Tag Archives: சமந்தா

OTT Review: நாடகம் போடும்போது பேயாக மாறும் கிராமம்.. மந்திரவாதியாக சமந்தா.. Subham Movie Review

தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் சுபம். இந்த திரைப்படத்தை ஹர்ஷித் ரெட்டி என்பவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை பிரவீன் கேந்திரகுலா என்பவர் இயக்கி இருக்கிறார். சமந்தா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை சமந்தாதான் தயாரித்தும் இருக்கிறார்.

படத்தின் கதைப்படி ஸ்ரீனிவாசன் என்கிற கதாநாயகன் ஒரு கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் ஆகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு சீரியலின் காரணமாக அந்த கிராமத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

தொடர்ந்து அந்த சமயங்களில் பெண்கள் வேறு விதமாக நடந்து கொள்வதை ஆண்கள் காண்கின்றனர். இதனை அடுத்து கதாநாயகன் இது குறித்து ஆய்வு செய்யும் பொழுது அந்த கிராமத்தில் ஏற்கனவே இறந்து போன பாட்டிகள் எல்லாம் அந்த 9 மணி சீரியலை பார்ப்பதற்காக மட்டும் அந்த வீட்டில் இருக்கும் இளம் பெண்கள் உடலில் புகுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

இதனை தடுப்பதற்கு கதாநாயகன் என்ன செய்யப் போகிறான் என்பதாகதான் கதை போகிறது. ஆனால் இதில் மோசமான விஷயம் என்னவென்றால் போக போக அந்த பேய்களின் அட்டகாசம் என்பது அதிகரிக்க துவங்குகிறது.

இந்த நாடகம் முடிந்தால் மட்டுமே இந்த பேய்கள் அனைத்தும் இவர்களுக்கு தங்களது மனைவிகளின் உடலை விட்டு பிரியும் என்பதை அறிந்த அந்த கிராமத்து ஆண்கள் அடுத்தடுத்து என்ன செய்கிறார்கள் என்பது தான் கதையாக இருக்கிறது.

கதை முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஓ.டி.டியில் இப்பொழுது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

2 வருஷமா எதுவுமே இல்ல… மேடையிலேயே ரசிகர்கள் குறித்து கண் கலங்கிய சமந்தா..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவருக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது.

அதற்குப் பிறகு அவருக்கு தெலுங்கில் வெளியான நான் ஈ திரைப்படம் தான் முக்கிய படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் சமந்தாவிற்கு வாய்ப்புகள் அதிகமாக வரத் துவங்கியது.

இந்த நிலையில் நல்ல மார்க்கெட்டை பிடித்து வந்த சமந்தா பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மயோசிட்டிஸ் என்கிற ஒரு அரிய வகை நோய் ஏற்பட்டது.

அதன் காரணமாக சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய சமந்தா கூறும் பொழுது இரண்டு வருஷமா நான் சினிமாவிலேயே இல்லை என் படம் எதுவும் வெற்றி கொடுக்கவில்லை.

இருந்தாலும் கூட எனக்கு இன்னமும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ரசிகர்கள் தான் காரணம் என்று கண்கலங்கி அவர்களுக்கு தலை சாய்த்து வணக்கம் வைத்திருக்கிறார் சமந்தா.

அந்த ஏன் நடிகையை விட்டுட்டேனேன்னு இப்ப தோணுது.. ஓப்பன் டாக் கொடுத்த சந்தானம்..!

சாதாரண காமெடி நடிகராக சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்று இப்பொழுது கதாநாயகனாக மாறியிருப்பவர் சந்தானம்.

சந்தானத்தின் திரை பயணம் என்பது மிக நீண்டது என்று கூறலாம். வெகு வருட போராட்டத்திற்கு பிறகுதான் சந்தானத்திற்கு ஓரளவு அடையாளம் என்பதே கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் சந்தானம் நடிகை சமந்தா குறித்து கூறினார் அதில் அவர் கூறும் பொழுது பல்லாவரத்தில் அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் பெண்களை பார்ப்பதற்காக நான் பள்ளி காலத்திலிருந்து செல்வேன்.

