Tag Archives: ஜேம்ஸ் கேமரூன்

எதிரியாக வரும் நாமி கிரக வாசிகள்.. வெளியான Avatar: Fire and Ash – Official Trailer

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். 1000 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை பொறுத்தவரை நாமி  கிரகத்தில் இருக்கும் வளங்களை எடுப்பதற்காக மனிதர்கள் நாமி என்னும் கிரகத்திற்கு செல்கின்றனர்.

அங்கு நாமி கிரக வாசிகளை வழிக்கு கொண்டு வர நினைக்கும் கதாநாயகன் அந்த கிரகவாசிகளுக்கு ஆதரவாக மாறுகின்றார். அதனை தொடர்ந்து மனிதர்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரை அடிப்படையாக கொண்டு முதல் பாகம் அமைந்திருந்தது.

அதனை தொடர்ந்து அவதார் த வே ஆஃப் வாட்டர் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் கதாநாயகன் தனது குடும்பத்தை காப்பாற்ற நீரில் வாழும் நாமி கிரக வாசிகளிடம் உதவி கேட்டு செல்வதாக கதை இருக்கும்.

இப்போது மூன்றாம் பாகமான Avatar Fire and Ash திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திலும் மனிதர்கள் ஒரு பக்கம் கதாநாயகனை துரத்துகின்றனர். ஆனால் மனிதர்களுடன் சேர்ந்து நாமி கிரகத்தில் நெருப்பை ஆயுதமாக கொண்டு வாழும் ஒரு கூட்டம் உள்ளது.

அவர்களும் சேர்ந்து கதாநாயகனை துரத்துகின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற டிசம்பர் 19 திரையரங்கிற்கு வர இருக்கிறது.

நாம் ஹாலிவுட்டில் படம் பண்ணனும்! –  ராஜமெளலியை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்!

சென்ற வருடம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்த இந்த படமானது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கு முன்பு இந்தியாவில் எடுக்கப்பட்ட எந்த ஒரு படமும் இப்படி ஒரு வரவேற்பை பெற்றதில்லை. இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தில் வரும் நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது.

இந்த நிலையில் அந்த படத்தை பார்த்து வியந்த பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ராஜமெளலியை பாராட்டியுள்ளார். அப்போது ஜேம்ஸ் கேமரூன் சொல்லும்போது இருவரையும் ஒருவர் நீர் என்றும் மற்றொருவரை நெருப்பு எனவும் காட்டி இருந்தது, அவர்களுக்கு இடையேயான நட்பு, படத்தில் காட்சிப்படுத்தியிருந்த விதம், இசை என படத்தில் அனைத்துமே பிரமாதமாக இருந்தது என ராஜமெளலியை பாராட்டியிருந்தார்.

மேலும் அந்த படத்தை தான் இரண்டு முறை பார்த்ததாக ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். அடுத்து ஒருவேளை ஹாலிவுட்டில் திரைப்படம் எடுக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும். மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறேன் என ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.

பொதுவாக உலகம் முழுவதும் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமாதான் என நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் தென்னிந்திய சினிமாவிற்கு உலக அளவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார் இயக்குனர் ராஜமெளலி.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

இந்த படம் போரடிக்கும் சார் ! –  ஜேம்ஸ் கேமரூனை கலாய்த்த டிகாப்ரியோ

உலக புகழ்ப்பெற்ற இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே எப்போதும் உலக அளவில் வரவேற்பையும் ஹிட்டையும் கொடுக்க கூடியவை.

ஜேம்ஸ் கேமரூனுக்கு முதல் முதலில் பெரும் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் டைட்டானிக். இந்த படம் 1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரபல நடிகரான லியானார்டோ டிகாப்ரியா நடித்து வெளியானது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என 11 விருதுகளை இந்த படம் வென்றது. அப்போதைய காலங்களில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக டைட்டானிக் இருந்தது.

டைட்டானிக் வெளியாகி 25 வருடம் முடிந்த நிலையில் அதை கொண்டாடும் விதமாக திரும்பவும் அந்த படத்தை டிஜிட்டல் வெர்ஸனாக மாற்றி வெளியிட இருக்கிறார்கள். 3டி தொழில்நுட்பத்தையும் சேர்த்து படம் வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில் டைட்டானிக் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அதாவது முதன் முதலில் டைட்டானிக் படத்தின் கதையை நடிகர் டிகாப்ரியோவிடம் ஜேம்ஸ் கேமரூன் கூறும்போது அதை கேட்ட டிகாப்ரியோ, என்ன சார் இந்த படக்கதை ரொம்ப சுமாராக இருக்கே, போரடிக்கும் போலயே என கூறியுள்ளார்.

ஆனால் படம் வெளியான பிறகு டிகாப்ரியாவிற்குமே இது முக்கியமான படமாக அமைந்தது.