Tag Archives: தியாகராஜ பாகவதர்

தியாகராஜ பாகவதர் கதைதான்… துல்கர் கலம் இறங்கிய படத்தின் கதை..!

நடிகர் துல்கர் சல்மான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் அவர் அடுத்து நடித்து வரும் திரைப்படம் நான் காந்தா.

இந்த காந்தா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் காந்தா திரைப்படம் ஒரு பழைய காலத்து சினிமா திரைப்படமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி துல்கர் சல்மான் ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகராக இருக்கிறார். அதிக புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அவர் செய்யும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதைகளம் செல்கிறது.

ஆரம்பத்தில் இந்த படம் எம்.ஜி.ஆரின் கதையாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஏனெனில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட கலைஞர் கருணாநிதியின் கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இப்பொழுது வந்த தகவலின் படி இந்த திரைப்படம் தியாகராஜ பாகவதரின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அதிக புகழ் பெற்ற நடிகர்களாக இருந்தவர்கள் தியாகராஜ பாகவதரும் என் எஸ் கிருஷ்ணனும்தான். அவர்களுக்கு பிறகு தான் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோர் வந்தனர்.

எனவே இந்த கதைகளமானது அவர்களது காலகட்டத்தை கூறும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு இருந்த சினிமாவை இதுவரை யாரும் படம் எடுத்ததில்லை அந்த வகையில் இந்த திரைப்படம் தான் முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க நாடகமே நடிக்க வேண்டாம்!.. போருக்கு நிதி திரட்ட சென்ற இடத்தில் தியாகராஜ பாகவதருக்கு நடந்த நிகழ்வு!..

Thiyagaraja bagavathar: எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலக்கட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் தியாகராஜ பாகவதர். தியாகராஜ பாகவதர் எம்.ஜி.ஆரை விடவுமே பிரபலமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நேரடியாக காலடி எடுத்து வைத்தவரல்ல தியாகராஜ பாகவதர். அவர் முதலில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போதைய காலக்கட்டங்களில் முதலில் நாடகத்தில் நடித்திர்ந்தால்தான் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை இருந்தது.

தியாகராஜ பாகவதரை பொறுத்தவரை ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த பாடகரும் கூட, அவர் பாடும் பாடல்களுக்கும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில்தான் இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் போர் புரிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். எனவே அதற்காக இந்தியாவில் நிதி திரட்ட பல வேலைகள் நடந்தன. அப்படியாக நாடகங்கள் நடத்தி நிதி திரட்டி தர வேண்டும் என்று தியாகராஜ பாகவதருக்கும் கட்டளை இட்டிருந்தனர்.

இதனையடுத்து பவளக்கொடி என்னும் நாடகத்தை சென்னையில் நடத்தினார் தியாகராஜ பாகவதர். அப்போது நாடகத்திற்கு இடையே பாடல் வரும் அல்லவா. அதையும் தியாகராஜ பாகவதரே பாடினார். அந்த பாடலில் மெய் மறந்த மக்கள் நாடகமே நடத்த வேண்டாம் தொடர்ந்து பாடி கொண்டிருங்கள் என்று கூறியுள்ளனர்.

அதனையடுத்து நாடக நிகழ்ச்சி இசை நிகழ்ச்சியாக மாறியுள்ளது. தியாகராஜ பாகவதரின் பாடலுக்கு அவ்வளவு வரவேற்பு அப்போது இருந்துள்ளது.

சில சர்ச்சைகளும் , கொலையும்,.. தமிழ் சினிமாவில் கிசு கிசு உருவான கதை!.. ஒரு விரிவான அலசல்!..

Gossips in Tamil cinema: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் சங்கதிதான் கிசு கிசு. அப்போது துவங்கி இப்போதுவரை இருக்கும் கிசு கிசுவானது உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.

கிசு கிசு:

முதலில் கிசு கிசு என்றால் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காக ஒரு விளக்கம். பிரபலங்களை பற்றி ஆதாரமற்ற சில ரகசியமான தகவல்கள் பேச்சு வழக்கிலோ சினிமாவில் உள்ள தொடர்புகள் மூலமாகவோ பத்திரிக்கையாளர்களை வந்தடையும். ஆனால் அவை சர்ச்சையை ஏற்படுத்தும் தகவல்களாக இருக்கும் பட்சத்தில் அதை வெளியிடுவதில் சிக்கல்களும் ஏற்படும்.

