Tag Archives: கைதி 2

ஹிந்தியை நோக்கி நகரும் கார்த்தி.. கைதியை தாண்டி இருக்கும்..!

நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விருமன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன.

அதனை தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த கார்த்தியை அடுத்து வேற்று மொழி சினிமாக்களிலும் அறிமுகமாவதற்கு திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

karthi

அந்த வகையில் ஹிந்தி கன்னடம் மற்றும் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் இயக்குனர்களின் கதை கேட்டு இருக்கிறாராம் கார்த்திக் கைதி 2 திரைப்படத்திற்கு பிறகு அதே போலவே ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.

எனவே பெரும்பாலும் ஹிந்தி சினிமாவிற்குதான் இவர் செல்வார். ஏனெனில் ஹிந்தி சினிமாவில்தான் அவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கிறது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

லியோ படத்தோட கனெக்ட் இருக்கா? கைதி 2 குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்.! 

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாறுபட்ட திரைக்கதை காரணமாகவே லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆக்ஷன் திரைப்படங்கள் என்றாலும் செண்டிமெண்டாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார். கைதி திரைப்படத்தை இயக்கிய பொழுது லோகேஷ் கனகரஜ் இவ்வளவு பெரிய இயக்குனராக அடையாளம் காணவில்லை.

ஆனாலும் கூட அப்பொழுது கைதி படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கு கண்டினியூ வைத்து தான் இந்த படத்தை அவர் முடித்து இருந்தார். இந்த நிலையில் இப்பொழுது கைதி இரண்டாம் பாகம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அதில் அவர் கூறும் பொழுது கைதி படத்தை முடிக்கும் பொழுது அந்த படத்தில் 10 வருடத்திற்கு முன்பு என்ன தவறு செய்ததால் கார்த்தி கைதி ஆனார் என்பதை விளக்கவில்லை.

எனவே அதைதான் அடுத்த பாகமாக எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். அதற்குப் பிறகு எல் சி யு என்கிற ஒரு விஷயம் உருவானது. நான் எடுக்கும் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்ததால் கைதி 2வின் கதையை அதற்குப் பிறகு நான் மாற்றினேன்.

இந்த 10 வருடத்திற்கு முன்பு நடந்த கதை மட்டும் அல்லாமல் லியோ விக்ரம் போன்ற படங்களில் கனெக்ட் வைக்கும் விதத்தில் கைதி 2வின் கதைகளம் அமைய வேண்டும் என்று முடிவெடுத்தேன் என கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

எனவே படத்தின் முதல் பாதியானது கார்த்தியின் முன் கதையை கூறும் விதமாகவும் அடுத்த பாதியானது கைதி படத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்களை வைத்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் கைதி 2… இதுதான் காரணம்..! கார்த்தியே எதிர்பார்க்காத சம்பவம்..!

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் வெற்றி படங்களாக கொடுத்து வரும் காரணத்தினால் அவரது திரைப்படங்களுக்கான பட்ஜெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தற்சமயம் நடிகர் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 400 கோடி என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் கொடுக்கும் என்கிற நம்பிக்கை தென்னிந்தியாவில் பலருக்குமே இருக்கிறது.

ஏனெனில் ரஜினி திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட ஒரு மார்க்கெட் இருந்து வருகிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கும் ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இது இரண்டுமே சேர்த்து கூலி திரைப்படத்தின் வெற்றியை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு பிறகு கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் இரண்டாம் பாகமானது 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு முன்பு நடிகர் கார்த்தி நடித்த எந்த ஒரு திரைப்படமும் பொன்னியின் செல்வனை தவிர இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகவில்லை அப்படி இருக்கும்போது இந்த திரைப்படம் மட்டும் எப்படி 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என்கிற கேள்வி ஒரு பக்கம் இருக்கிறது.

ஆனால் கைதி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்த காரணத்தினாலும் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாலும் கைதி 2 படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. ஒருவேளை கைதி 2 நல்ல வெற்றியை கொடுக்கும் பட்சத்தில் நடிகர் கார்த்தியின் சம்பளமும் அதிகரிக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

கைதி 2 வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சு… ரிலீஸ் எப்போ.! தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் திரைப்படங்கள் குறித்த விஷயங்களில் அதிக எதிர்பார்ப்பு காட்டி வருகின்றனர்.

இதனால் லோகேஷ் கனகராஜ்க்கும் பணி சுமை என்பது அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏற்கனவே எடுத்த திரைப்படத்தை விட இன்னும் மேம்பட்டதாக அடுத்த படத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது. ஏனெனில் அதன் முதல் பாகமே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து கைது எப்பொழுது துவங்கும் என்று பலரும் காத்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு இதுகுறித்து அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது கைதி 2 திரைப்படத்திற்கான வேலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி விட்டன. இன்னும் கொஞ்ச நாளில் அந்த படம் குறித்து அப்டேட்டை நீங்கள் பார்க்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் ரிலேஷன்ஷிப் சுருதிஹாசனும் லோகேஷுமா!.. கதாநாயகனாக களம் இறங்குகிறாரா லோகேஷ்!..

Lokesh Kanagaraj: லியோ திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து ரஜினிகாந்தின் நடிப்பில் திரைப்படம் ஒன்றை இயக்கத் இருக்கிறார்.

அதற்கு பிறகு கைதி 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதற்கு பிறகு சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் திரைப்படம் உருவாக இருக்கிறது. அதற்கு பிறகு நான் விக்ரம் திரைப்படத்தின் இறுதி பாகம் எடுக்கப்பட இருக்கிறது. இதற்குப் பிறகு லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்தார்.

lokesh-kanagaraj

ஆனால் விஜய்யின் அரசியல் வருகையின் காரணமாக லியோ 2 திரைப்படம் வருவதற்கு வாய்ப்பில்லை என தெரிந்து விட்டது. இந்த நிலையில் தொடர்ந்து இவர் இயக்கிய திரைப்படங்களை நடிகர் கமல்ஹாசன்தான் தயாரிக்க இருக்கிறார்.

இதற்கு நடுவே தற்சமயம் லோகேஷ் கனகராஜ் நடிகை சுருதி ஹாசனுடன் சேர்ந்து நிற்பது போன்ற போஸ்டர் ஒன்றை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இது என்ன திடீர் பிரச்சனை என்று பார்க்கும் பொழுது சுருதிஹாசன் ஒரு ஆல்பம் பாடலை பாட இருப்பதாகவும் அதை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் பேச்சுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்க சுருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த போஸ்டர் குறித்து எந்த ஒரு தகவலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

இந்த வருடத்தின் இறுதிக்குள் கைதி 2 படம் துவங்கும்! –  வெளிவந்த தகவல்கள்!

தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் யாவுமே நல்ல ஹிட் கொடுத்த திரைப்படங்களாகவே இருந்தன.

பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என வரிசையாக ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறார். இதற்கடுத்து அவர் நடிக்க இருக்கும் திரைப்படம் கைதி 2. இந்த படத்திற்கு ஏற்கனவே ஏகப்பட்ட வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் தற்சமயம் லியோ படத்தை இயக்கி வருகிறார். நான்கு மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளார் லோகேஷ். படத்தை வருகிற அக்டோபர் 19 வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நவம்பர் மாத துவக்கத்தில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த வேகத்தில் போனால் 2024 இல் விக்ரம் 3 இன் படப்பிடிப்பே துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.