Tag Archives: சின்மயி

வைரமுத்துவை அப்படி சொல்லி இருக்க கூடாது.. சின்மயியிடம் நேருக்கு நேர் பேசிய கங்கை அமரன்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக புகழ் பெற்ற ஒரு பாடகியாக இருந்தவர் பாடகி சின்மயி. வைரமுத்து எழுத்துக்களில் பல பாடல்களை சின்மயி பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்படத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக மீ2 என்கிற பிரச்சனை உலக அளவில் இருந்தது. அந்த சமயத்தில் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிப்படையாக கூறினார் பாடகி சின்மயி.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார் எந்த ஒரு தமிழ் சினிமா துறையை சேர்ந்தவர்களும் சின்மயிக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சின்மயி இப்பொழுது வரை தமிழில் பாடல்கள் பாடாமல் இருந்து வருகிறார்.

ஆனால் மற்ற மொழிகளில் அவருக்கு பாடுவதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் கங்கை அமரன் மற்றும் சின்மயி இருவரும் கலந்து கொள்ளும் பேட்டி ஒன்று நடைபெற்றது.

அதில் பேசிய கங்கை அமரன் கூறும் பொழுது வைரமுத்து ஒரு ஆகச் சிறந்த கவிஞர் அவருடைய பாடல்கள் எல்லாம் சிறப்பானதாக இருக்கும் அந்த அளவிற்கு சிறந்த கவிஞர் என்றாலும் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது.

அவர் ஒரு என்னுடைய நண்பர் என்பதற்காக இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவாக என்னால் பேச முடியாது, வைரமுத்துவை இப்படி பேசியிருக்க கூடாது என சின்மயியை கூற முடியாது என்று வெளிப்படையாகவே சின்மயிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் கங்கை அமரன்.

ஏற்கனவே இளையராஜாவுக்கும் கங்கை வைரமுத்து விற்கும் இடையே பிரச்சனை இருந்தது என்பதால் கூட கங்கை அமரன் இப்படி பேசியிருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

லோகேஷால் கண்ணீர் விட்டு அழுதேன்… ஓப்பனாக கூறிய சின்மயி..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக இருந்து வருகிறார். தொடர்ந்து வரிசையாக 5 ஹிட் படங்கள் கொடுத்த காரணத்தினால் லோகேஷ் கனகராஜ்க்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் சின்மயி சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். சின்மயி தமிழ் சினிமாவில் முன்பு அதிக பிரபலமானவராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடகி சின்மயிக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடாமல் இருந்து வந்தார். மேலும் தமிழ் சினிமாவில் எந்த வேலையும் சின்மயி பார்க்க கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் எடுத்தப்போது சின்மயியை டப்பிங்கிற்கு அழைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பல வருடம் கழித்து ஸ்டுடியோவிற்குள் வந்தப்போது அன்று கண்ணீர் வந்ததாக கூறியுள்ளார் சின்மயி.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளால் வந்த ஆபத்து.. வெளிப்படையாக பேசிய சின்மயி..!

சமீபகாலமாக பாடகி சின்மயி அதிக பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த இசை வெளியீட்டு விழாவில் முத்தமலை என்கிற ஒரு பாடலை சின்மயி பாடி இருந்தார்.

ஆனால் அந்தப் பாடலை நிஜத்தில் பாடியது பாடகி தீ. ஆனால் அவர் அன்று பிசியாக இருந்த காரணத்தால் சின்மயி அந்த பாடலை பாடினார். சின்மயி பாடிய பாடல் அதிக பிரபலம் அடைந்தது. தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் இது குறித்து பேசிய சின்மயி கூறும் பொழுது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து மக்கள் முதலிடம் இரண்டாம் இடம் என்கிற மனநிலைக்கு சென்று விட்டனர். இதற்கு முன்பு கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நான் பாடிய பொழுது அதில் ஆண் பாடகர்களாக பெரிய பெரிய பாடகர்கள் என்னுடன் பாடினர்.

ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த மாதிரியான பிரச்சனைகள் வரவில்லை இப்பொழுது இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து மக்கள் மனம் மாறிவிட்டனர் என்று கூறியுள்ளார் சின்மயி..

அந்த பொண்ணு என்னை விட திறமைசாலி.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சின்மயி..!

