Tag Archives: சுகன்யா

திருமணத்திற்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு இருந்த ரகசிய உறவு.. யாருடன் தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் நடிகை சுகன்யாவும் ஒருவர். புது நெல்லு புது நாத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் நடிகையாக அறிமுகமானார்.

அதற்கு முன்பே கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் அப்பொழுது அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

புது நெல்லு புது நாத்து திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் சுகன்யாவிற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.

சுகன்யாவுக்கு இருந்த உறவு:

suganya

தொடர்ந்து நிறைய வெற்றி படங்களையும் கொடுத்து வந்தால் சுகன்யா இந்த நிலையில் இவர் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்து விட்டனர் இப்பொழுது சுகன்யா தனியாக தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் சுகன்யா குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும்போது திருமணத்திற்கு பிறகு சுகன்யா பிரபல அரசியல்வாதி ஒருவருடன் உறவில் இருந்தார் என்று கூறியிருக்கிறார்.

திருமணமாகி ரெண்டே வருடத்தில் விவாகரத்து ஆன சோகம்.. நடிகை சுகன்யாவின் வாழ்க்கை பக்கங்கள்!..

தமிழ் சினிமாவில் பாரதிராஜா மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமான ஒரு சில அறிமுக முகங்களில் நடிகை சுகன்யாவும் ஒருவர். பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் சுகன்யா.

சுகன்யாவிற்கு அதற்கு முன்பே கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தார் சுகன்யா.

அதனை தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வந்த பொழுது புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார் சுகன்யா.

புடவையில் நடித்த சுகன்யா:

அனைத்து விதமான கதைகளையும் தேர்ந்தெடுத்து அவர் நடித்திருக்கிறார். புடவை கட்டிக்கொண்டு பெரிதாக மாடர்ன் லுக்கில் இல்லாமல் தான் அதிகபட்சமான படங்கள் நடித்திருப்பார் சுகன்யா. இருந்தாலும் அதற்கும் வரவேற்பு இருக்கதான் செய்தது.

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் அவர் மார்டனாக நடித்திருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுகன்யா.

ஆனால் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டானது. இதனை தொடர்ந்து  2003 ஆம் ஆண்டு சுகன்யா விவாகரத்து வாங்கினார். பொதுவாகவே நடிகைகள் வாழ்க்கையில் விவாகரத்து என்பது சாதாரணமான விஷயம்.

விவாகரத்து பிரச்சனை:

விவாகரத்து செய்யாத நடிகைகள் தமிழ் சினிமாவில் அபூர்வமாக தான் இருந்து வருகிறார்கள். அதனால் அது அப்பொழுது பெரிய விஷயமாக தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து பேட்டியிள் பேசிய சுகன்யா கூறும் பொழுது பெண்கள் எதற்கும் பயந்து ஓட தேவை இல்லை.

கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி ஒரு புரிதலுடன் விவாகரத்து செய்யலாம். அப்படி இல்லை என்றால் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறலாம். சமூகத்தில் 10 பேர் நம்மை பார்க்கிறார்கள் அவர்களுக்காக வாழ வேண்டும் என்றெல்லாம் மனசாட்சியோடு சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார் சுகன்யா.

அப்படி விவாகரத்து பெற தயக்கமாக இருந்தால் கொடுமையான குடும்ப வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். எனவே இவற்றையெல்லாம் கடந்து வர பெண்கள் பழக வேண்டும் என்று விவாகரத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் சுகன்யா.

ஸ்விம்மிங் உடையில் அடுத்த படத்தில்.. இந்த வயசில் அதிர்ச்சி கொடுக்கும் நடிகை சுகன்யா..!

பாரதிராஜா மூலமாக புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. சுகன்யாவை பொறுத்தவரை அவர் திரைக்கு வந்து ஒரு சில திரைப்படங்களிலேயே அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது.

