத்துக் கொள்கிறார்.

இந்த விஷயம் குறித்து பேசும் பொழுதும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை போதை பொருள், கடத்தல் இதெல்லாம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது எனவே நான் அதை செய்ய மாட்டேன் என பேசி இருக்கிறார். ஒருவேளை அந்த இந்த குற்றங்களில் அமீரும் இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் அப்பொழுது அமீர் என்ன செய்வார். இஸ்லாமிற்கு துரோகம் செய்தவராக அமீர் ஆகிவிட மாட்டாரா? என்று காட்டமாக பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

பருத்தி வீரனோட காபிதான் இந்த படங்கள் எல்லாம்?.. லிஸ்ட் போடும் இயக்குனர் அமீர்!.

Director Ameer : தமிழில் ட்ரெண்ட் செட் படங்கள் என்று சில படங்கள் இருக்கும் அதாவது அந்த திரைப்படங்கள் வெளியான பிறகு அது கொடுத்த வெற்றியை பார்த்து தொடர்ந்து அதே போலவே திரைப்படங்கள் வரத் துவங்கும்.

உதாரணமாக முனி திரைப்படத்தை கூறலாம். முனி திரைப்படம் வந்து பெரும் வெற்றியை கொடுத்த பிறகு பேய் படங்கள் அதிகமாக எடுக்கப்பட துவங்கின. அதேபோல சூது கவ்வும் திரைப்படம் வெளியான பிறகு ஆன்ட்டி ஹீரோ கதையை வைத்து நிறைய திரைப்படங்கள் வந்தன.

ameer

அப்படி தமிழ் சினிமாவில் டிரெண்டை மாற்றிய ஒரு திரைப்படம்தான் பருத்திவீரன். பருத்திவீரன் குறித்து அமீர் ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார் அதில் அவர் கூறும்பொழுது பருத்திவீரன் திரைப்படத்தை எடுத்த பொழுது முதன் முதலாக கிராமத்தில் எப்படி மக்கள் இருப்பார்கள் என்பதை கொஞ்சம் வெளிப்படையாக காட்டி இருந்தேன்.

விரக்தியடைந்த அமீர்:

பிறகு அதே கதைகளை கொண்டு எக்கச்சக்கமான திரைப்படங்கள் வர துவங்கின. எல்லா படங்களிலும் கதாநாயகர்கள் அழுக்கு கைலியை கட்டிக்கொண்டு தாடியை வளர்த்துக் கொண்டு சுற்ற துவங்கினார்கள். ஒரு அளவுக்கு மேல் எனக்கே எதற்காக பருத்திவீரன் படத்தை எடுத்தோம்.

பேசாமல் அதை எடுக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது அந்த அளவிற்கு வெறுப்படையை செய்துவிட்டனர். இவ்வளவு ஏன் தெலுங்கில் வெளிவந்த புஷ்பா கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா போன்ற திரைப்படங்களின் அடிப்படையே பருத்திவீரன் திரைப்படம் தான்.

ஆனால் அவையெல்லாம் வெற்றி கொடுக்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது ஆனால் அதே கதைகளத்தை கொண்டு மோசமான திரைப்படங்களை எடுக்கும் பொழுது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமீர்.

இதற்கு பதில் அளிக்கும் நெட்டிசன்கள் புஷ்பாவை கூட ஒரு வகையில் பருத்திவீரன் திரைப்படத்தோடு கொள்ளலாம். ஆனால் காந்தாரா திரைப்படத்திற்கும் பருத்தி வீரன் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாதே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முற்போக்குன்னு சொல்லிட்டு இப்படி கடத்தல் வேலை பண்ணியிருக்கீங்களே.. வெற்றிமாறனையும் அமீரையும் வச்சி செய்யும் நெட்டிசன்கள்!.

Ameer jaabar saadhik : நேற்று இயக்குனர் அமீர் வெளியிட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் தன்னுடைய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமீர் வெளியிட்ட அறிக்கையில் குற்ற செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற போவதில்லை என்று கூறியிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவால் கைப்பற்றப்பட்டது. அந்த கடத்தலில் திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்பட்டது. இதனை அடுத்து ஜாபர் சாதிக்கின் மயிலாப்பூரில் உள்ள வீட்டிலும் புரசைவாக்கத்தில் உள்ள அவரது நிறுவன அலுவலகத்திலும் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவிலிருந்து சம்மன் ஒன்று ஒட்டப்பட்டது.

