Tag Archives: உத்தம வில்லன்

அந்த படத்தில் கை வச்சா கையை வெட்டுவேன்.. கமல் குறித்து பேசிய பிரபலம்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்து வருகிறார். பெரும்பாலும் கமல் நடிக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

ஏனெனில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவராக கமலஹாசன் இருந்து வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் திரைப்படமான உத்தம வில்லன் திரைப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் லிங்குசாமி.

இது குறித்து இயக்குனர் லிங்குசாமி நிறைய பேட்டிகளில் பேசி இருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது உத்தமவில்லன் திரைப்படத்திற்காக நான் எழுதிய கதை என்பதே வேறு. ஆனால் கமல் படமாக எடுக்கும் பொழுது மொத்தமாக அந்த கதை மாறிவிட்டது.

நான் அவரிடம் படம் எடுக்கும் பொழுது என்ன கூறினேன் என்றால் இறுதியில் நான் படத்தை பார்ப்பேன். அதில் நான் என்ன மாற்ற சொல்கிறானோ அதை மட்டும் மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தேன்.

பிறகு படத்தை பார்த்தபோது அதே மாதிரி நான் எந்தெந்த காட்சிகளை மாற்ற வேண்டும் என்று கூறினேன். ஆனால் மறுநாளும் கமல் அதை மாற்றவில்லை. நான் அவர் மீது இருந்த மரியாதை காரணமாக படத்தில் எந்த ஒரு காட்சியையும் வெட்ட வேண்டாம்.

படத்தின் காட்சிகளை வெட்டுவதில் யாராவது கையை வைத்தால் அவர்களது கையை வெட்டுவேன் என்று கூறினேன் அந்த அளவிற்கு நான் கமல் சார் மீது மரியாதை வைத்து இருந்தேன் என்று கூறியிருக்கிறார் லிங்குசாமி. இந்த உத்தமவில்லன் திரைப்படம் பெரிய வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சங்கமும் அரசியல் சார்ந்துதான் இருக்கு!.. லிங்குசாமிக்கு கமல் படத்தில் நீதி கிடைக்குமா!.. பத்திரிக்கையாளர் சொன்ன தகவல்!.

கமல்ஹாசன் நடித்து தோல்வியை கண்ட திரைப்படங்களில் உத்தம வில்லன் திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். உத்தம வில்லன் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குனர் லிங்குசாமிதான் அந்த திரைப்படத்தை தயாரித்தார்.

ஆனால் படம் துவங்கியப்போது முற்றிலும் கமர்ஷியலான ஒரு கதையாக உத்தமவில்லன் திரைப்படத்தின் கதை இருந்தது. ஆனால் கமல் நடிக்க துவங்கியப்போது அதன் மொத்த கதையையும் மாற்றினார். அதில் லிங்குசாமி சில குறைகளை சரி செய்ய சொல்லியும் கூட கமல் அதை செய்யவில்லை.

இதனால் அந்த படம் தோல்வியுற்றது. இதனை லிங்குசாமியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிப்பதாக வாக்கு கொடுத்தாராம் கமல்ஹாசன். ஆனால் 8 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் எந்த படத்திலும் நடித்து கொடுக்கவில்லை.

lingusamy-1

இதனால் தயாரிப்பாளர் சங்கத்தை நாடி உதவி கேட்டுள்ளார் லிங்குசாமி. நேற்று இதற்காக கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லையாம்.

இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது அரசியல் செல்வாக்கு கமலுக்கு அதிகமாக இருப்பதாலும் ,ரெட் ஜெயண்ட் மாதிரியான பெரும் நிறுவனங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாலும் தயாரிப்பு சங்கங்கள் தப்பிக்கவே முயற்சி செய்கின்றன என்கிறார்.

அந்த சீட்ட போடாத மாப்ள!.. அவ்வளவு சொல்லியும் லிங்குசாமிக்கு விபூதி அடித்த கமல்!..

ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. அதற்கு பிறகு அவர் ரன், சண்டக்கோழி மாதிரியான நிறைய வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால் அதற்கு நிகரான தோல்வி படங்களையும் கொடுத்தார்.

இதனால் லிங்குசாமியின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் வெகுவாக குறைய துவங்கியது. இந்த நிலையில்தான் படங்களை தயாரிக்கலாம் என முடிவு செய்தார் லிங்குசாமி. அப்படி அவர் தயாரித்த திரைப்படங்களில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் திரைப்படமும் ஒன்று.

உத்தமவில்லன் திரைப்படத்தை தயாரிக்க துவங்கும்போது அது ஒரு மாஸ் திரைப்படமாகதான் இருந்தது. ஆனால் கதையில் குறுக்கிட்ட கமல் அந்த படத்தின் மொத்த கதையையும் மாற்றி அமைத்தார். அதுக்குறித்து லிங்குசாமியிடம் பேசிய கமல் கூறும்போது இது என் கனவு படம் சார்.

Uttama-Villain

படத்தின் கதையை பாருங்கள். அதில் ஏதாவது கரெக்‌ஷன் இருந்தால் சரி செய்துகொள்ளலாம் என்றார் கமல். ஆனால் லிங்குசாமி கதையை உங்கள் இஷ்டத்திற்கு எடுங்கள். அதற்குள் நான் வர மாட்டேன். ஆனால் படம் முடித்த பிறகு முழு படத்தையும் பார்ப்பேன் அதில் கரெக்‌ஷன் இருந்தால் நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் லிங்குசாமி.

கமலும் அதற்கு ஒப்புக்கொண்டார். முழு படமும் தயாரான பிறகு படத்தை பார்த்த லிங்குசாமி அதில் மாற்ற வேண்டிய விஷயங்களை லிஸ்ட் போட்டு கொடுத்துள்ளார். அதையெல்லாம் மாற்றுவதாக கூறிய கமல் அதை மாற்றமலேயே படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்.

உத்தமவில்லன் பயங்கரமான தோல்வியை கண்டது. இதுக்குறித்து பேட்டியில் கூறும் லிங்குசாமி நான் கூறியது போல அவர் கதையை மாற்றி இருந்தால் அந்த படம் வெற்றியடைந்திருக்கும் என கூறுகிறார் லிங்குசாமி.