Tag Archives: சண்முக பாண்டியன்

3 நாட்களில் படைத்தலைவன் மொத்த வசூல் நிலவரம்..!

விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் பல காலங்களாகவே நடித்து வரும் திரைப்படம் படை தலைவன். 2015 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் சகாப்தம் என்கிற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம்தான் இவருக்கு அறிமுக திரைப்படமாகும். இதற்குப் பிறகு அவரது நடிப்பில் படங்கள் என்று எதுவுமே வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் அறிமுக இயக்குனர் அன்பு இயக்கத்தில் தற்சமயம் படைத்தலைவன் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலமாக மறைந்த கேப்டன் விஜயகாந்தையும் நடிக்க வைத்திருக்கின்றனர். மிகுந்த வரவேற்புடன் வெளியான படைத்தலைவன் திரைப்படம் மூன்று நாட்களில் ஒன்று 1.4 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது.

முன்பு வெளியான படங்களுடன் ஒப்பிடும் பொழுது இது சண்முக பாண்டியனுக்கு ஓரளவு ஓ.கே வான வசூல் தான் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

விரைவில் ரமணா 2… ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்த அப்டேட்.!

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

ஆனால் பெரிய நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய எந்த ஒரு வரவேற்பும் இப்பொழுது வரை சண்முக பாண்டியனுக்கு கிடைக்கவில்லை. முதல் முறையாக இவர் சகாப்தம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதற்குப் பிறகு மதுரை வீரன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இரண்டு திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்சமயம் இவர் படைத்தலைவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ar murugadoss

இந்த திரைப்படம் சீக்கிரத்திலேயே திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். காடு தொடர்பான ஒரு படமாக இது இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

அதில் ஏ.ஆர் முருகதாஸ் கலந்து கொண்டார். அது ஏ.ஆர் முருகதாஸ் பேசும்பொழுது விஜயகாந்தை வைத்து ரமணா திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். நீங்களும் நன்றாக வளர்ந்து வர வேண்டும் ரமணா 2 திரைப்படத்தை உங்களை வைத்து கண்டிப்பாக எடுக்கலாம்.

மீண்டும் கேப்டனை திரையில் காண்போம் என கூறியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ் ஒருவேளை சண்முக பாண்டியன் ரமணா 2 திரைப்படத்தில் நடித்தால் அது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

சின்ன உதவி கேட்டு வந்த விஜயகாந்த் மகனுக்கு பெரிய உதவி செய்த விஜய்!.. நன்றிகடன் செய்யும் நேரம் இது!..

சினிமாவிற்கு வந்த ஆரம்பக் காலக்கட்டங்களில் விஜய்க்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அப்போது விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இருந்தார். ஏனெனில் அவர் விஜயகாந்தை வைத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்திருப்பார்.

இந்த நிலையில் விஜயகாந்தோடு சேர்ந்து விஜய் நடித்து வெளியான செந்தூர பாண்டி திரைப்படம் விஜய்க்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அப்போது விஜய்க்கு விஜயகாந்த் செய்த உதவி பெரும் உதவியாகும். அதற்கு கைமாறு செய்யும் விதமாக தற்சமயம் விஜய் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு உதவ முன் வந்துள்ளார்.

தற்சமயம் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட வேண்டும் என விஜய்யிடம் கேட்டுள்ளார் சண்முக பாண்டியன்.

அதற்கு பதிலளித்த விஜய் படைத்தலைவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தருவதாக வாக்கு கொடுத்துள்ளாராம். மேலும் தளபதி 69 திரைப்படத்திலும் சண்முக பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுக்க வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.

விஜயகாந்த் மகனுக்கு கொடுத்த வாக்கை விஷாலுக்கு முன்பே காப்பாற்றிய லாரன்ஸ்!.

Shanmuga Pandiyan: விஜயகாந்திற்கு பிறகு அவரது வாரிசுகளில் சண்முக பாண்டியனுக்கு நடிகர் ஆக வேண்டும் என்பதில் அதிக ஆசை இருந்து வந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகளும் வரவேற்புகளும் அவருக்கு கிடைக்கவே இல்லை.

