Tag Archives: குபேரா

என்னை விட்டுடுங்க.. வாய்ப்பு கொடுத்த தெலுங்கு சினிமாவை உதறிய தனுஷ்.. இதுதான் காரணம்..!

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் மிக முக்கியமான இயக்குனராக இருப்பவர் சேகர் கமுலா.

இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து திரைப்படம் ஆக்கி வருகிறார். இவரது ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டதாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழில் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் குபேரா இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வெளியானது தமிழில் இந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நல்ல வெற்றியை கொடுத்தது குபேரா திரைப்படம்.

ஒரு பிச்சைக்காரனுக்கும் கார்ப்பரேட் முதலாளிக்கும் இடையே நடக்கும் சண்டையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் செல்லும் தெலுங்கு சினிமாவில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து நடிகர் தனுஷ்க்கு தெலுங்கில் வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன.

நிறைய இயக்குனர்கள் தனுஷிடம் கதை சொல்ல தயாராக இருக்கின்றனர் ஆனால் அவர்களிடம் தனுஷ் இன்னும் இரண்டு வருடத்திற்கு என்னிடம் கால் சீட்டு இல்லை என்று கையை விரித்து விட்டாராம். ஏனெனில் ஏற்கனவே தனுஷ் போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமன்றி இயக்குனர் மாரி செல்வராஜ், வெற்றி மாறன், தமிழரசன் பச்சைமுத்து, ராஜ்குமார் பெரியசாமி ஆகிய இயக்குனர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து அவர் நடிக்க இருக்கும் காரணத்தினால் இரண்டு வருடங்களுக்கு வேறு எந்த திரைப்படங்களிலும் கமிட்டாக முடியாது என்று முடிவு எடுத்து இருக்கிறார்

 

 

முதல் படத்திலேயே  தேசிய விருது.. கை வெச்ச எல்லாமே ஹிட்.. குபேரா பட இயக்குனர் குறித்து அறியாத தகவல்கள்..!

தற்சமயம் குபேரா திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் இயக்குனராக சேகர் கமுலா இருந்து வருகிறார். சேகர் கமுலா ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவார்.

முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு இவர் டாலர் ட்ரீம்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கி ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து 25 வருடங்களாக இவர் சினிமாவில் இருந்து வருகிறார் யார் இந்த சேகர் கமுலா என்பதுதான் இப்பொழுது தமிழ் ரசிகர்கள் கேள்வியாக இருக்கிறது.

அமெரிக்காவில் படிப்பை முடித்தவுடன் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் சேகர் கமுலா. அதற்குப் பிறகு அவருக்கு சினிமாவின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களை இயக்குவதற்காக சினிமாவிற்கு வந்தார்.

அவரது முதல் திரைப்படமான டாலர் ட்ரீம்ஸ் திரைப்படத்தை அவரே தயாரித்து இயக்கினார் அந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. தொடர்ந்து அந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார் சேகர் கமுலா.

அதற்குப் பிறகு அவர் இயக்கிய ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ் என்ற பல படங்கள் அதிக வரவேற்பு பெற்றன. இந்த திரைப்படம் தமிழில் இனிது இனிது என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

அதற்குப் பிறகு அவர் இயக்கிய அவக்கை பிரியாணி என்கிற திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறாமல் போனது. திரும்ப லீடர் என்கிற திரைப்படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார் இயக்குனர்.

தற்சமயம் சினிமாவில் அதிக பிரபலமாக இருக்கும் ரானா டகுபதியின் முதல் திரைப்படம் தான் லீடர். லீடர் திரைப்படமும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதற்குப் பிறகு சேகர் கமுலா இயக்கி வரும் எல்லா திரைப்படமும் வெற்றி படங்களாக தான் அமைந்து வருகிறது.

இங்க தமிழ் ல பேச மாட்டேன்.. ராஸ்மிகா பேச்சுக்கு தனுஷ் செய்த சம்பவம்..!

தமிழில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகதான் இருந்து வருகிறது.

