Tag Archives: இன்றைய செய்திகள்

ஒரு டூர் போனதால உருவான கதைதான் பவர் ரேஞ்சர்ஸ் – என்னப்பா சொல்றீங்க!..

90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான டிவி நிகழ்ச்சிகள் என பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக பவர் ரேஞ்சர்ஸ் சீரிஸ் இருக்கும். இதுவரை மொத்தம் 27 வெவ்வேறு பவர் ரேஞ்சர்ஸ் கதைகள் வந்துள்ளன. அவ்வளவையும் அழுக்காமல் பார்த்தவர்கள் நம் 90ஸ் கிட்ஸ்கள்.

அப்போதைய காலக்கட்டத்தில் பவர் ரேஞ்சர்ஸ் விளையாடுகிறோம் என்றால் அதில் யார் ரெட் ரேஞ்சர் என்பதுதான் பெரிய பஞ்சாயத்தாக இருக்கும். அப்படியான பவர் ரேஞ்சர் எப்படி உருவானது என்பது பலருக்கும் தெரியாத கதையாக இருக்கலாம்.

அதை இப்போது பார்க்கலாம்.

ஜப்பானில் துவங்கிய கதை:

ஜப்பானில் எப்போதுமே அனிமே முதல் குழந்தைகளுக்கான அனைத்து தொடர்களுமே வித்தியாசமானதாகதான் இருக்கும். 1970களில் ஹாலிவுட்டிற்கும் கூட ஜப்பான் அனிமே மீது அதிக நாட்டம் வந்தது. எனவே அப்போது பிரபலமாக இருந்த மார்வெல் நிறுவனம் ஜப்பானில் இருந்த டொய் (Toei) நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் செய்தது.

அதன்படி டொய் நிறுவனத்தின் கார்ட்டூன்களை ஹாலிவுட்டில் ஆங்கிலத்தில் மார்வெல் போட்டுக்கொள்ளும். அதே போல மார்வெலின் கார்ட்டூனை ஜப்பான் மொழியில் டொய் நிறுவனம் வெளியிட்டுக்கொள்ளும். இதன்படி டொய் நிறுவனத்தின் சன் வல்கன் (sun Vulcan) என்கிற தொடரை ஹாலிவுட்டிற்கு அறிமுகப்படுத்தியது மார்வெல் நிறுவனம்.

Japan Spiderman Poster

மார்வெல் நிறுவனத்தின் ஸ்பைடர் மேன் தொடரை ஜப்பானில் எடுத்தது டொய் நிறுவனம். ஆனால் இரண்டுமே அவ்வளவாக வெற்றி பெறவில்லை. எனவே பிறகு ஜப்பான் தொடர் எதுவும் அமெரிக்காவிற்கு வரவில்லை. ஏனெனில் ரசனை ரீதியாக ஹாலிவுட்டும், ஜப்பானும் அனிமேஷனில் அதிக மாற்றத்தை கொண்டிருந்தன.

பவர் ரேஞ்சர்ஸை உருவாக்கிய பயணம்

இந்த நிலையில் இஸ்ரேலி அமெரிக்கா என்னும் மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான ஹைம் சபான் (Haim Saban) ஒரு வேலையாக ஜப்பானிற்கு சென்றிருந்தார். அப்போது ஜப்பானில் ச்சவுத்டென்சி ப்யோ மென் (Choudenshi Bioman) என்கிற தொடர் வெகு பிரபலமாக இருந்தது.

Choudenshi Bioman Poster

அது ஒரு சூப்பர் ஹீரோ தொடராகும். தலையில் ஹெல்மட் மாட்டிய ஐவர் அடங்கிய குழு, அவர்களிடம் அட்வான்ஸ்ட் ஆயுதங்கள் இருக்கும். அதை கொண்டு ஜந்துக்களை அழிப்பர். இந்த கதை மிகவும் பிடித்து போகவே ஹைம் சபான் அதே தொடரை அமெரிக்கா சென்று 1985 இல் ப்யோ மென் என்கிற பெயரில் தயாரித்தார்.