அதன்படி டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ஜாபர் சாதிக் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. அமீர் நடித்த மாயக்கண்ணாடி மற்றும் இறைவன் மிகப் பெரியவன் ஆகிய திரைப்படங்களை ஜாபர் சாதிக்தான் தயாரித்து வருகிறார்.

ஜாபர் சாதிக் பிரச்சனை

எனவே இந்த விஷயம் எல்லாம் அமீருக்கு ஏற்கனவே தெரிந்தும் அவர் ஜாபர் சாதிக்குடன் இணைந்து படத்தில் பணியாற்றி இருக்கிறார். மேலும் இந்த போதைப்பொருள் கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று நெட்டிசன்கள் புரளியை கிளப்பி வந்தனர்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் இயக்குனர் அமீர் இப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் வெற்றிமாறன் அமீர் மற்றும் ஜாபர் சாதிக் மூவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதை பிரபலப்படுத்துபவர்கள் கூறும் பொழுது முற்போக்கு என்று திரையில் பேசிவிட்டு நிஜ வாழ்க்கையில் இப்படி போதைப்பொருள் கடத்தல் எல்லாம் செய்திருக்கிறார்களே என்று ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் அமிரோ அல்லது இயக்குனர் வெற்றி மாரனோ இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கூறப்படவில்லை இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன.

விஜய் வந்ததால அண்ணாமலைக்கு தூக்கம் போயிடுச்சு.. ஆனா விஜய்யோட அரசியல் சரியில்ல!.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர் அமீர்!..

Actor Vijay and Director Ameer: தமிழ் இயக்குனர்களில் சிலர் அரசியல் சார்ந்து தொடர்ந்து விமர்சனங்களை கொடுத்த வண்ணம் உள்ளனர். வெற்றிமாறன், மாரி செல்வராஜ் என அந்த வரிசையில் இயக்குனர் அமீரும் முக்கியமானவர்.

தற்சமயம் விஜய் அரசியல் கட்சி துவங்கியிருப்பதுதான் பெரும் பேசு பொருளாக இருந்து வருகிறது. இதில் விஜய் யாருக்கு ஆதரவாக இருக்க போகிறார் என்றெல்லாம் கேள்விகள் இருந்து வந்தன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தற்சமயம் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் விஜய்.

Thalapathy-vijay

இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து இயக்குனர் அமீர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதில் அவர் கூறும்போது விஜய் பாஜகவுடன் கூட்டணி சேர்வாரா என தெரியவில்லை. ஆனால் அவர் மத ரீதியாக ஒரு ஆதரவு மனநிலையில்தான் இருக்கிறார். அதனால்தான் அவரது முழு பெயரான ஜோசப் விஜய் என்பதை விஜய் என்று மட்டும் வைத்துள்ளார்.

அதே போல அவர் வெளியிடும் அறிக்கையில் அவரது புகைப்படத்தில் குங்குமம் வைத்திருப்பதை பார்க்கலாம். எனவே குறிப்பிட்ட மத அடையாளத்திற்குள் தன்னை கொண்டு செல்கிறார் விஜய். அதனால்தான் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு கூட அவர் வரவில்லை.

ஆனால் விஜய் வந்ததால் ஒரு நன்மை என்னவென்றால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விஜய் வருகையால் தூக்கம் போய்விட்டது

ameer

அப்படி வந்துவிட்டால் அவரை அந்த கொள்கைகளுக்கு ஆதரவாக மக்கள் கருதிவிடுவார்கள் என நினைத்திருப்பார் போல. கண்டிப்பாக விஜய்யின் அரசியல் திமுகவிற்கு எதிரானதாகதான் இருக்கும் என்கிறார் அமீர். இந்த நிலையில் அமீர் பேசிய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

எனக்கு தீர்ப்பு கிடைச்சிட்டு… இனிமே அவங்கதான் அனுபவிப்பாங்க!.. சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்த அமீர்!..

Director Ameer: பருத்திவீரன் திரைப்படம் வெளியான காலம் முதலே அமீர் மற்றும் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சனை இருந்து வருகிறது. அமீர் தன்னை ஏமாற்றி அந்த படத்தை எடுத்துவிட்டார் என்பது ஞானவேல்ராஜாவின் புகாராக இருந்தது.

ஆனால் அந்த படம் தயாரிப்பதற்கான சரியான தொகையை கொடுக்காமல் ஞானவேல் ராஜா கைவிட்டார். அதனையடுத்து பல இடங்களில் கடன் வாங்கிதான் அந்த படத்தை இயக்கினேன் எனவே எனக்கு சேர வேண்டிய தொகையை ஞானவேல்ராஜா தர வேண்டும் என்பது அமீர் பக்க வாதமாக இருந்தது.

