Tag Archives: ஜேம்ஸ் வசந்தன்

விஜய் விரும்பாட்டியும் அதை பண்ணனும்.. இளைஞர்களை கெடுக்க கூடாது… ஜேம்ஸ் வசந்தன்.!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தும் முக்கியமானவர். பெரும்பாலும் ஜேம்ஸ் வசந்தன் அவர் மனதிற்கு தோன்றிய விஷயங்களை கூறி விடுவார் என்றாலும் கூட அது சில சமயங்களில் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில் அவர் விஜய் குறித்து பேசிய ஒரு விஷயமும் சர்ச்சையானது விஜய் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு வரும்பொழுது மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.

தலைமுடியை கூட ஒழுங்காக சீவாமல் வந்திருந்தார். விஜய் அதிக பணம் சம்பாதிக்கும் ஒருவராக இருக்கிறார் பெரும்பாலும் அதிக பணம் சம்பாதிப்பவர்கள் எளிமையாக இருப்பது உண்மைதான். ஆனால் அவரைப் பார்த்து வளரும் இளைஞர்கள் எல்லாவற்றையும் அவரை பார்த்து கற்றுக் கொள்கிறார்கள்.

vijay tvk

அதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் இப்பொழுது இவர் ஒரு பெரிய மேடை நிகழ்ச்சிக்கு ஒழுங்காக தலையைக்கூட சீவாமல் வருகிறார் என்றால் அதை பார்க்கும் இளைஞர்களும் அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது விஜய் அண்ணாவை அப்படி செய்கிறார் என்றால் நம்மளும் அப்படியே செல்வோம் என்று சொல்வார்கள்.

எனவே பிடிக்கிறதோ இல்லையோ விஜய்க்கு ஒரு பொறுப்பு இருக்கிறது அதை அவர் கடைபிடித்துதான் ஆக வேண்டும் என்று கூறி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

மனிதாபிமானமே இல்லாமல் பாடகியை அவமானப்படுத்தினார்.. இளையராஜா குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்.!

தொடர்ந்து இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய விஷயத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசி வருகிறார். ஒரு பக்கம் அந்த கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் இருந்து வந்தாலும் ஒரு பக்கம் ஆதரவுகளும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இளையராஜா முன்பு ஒரு முறை மேடையில் வைத்து பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்திய விஷயம் குறித்த ஜேம்ஸ் வசந்தன் பேசியிருக்கிறார்.

பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் மிக பிரபலமானவர் ஆவார். ஹிந்தியில் நிறைய பாடல்களை பாடி இருக்கும் ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காலி ஆவார். மற்ற மொழிகள் தெரியாது என்றாலும் கூட பாடல் வரிகளை பார்த்து பாடும் பொழுது மிகச் சிறப்பாக அந்த பாடலை பாடி விடுவதால் அவருக்கு எல்லா மொழிகளிலுமே வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

தமிழில் கூட பாடல்கள் பாடியிருக்கிறார். இந்த நிலையில் இளையராஜாவுடன் மேடையில் பாடும் பொழுது இளையராஜா இசையமைத்த ஒரு பாடலை தமிழில் பாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஸ்ரேயா கோஷல் அதை தவறாக பாடிவிட்டார்.

அதற்கு இளையராஜா தமிழிலேயே ஒரு கமெண்ட் கொடுத்து ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்தி இருந்தார். இது எவ்வளவு மோசமான ஒரு விஷயம் அவருக்கு தெரியாத மொழியில் அவரை அவமானப்படுத்துவது சரியா என்று இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

இளையராஜா ஒரு மட்டமான மனிதர்.. சரவெடியாக பேசிய திரைப்பிரபலம்!

தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலும் போற்றப்படும் இசையமைப்பாளராக இளையராஜா இருந்து வருகிறார். இசையின் கடவுளாகதான் இளையராஜாவை தமிழ் இசை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

அப்படி இருந்தாலும் கூட இளையராஜா பல சமயங்களில் பேசும் விஷயங்கள் அதிக சர்ச்சையாகி விடுகின்றன. இந்த நிலையில் இளையராஜாவின் பேச்சு குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படையாகவே பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது நிஜ வாழ்க்கையில் இளையராஜா ஒரு மட்டமான மனிதர் இசையை பொருத்தவரை இளையராஜாவை நான் குறை சொல்ல முடியாது. அது என்னுடைய குருவை நானே குறை சொல்வது போல் ஆகிவிடும். அந்த அளவிற்கு இசையில் மிக முக்கியமானவர் இளையராஜா.

ஆனால் இளையராஜாவை திரைத்துறையில் இருக்கும் பலரே பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள் சாமி என்றுதான் அழைப்பார்கள். ஏனெனில் ஆன்மீகத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு கொண்டவர் இளையராஜா.