சமீப காலங்களாக பிரபலமானவராக பேசப்பட்டு வருகிறார் பாடகி சின்மயி. பாடகி சின்மயி வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்தார். தமிழில் மிக பிரபலமான பல பாடல்களை சின்மயி பாடியுள்ளார். அதற்கு பிறகு மீ டு பிரச்சனை வந்தப்போது துணிச்சலாக பேசியிருந்தார் சின்மயி.

அதில் வைரமுத்துவால் தனக்கு நடந்த விஷயங்களை இவர் வெளிப்படுத்தியது அதிக வைரலானது. தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதிலும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை என்கிற பாடலை சின்மயி பாடியிருந்தார்.

படத்தில் அந்த பாடலை தீ பாடியிருந்தார். ஆனால் அதை விட சின்மயி பாடியதுதான் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதுக்குறித்து சின்மயி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறும்போது அன்று தீ பிஸியாக இருந்ததால் நான் பாடினேன்,

ஆனால் இவர்கள் எனக்கும் அவருக்கும் ரெஸ்ட்லிங்கை ஆரம்பித்து வைத்துவிட்டனர். இன்னும் 15 வருடங்கள் கழித்து என்னையும் ஸ்ரேயா கோஷலையும் விட தீ பெரிய பாடகியாக இருப்பார் என கூறியுள்ளார் சின்மயி.

தடை செய்யப்பட்ட பிரபலத்துடன் ஜாலி பண்ணும் சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை சமந்தா.

சமந்தா ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பை பெறாத ஒரு கதாநாயகியாக இருந்தாலும் கூட போகப் போக அவருக்கான வாய்ப்பு என்பது சினிமாவில் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில்  சமந்தா சமீபத்தில் உடல்நல பிரச்சனைகளால் அவதிக்கு உள்ளானார். இதனால் சில நாட்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார் சமந்தா. தொடர்ந்து தனது உடல் மீது கவனம் செலுத்தி வாழ்ந்தார்.

samantha chinmayi

சமந்தாவுடன் பிரபலம்:

இந்நிலையில் மீண்டும் அடுத்து அவர் சினிமாவிற்கு வர போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. மேலும் பாலிவுட்டில் ஒரு படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே தமிழில் பிரபல பாடகியாக இருந்த சின்மையுடன் இணைந்து நவராத்திரி விழாவை கொண்டாடி இருக்கிறார் சமந்தா வைரமுத்து பிரச்சனையில் தமிழ் சினிமாவில் இருந்து விலகியவர் தான் நடிகை சின்மயி ஆனால் அவருடன் பழகுவதால் அது சமந்தாவிற்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்துமா? என்கிற கேள்வி தற்சமயம் உண்டாகியுள்ளது.!

பாலியல் தொல்லைக்கான பலனை அனுபவிப்பார்கள்.. விஜய் சேதுபதி படத்தை பார்க்க மாட்டேன் என்ற பாடகி!..

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் என்பது அதிகபட்சமாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து அதற்கு எதிரான குரல்களும் ஒரு சிலரால் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் பெரும்பாலானோர் இது குறித்து வெளியில் வாய் திறப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அப்படி அவர்கள் வாய் திறக்கும் பொழுது அவர்களுக்கு திரை துறையில் வாய்ப்புகளே கிடைக்காமல் போய்விடும்.

மேலும் அது அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் அப்படி வாய் திறந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை இழந்தவர்தான் பாடகி சின்மயி.

சின்மயி:

பாடகி சின்மயி வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறி அந்த தகவலை வெளியிட்ட பிறகு அவருக்கு திரை துறையில் நிறைய வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்து வரும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சின்மயி. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் வெளியாகி உள்ளது.

மகாராஜா படம் குறித்து பேச்சு:

இந்த திரைப்படம் முழுக்கவே பாலியல் அத்துமீறலுக்கு எதிரான ஒரு திரைப்படமாகதான் இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சின்மயி வைரமுத்து இந்த பாடத்திற்கு பாடல் வரிகள் எழுதி இருப்பது எனக்கு தெரியாது.

vijay sethupathi maharaja

அது இப்போதான் தெரியும் எனவே நான் இனி மகாராஜா திரைப்படத்தை எப்போதும் பார்க்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் சின்மயி. ஏனெனில் பாலியல் குற்றத்திர்கு எதிரான ஒரு திரைப்படத்திற்கு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு உள்ள ஒரு நபரை பாடல் வரிகளை எழுத வைப்பது எவ்வளவுக்கு சரி என்பதுதான் சின்மயியின் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலையில் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

ராதா ரவியை அப்படி பேசியிருக்க கூடாது!.. சின்மயி பகிரங்கமா அவங்க மன்னிப்பு கேட்கணும்!.. கடுப்பான டப்பிங் யூனியன்!.

