Tag Archives: இன்றைய சினிமா

சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த Lokah Chapter 1 Chandra – படம் எப்படி இருக்கு..!

தமிழிலும் மலையாளத்திலும் பிரபல இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் பிரியதர்ஷன் இவரது மகள்தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். அடிப்படையில் ஒரு மலையாள இயக்குனர் என்பதால் பிரியதர்ஷன் தனது மகளை மலையாளத்தில் தான் அறிமுகப்படுத்தினார்.

மலையாளத்தில் தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று நடித்து வந்து கொண்டிருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி. தமிழை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மற்றபடி தமிழில் பெரிதாக திரைப்படங்களில் இவர் நடித்தது இல்லை. ஆனால் மலையாளத்தில் இப்பொழுது இவருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் வகையிலான ஒரு கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

லோகா சந்திரா சாப்டர் ஒன் என்கிற இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம். ஒரு மலைவாழ் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வேலைக்காக அவர் நகரத்திற்குள் வருகிறார்.

அந்த வேலையை முடித்த பிறகு அவர் இரவு நேர வேலைக்காக ஒரு இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அங்கு இருக்கும் ஒரு நபருடன் கல்யாணி பிரியதர்ஷினிக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷனை அடிப்பதற்காக ஆட்களை அழைத்துக் கொண்டு அவர் வருகிறார். அந்த சமயத்தில் சந்திராவின் சக்தி வெளிபடுகிறது அதனை தொடர்ந்து என்னவெல்லாம் நடக்கிறது என்பதாக படத்தின் கதைகளம் அமைந்து இருக்கிறது.

ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்திற்கான அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. மலையாளத்தில் இப்படி ஒரு திரைப்படம் வந்திருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

நடிகை நந்திதா ஸ்வேதாவின் கவரும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா.

தமிழில் இவர் அட்டகத்தி திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் கூட இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் தான்.

இந்த திரைப்படங்களுக்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் கதை தேர்ந்தெடுப்புகளில் தேர்ந்தெடுப்பதில் அவர் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார் என்று கூறலாம்.

அவர் தேர்ந்தெடுத்து நடித்த நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து வாய்ப்புகளும் குறைந்தது இருந்தாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

அஜித் படம் பெற்ற அதே தகுதியை பெற்ற ஹரிஸ் கல்யாண் படம்.. 

2023 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் பார்க்கிங்.

சாதரணமாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. ஆனால் அதையே ஒரு கதைக்களமாக உருவாக்கி அதை வைத்து பெரிய பெரிய விஷயங்களை அந்த திரைப்படத்தில் செய்திருந்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

இந்த நிலையில் பார்க்கிங் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் தற்சமயம் கிடைத்து இருக்கிறது. பெரும்பாலும் அறிமுக இயக்குனர்கள் படங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தேசிய விருதுகள் கிடைத்துவிடாது. ஆனால் ராம்குமாருக்கு தனது ஆரம்ப நிலையிலேயே இப்படி ஒரு தேசிய விருது கிடைத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

parking

அவரது சினிமா வாழ்க்கையிலும் இனி தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் இந்திய அளவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றிருக்கிறது இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இந்திய அளவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை காதல் மன்னன் திரைப்படம் பெற்றது.

அந்த திரைப்படத்திற்குப் பிறகு அதே அளவிலான ஒரு தகுதியைப் பெற்றிருக்கிறது ஹரிஷ் கல்யாண் நடித்த பார்கிங் திரைப்படம்.

 

ஹர ஹர வீரமல்லு திரைப்படத்தின் முதல் நாள் வசூல்..!

க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஹரஹர வீர மல்லு. தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இதில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், நாசர் பாபி தியோல் மாதிரியான பல முக்கிய பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பல வகையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

ஆனால் தெலுங்கு சினிமாவில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முகலாயர்கள் காலகட்டத்தில் அவர்களை எதிர்த்து போராடிய ஒரு வீரனின் கதையாக ஹரஹர வீரமல்லு திரைப்படத்தின் கதை இருக்கிறது.

இந்த படம் உலக அளவில் முதல் நாள் மட்டும் 75 கோடி வசூல் செய்து பெரும் சாதனை படைத்திருக்கிறது. தெலுங்கு சினிமாவில் தான் அதிகமான வசூலை கொடுத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

பெண்கள் பாலி.யல் தொல்லைக்கு அவங்கதான் காரணம்… கதாநாயகிகளை வைத்து செஞ்ச இயக்குனர்.!

பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது.