அதனால் கொலைகள் எல்லாம் வரலாற்றில் நடந்துள்ளன. எனவே அந்த பிரபலங்களின் பெயரை மக்களுக்கு புரியும் வகையில் இலை மறை காயாக குறிப்பிட்டு அந்த ரகசியத்தை எழுத துவங்கினர். இதைதான் கிசு கிசு என்று கூறுவார்கள். ஒற்றை விரல் நடிகர், வாரிசு நடிகர் என்றெல்லாம் குறிப்பிடும் முறை இப்படியாகதான் வந்தது.

இந்து நேசனும் லெட்சுமி காந்தனும்:

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலக்கட்டத்திற்கு முன்பே கிசு கிசுவிற்கான புள்ளையார் சுழியை போட்டு வைத்தவர் லெட்சுமி காந்தன் எனும் பத்திரிக்கையாளர்தான். இவர் இந்து நேசன் பத்திரிக்கையில் 1943 இல் சினிமா தூது என்னும் வார இதழை துவங்கி அதில் பிரபலங்கள் குறித்த அந்தரங்க மற்றும் ரகசிய செய்திகளை எழுதி வந்தார்.

அப்படி அவர் எழுதும்போது அந்த பிரபலங்களின் பெயரையே குறிப்பிட்டு செய்திகளை எழுதி வந்தார். எனவே அது சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு வாரமும் நம்மை பற்றி வந்துவிடுமோ என்று பிரபலங்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

மேலும் இதனால் மக்கள் மத்தியில் உள்ள நல்ல பெயரும் இவர்களுக்கு கெட்டு போனது. இப்படியாக என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் எம்.கே தியாகராஜ பாகவதர் குறித்து வந்த கட்டுரைகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.

மர்மகொலை:

இதனால் பாகவதருக்கும் என்.எஸ் கிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஆனது. இருவரும் பிரிய லெட்சுமிகாந்தன் எழுதிய ஒரு கட்டுரை காரணமாக இருந்தது. இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து லெட்சுமிகாந்தனுக்கு மிரட்டல்கள் வர துவங்கின. இப்படி சினிமாவில் பலரிடமும் எதிர்ப்பை சம்பாதித்து வந்தார் லெட்சுமிகாந்தன். ஆனால் இந்த கட்டுரை எழுதுவதை மட்டும் அவர் விடவே இல்லை.

lakshmi kandan

இந்த நிலையில் 6 நவம்பர் 1944 அன்று சென்னை வேப்பேரி பகுதியில் சென்று கொண்டிருந்தப்போது மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லெட்சுமிகாந்தன் சிகிச்சை பலனின்றி மறுநாள் இறந்து போனார்.

வரிசையாக கைதான பிரபலங்கள்:

இந்த நிலையில் இந்த குற்றம் நடந்து 50 நாட்கள் கழித்து அது தொடர்பாக முக்கிய குற்றவாளிகளாக நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதர், என்.எஸ் கிருஷ்ணன், பக்‌ஷிராஜா ஸ்டுடியோஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் ஸ்ரீ ராமலு நாயுடு அவர்களோடு இன்னும் 3 பேர்  கைது செய்யப்பட்டனர். அதில் ராமலு நாயுடு நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

ஆனால் எம்.கே தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ் கிருஷ்ணனுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டது. அடுத்தப்படியாக Judicial Committee of the Privy Council இல் அவர்கள் மேல் முறையீடு செய்தப்போது அவர்களை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தனர்.

அப்போதே இதில் பணம் விளையாடி இருக்கிறது என பேச்சுக்கள் இருந்தன. மேலும் அதற்கு பிறகும் இந்த வழக்கில் குற்றவாளி கண்டுப்பிடிக்கப்படவே இல்லை.

கிசு கிசுவின் பிறப்பு:

திரை பிரபலங்களின் இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இனி எப்படி பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக எழுத முடியும் என்கிற கேள்வி அனைவரது முன்பும் இருந்தது. மேலும் இந்த நிகழ்வால் மற்ற பத்திரிக்கையாளர்களும் பிரபலங்கள் குறித்து எழுதுவதற்கே பயப்பட துவங்கினார்.

இது ஒரு பத்திரிக்கையாளரை அளவுக்கதிகமாக கோபப்படுத்தியது. அவர்தான் குமுதம் பத்திரிக்கையின் ஆசிரியரான எஸ்.ஏ.பி அண்ணாமலை. இப்படியே விட்டுவிட்டால் அது பத்திரிக்கையாளர்கள் கருத்து சுதந்திரத்திற்கே ஆபத்தாக முடிந்துவிடும் என நினைத்த எஸ்.ஏ.பி அண்ணாமலை ஆழ்ந்த யோசனைக்கு சென்றார்.