பார்ப்பதற்கு ஹோம்லி லுக்கில் இருக்கும் சுகன்யா மாடன் உடையிலும் சிறப்பாக இருப்பார். அதேபோல பாரம்பரிய உடையும் அவரது தோற்றத்திற்கு ஒத்துப்போகும் என்பதால் அனைத்து வித கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்க கூடியவராக சுகன்யா இருப்பார்.

அதிகபட்சமான திரைப்படங்களில் அவரை புடவை கட்டிதான் பார்க்க முடியும். அவர் நடித்த திரைப்படத்தில் சின்ன கவுண்டர் திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் காரணமாக சிறப்பாக அந்த திரைப்படத்தில் அனைவரும் கவனிக்கும் ஒரு கதாபாத்திரமாக இருப்பார்.

சின்ன கவுண்டரில் பேமஸ்:

சின்ன கவுண்டர் திரைப்படத்தில் படம் முழுக்க புடவை தான் கட்டி இருப்பார் அந்த படத்தில் எந்த மாடர்ன் உடையும், கவர்ச்சி நடனமும் இருக்காது. இருந்தாலும் அந்த திரைப்படம் வெகுவாக பேசப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதேபோல திருமதி பழனிச்சாமி என்கிற திரைப்படத்திலும் அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்துதான் கதை செல்லும்.

இந்த நிலையில் இந்தியன் என்கிற மாஸ் ஹிட் படத்தில் நடித்த பிறகும் கூட வாய்ப்புகளை இழந்த சுகன்யா. பிறகு திரைத்துறையில் குறைவான திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் தற்சமயம் ஒரு வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் சுகன்யா.

மீண்டும் வாய்ப்பு:

இந்த க்ரைம் த்ரில்லர் சீரிஸில் சுகன்யா கொஞ்சம் தைரியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதே சமயம் படத்தில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடித்துள்ளாராம் சுகன்யா.

இளமை காலங்களிலேயே அவ்வளவு கவர்ச்சியாக நடிக்காத சுகன்யா இந்த வயதில் இப்படி நடிக்கிறாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

கவர்ச்சியா நடிச்சே ஆகணும்! நடிகையை வற்புறுத்திய ஷங்கர் – நடவடிக்கை எடுத்த ராதாரவி!..

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அதிக பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் ஆண் நட்சத்திரங்கள் போல் இல்லாமல் கதாநாயகிகள் மார்க்கெட்டை பிடித்து தமிழ் சினிமாவில் அப்படியே இருப்பது கடினமான காரியமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி பிறகு கமல் ரஜினி வந்த ஆரம்பக்காலக்கட்டங்களிலும் சரி கதாநாயகிகள் சினிமாவில் வெகு காலங்கள் இருக்க முடிந்தது. ஸ்ரீ தேவி, ரேவதி மாதிரியான கதாநாயகிகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த நிலையில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிற குறிக்கோளோடு இருக்கிற நடிகைகள் வெகுவாக சிரமப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்தியன் திரைப்படத்தில் வயதான கமலுக்கு ஜோடியாக நடிகை சுகன்யா நடித்திருப்பார்.

எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும் கவர்ச்சி காட்சிகள் இல்லாததை உறுதி செய்துக்கொண்டே சுகன்யா நடிப்பார். அந்த வகையில் இந்தியன் படத்தில் உடையில்லாமல் நிற்கும் சுகன்யாவிற்கு கமல் பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொள்ளும் காட்சி இருக்கும்.

ஆனால் அந்த காட்சியில் எந்த கவர்ச்சியும் இல்லை என இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு நடக்கும்போது அவர் சுகன்யாவை கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமான சுகன்யா அப்போது நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த நடிகர் ராதா ரவியிடம் இந்த பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார்.

பிறகு ஷங்கரை சந்தித்த ராதா ரவி சுகன்யா கவர்ச்சியாக நடிக்க மாட்டார் என கூறியுள்ளார். தற்சமயம் ஒரு பேட்டியில் இதுக்குறித்து அவர் பேசும்போது ராதாரவிக்கு நன்றி கூறியுள்ளார் நடிகை சுகன்யா.