அதனால் இயக்குனர்களும் தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கி வருகின்றனர். சமீபத்தில் வெளியான சித்தா மகாராஜா மாதிரியான திரைப்படங்களுக்கெல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை அடுத்து நிறைய இயக்குனர்கள் இப்பொழுது இந்த மாதிரி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தொடர்பான கதைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அப்படியாக எக்ஸ்ட்ரீம் என்கிற ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

 

இந்த திரைப்படத்தின் இயக்குனர் இது குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பாலியல் தொல்லைகளை பொருத்தவரை பணக்கார வர்க்கத்தில் இருக்கும் பெண்கள் தொடர்ந்து மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு எந்த பாலியல் தொல்லையும் நேருவது கிடையாது ஏனெனில் அவர்கள் பெரிய அதிகார வர்க்கமாக இருக்கின்றனர் அவர்களுக்கு என்று பாதுகாப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதை பார்த்து அதே மாதிரி கவர்ச்சி உடைகளை அணியும் பாதுகாப்பு இல்லாத பெண்கள் தான் பாலியல் பிரச்சனைக்கு உள்ளாகின்றனர்.

மொத்த பாலியல் பிரச்சனைக்கும் இதுதான் காரணம் என்று நான் கூறவில்லை ஆனால் இந்த ஆடை விஷயமும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார் இயக்குனர்.

நான் ப்ளான் பண்ணுனது வேற.. இப்ப நடக்குறது வேற… ரசிகையிடம் உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன்தான்  கடந்த இரு நாட்களாகவே அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா கேரளா மாதிரியான மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அமரன் திரைப்படம். எனவே முதல் நாள் வசூலை விட போகப்போக இதன் வசூல் இன்னமுமே அதிகரிக்கலாம் என்பது பேச்சாக இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். தற்சமயம் சினிமாவில் முயற்சி செய்யும் இளைஞர்கள் பல பேருக்கு இவர் தான் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

சினிமாவில் எதிர்பார்ப்பு வேற:

இந்த நிலையில் சிவகார்த்திகேயனிடம் ரசிகை ஒருவர் சமீபத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதில் கேட்கும் பொழுது ஒரு காலத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு நீங்கள் வந்தீர்கள். இப்பொழுது உங்களை போல சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கே வாய்ப்பு அளிக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

sivakarthikeyan

என்றாவது நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தை நினைத்து பார்த்ததுண்டா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் ஆமாம் நான் எப்பொழுதெல்லாம் துவண்டு போகிறானோ? அப்போதெல்லாம் என்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்ப்பேன்.

பழசை நினைத்து பார்ப்பேன்:

கஷ்ட காலங்களில் என்ன மாதிரியான முடிவெடுத்தேன் என்று யோசிப்பேன் என்னுடைய பழைய வீடியோக்களை நானே பார்ப்பேன். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் என்னை மீண்டும் எழ செய்யும்.

மேலும் நான் என்ன நினைத்து சினிமாவிற்கு வந்தனோ அந்த விஷயத்தை நான் அடையவில்லை. நான் நினைத்து வந்தது வேற இப்பொழுது சினிமாவில் நடப்பது வேறு. எனக்கு கடவுள் கொடுத்த விஷயங்கள் வேறு என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan

இதற்கு முன்பே ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறும் பொழுது காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூட நடித்து விடலாம் என்று தான் சினிமாவிற்கு வந்தேன் ஆனால் மக்களின் ஆதரவால் இப்பொழுது கதாநாயகனாக மாறி இருக்கிறேன் என்று அவர் கூறி இருந்தார்.

பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல.. அசத்தல் போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பொதுவாகவே சினிமாவிற்கு வரும் நடிகைகள் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்து முக சாயங்களை பூசி கொள்வதும் அடிக்கடி மேக்கப் செய்து கொள்வதும் என்று இருப்பார்கள்.

ஆனால் இப்பொழுது அதில் ஒரு படி மேலே போய் முகத்தில் நிறைய அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கிறனர். பழைய காலங்களிலேயே நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சினிமாவிற்கு சென்று தனது மூக்கை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைத்துக்கொண்டார்.

அறுவை சிகிச்சை செய்த நடிகை:

முகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியாக சிகிச்சை செய்யும் முறைகள் தற்சமயம் வந்திருக்கின்றன. அதை வைத்து தான் தற்சமயம் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா மேனன் பார்ப்பதற்கு மிக கவர்ச்சியாக இருக்க மாட்டார். சாதாரணமாகதான் இருந்து வந்தார். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் குறைவாகதான் கிடைத்து வந்தன. சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் கிடைத்து வந்தன.

எனவே கதாநாயகி ஆவதற்கு இது பத்தாது என்று தெரிந்து கொண்டார் ஐஸ்வர்யா மேனன். தனது முக அழகை அதிகரிக்க தொடங்கினார் இதற்காக நிறைய சிகிச்சைகளை மேற்கொண்ட ஐஸ்வர்யா மேனன் திரும்ப சினிமாவிற்கு வரும்பொழுது மொத்தமாக ஆளே மாறி இருந்தார்.