ஆனால் படம் தயாரிப்பை விடவும் அதிக லாபத்தை ஈட்டி கொடுத்தது. இருந்தாலும் ஞானவேல்ராஜா அமீருக்கு தர வேண்டிய பணத்தை தரவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஞானவேல்ராஜா கூறும்போது அமீரை குறித்து மிக மோசமாக பேசியிருந்தார்.

ameer

இதனை அடுத்து இயக்குனர் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி என பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுக்க துவங்கினர். மக்களும் கூட அமீருக்கு ஆதரவாக பேசினர்.

இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து தற்சமயம் பேசிய அமீர் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் வழக்கு தொடர்ந்தேன். பணம் ஒரு விஷயமே இல்லை. தற்சமயம் மக்கள் மத்தியில் எனக்கு நீதி கிடைத்துவிட்டது. இனி அந்த பணம் எனக்கு கிடைக்காவிட்டாலும் கவலை இல்லை என பதிலளித்துள்ளார் அமீர்.

இரண்டு பாடகர்களை வம்பிழுத்த அமீர்!. தப்பித்து ஓடிய யுவன்.. ரொம்ப டெரர்தான்!..

Director Ameer: தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதற்கு முன்பு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். நந்தா படத்தில் துணை இயக்குனராக பணிப்புரிந்தார். அந்த சமயத்தில் நந்தா படத்தின் போஸ்டர் வெளியான போது அதில் துணை இயக்குனர் என்னும் இடத்தில் அமீரின் பெயர் இல்லை.

இதனால் கோபமான அமீர் பிறகு பாலாவை விட்டு பிரிந்து திரைப்படம் எடுகக் துவங்கினார். அமீர் திரைப்படம் எடுக்க துவங்கிய பிறகு அதிகப்பட்சம் அவரது திரைப்படங்களில் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பார்.

ameer

அமீரிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. பாடகர்கள் பாடல் பாடும்போது அதில் ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார் அமீர். இதனால் பிரச்சனைகள் ஏற்படும். எனவே அமீர் பாடல் பாடும் இடத்தில் இருந்தால் அங்கு யுவன் சங்கர் ராஜா இருக்க மாட்டார்.

இப்படியான சூழலில்தான் ஒருமுறை பருத்திவீரன் திரைப்படத்திற்கு பாடல் பாட வந்த பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலை போட்டு வாட்டி எடுத்ததில் இனி இந்த இயக்குனருக்கு பாடலே பாட மாட்டேன் என கோவித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

Music Director Yuvan Shankar Raja Exclusive Photos for Silverscreen

ராம் படம் தயாராகி கொண்டிருந்தப்போது இதே போல ஒரு விஷயம் பாடகர் ஜேசுதாஸிற்கும் நடந்துள்ளது. தமிழில் ஜேசுதாஸ் எவ்வளவு பெரிய பாடகர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர் ராம் படத்தில் பாடும்போது ஒரு இடத்தில் பாடுவது சரியில்லை என அமீர் குறை கூறியுள்ளார்.

அப்படியா அப்படியென்றால் அதை எப்படி சரியாக பாட வேண்டும் என பாடி காட்டு என கோபமாக கேட்டுள்ளார் ஜேசுதாஸ். அந்த சமயம் பார்த்து அங்கிருந்த யுவன் சங்கர் ராஜாவை தேடியுள்ளார் அமீர். ஆனால் வழக்கம் போல யுவன் சங்கர் ராஜாவை அங்கு காணவில்லை. இந்த விஷயத்தை அமீர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

என்கிட்ட மறைச்சிதான் சசி படம் பண்ணுனான்!.. என்ன காரணம்.. விளக்கிய இயக்குனர் அமீர்!..

Director Sasikumar : இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழில் பெரும் இயக்குனராக தனது காலடித்தடத்தை பதித்தவர் இயக்குனர் அமீர். அமீர் முதல் முதலாக மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

பாலாவிற்கும் சரி அமீருக்கும் சரி அவர்களது முதல் படம் துவங்கிய காலகட்டம் முதலே அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் சசிகுமார். மௌனம் பேசியதே படத்திலும் அவர் வேலை பார்த்தார். அதன் பிறகு அமீர் இயக்கிய ராம் திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்தார்.