SAP annamalai

அந்தரங்க விஷயங்களை பத்திரிக்கைக்கும், அதை எழுதும் ஆசிரியருக்கும் பிரச்சனை இல்லாமல் எப்படி எழுதுவது என யோசித்தப்போதுதான் பிரபலங்களின் பெயர்களை நேரடியாக போடாமல் இலை மறை காயாக எழுத வேண்டும்.

ஆனால் அதன் மூலம் மக்கள் யார் அந்த பிரபலம் என்பதையும் அறிந்துகொள்ளும் வகையில் எழுத வேண்டும் என முடிவு செய்தார். கிசு கிசு உருவானது. கிசு கிசுவை பொறுத்தவரை அதை எழுதுபவர் நலன் கருதி பத்திரிக்கையில் அதை யார் எழுதினார் என்பதை குமுதம் பத்திரிக்கை வெளியிடாது.

சினிமாவில் ஒரு ஸ்லீப்பர்செல்ஸ்:

இந்த நிலையில் தரமான அந்தரங்க செய்திகளை எழுத ஒரு ஆள் வேண்டும் என குமுதம் பத்திரிக்கை தேடி கொண்டிருந்தப்போது அவர்களுக்கு கிடைத்த நபர்தான் எம்.பி மணி. இவர் சினிமாவில் அனைத்து பிரபலங்களுடன் நல்ல நெருக்கத்தில் உள்ளவர். பல பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் இவருக்கு தெரியும்.

மேலும் சினிமாவிற்கு செல்வதற்கு முன்பு மாலை முரசு, அலை ஓசை போன்ற பத்திரிக்கைகளில் பத்திரிக்கையாளராக பணிப்புரிந்திருந்தார் எம்.பி மணி. எனவே இதுக்குறித்து அவரிடம் பேசினார் அண்ணாமலை. உங்களது பெயர் எந்த சூழ்நிலையிலும் வெளிவராது என ஆசிரியர் கூறியதால் இதற்கு ஒப்புக்கொண்டார் எம்.பி மணி.

சினிமா பிரபலங்களுக்கு மீண்டும் திக் திக் வாரங்கள்:

இதனை அடுத்து குமுதத்தில் இந்து நேசன் பத்திரிக்கை போலவே வாரா வாரம் நடிகர்கள் குறித்த ரகசிய மற்றும் அந்தரங்க செய்திகள் கிசு கிசுவாக மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் வந்தன. இதனால் கையறு நிலையில் இருந்தனர் பிரபலங்கள். ஏனெனில் அவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிடாத காரணத்தால் அவர்களால் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் சினிமாவிலேயே பலருக்கும் தெரியாத விஷயங்கள் கூட இந்த செய்திகளில் வந்தன.

சிக்கலில் சிக்கிய ஏ.வி.எம் ராஜன்:

இப்படியாக சினிமாவில் கூட பலருக்கும் தெரியாத ஏ.வி.எம் ராஜனின் காதல் கதை குமுதத்தில் வந்தப்போது ஏ.வி.எம் ராஜனோடு சேர்ந்து சினிமா துறையே அதிர்ச்சிக்கு உள்ளானது. அப்போது நடிகர் ஏ.வி.எம் ராஜனும் புஸ்பலதாவும் காதலித்து வந்தனர்.

ஏ.வி.எம் ராஜனோடும் நண்பராக இருந்து வந்தார் எம்.பி மணி. ஏ.வி.எம் ராஜனும் புஸ்பலதாவும் மிகவும் ரகசியமாகவே சந்தித்து வந்தனர். அந்த சமயத்தில் எல்லாம் அவர்கள் இருவரையும் யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக எம்.பி மணியிடம்தான் யாராவது வந்தால் சொல்லவும் என காவலுக்கு நிற்க வைப்பாராம்.

பாவம் எம்.பி மணிதான் அந்த கிசு கிசு எழுதுபவர் என்பது ஏ,வி.எம் ராஜனுக்கு தெரியாத சங்கதியாகும். இந்த நிலையில் மறு வாரமே அதை கிசு கிசுவாக எழுதினார் எம்.பி மணி.

