Tag Archives: சுசீந்திரன்

இவன்லாம் சரிப்பட்டு வரமாட்டான்.. விஷ்ணு விஷாலை நீக்க நினைத்த இயக்குனர்.. பதிலுக்கு விஷ்ணு விஷால் செய்த வேலை..!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் வெண்ணிலா கபடி குழு. இந்த திரைப்படம்தான் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு முக்கியமான படமாக அமைந்தது.

அந்த படத்தில் ஆரம்பத்தில் விஷ்ணு விஷாலை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்கிற மனநிலையில் தான் இருந்திருக்கிறார் சுசீந்திரன். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

விஷ்ணு விஷால் பார்ப்பதற்கு கிராமத்து பையன் போலவே இல்லை அதையும் தாண்டி அவனுக்கு சுத்தமாக தமிழே தெரியாது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டும் தான் விஷ்ணு விஷாலுக்கு தெரியும்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை கிடைத்த தயாரிப்பாளரும் விஷ்ணு விஷாலினை வைத்து தான் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார். சரி எப்படியாவது சமாளிப்போம் என்று தான் விஷ்ணு விஷாலை வைத்து இந்த படத்தை துவங்கினேன்.

இதற்காக அவரது உடல் நிறத்தை மாற்றுவதற்காக அவரை அவரது உடலில் தேங்காய் எண்ணெயை தடவி அவரை வெயிலில் படுக்க வைத்தோம் இந்த மாதிரி நிறைய விஷயங்களை செய்தோம், ஆனால் நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் முழுமையாக ஒத்துழைத்தார் விஷ்ணு விஷால் என்று அந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் சுசீந்திரன்.

சிம்பு போட்ட ரூல்ஸ்.. நான் எடுத்த கதை… காரி துப்பிட்டாங்க..!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படங்களில் பெரிதாக வரவேற்பை பெறாமல் போன திரைப்படம் ஈஸ்வரன். ஈஸ்வரன் திரைப்படம் ஒரு குடும்ப  பாணியிலான திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தில் சிம்புக்கான காட்சிகளை வெறும் 26 நாட்களில் படமாக்கி இருக்கிறார் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் இது குறித்த சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் சுசீந்திரன் கூறும் பொழுது இந்த கதையை நான் ஜெய்யை கதாநாயகனாக வைத்து தான் எழுதினேன்.

படத்தில் கதாநாயகனுக்கான கமர்சியல் காட்சிகள் என்று பெரிதாக எதுவும் இருக்காது. சாதாரண ஒரு குடும்ப கதையாக அதை எடுப்பதுதான் எனது திட்டமாக இருந்தது.

ஆனால் சிம்பு என்னிடம் பேசும்பொழுது நீங்கள்தான் குறைந்த நாட்களிலேயே திரைப்படம் எடுத்து விடுகிறீர்களே மாநாடு திரைப்படத்தில் நான் நடிப்பதற்கு இடையே 26 நாட்கள் சும்மா தான் இருப்பேன்.

என்னை வைத்து ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நானும் அந்த கதையை கொஞ்சமாக மாற்றி சிம்புவுக்கு ஏற்ற மாதிரி செய்தேன் படத்திற்காக சிம்பு 80 நாள் எனக்கு கால் சீட் கொடுத்திருந்தால் அதற்கு தகுந்த மாதிரி ஒரு கதையை செய்திருப்பேன்.

ஆனால் மக்கள் அந்த படத்தை விரும்பவில்லை காரி துப்பி விட்டார்கள் என்று அந்த படம் குறித்து கூறியிருக்கிறார் சுசீந்திரன்.

2கே கிட்ஸை கலாய்க்கும் சுசீந்திரன்.. வைரலாகி வரும் 2கே லவ் ஸ்டோரி ட்ரைலர்.!

தமிழில் வரவேற்பை பெறும் வகையில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இயக்குனர் சுசீந்திரன். பெரும்பாலும் இயக்குனர் சுசீந்திரன் திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

இவர் இயக்கிய பாண்டியநாடு, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்கள் எல்லாமே தமிழில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. பெரும்பாலும் அவர் இயக்கிய நிறைய திரைப்படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளன.

ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது இயக்கத்தில் வரும் நிறைய படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்சமய 2கே லவ் ஸ்டோரி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

வழக்கமாக பொது புத்தியில் எப்படி இப்போது இருக்கும் தலைமுறையின் காதல்கள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோ அதே போலதான் இந்த படத்தின் கதைக்களமும் உள்ளது. எனவே இது இப்போதைய தலைமுறையினருக்கு எந்த அளவிற்கு பிடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.