Tag Archives: கார்த்திக் குமார்

அப்படி சொல்றதால எனக்கு எந்த வித மன வருத்தமும் கிடையாது!.. தனுஷுடன் உறவு குறித்து பேசிய மனைவிக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்!..

தமிழில் வெகு காலங்களாகவே துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் முக்கியமான நடிகர்களில் கார்த்திக் குமாரும் ஒருவர். தமிழில் நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

அலைபாயுதே, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், பசங்க 2, அன்னப்பூரணி, ராக்கட்ரி என பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது மனைவி சுச்சித்ரா இவரை விவாகரத்து செய்தது குறித்து பேசியிருந்தார்.

அதில் பேசியிருந்த அவர் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும் அவர் நடிகர் தனுஷுடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இதற்கு தனுஷ் எந்த ஒரு எதிர் பதிலும் அளிக்காமல் இருந்தார்.

ஆனால் இதற்கு பதிலளித்த கார்த்திக் குமார் கூறும்போது என்னை தன்பாலின ஈர்ப்பாளர் என கூறுவதில் எனக்கு எந்த அவமரியாதையும் கிடையாது. எப்படி ஆண் பெண் என்பது ஒரு பாலினமோ அது போலதான் மற்ற பாலினமும். இதில் வெட்கப்படவோ கேவலப்படவோ எதுவுமே இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த சமூகத்தில் நீ ஆம்பளையா என்னும் ஒரு கேள்வியின் மூலம் வாழ்நாள் முழுக்க ஆண்களை நோகடிக்கிறார்கள். ஆம்பளைனா இதை செய் என கூறிவிட்டால் அதை செய்வதை தவிர ஒரு ஆணுக்கு வேறு வழி இருக்காது. ஏனெனில் அங்கு அவன் ஆண் என்பதை நிருபித்தாக வேண்டும்.

இப்படி ஆண்களை எதையும் செய்ய வைக்க காலம் தோறும் இந்த வசனங்களை பின்பற்றி வருகின்றனர் என கூறுகிறார் கார்த்திக் குமார்.

தனுஷ் அன்னிக்கு ரூம்ல என்ன பண்ணாரு தெரியுமா?.. பிரபலத்தின் மனைவி வெளியிட்ட பகீர் தகவல்!..

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சையான விஷயங்களுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வரும் கார்த்திக் குமார் குறித்தும் தனுஷ் குறித்தும் கார்த்திக் குமாரின் மனைவி சர்ச்சையாக கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

கார்த்திக் குமார் தமிழ் சினிமாவில் அலை பாயுதே, யாரடி நீ மோகினி, தெய்வ திருமகள், மன்னர் வகையறா சமீபத்தில் அன்னப்பூரணி திரைப்படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருப்பார்.

இவர் சுச்சித்ரா என்னும் பாடகியை திருமணம் செய்துக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கார்த்திக் குமார் 2021 இல் அம்ருதா ஸ்ரீநிவாசன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நிலையில் கார்த்திக் குமாருக்கும் தனுஷிற்கும் இடையே தகாத உறவு இருந்தது. அதனால்தான் நான் கார்த்திக்குமாரிடம் விவாகரத்து வாங்கினேன் என சுச்சித்ரா பேசியுள்ளார். கல்யாணம் ஆகி இரண்டாவது வருடமே அவன் தன்பாலின ஈர்ப்பாளர்னு கண்டுப்பிடிச்சிட்டாங்க.

டாக்டரே என்கிட்ட வந்து சொன்னாரு. அவனும் தனுஷும் ரூம்ல என்ன பண்ணிட்டு இருந்தாங்க. எப்போதும் நடு ராத்திரி வரைக்கும் பார்ட்டி பண்றாங்க. எதுக்குன்னு தெரியல என பேசியிருக்கிறார் சுச்சித்ரா. தற்சமயம் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.