ஆன்மீகம் என்பது ஒருவருக்கு பொறுமையையும் நிதானத்தையும் கொடுக்க வேண்டும். ஆனால் இளையராஜா நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை சமீபத்தில் கூட அமெரிக்காவிற்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அமெரிக்கர்கள் கிறிஸ்துவ மதத்தைதான் போற்றி வருகின்றனர்.

இயேசுவின் மறுபிறப்பு போன்றவை தான் அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அங்கு சென்ற இளையராஜா இயேசு மறுபிறப்பு எடுத்தாரா? இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் ரமண ரிஷி மறுபிறவி எடுத்தார் என்று பேசியிருக்கிறார்.

எந்த ஒரு ஆன்மீகவாதியாவது இப்படி பேசுவார்களா என்று வெளிப்படையாக கேட்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பேச்சை இப்பொழுது சர்ச்சையாகி வருகிறது.

நீங்கள் இசையமைத்த படங்களுக்கு காப்பிரைட் வைத்துள்ளீர்களா? இளையராஜா பிரச்சனை குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்.

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். கடந்த சில நாட்களாக நடந்து வரும் காப்புரிமை பிரச்சனை குறித்து அவர் தற்சமயம் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தனக்குதான் வேண்டும் என கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வெகு காலமாகவே நிலுவையில் சென்று கொண்டுள்ளது. ஆனால் ஒரு பாடலுக்கு இசை மட்டும் முக்கியம் கிடையாது. பாடல் வரிகளும் முக்கியம்தான் என இதுக்குறித்து வைரமுத்து தனது கருத்தை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார் கங்கை அமரன். இந்த பிரச்சனை இப்படியாக விஸ்வரூபம் எடுக்க பிரபலங்கள் பலருமே இதுக்குறித்து பேச துவங்கினர். இந்த நிலையில்தான் ஜேம்ஸ் வசந்தன் இதுக்குறித்து பேசியுள்ளார்.

ilayaraja-1

அதில் அவர் கூறும்போது ராயல்டிக்கும் காப்பிரைட்டுக்கும் வித்தியாசம் உண்டு. வெளிநாடுகளில் உள்ள இசையமைப்பவர்கள் போல இங்கு தனியாக இசையமைப்பதில்லை. எனவே சட்டங்கள் வெளிநாட்டில் இருந்து இங்கு மாறுப்படுகிறது. இதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்கிறார்.

இந்த நிலையில் ஜேம்ஸ் வசந்தனிடம் தினேஷ் குமார் என்பவர் நீங்கள் இசையமைத்த படங்களுக்கு காப்பிரைட் மற்றும் ராயல்டி வைத்து இருக்கிறீர்களா? இல்லையா? என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஜேம்ஸ் வசந்தன் நான் இசையமைத்த படங்களின் காப்புரிமை தயாரிப்பாளர் மூலமாக பதிப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்றுவிட்டன.

ராயல்டி மாதந்தோறும் தவறாமல் என் வங்கி கணக்குக்கு வருகிறது என கூறுகிறார்.

பட விமர்சனத்தால் கடுப்பாகி அலுவலகம் தேடி வந்துட்டார் சேரன்!.. இசையமைப்பாளருக்கு நடந்த சம்பவம்!..

கோலிவுட்டில் குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். பெரும்பாலும் அவர் இயக்கும் திரைப்படங்களில் கார்ப்பரேட் வில்லன் என்றெல்லாம் இருக்காது. குடும்ப பிரச்சனைகளுக்கு நடுவே ஒரு கதைக்கருவை வைத்து அதை வைத்தே திரைப்படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்.

இந்த நிலையில் சேரன் இயக்கத்தில் அப்போது வந்த திரைப்படம் பொற்காலம். முரளி கதாநாயகனாக நடித்த அந்த திரைபப்டத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் திரைப்படம் குறித்து அப்போது விமர்சனம் அளித்து வந்தார்.

அது சின்ன திரையில் ஒரு நிகழ்ச்சியாக நடைப்பெற்று வந்தது. ஆனால் அந்த டிவி சேனல் சொல்லும் விஷயத்தைதான் ஜேம்ஸ் வசந்தன் அப்படியே சொல்லி வந்தார். இந்த நிலையில் பொற்காலம் திரைப்படம் குறித்து கொஞ்சம் எதிர்மறையான கருத்தை தெரிவித்தார் ஜேம்ஸ் வசந்தன். ஆனால் உண்மையில் ஜேம்ஸ் வசந்தனுக்கு அந்த திரைப்படம் பிடித்திருந்தது.

இதனால் கோபமான சேரன் நேராக அந்த தொலைக்காட்சி அலுவலகத்திற்கே வந்துவிட்டார். பிறகு ஜேம்ஸ் வசந்தனிடம் நீங்கள் கண்டிப்பாக அந்த ரிவ்யூவை கொடுத்திருக்க மாட்டீர்கள் என தெரியும் என்று கூறிவிட்டு டிவி சேனலிடம் இனி இப்படி செய்யாதீர்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார் என அந்த நிகழ்ச்சி குறித்து பகிர்ந்துள்ளார் சேரன்.