சிவாஜியிடம் சென்ற பஞ்சாயத்து

இந்த நிலையில் இந்த பிரச்சனை நடிகர் சிவாஜி கணேசனிடம் சென்றது. அப்போது அவர்தான் நடிகர் சங்க தலைவராக இருந்தார். விஷயத்தை விசாரித்த சிவாஜி கணேசன் அந்த கிசு கிசு மன்னன் யார் என அறிந்து வருமாறு எம்.பி மணியிடமே கூறினார்.

sivaji-ganesan

எம்.பி மணி சிவாஜி கணேசனுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். அதனால் சிவாஜி கணேசனுக்கு எம்.பி மணி மீது எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை. இதற்கு நடுவே பிரபலங்கள் பலரும் யார் அந்த கிசுகிசுவை எழுதுவது என கேட்டு ஆசிரியர் ஏ.எஸ்.பி அண்ணாமலைக்கும் தொல்லை கொடுத்தனர். ஆனால் அவர் இறுதிவரை அதை ரகசியமாகவே வைத்திருந்தார்.

சிக்கிய எம்.பி மணி

இதற்கு நடுவே ஒரு மாத காலம் ஆகியும் கூட எம்.பி மணி எந்த ஒரு தகவலையும் சிவாஜி கணேசனுக்கு அளிக்காமல் இருந்துள்ளார். பிறகு ஒரு வாரத்தில் வெளியான கிசு கிசுவை படித்தப்போது சிவாஜி கணேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த செய்தி சினிமாவில் யாருக்குமே தெரியாது. அது சிவாஜி கணேசனுக்கும் எம்.பி மணிக்கும் மட்டுமே தெரிந்த தகவல்.

எனவே இந்த கிசுகிசுவிற்கும் எம்.பி மணிக்கும் தொடர்புண்டு என்பதை அறிந்த சிவாஜி கணேசன். அவரை அழைத்து விசாரித்தார். அவரிடம் இருந்த நட்பின் காரணமாக உடனே உண்மையை ஒப்புக்கொண்டார் எம்.பி மணி. சிவாஜி கணேசனும் அதை வெளிப்படையாக யாரிடமும் கூறவில்லை. ஆனால் இனி கிசு கிசு எழுதக்கூடாது என எம்.பி மணியிடம் கூறிவிட்டார். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் அதோடு கிசு கிசு முடிந்துவிடவில்லை. பிறகு அனைத்து பத்திரிக்கைகளும் கிசு கிசுவை எழுத துவங்கின. அதற்காக சினிமாவில் பல்வேறு நபர்களிடமும் தகவல்களை பெற்றனர். அதன் பிறகு கிசுகிசு என்பது திரைத்துறையால் கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையை எட்டியது…

Editor

Rajkumar K

தியாகராஜ பாகவதர் ஜெயிலுக்கு போனதால் வாய்ப்பை பெற்ற நடிகை.. இப்படியும் நடந்துச்சா!..

Thiyagaraja baghavathar: எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் தியாகராஜ பாகவதர் முக்கியமானவர் ஆவார். தியாகராஜ பாகவதரின் படங்கள் மற்றும் பாடல்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது.

முக்கியமாக அவரது படத்தில் வரும் பாடலான செந்தமிழ் தேன்மொழியால் என்கிற அந்த பாடல் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு பாடலாகும். அந்த காலகட்டங்களில் வந்த வேறு எந்த பாடலும் அந்த அளவிற்கு இப்போதைய தலைமுறையை எட்டவில்லை என்று கூறலாம்.

அப்படிப்பட்ட தியாகராஜ பாகவதர் ஒரு பத்திரிகையாளரின் மரணம் காரணமாக சிறைக்கு சென்ற சம்பவம் நடந்தது. என்.எஸ். கிருஷ்ணன் குறித்தும் தியாகராஜ பாகவதர் குறித்தும் விமர்சனங்களை எழுதி வந்த ஒரு பத்திரிக்கையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதை அடுத்து அதற்கு இவர்கள் தான் காரணம் என்று கூறி அவர்களை சிறையில் வைத்திருந்தனர்.

இந்த காலகட்டத்தில் தான் ஹொன்னப்பா பாகவதர் என்கிற நடிகர் பிரபலமாக துவங்கியிருந்தார். இவர் கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக இருந்தார். தியாகராஜ பாகவதர் இல்லாத காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலும் நடித்து வந்தார்.

அப்பொழுது பாடகிக்கான நேர்காணல் நடந்து கொண்டிருந்த பொழுது அதில் நடிகை சரோஜா தேவியும் கலந்து கொண்டிருந்தார். அவரை பாடச் சொன்ன பொழுது அவர் நன்றாகவே பாடினார். இருந்தாலும் அவரது முகம் ஒரு கதாநாயகிக்கான முகமாக ஹொன்னப்பா பாகவதருக்கு தெரிந்தது உடனே அவர் சரோஜாதேவிக்கு மேக்கப் போட்டு அவரை நடிக்கச் சொன்னார்.