Santhanam

அந்த பள்ளியில் தான் சமந்தாவும் படித்திருந்தார். பல்லாவரம் மார்க்கெட்டில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை விட்டு விட்டோமே என்று பிறகு தான் எனக்கு தோன்றியது என்று சமந்தா குறித்த தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் சந்தானம்.

இதே மாதிரி சமந்தா முன்பு ஒரு பேட்டியில் கூறும்பொழுது சந்தானம் தனது பள்ளிக்கு வந்து பெண்களை எல்லாம் பார்ப்பார் பெண்கள் பலருக்கும் சந்தனத்தை பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

ஒன்றரை வருஷமா எனக்கு எல்லாவுமா இருந்த நடிகர்.. சமந்தா வெளியிட்ட ரகசியம்.!

கோலிவுட் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி போன்ற படங்களின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதற்கு பிறகு நடிகை சமந்தாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஆனாலுமே கூட அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் நான் ஈ.

அதற்கு பிறகுதான் சமந்தாவுக்கு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் அதிக வாய்ப்புகள் வர துவங்கின. இந்த நிலையில் தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்தார் சமந்தா. ஆனால் சில வருடங்களிலேயே அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் மயோசிடிஸ் என்கிற கடுமையான உடல் பிரச்சனைக்கு உள்ளானார் நடிகை சமந்தா. அப்போதைய சமயத்தில் அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இந்த நிலையில் சில வருடங்கள் அவர் சினிமாவில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில் அப்போதைய சமயத்தில் தன்னை யார் பார்த்துக்கொண்டது என்பது குறித்து கூறியிருக்கிறார் சமந்தா. அதில் அவர் கூறும்போது ராகுல்தான் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருந்தார்.

அப்போது 8 மாதங்கள் தினமும் காலையில் என்னை பார்க்க வந்துவிடுவார் ராகுல். அவர் எனக்கு ஒரு நண்பர் என்பதையும் தாண்டி எனக்கு சகோதரனாக குடும்ப உறுப்பினராக இருந்தவர் ராகுல்.

இதுதான் என்னுடைய முதல் காதல்.. வெளிப்படையாக கூறிய நடிகை சமந்தா..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் சமந்தா முக்கியமானவராக இருக்கிறார். ஆரம்பத்தில் சமந்தாவிற்கு தமிழில் பெரிதாக வரவேற்புகள் என்பதே இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சமந்தா. அந்த திரைப்படத்திற்கு பிறகு சமந்தாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின.

அதனை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளையும் பெற துவங்கினார் சமந்தா. இந்த நிலையில்தான் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே உறவு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

அதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டனர்.இந்த நிலையில் மையோ சிட்டிஸ் என்கிற நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சமந்தா சில நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இப்பொழுது மீண்டும் திரையில் அவர் நடிக்க துவங்கியிருக்கிறார்.

வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் வரவேற்பை பெற துவங்கி இருக்கிறார் சமந்தா இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தற்சமயம் இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் சில மாதங்களில் அவற்றின் வேலைகள் முடிந்துவிடும்.

அவற்றை தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க இருக்கிறேன். தொடர்ந்து எனக்கு வேலைகள் இருக்கிறது எப்பொழுதுமே என்னுடைய முதல் காதல் என்பது சினிமா தான் என்று கூறியிருக்கிறார் சமந்தா.

என்னை நானே செதுக்கியிருக்கேன்.. யாரு யாரை கல்யாணம் பண்ணுனா என்ன?. அரவிந்த்சாமி மாதிரி பேசிய சமந்தா..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.ஆரம்பத்தில் சமந்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த நான் ஈ திரைப்படம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு இரண்டிலும் வரவேற்பை பெற்று வந்தார் சமந்தா. ஆரம்பத்தில் சமந்தாவிற்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையே காதல் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் உண்மையில் அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார்.

இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் சில காலங்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் அடுத்ததாக மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோயின் பாதிப்புக்கு உள்ளானார் சமந்தா.

இதனால அவரால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. நிறைய பண செலவுகளுக்கு பிறகு தற்சமயம் சமந்தா உடல் நலம் சரியாகி மீண்டும் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் பேசியப்போது நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார்.