அதன் பிறகு மூன்றாவது படமாக அமீர் பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கும்போது சசிகுமார் தனது சொந்த படத்திற்கான கதையை எழுத சென்று விட்டதால் அவருக்கு பதிலாக சமுத்திரகனியை உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார் அமீர்.

இந்த நிலையில்தான் சசிகுமார் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் கதையை எழுதினார். அந்தப் படத்தை முதலில் அமிர்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பருத்திவீரன் படத்தில் நடந்த பிரச்சனை காரணமாக அந்த திரைப்படத்தை அமீரால் தயாரிக்க முடியவில்லை.

எனவே சசிக்குமாரே அந்த படத்தை தயாரிக்கிறேன் என்று அமீரிடம் கூறிவிட்டு சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை தயாரித்தார். படத்தை தயாரிக்கும் பொழுது அதில் சசிகுமார் நடிப்பதை அமீரிடம் கூறவே இல்லை. அதன் பிறகு படபிடிப்பு எல்லாம் முடிந்த பிறகுதான் அந்த படத்தில் தான் நடித்திருப்பதையே சசிகுமார் அமீரிடம் கூறினார்.

முதலில் இதை கேட்டு அமீர் கோபமடைந்தாலும் சுப்ரமணியம் திரைப்படத்தை பார்த்தபொழுது அமீருக்கே மிகவும் வியப்பாக இருந்தது சசிகுமார் இந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க கூடியவர் என்பதை அப்போதுதான் அமீர் தெரிந்துக் கொண்டார் இந்த விஷயத்தை அமீரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அமீர் படத்துல நான் பாட மாட்டேன்!.. விடாபிடியாக இருந்த பாடகியை ஏமாற்றிய அமீர்!..

Director Ameer: தமிழ் சினிமாவில் மதுரையில் இருந்து ஒரு குழுவாக கிளம்பி வந்து இயக்குனர் ஆன நால்வர்களில் அமீரும் ஒருவர், பாலா,சமுத்திரக்கனி,சசிக்குமார் ஆகியோர்தான் மீதி மூவர். கடந்த சில தினங்களாக அமீர் தொடர்பான சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பெரும் புயலாக வீசி வந்தது.

பருத்திவீரன் திரைப்படத்தின்போது ஞானவேல்ராஜா அமீருக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. அதை ஒட்டியே இந்த பிரச்சனை சென்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து பலரும் அமீருக்கு ஆதரவாக பேச தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார் ஞானவேல்ராஜா.

ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. பாலாவுடன் பணிப்புரிந்த காரணத்தினால் அமீரும் கூட கொஞ்சம் டெரரான ஆள் என்றுதான் கூற வேண்டும். தன்னுடன் பணிப்புரிபவர்களிடம் சற்று டெரராக நடந்துக்கொள்பவர் அமீர்.

ameer

இதனால் நடிகை ப்ரியாமணிக்கும் இவருக்குமே சண்டையாகியுள்ளது. இந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தில் அய்யய்யோ என்கிற பாடலை பாடுவதற்காக ஹிந்தியின் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலை அழைத்திருந்தார் அமீர். ஸ்ரேயா கோஷல் பாடும்போது அவர் பாடுவது சரியில்லை என அவரை பாடாய் படுத்தி இருக்கிறார் அமீர்.

இந்த நிலையில் பாடல் முடிந்து ஸ்ரேயா கோஷல் கிளம்பும்போது இனி இவர் படத்திற்கு பாடுவதற்கு என்னை அழைக்காதீர்கள் என கூறியுள்ளார். ஆனால் ஆதி பகவான் திரைப்படத்தை இயக்கியப்போது மீண்டும் பாடல் பாட அமீர் ஸ்ரேயா கோஷலை அழைத்துள்ளார்.

அப்போது ஸ்ரேயா கோஷல் அமீரை மறந்துவிட்டார். எனவே அந்த பாடலுக்கு ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். அப்படி பாடி கொண்டிருக்கும்போது அமீர் அமைதியாக இல்லாமல் அதில் ஒரு குறையை கூறியுள்ளார். அமீர் குரலை கேட்டதும் ஸ்ரேயா கோஷல் அதிர்ச்சியாக அவரை திரும்பி பார்த்துள்ளார்.

அதை பார்த்த யுவன் சங்கர் ராஜா, அமீர் உங்களை கண்டுப்பிடிச்சிட்டாங்க போல என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இருந்தாலும் ஸ்ரேயா கோஷல் அந்த பாடலை பாடி கொடுத்துள்ளார்.