ஆனால் அப்போதைய அமெரிக்க டிவி நிறுவனங்களுக்கு அது பார்க்கவே நகைச்சுவையாக இருந்தது. என்னையா இது அட்டை பாக்ஸை வச்சிக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்காய்ங்க. இதையெல்லாம் யார் பார்ப்பார்கள் என கூறி அனைத்து டிவி நிறுவனங்களும் அந்த தொடரை ரிஜக்ட் செய்தன.

ஆனால் ஜப்பானில் உள்ள புது வகை ரசனையை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்தார் ஹைம் சபன்.

சூப்பர் சென்டாய் உருவாக்கிய ஆர்வம்:

இந்த நிலையில்தான் சூப்பர் செண்டாய் (Super Sentai ) என்கிற இன்னொரு தொடர் (கிட்டத்தட்ட அதுவும் பவர் ரேஞ்சர் மாதிரியான தொடர்தான்) ஜப்பானில் அறிமுகமானது. இந்த முறை அதை ஆங்கிலத்தில் எடுக்கும் அளவிற்கு ஹைம் சபனிடம் வசதி இல்லை.

Super Sentai

எனவே அதையே ஆங்கிலத்திற்கு டப்பிங் செய்தார். பிறகு 1992 ஆம் ஆண்டு ஃபாக்ஸ் கிட்ஸ் என்னும் நிறுவனத்திடம் சென்று இதற்காக உதவி கேட்டார் சபன். ஃபாக்ஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம் குழந்தைகள் தொடரை விளம்பரப்படுத்துவதற்கான ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலமாக சூப்பர் செண்டாய் என்னும் அந்த தொடர் பவர் ரேஞ்சர்ஸ் என்னும் பெயரில் வட அமெரிக்காவில் ஒளிப்பரப்பாக துவங்கியது.

இதுவரை வழக்கமான ஹாலிவுட் ரக கார்ட்டூன்களை பார்த்து வந்த அமெரிக்க குழந்தைகளுக்கு பவர் ரேஞ்சர்ஸ் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக அமெரிக்காவில் இந்த தொடருக்கு அதிக வரவேற்பு வர துவங்கின. இதை பார்த்த சபன் உடனே சபன் எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனத்தை துவங்கி அதன் வழியாக பவர் ரேஞ்சர் தொடர்களை டப் செய்து ஃபாக்ஸ் கிட்ஸ் வழியாக அதை வெளியிட துவங்கினார்.

பெரும்பாலும் பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் பெரிதாக வரும் மான்ஸ்டர்களை அவர்கள் இணைந்து அழிப்பதே கதையாக இருந்தது. அது மக்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவே நாமே பவர் ரேஞ்சர் தொடரை எடுக்கலாம் என முடிவெடுத்தார் சபன்.

ஹாலிவுட்டில் பவர் ரேஞ்சர்

அதனை தொடர்ந்து 1993 ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட மைட்டி மார்ஃபின் பவர் ரேஞ்சர்ஸ் என்னும் முதல் பவர் ரேஞ்சர்ஸ் தொடர் வெளியானது. அதில் சபன் முக்கியமான ஒரு விஷயத்தை செய்திருந்தார். பவர் ரேஞ்சரை ஹாலிவுட்டிற்கு ஏற்றாற் போல மாற்றி எடுக்காமல் ஜப்பானியர்கள் அதை எப்படி தயாரித்தார்களோ அதே போலவே இவரும் தயாரித்தார்.

பவர் ரேஞ்சரில் நடிப்பதற்கும் ஜப்பானிய நடிகர்களையே தேர்ந்தெடுத்தார். அவர்கள் பெயரும் கூட ஜப்பான் மொழியிலேயே இருந்தது. ஆனால் பவர் ரேஞ்சரின் சக்திகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார் சபன். அதுவரை மான்ஸ்டர்கள் மட்டுமே பெரிய உருவங்களாக வந்து கொண்டிருந்தன. ஆனால் பவர் ரேஞ்சர் ஹாலிவுட்டிற்கு வந்த பிறகு மெகா சோட், அட்வான்ஸ்டு ஆயுதங்கள் என பவர் ரேஞ்சர்ஸ் அப்டேட் ஆனார்கள்.