அதில் பேசிய சமந்தா கூறும்போது இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு பின்னால் யார் இருக்காங்கன்னு பார்த்துதான் அவங்களுக்கான ரூல்ஸை அமைக்கிறாங்க. ஆனால் எனக்கு பின்னாடி அப்படி யாரும் இல்லை. என் வயசு பொண்ணுங்க கல்யாணம் பண்ணி குழந்தைகள் என வாழாமல் இருந்தால் அவர்கள் என்னதான் சாதிச்சாலும் அவங்களை தப்பாதான் பேசுறாங்க. ஆனால் எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை.

ஆமா சாமி போடுற கூட்டத்தை மட்டும் கூட வச்சிக்காதீங்க. அது உங்களை கெடுத்துடும் என கூறியுள்ளார் சமந்தா.

இனிமே அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.. சமந்தா முடிவால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள்.!

தமிழில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் நடிகை சமந்தா. நான் ஈ திரைப்படத்திற்கு பிறகுதான் சமந்தாவிற்கான வரவேற்பு என்பது அதிகரித்தது. அதனை தொடர்ந்து நடிகை சமந்தா சூர்யா, விஜய், அஜித் மாதிரியான நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

இப்படி பிரபலமாகி வரும் சூழலில்தான் அவருக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில வருட காதலுக்கு பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இந்த உறவு வெகு காலங்கள் நீடிக்கவில்லை. இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்கள் இருவருமே பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் சமந்தாவிற்கு மயோசிடிஸ் என்கிற அரிதான நோய் ஒன்று ஏற்பட்டது. இதனால் கடுமையான உடல் நல பிரச்சனைக்கு உள்ளானார் நடிகை சமந்தா. இதனால் தொடர்ந்து அவரால் சினிமாவில் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்சமயம் இதையெல்லாம் தாண்டி மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் சமந்தா. இனி சாதாரணமாக வந்து போகும் கதாநாயகி மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க போவதில்லை. நடித்தால் முக்கிய கதாபாத்திரமாக மட்டும்தான் நடிக்கபோகிறேன் என கூறியுள்ளார் சமந்தா.

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பிறகு சமந்தாவை நிறைய படங்களில் ஐட்டம் பாடல்களில் நடனமாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். இந்த நிலையில்தான் சமந்தா இப்படியொரு முடிவை எடுத்துள்ளார். இது தற்சமயம் தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

முக்காழ்வாசி பின்னழகு அப்படியே தெரியுது.. இளசுகளின் தூக்கம் கெடுத்த சமந்தா. இதுவரை இல்லாத லுக்கில் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. தமிழ் சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகமானபோது மிகவும் சின்ன பெண்ணாக இருந்தார். அதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்தன.

அதற்கு பிறகு பானா காத்தாடி மாதிரியான ஒரு சில படங்களில் நடித்தார் சமந்தா. ஆனால் அதற்கு பிறகு அவரது வளர்ச்சி என்பது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இருந்தது. நான் ஈ திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலுமே அதிகமான ரசிகர்களை பெற்றார் சமந்தா.

இதன் மூலம் அவருக்கான வாய்ப்புகளும் அதிகரித்தது. தமிழில் அவர் நடித்த படங்களில் நீதானே என் பொன் வசந்தம் திரைப்படம் மிக முக்கியமான படமாகும். அந்த படம் அவருக்கு எக்கச்சக்க வரவேற்பை பெற்று தந்தது.

இப்படி வாய்ப்புகளை பெற்று வந்த சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார் சமந்தா.

அந்த வகையில் அவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படியாக சமீபத்தில் தங்க நிறத்தில் ஆடை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

ஊ சொல்றியா மாமாவுக்கு டஃப் கொடுத்துச்சா?.. எப்படி இருக்கு புஷ்பா 2 Kissik பாடல்.!

இப்பொழுது எல்லாம் திரைப்படங்களில் ஐட்டம் பாடல்கள் முக்கியமானதாக மாறி இருக்கின்றன. படங்களை அதிகமாக பிரபலப்படுத்துவதற்கு இந்த பாடல்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா என்கிற பாடல் அந்த படத்தை அதிகமாக பிரபலமாக்கியது. அதேபோல வாரியர் என்கிற திரைப்படத்தில் வெளிவந்த புல்லட் என்கிற பாடலும் மிகப் பிரபலம் அடைந்தது.