அதே மாதிரி தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் தனுஷ் தொடர்ந்து வேறு விதமான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடுத்து அவர் நடித்து வரும் இட்லி கடை கூட அதே மாதிரியான கதைக்களம்தான் என்று கூறப்படுகிறது. அடுத்து தனுஷ் நடிப்பில் குபேரா என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் ஒரு பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த நிலையில் பாடத்தின் ப்ரமோஷனுக்காக தனுஷ் வடமாநிலத்திற்கு சென்று இருந்தார்.

அங்கு பத்திரிகையாளர் சந்திப்பில் முதலில் ராஷ்மிகா பேசினார். அங்கு வந்துள்ள தமிழ் ரசிகர்கள் ராஷ்மிகாவை தமிழில் பேசும்படி கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா ஹிந்தி மீடியாக்கள் இருக்கும் இந்த இடத்தில் தமிழில் நான் பேசினால் அது எப்படி இங்கு உள்ள மக்களுக்கு புரியும் என்று கூறினார்.

அதற்கு பிறகு அங்கு பேசிய தனுஷ் எடுத்த உடனே தமிழில் தனது பேச்சை துவங்கினார். பிறகு பேசிய அவர் எனக்கு ஹிந்தி தெரியாது நான் ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என்று கூறிவிட்டார். ராஷ்மிகாவை மறைமுகமாக தாக்கும் விதத்தில் தான் தனுஷ் இப்படி செய்ததாக பலரும் பேசி வருகின்றனர்.

எனக்கு ஹிந்தி தெரியாது.. வட இந்தியாவில் மாஸ் காட்டிய தனுஷ்..!

தற்சமயம் நடிகர் தனுஷ் நடித்து பேன் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தில் பிச்சைக்காரன் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் தனுஷ்.

ஒரு பிச்சைக்காரனுக்கும் ஒரு கோடீஸ்வரனுக்கும் இடையே நடக்கும் சண்டைதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முழுக்க முழுக்க இந்த படம் மும்பையில் நடக்கும் கதைக்களம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஹிந்தியில் இந்த படத்திற்கு பெரிய மார்க்கெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லனாக நடிக்கும் ஜிம் சர்ப் ஹிந்தி நடிகராக இருக்கிறார்.

dhanush

இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக சென்றிருந்த தனுஷ் அந்த விழாவில் பேசும்பொழுது தமிழில் மட்டுமே பேசி இருந்தார். ஆனால் ஹிந்தி ரசிகர்களும் அங்கு வந்திருந்தனர் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசிய தனுஷ் எனக்கு ஹிந்தி தெரியாது ஆங்கிலமும் கொஞ்சமாக தான் தெரியும் எனவே பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நேரடியாக கூறிவிட்டார்.

வட இந்தியாவை பொறுத்தவரை இந்தியாவின் மொழி ஹிந்தி என்ற எண்ணத்தில் தான் இருந்து வருகின்றனர் எனவே எல்லோருக்குமே ஹிந்தி தெரியும் என்று அவர்கள் நினைத்து வரும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஹிந்திதெரியாது என்பதை ஆணித்தனமாக கூறி இருக்கிறார் தனுஷ்.

பிச்சைக்காரனும், பணக்காரனும்…நாகார்ஜுனா தனுஷ் கூட்டணியில்… வெளியானது குபேரா டீசர்..!

பெரும்பாலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெறும் சண்டை காட்சிகள் மட்டும் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக இருக்கிறது.

அப்படியாக தற்சமயம் அவர் குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். குபேரா திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்திய அளவில் பிரபலமான நடிகை ராஷ்மிகாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சேகர் கமுலா இயக்க இருக்குகிறார். இந்த படம் தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது.

வருகிற ஜூன் 20 இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. டீசரை பார்க்கும் பொழுது தனுஷ் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறார் என்று தெரிகிறது.

அதேபோல படத்தின் வில்லன் ஆன ஜிம் சார்ப் ஒரு பணக்காரராக இருக்கிறார் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தான் படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது பெரும்பாலும் கதை மும்பையில் நடப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.