ரீ எண்ட்ரி:

அவரது உதட்டில் துவங்கி புருவம் வரை அனைத்திலும் மாற்றங்கள் இருந்தன மேலும் உடல் எடையும் அதிகரித்து பார்ப்பதற்கு ஹன்சிகா சினிமாவிற்கு அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படி இருந்தார் ஐஸ்வர்யா மேனன்.

இந்த நிலையில் அவருக்கு தமிழ் படம் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு முக மாற்றங்களை செய்த பிறகும் கூட முன்னணி நடிகைகளுக்கு கிடைக்கும் அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் ஐஸ்வர்யா மேனன். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகின்றன. புடவை கட்டி இருந்தாலும் கூட அதிலும் கவர்ச்சியாக தான் தெரிகிறார் ஐஸ்வர்யா மேனன்.

புடவையை விலக்கி காட்டுறதுங்குறது இதுதான்!.. அழகில் மூச்சு முட்ட செய்யும் நடிகை சிருஷ்டி டாங்கே..

தமிழ் சினிமாவில் பல காலங்களாக கதாநாயகி ஆவதற்காக போராடிவரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட தமிழில் தொடர்ந்து படங்கள் நடிப்பதற்காக முயற்சி செய்து வந்துள்ளார்.

அறிமுகம்:

சிருஷ்டி டாங்கே 2014ஆம் ஆண்டு வெளியான யுத்தம் செய் திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக சுஜா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படத்திலும் கதாநாயகியாக இவர் நடிக்கவில்லை.

அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஸ்கூல் என்கிற தெலுங்கு படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அந்த திரைப்படத்திலும் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

திரை வாய்ப்பு:

இந்த நிலையில் அதே 2014 ஆம் ஆண்டு தமிழில் மேகா என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சிருஷ்டி டாங்கே. அந்த திரைப்படம் அதிக அளவில் வரவேற்பை பெற்றது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அவர் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் டார்லிங், எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்களில் அவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் கிடைத்தது.

தொடர்ந்து முயற்சி:

இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வருகிறார் சிருஷ்டி டாங்கே. ஏற்கனவே விஜய் டிவி யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட பங்கு பெற்றார் அதன் மூலமாக அவருக்கு ஓரளவு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் அனைவரையும் கவரும் வகையில் புடவையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஒரு பக்கம் உடம்பு அப்படியே தேஞ்சி போச்சு!.. அப்பயும் கூட ஒரு சிறுவனை காப்பாற்றிய கமல்.. நிஜமாவே ஹீரோதான்!.

Kamalhaasan : தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடிய நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்தான் நடிப்பார்கள்.

ஒரு மாஸ் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் அதைத் தாண்டி ஒரு புது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர்கள் யோசிப்பார்கள். ஆனால் ஒரு பிச்சைக்காரனாகவோ திருடனாகவோ நடிக்க வேண்டும் என்றால் கூட யோசிக்காமல் நடிக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு பேர்தான்.

kamalhaasan

அதில் ஒன்று சிவாஜி கணேசன் மற்றொன்று கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிப்பு எப்படிப்பட்டது என்பது குறித்து வையாபுரி கொடுத்துள்ள பேட்டி பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது.

அதில் வையாபுரி கூறும் பொழுது மும்பை எக்ஸ்பிரஸ் என்கிற கமலஹாசனின் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து பணி புரிந்த அனுபவத்தை கூறியிருக்கிறார். மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை மரணக்கிணறு என கூறப்படும் வித்தையை செய்யக்கூடியவராக கமல்ஹாசன் அதில் இருப்பார்.

கமல்ஹாசன் செய்த வித்தை:

அந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு சிறுவனை வண்டிக்கு பின்னால் அமர வைத்து மரணக்கிணறு வித்தையில் வண்டியை எப்படி ஓட்டுவாரோ அதேபோல வண்டியை ஓட்டும் காட்சி ஒன்று இருந்தது. அந்த இரு சக்கர வாகனத்தை மிக உச்சகட்ட வேகத்தில் ஓட்டினால்தான் அந்த வித்தையை செய்ய முடியும்.

எனவே கமல்ஹாசன் அப்படி செய்து கொண்டிருந்த பொழுது அந்த வண்டியில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை அடுத்து வண்டியை நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த சிறுவனிடம் தன்னை கெட்டியாக பிடித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வண்டியை கீழே கொண்டு போய் தேய்த்து நிறுத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.

அதனால் அவரது உடலின் ஒரு பகுதி முழுக்க தரையில் தேய்ந்து விட்டது அந்த ரத்த காயங்களுடன் கூட வந்து எடுக்கப்பட்ட காட்சி சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

அதன் பிறகு அவரால் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை பிறகு ஆம்புலன்சை அழைத்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்படி நடிப்பின் மீது அபாரமான ஈர்ப்பு கொண்டவர் கமல்ஹாசன் என்று வையாபுரி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.