ஜெயிலர் திரைப்படத்திலும் காவாலா என்கிற ஒரு பாடல் அந்த படத்தை அதிக பிரபலமாகியது. இந்த நிலையில் இந்த மாதிரியான ஐட்டம் பாடல்களுக்கு இப்பொழுது முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தில் முதல் பாகத்தில் சமந்தா ஆடிய அந்த நடனத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

புஷ்பா 2 பாடல்:

அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அதே மாதிரி பாடல் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர் படகுழுவினர். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருப்பவர் நடிகை ஸ்ரீ லீலா.

pushpa 2 kissik

ஸ்ரீ லீலா பெரும்பாலும் அவரது நடனத்திற்கு மிகப் பிரபலமானவர். வளைந்து நெளிந்து கதாநாயகர்களை விட சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர் என்பதாலேயே அவரது பாடல்கள் அதிக பிரபலம் அடைந்து விடுகின்றன. மேலும் அவர் நடனமாடும் பாடலில் எவ்வளவு கடினமான நடனத்தையும் வைக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் கிசக் என்கிற ஒரு பாடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் ஸ்ரீ லீலா நடனமாடி இருக்கிறார் தற்சமயம் இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இருக்கிறது அதனை பார்த்து வரும் தமிழ் சினிமா ரசிகர்கள் என்ன இருந்தாலும் ஊ சொல்றியா மாமா பாடல் அளவிற்கு இதன் பாடல் வரிகள் இல்லை என்று கூறுகின்றனர்.

முழு வீடியோ பாடல் வரும் பொழுது தான் நடனம் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது என்பது தெரியும் ஆனால் பெரும்பாலும் சமந்தாவை விட ஸ்ரீ லீலா நன்றாக நடனமாட கூடியவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆனால் பாடல் எந்த அளவிற்கு பிரபலம் அடையும் என தெரியவில்லை.

படப்பிடிப்பில் பலாரென்று அறைந்த விஷால்… கதறி அழுத நடிகை சமந்தா.. இவரோட இன்னொரு முகம் இதுதானா ?

Actor Vishal is one of the emerging actors in Tamil cinema. There was an incident where he scared the heroine while shooting for a film

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் விஷால். நடிகர் விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக அறிமுகமானவர் ஆவார்.

அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நடிகர் விஷாலை பொருத்தவரை பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்களைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

ஏனெனில் அவர் அதிக உயரத்துடன் இருப்பதால் அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு எளிதாக செட் ஆகி விடுகின்றன. இந்த நிலையில் படபிடிப்புகளில் ஏதாவது ஒரு காமெடி செய்து கொண்டிருப்பதை விஷால் வேலையாக வைத்திருக்கிறார்.

உண்மையை பகிர்ந்த ரோபோ சங்கர்:

இதை குறித்து விஷாலுடன் பணி புரிந்த ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இரும்புத்திரை திரைப்படம் வெளியான பொழுது வேண்டுமென்றே சமந்தாவை வம்பு இழுக்க நினைத்தார் விஷால். எனவே அவர் என்னிடம் வந்து அந்த நடிகை இருக்கும்பொழுது அவருக்கு பக்கத்தில் வந்து நீங்கள் நில்லுங்கள்.

நான் உங்களை அடிப்பேன் என்று என்னிடம் முன்பே சொல்லிவிட்டார். நானும் அதன்படியே போய் நின்றேன். உடனே எழுந்து என்னை பலார் என்று அறைந்தார் விஷால். பிறகு மதியம் எங்கே சென்றீர்கள் என்று கேட்டார்.

நான் உணவு சாப்பிட சென்றேன் என்று கூறினேன் உடனே இங்கு பல கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள் உங்களுக்கு சாப்பாடு தான் முக்கியமா என்று என்னிடம் சத்தம் போட்டார். நானும் கண்ணீர் விட்டு அழுவது போல நடித்தேன். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமந்தா இன்று மாலையே எனக்கு டிக்கெட் போடுங்கள்.

நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறினார் பிறகு சமந்தாவை கூப்பிட்டு இது சும்மா காமெடிக்காக செய்தது என்று சமாதானப்படுத்தினேன் என்று கூறியிருக்கிறார் ரோபோ சங்கர்.

என்னை தயவு செஞ்சு வாழவிடுங்க.. விரக்தியடைந்த சமந்தா.. ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை..!

Samantha is constantly suffering from physical problems. At this stage, she has answered some of the questions asked by his fans

கடுமையான நோய் பிரச்சனைக்கு பிறகு தற்சமயம் அதில் இருந்து மீண்டு வந்து சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் நடிகை சமந்தா.

இந்த நிலையில் மயோசிட்டிஸ் என்கிற அந்த நோயின் காரணமாக சமந்தாவின் உடல் மிகவும் மெலிந்து விட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் அதனால் அதிர்ச்சி அடைந்து வந்தனர்.

ஏனெனில் இதற்கு முன்பு கத்தி, அஞ்சான் மாதிரியான திரைப்படங்களில் மூக்கும் மொழியுமாக இருந்த சமந்தாவை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்தனர். இதனை அடுத்து சமந்தாவிற்கு தொடர்ந்து ரசிகர்கள் கமெண்ட் செய்யும் பொழுது அவரது பழைய உடலுடன் வரும்படி கமெண்ட் செய்தனர்.

உடல் பிரச்சனை குறித்து சமந்தா:

இந்த நிலையில் இதற்கு சமீபத்தில் பதில் அளித்து இருக்கிறார் சமந்தா அதில் அவர் கூறும் பொழுது எல்லோரையும் அவர்களுடைய இயல்புடன் வாழ விடுங்கள். எனக்கு நோயிலிருந்து மீண்டு வந்ததால் ரொம்ப சரியான அளவிலான உணவுகளை தான் நான் பின்பற்றியாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

அதுதான் எனது ஆரோக்கியத்திற்கும் சரியாக இருக்கிறது இப்படி இருக்கும் பொழுது திரும்பத் திரும்ப உடல் எடையை கூட்டச் சொல்வது சரி கிடையாது மேலும் ஒருவர் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். தயவு செய்து அனைவரையும் வாழ விடுங்கள் என்று அவர் பேசியிருப்பது இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.

படுக்கையில் எனக்கு முடியவே இல்ல… விட்டுடுங்கன்னு கெஞ்சினேன்.. சமந்தா ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகைகளில் முக்கியமானவராக நடிகை சமந்தா இருந்து வருகிறார். சமந்தா ஆரம்பத்தில் தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

ஆனால் அந்த திரைப்படங்களை விடவும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த நான் ஈ திரைப்படம்தான் அவருக்கு அதிக வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் பெரிய நடிகர்களுடன் நடித்து வந்த சமத்தாவிற்கு தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில் சில காலங்களாக மயோ சிட்டிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா திரைத்துறையில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறார். தொடர்ந்து தனது உடல் நலத்தை மேம்படுத்தி வருகிறார் சமந்தா.

உடல் நல பிரச்சனை:

சீக்கிரமாகவே இவர் மீண்டும் திரையுலகில் வந்து பழையபடி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டிவி சீரியஸ் மீது கவனம் செலுத்தி வந்த சமந்தா சிட்டாடல் என்கிற ஒரு சீரியசில் நடித்திருந்தார். இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்ட பொழுது உங்களுக்கு உடல் நலக்குறைவு இருக்கும் பொழுது சிட்டாடல் சீரியஸில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதில் எப்படி நடத்தீர்கள் என்று கேட்டனர் அப்பொழுது பதிலளித்த சமந்தா அப்பொழுது நான் மிகுந்த கஷ்டத்தில் இருந்தேன். படுக்கையில் இருந்து எழுவதே சிரமம் என்கிற நிலை இருந்தது ஆனாலும் அந்த சீரியஸில் அதற்கு முன்பே நடிக்க துவங்கி விட்டேன் என்பதால் கஷ்டப்பட்டு தான் நடித்து கொடுத்தேன்.

ஆனால் அது வெளிவந்த பிறகு தான் அதில் நடித்தது எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது என்று கூறியிருக்கிறார் சமந்தா.