பிறகு உலகம் முழுவதும் பவர் ரேஞ்சர்ஸ்க்கு வரவேற்பு வர துவங்கியது. அதில் எஸ்.பி.டி டைனோதண்டர், மிஸ்டிக் ஃபோர்ஸ் போன்றவை மிகவும் பிரபலமான பவர் ரேஞ்சர்ஸ் ஆகும்.

மாற்றியமைக்கப்பட்ட பவர் ரேஞ்சர்ஸ்

ஒவ்வொரு பவர் ரேஞ்சர் தொடரையும் பிரபலமாக்குவதற்காக அதில் பல மாற்றங்களை செய்தனர். உதாரணத்திற்கு எஸ்.பி.டி பவர் ரேஞ்சர்ஸ் தங்களை ஸ்பேஸ் பேட்ரோல் டெல்டா என அழைத்து கொள்வார்கள். அவர்கள் இந்த விண்வெளிக்கான போலீஸ் படை என்பது போல அதன் கதை இருக்கும்.

அதுவே டைனோ தண்டரில் பார்த்தோம் என்றால் டைனோசர்களை முன்னிலைப்படுத்தி அவர்களது கதாபாத்திரம் இருக்கும். டைனோசர்கள்தான் இவர்களது வாகனமாக இருக்கும்.

இப்படி ஒவ்வொரு பவர் ரேஞ்சர்ஸின் கதையிலும் வித்தியாசமான ஒரு விஷயம் இருக்கும். இதுவரை 27 வகையான பவர் ரேஞ்சர்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக 900க்கும் அதிகமான எபிசோடுகள் 40க்கும் அதிகமான மொழிகளில் வெளியாகியுள்ளன.

நெட்ப்ளிக்ஸ் தயாரித்து வெளியான பவர் ரேஞ்சர்ஸ் டைனோ ஃப்யூரி தொடர் இறுதியாக வந்த பவர் ரேஞ்சர்ஸ் தொடராகும். பவர் ரேஞ்சர்ஸ் தொடருக்கு எண்டே கிடையாது என்பது போல இன்னமும் சில பவர் ரேஞ்சர்ஸ் தொடர் எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

Written by

Rajkumar k ( Freelance Content Writer)

vkrajkumar1996@gmail.com

அந்த விஷயத்தை எப்புடியா கண்டுப்பிடிச்ச!.. கமலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.எஸ் பாஸ்கர்…

தமிழில் பல நடிகர்கள் சிறப்பான நடிப்புகளை வெளிப்படுத்தியப்போதும் அவர்களுக்கு என்று பெரிதாக அங்கீகாரம் கிடைத்ததே இல்லை. நடிகர் சார்லி, நாசர் என அந்த வரிசையில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர்.

எம்.எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் எங்கள் அண்ணா படத்தில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள்தான் அவரை ஓரளவு பிரபலப்படுத்தின. ஒரு நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி சிறப்பான நடிகர் என்பதை இவர் எட்டு தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்து நிருபித்துள்ளார்.

கமல்ஹாசனோடு ஒருமுறை இவர் பேசிக்கொண்டிருக்கும்போது தேவர் மகன் படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எம்.எஸ் பாஸ்கர் ஒரு எச்சை முழுங்கி ஒரு பெண் வாழ்க்கையை முடிச்சிட்டிங்களே அண்ணே என கூறியுள்ளார்.

என்ன என புரியாமல் கமல் பார்க்க விளக்கம் கொடுத்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். தேவர் மகன் திரைப்படத்தில் ரேவதியின் திருமணம் தடைப்பட்டுவிடும். அப்போது கமல் சிறிது நேரம் யோசித்துவிட்டு எச்சிலை விழுங்கிவிட்டு என்ன கட்டிக்கிறியா என கேட்பார். அந்த எச்சிலை விழுங்கியதோடு தன்னுடைய பழைய காதலையும் விழுங்கிவிட்டார் என கூறியுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த கமல்ஹாசன் என்னய்யா இந்த அளவுக்கு படம் பார்ப்பியா. இந்த சீன்லாம் உனக்கு புரியுமா? என கேட்டுள்ளார். இந்த நிகழ்வை எம்.எஸ் பாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 8 ஆவது, 10 ஆவது (பெயில்) படித்தவர்களுக்கு அரசு வேலை… சம்பளம் 18,000 வரை

Vellore DHS சமீபத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. வேலைக்கான எண்ணிக்கையை வெளிப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, நிறுவனத்தில் 03 காலியிடங்கள் உள்ளன, ஆர்வமுள்ள மற்றும் திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் தொழிலை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு.