அவரது முதல் திரைப்படமான சகாப்தம் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் விஜயகாந்தே வருவார். அதில் விஜயகாந்த் தமிழ் மக்களை நோக்கி கையை காட்டி இனிமே உன்ன நான் பாத்துக்க தேவையில்ல அவங்க பார்த்துப்பாங்க என கூறுவார்.

அப்படியெல்லாம் விஜயகாந்த் நம்பிக்கை வைத்தும் கூட விஜயகாந்தின் மகனுக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எவ்வளவோ திரை பிரபலங்களுக்கும் ஊழியர்களுக்கும் அவர் உதவி செய்தப்போதும் கூட எந்த ஒரு பெரிய இயக்குனரும் சண்முக பாண்டியனை வைத்து திரைப்படங்கள் இயக்கவில்லை.

இந்த நிலையில் விஜயகாந்தின் இறப்புக்கு பிறகே தமிழ் திரை பிரபலங்களுக்கு சண்முக பாண்டியன் என ஒருவர் இருப்பதே தெரிய துவங்கியுள்ளது. இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் ஏற்கனவே இதுக்குறித்து கூறும்போது விஜயகாந்த் சாரின் வீட்டிற்கு நான் சென்றப்போது தனது மகனை ஹீரோவாக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி அவருடன் நான் சேர்ந்து நடிக்க தீர்மானித்துள்ளேன். எனவே இரட்டை கதாநாயகன் கதை கொண்ட திரைப்படம் இருந்தால் அந்த இயக்குனர்கள் அதை என்னிடம் கூறலாம் நானும் சண்முக பாண்டியனும் அந்த படத்தில் சேர்ந்து நடிப்போம் என கூறியிருந்தார் லாரன்ஸ்.

பிறகு விஜயகாந்த் நினைவேந்தலில் பேசிய நடிகர் விஷாலும் அடுத்து சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்சமயம் லாரன்ஸ் மற்றும் சண்முக பாண்டியன் இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

படைத்தலைவன் என்கிற திரைப்படத்தில் தற்சமயம் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியனுடன் சேர்ந்து லாரன்ஸும் நடிக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாரன்ஸ் தான் சொன்ன சொல்லை உடனே காப்பாற்றிவிட்டார். விஷால் எப்போது சண்முக பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க போகிறார் என்பதே தற்சமயம் கேள்வியாக உள்ளது.

விஷாலின் ஏமாற்று வேலையை நம்பிடாதீங்க!.. சினிமாக்காரங்களுக்கு ஏமாத்துறதுதான் வேலையே!.. கடுப்பான பத்திரிக்கையாளர்…

Vishal: திரைப்பட பிரபலங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனத்தை அளித்திருக்கிறார் பிரபல சினிமா பத்திரிகையாளரான அந்தணன்.

சமீபத்தில் விஜயகாந்தின் நினைவேந்தல் விழா நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் முன்னணி நடிகர்கள் மற்றும் விஜயகாந்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய பலரும் விஜயகாந்த் குறித்த நல்ல விஷயங்களை பேசி வந்தனர்.

இதற்கு நடுவே வந்த விஷால் இன்னும் ஒரு படி மேலே போய் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் தன்னுடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பளிப்பதாக கூறியிருந்தார். இது குறித்து தற்சமயம் ஒரு வீடியோவில் பேசிய அந்தணன் கூறும்பொழுது தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாக்குறுதி என்பது வெறும் மேடையில் பேசும் விஷயம் மட்டுமே,

vishal

அதற்கு பிறகு அதற்கு எந்தவித மதிப்பும் கொடுப்பது கிடையாது உதாரணமாக கில்லி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது ஒரு சிறுமி மிக அற்புதமாக பாடல் பாடுவதை பார்த்த படத்தின் இயக்குனரான  தரணி கூறும் போது அந்த பெண்ணுக்கு அடுத்த படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கி தருவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு அவர் பிறகு எந்த வாய்ப்பும் தரவில்லை அதேபோல விஸ்வரூபம் திரைப்படம் வெளியான சமயத்தில் ஒரு நபர் அந்த படத்தின் பாடலை சிறப்பாக பாடியிருப்பதை அறிந்து கமல்ஹாசன் அந்த நபரை தேடிப்பிடித்து, அவருக்கு அடுத்து வரும் தனது படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக கூறினார்.

