நடிகர் விஷால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் வரவேற்பை பெற்று வரும் நடிகராக மாறியுள்ளார். சமீப காலங்களாக விஷாலுக்கு சொல்லி கொள்ளும்ப்படியாக திரைப்படங்கள் என்று எதுவுமே வெளிவரவில்லை. அவர் நடித்த லத்தி திரைப்படம் வரை பெரிதாக வரவேற்பு இல்லாத நடிகராகதான் இருந்து வந்தார் விஷால்.
ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து அவருக்கு வரவேற்பை ஏற்படுத்தும் மற்றுமொரு திரைப்படமாக மதகஜராஜா திரைப்படம் அமைந்துள்ளது. மதகஜராஜா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.
விஷாலுக்கு இருந்த கை நடுக்கம்:
ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பு நடந்த விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் மைக்கை பிடித்து பேசியதை பலரும் பார்த்திருக்கலாம். படத்தின் ப்ரோமஷனுக்காக விஷால் வேண்டுமென்றே கையில் நடுக்கம் ஏற்பட்டது போல நடித்துள்ளார் என இதுக்குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் இதுக்குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பேசியுள்ளார். அவர் கூறும்போது விஷாலுக்கு கை நடுக்கம் ஏற்பட்டது என கூறுவதெல்லாம் வெறும் நடிப்புதான். அவர் சிம்பதி உருவாக்கி அதன் மூலமாக படத்துக்கு ப்ரோமோஷன் தேட பார்த்தார்.
ஆனால் அதுவே அவருக்கு எதிர்வினையாக முடிந்தது. உண்மையில் விஷால் எங்கிருக்கிறார் என்பது பலருக்குமே தெரியாத விஷயமாக இருந்தது. அவர் எங்கோயோ முடங்கி கிடந்தார். அதனால்தான் குஷ்பு மேடையில் பேசும்போது கூட விஷால் உன்னை கண்டுப்பிடிப்பது எங்களுக்கு சிரமமாக இருந்தது என ஒருமையில் பேசியிருந்தார். என்று அந்த நிகழ்வு குறித்து பகிர்ந்திருந்தார் வலைப்பேச்சு பிஸ்மி.