பிற விவரங்கள் (வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, அதிகாரப்பூர்வ இணைப்பு போன்றவை) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இறுதி தேதிக்கு முன் உங்களுக்கு தகுதியான வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

அமைப்புவேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
காலியிடங்கள்03
விண்ணப்பிக்கும் முறைபோஸ்ட் வழியாக
பணி நியமிக்கும் இடம்வேலூர் –  தமிழ்நாடு
கடைசி தேதி:16.05.2023
வாட்ஸாப் வழியாக ஜாப் அப்டேட் பெறஇங்கு க்ளிக் செய்யவும்
டெலிகிராம் வழியாக ஜாப் அப்டேட் பெறஇங்கு க்ளிக் செய்யவும்

முடிந்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகவல்கள் நம்பகத்தன்மைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

Vellore DHS பதவி மற்றும் காலியிட விவரங்கள்:

  • Multi Purpose Health worker
  • Psychiatric Social Worker
  • Data Entry Operator

Vellore DHS சம்பள வரம்பு:

  • Multi Purpose Health worker – ₹ 8,000/-
  • Psychiatric Social Worker – ₹ 18,000/-
  • Data Entry Operator – ₹ 10,000/-

Vellore DHS கல்வி / அனுபவம் தகுதி விவரங்கள்:

  • 8 ஆவது, 10ஆவது (பெயில்),12வது,M.A படித்திருக்க வேண்டும்.

Vellore DHS வயது வரம்பு:

  • வயது அரசாங்க விதிகளின்படி இருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கும் முறை:

  • சான்றிதழ்கள் சரிப்பார்ப்பு
  • நேர்காணல்

எப்படி விண்ணப்பிப்பது:

  • அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் மூன்று வழிகள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் / ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆட்சேர்ப்பும் இந்த முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • ஆன்லைன் முறை என்பது அதிகாரப்பூர்வ தளத்தில் அதற்கான இணைப்பைக் கொண்டிருக்கும். தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஆனால் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, புகைப்படங்கள் மற்றும் கையெழுத்து போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து எப்போதும் வைத்திருக்க வேண்டும். வேலைக்கு விண்ணப்பிக்கும்போது இது அவசியம்.
  • ஆஃப்லைன் பயன்முறை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பம் இருக்கும். அதனை பிரிண்ட் எடுத்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். சில நிறுவனங்கள் ரெஸ்யூம் மட்டும் அனுப்பச் சொல்கின்றன. மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
  • நேர்காணல் முறை பலருக்குத் தெரியும். நாம் உடுத்தும் உடையில் தொடங்கி, கேள்விகளுக்கான பதில்கள் வரை, நேர்முகத் தேர்வில் தேர்வாகும் வாய்ப்புகள் எதை பொறுத்து வேண்டுமானாலும் அமையலாம். எனவே நேர்காணலுக்கு தாமதமாக வருவதை தவிர்க்கவும்.

ஆஃப்லைன் முறை:

  • Vellore DHS அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  • அதில் வேலை அறிவிப்பைக் கண்டறியவும்
  • அதிகபட்சம், Recruitment / Career என்ற மெனு இருக்கும்
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்.
  • ஆன்லைன் விண்ணப்பத்தில் பெயர், படிப்பு, தகுதி போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • இறுதியாக, நீங்கள் நிரப்பும் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • பின்னர் உங்கள் விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பவும்.

Vellore DHS Important Links:

உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் முடிந்தவரை பல ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டவை. இருந்தாலும் பணிக்கு விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து கொள்ளவும். இதன் மூலம் Vellore DHS 2023 ஆட்சேர்ப்பு பற்றி மேலும் அறியலாம்.