ஆனால் கமலும் அவருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. இப்படி சினிமாவில் உணர்ச்சிவசப்பட்டு அப்போது பப்ளிசிட்டிக்காக பேசும் பிரபலங்கள் பிறகு அதை செய்வது கிடையாது, அந்த வகையில் விஷாலும் பேசி இருப்பதை செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் சண்முக பாண்டியன் இப்போதுதான் சினிமாவிற்கு புதிதாக வருவது போல விஷால் பேசுகிறார். ஏற்கனவே சகாப்தம் என்கிற திரைப்படத்தின் மூலமாக சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி விட்டார். இன்னும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார் அப்போதெல்லாம் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு விஷாலுக்கு நேரம் கிடைக்கவில்லையா இப்போது மட்டும் வந்து வாய்ப்பு அளிக்கிறேன் என்று பேசுகிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் அந்தணன். 

விஜயகாந்த் பையனோட சேர்ந்து நடிக்க போறேன்!.. அந்த ஒரு வார்த்தைதான் காரணம்!.. அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!..

Ragava Lawarance and Shamuga pandiyan : தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் மதிப்பை கொண்டவர் நடிகர் விஜயகாந்த். அவரது இறப்பு என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாக தமிழகத்திற்கு அமைந்தது.

எம்.ஜி.ஆர் கருணாநிதி இறப்பிற்கு பிறகு ஒரு பெரும் கூட்டம் ஒரு தலைவனுக்காக வந்ததே விஜயகாந்தின் இறப்பின் போது தான். விஜயகாந்த் தமிழ் திரையுலகில் பலருக்கும் பல நன்மைகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்தை போலவே பல நன்மைகளை செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.

vijayakanth-4

அப்பொழுது விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா கூறும் பொழுது தன்னுடைய மகன் சண்முக பாண்டியனை எப்படியாவது கதாநாயகன் ஆக்குங்கள் என்று கூறியிருந்தார். ஏற்கனவே சண்முக பாண்டியன் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் கூறும் பொழுது விஜயகாந்த் நம் தமிழ் மக்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கிறார். ஆனால் அவரது மகனை கதாநாயகன் ஆக்க வேண்டும் என்று பிரேமலதா அவர்கள் கேட்டுக் கொண்ட பொழுது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒருவரின் மகனுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பது மிகப்பெரும் தவறு எனவே சண்முக பாண்டியன் நடித்து வெளியாகும் திரைப்படத்தை எந்த அளவிற்கு விளம்பரப்படுத்த முடியுமோ அவ்வளவு விளம்பரப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

அதே போல இரண்டு ஹீரோக்கள் கொண்ட கதை ஏதாவது இருந்தாலும் கூட இயக்குனர்கள் என்னிடம் கூறுங்கள். நானும் சண்முக பாண்டியனும் அதில் சேர்ந்து நடிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

யானை காப்பாளனாக களம் இறங்கும் விஜயகாந்த் மகன்!. இந்த படமாவது ஹிட் அடிக்குமா?

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஒரு காலத்தில் விஜயகாந்த் நடித்து வெளியாகும் அத்தனை படங்களும் பயங்கர ஹிட் கொடுத்து வந்தன. இதனால் அதிக வரவேற்பு பெற்ற நாயகனாக விஜயகாந்த் இருந்தார்.

விஜயகாட்ன்ஹிற்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியனும் சினிமாவில் கதாநாயகனாக ஆசைப்பட்டார். ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. எனவே ஒரு சில படங்களுக்கு பிறகு அவருக்கான வாய்ப்பு என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது.

இதனை தொடர்ந்து வாய்ப்புகளை இழந்த சண்முக பாண்டியன் சினிமாவை விட்டே சென்றுவிட்டார். இந்நிலையில் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆகியுள்ளார் சண்முக பாண்டியன். படை தலைவன் என்கிற இந்த திரைப்படம் யானைகள் மற்றும் காட்டு வாழ்க்கை தொடர்பான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.