Chinmayi: கோலிவுட்டில் பாடகியாக வாய்ப்பு பெற்று வந்தவர் சின்மயி. சின்மயிக்கு சிறப்பான குரல் வளம் உண்டு. தமிழில் அவர் பாடும் பெரும்பாலான பாடல்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியதாகதான் இருந்து வந்துள்ளன.

96 படத்தில் வரும் காதலே காதலே தனிபெருஞ்சுமையே, ஆதவன் படத்தில் வரும் வாராயோ வாராயோ காதல் கொள்ள ஆகியவை இவர் பாடிய பாடல்களே. இடையில் திரைத்துறையில் மீ2 விவகாரம் வெடித்தப்போது அது தொடர்பாக கவிஞர் வைரமுத்து மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார் சின்மயி.

இருந்தாலும் கூட அந்த பிரச்சனை திரைத்துறையினரால் பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை என்றே கூறவேண்டும். பாடகி என்பதையும் தாண்டி சில படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்திருக்கிறார் சின்மயி. இந்த நிலையில் சில வருடங்களுக்கு பிறகு இவரை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் இருந்து நீக்கினர்.

சின்மயி பேசியது தவறு:

இந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே திரைப்படங்களுக்கு டப்பிங் செய்ய முடியும். இதனை தொடர்ந்து சின்மயி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் திடீரென தன்னை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க தலைவரான ராதா ரவி மீது குற்றம் சாட்டினார். மேலும் அங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க உறுப்பினர்கள் கூறும்போது சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால் வருடா வருடம் சந்தா கட்ட வேண்டும். ஆனால் இரண்டு வருடங்கள் ஆன பிறகும் கூட சின்மயி எந்த ஒரு சந்தாவும் கட்டாத நிலையில்தான் நாங்கள் அவரை நீக்கினோம்.

அவர் கூறியது எல்லாமே பொய்.. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். திரும்ப டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்திற்கு வந்தாலும் அவர் ராதாரவியை பற்றி பேசியது இல்லாமல் போய்விடுமா. என கேள்வி கேட்டு வருகின்றனர்.

யார் யார் கருத்து பேசுறதுனே இல்ல!.. மீம் போட்டு வைரமுத்துவை கலாய்த்துவிட்ட சின்மயி!..

Chinmayi and Vairamuthu : கடந்த சில நாட்களுக்கு முன்பு “Deep Fake” மூலம் தவறாக சித்திரித்த படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றது. அந்த வரிசையில் முதலில் ராஷ்மிகா மந்தனா அவரைத் தொடர்ந்து காஜல் அகர்வால் படம் இணையதளத்தில் பரவியது.மேலும் தற்போது நடிகை ஆலியா பட்டின் புகைப்படமும் தவறாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதற்கு நடிகர், நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்தவண்ணம் வைரமுத்து அவர்களும் இதற்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது இது போன்று விஞ்ஞான வளர்ச்சியை தவறாக பயன்படுத்தக்கூடாது. விஞ்ஞான வளர்ச்சியில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு அதனை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், தான் பிரபலமாவதற்காக தவறானப் பாதையை தேர்தெடுக்காமல் நல்ல வழியில் புகழைத்தேடி பிரபலமடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வைரமுத்து தெரிவித்த இந்த கருத்திற்கு சின்மயி தனது”X” தளத்தில் இந்த கருத்தை பார்த்து சிரிப்பது போல அதாவது கலாய்த்து மீம் போட்டு பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு காரணம் எல்லோரும் அறிந்தது தான் சின்மயி ஏற்கனவே வைரமுத்து மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டிற்கு எதிராக இதுவரையிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அதனாலே இன்று வைரமுத்துவின் கருத்திற்கு “யார் யார் எல்லாம் கருத்து பேசுரதுனு இல்ல” என்னது போல தனது “X” தளத்தில் பதிவிட்டுள்ளார்.

யார் என்ன கருத்து கூறியிருந்தாலும் இது போன்று விஞ்ஞான வளர்ச்சியை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான், விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என்று நம்புவோம்.