Tag Archives: கோபி நயினார்

எங்களை நிம்மதியா வாழ விடுங்க.. நயன்தாரா பட இயக்குனரால் அவதிக்குள்ளான உதவி இயக்குனர்..!

தமிழில் சமூக சீர்திருத்த திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றனர். சில இயக்குனர்கள் மட்டும்தான் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.

அந்த மாதிரியான இயக்குனர்களில் கோபி நாயனார் முக்கியமானவர். கோபி நாயனார் இயக்கத்தில் வெளியான அறம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறக்கும் குழந்தைகளின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளம் இருந்தது.

இந்த நிலையில் கோபி நாயனார் குறித்து அவருடன் வேலை பார்த்த உதவி இயக்குனர் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது கோபி நாயனாரை பொருத்தவரை அவர் திரைப்படங்களில் வேலை செய்வதற்கு சம்பளமே கொடுப்பது கிடையாது.

படப்பிடிப்புகள் முடியும் பொழுது சம்பளம் கேட்டாலும் கூட படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் தருவதாக கூறுவார். இல்லையென்றால் எங்கள் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு நல்ல முறையில் செலவு செய்வதாக கூறுவார்.

ஆனால் சம்பளம் என்று எங்களுக்கு அவர் கொடுத்தது கிடையாது இப்பொழுது எல்லாம் என்னை நேரில் பார்த்தால் அவரது செயல்முறைகள் மோசமாக இருக்கின்றன சம்பளம் கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறியிருக்கிறார் அந்த உதவி இயக்குனர்.

ஒரு சமூகத்தின் துயரம் மறைக்கப்பட்டுள்ளது?.. இதுதான் அமரன் படம்.. சர்ச்சையை கிளப்பிய அறம் திரைப்பட இயக்குனர்.!

Amaran movie is currently released in theaters and is getting good response. Sivakarthikeyan is playing the lead role in this movie. At this stage, Gobi Nayanar has given a review about some things in the film

தீபாவளியை முன்னிட்டு நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதில் அமரன் திரைப்படத்திற்கு மட்டும் அதிக வரவேற்பு கிடைத்தது. இப்போது வரை அமரன் திரைப்படம் அதிக வசூல் செய்து வருகிறது.

இந்த நிலையில் அமரன் திரைப்படம் குறித்து மிக அரிதாக ஒரு சிலரிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதிகபட்ச மக்களுக்கு பிடித்த படமாகவே அமரன் திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் தமிழில் அறம், கருப்பர் நகரம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கோபி நாயினார் இந்த படம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விமர்சனம் ஒன்றை அளித்துள்ளார்.

இயக்குனர் கொடுத்த விமர்சனம்:

அதில் அவர் கூறும் பொழுது சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது.

sivakarthikeyan

அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

மறைக்கப்பட்ட விஷயங்கள்:

ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர்.

amaran

ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது.

நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு” என கருத்து தெரிவித்துள்ளார் கோபி நயினார்.