முன்பை விட இப்பொழுது பாடல்வரிகளுக்கான முக்கியத்துவம் என்பது குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து நிறைய படங்களில் ஒரு அர்த்தமுள்ள பாடல் வரிகளை பார்க்க முடிவது கிடையாது.
முன்பெல்லாம் பாடல் வரிகளை கவிஞர்கள் எழுதி வந்தார்கள் அதனால் அந்த வரிகளில் நிறைய அர்த்தங்கள் இருந்தன. ஆனால் இப்பொழுது பாடல் வரிகளை அந்த மாதிரி முக்கியமான ஆட்கள் எழுதுவது கிடையாது என்பதால் அந்த வரிகளுக்கு அர்த்தங்கள் அதிகமாக இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில் பிரபுதேவா நடித்து வரும் ஜாலியா ஜிம்கானா என்கிற பாடத்தில் வரும் பாடல் வரிகள்தான் இப்பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் பிரபு தேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
பாடல் வரிகளால் பிரச்சனை:
மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த் போன்றவர்கள் இதில் கதாநாயகியாக நடித்திருக்கின்றனர். சமீபத்தில் பிரபுதேவா நடித்த எந்த படத்திற்கும் பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அந்த படத்திற்கு வரவேற்பு என்பது அதன் பாடலின் மூலமே தற்சமயம் கிடைத்து வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான ஒரு பாடல் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. அந்த பாடலில் உள்ள வசனங்கள் எல்லாம் இரட்டை அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கின்றன என்று பேச்சுக்கள் இருந்தன அதனை தொடர்ந்து இப்பொழுது ஊசி குத்தும் ரோஸி என்கின்ற ஒரு பாடல் வெளி வந்து இருக்கிறது.
இந்த பாடலில் பிரபு தேவா மற்றும் யாஷிகா ஆனந்த் வருகின்றனர் இந்த பாடலின் வரிகளும் இரட்டை அர்த்தங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது இதனை தொடர்ந்து இதுவும் இப்பொழுது சர்ச்சையாகி இருக்கிறது.