சரோஜாதேவி மிக சிறப்பாகவே நடித்தார். அதனை பார்த்து தனது திரைப்படத்திலேயே ஹொன்னப்பா பாகவதர் ஒரு வாய்ப்பை சரோஜாதேவிக்கு கொடுத்தார். அதுதான் சரோஜாதேவியின் முதல் படம் மறைமுகமாக பார்க்கும் பொழுது ஹொன்னப்பா பாகவதர் சினிமாவிற்கு வந்ததால் தான் சரோஜாதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது ஒருவேளை தியாகராஜ பாகவதர் சிறைக்கு செல்லாமல் இருந்திருந்தால் ஹொன்னப்பா பாகவதர் தமிழ்நாட்டிற்கு வந்து அவரது படத்திற்கான நேர்காணலை நடத்தி இருக்க மாட்டார் சரோஜாதேவிக்கும் அதில் வாய்ப்பு கிடைத்திருக்காது என்று கூறப்படுகிறது .

மார்க்கெட் போனதுக்காக அந்த கேரக்டரில் எல்லாம் நடிக்க முடியாது!.. சிவாஜி படத்துக்கு நோ சொன்ன தியாகராஜ பாகவதர்!..

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் பிரபலமான நடிகர்கள் என ஒருவர் இருப்பார். ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்கள் வந்த பிறகு முந்தைய நடிகர்களுக்கு மார்க்கெட் குறைந்துவிடும்.

என்னதான் நடிகர் திலகமாகவே இருந்தாலும் ஒரு காலத்திற்கு நடிகர் சிவாஜி கணேசனுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. அந்த சூழ்நிலையில் தன்னால் நடிப்பை விட முடியாது என முடிவு சிவாஜி கணேசன் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

ஆனால் கமல் ரஜினி மாதிரியான நடிகர்கள் எல்லாம் இப்போதும் ஹீரோக்களாக நடித்துக்கொண்டுள்ளனர். முந்தைய தமிழ் சினிமாவில் இந்த நிலை இருக்கவில்லை. இந்நிலையில் சிவாஜிக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகர் தியாகராஜ பாகவதர்.

புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகர் என அவரை கூறலாம். அவர் நடித்த அம்பிகாபதி திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதே திரைப்படத்தை மீண்டும் சிவாஜி கணேசனை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்தனர்.

இதில் அம்பிகாபதிக்கு தந்தையாக தியாகராஜ பாகவதரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில அப்போது தியாகராஜ பாகவதருக்கு வாய்ப்புகள் எதுவும் வராமல் இருந்தது.

ஆனால் தியாகராஜ பாகவதர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு காசு முக்கியமே கிடையாது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அது எனது பெருமைக்கு இழுக்காக அமையும் என அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் தியாகராஜ பாகவதர்.

சும்மா சொல்லும் வார்த்தை கூட நிஜமாயிடம்!.. தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த மர்ம நிகழ்வு!..

கவிஞர்களுக்கு எப்போதுமே தங்கள் மொழியின் மீது ஒரு பெரிய ஆர்வம் உண்டு. சிலர் தங்கள் மொழியை கடவுளுக்கு நிகராக கருதுவார்கள் அப்படி கருதுபவர்களில் கவிஞர் வாலி முக்கியமானவர். தமிழ் திரையுலகில் பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியவர் வாலி.

கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி டிஜிட்டல் சினிமா வரையிலும் பாடல்களுக்கு வரிகளை எழுதி வந்தவர், தமிழ்தான் தன்னை வாழ வைத்ததே என நம்புபவர், இவர் ஒரு வினோதமான நிகழ்ச்சி ஒன்றை ஒரு முறை பகிருந்தார் வாலிக்கு தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்கிற வாதத்தில் நம்பிக்கை உண்டு.

நாம் சொல்லும் வார்த்தைகள் நமது வாழ்க்கையை பெரிதாக பாதிக்கும் என்று நம்புபவர் அவர். தியாகராஜ பாகவதருக்கு நிகழ்ந்த மர்மமான நிகழ்வு ஒன்றை ஒரு பேட்டியில் கூறியிருந்தார் வாலி. தியாகராஜ பாகவதர் வால்மீகி என்னும் ஒரு படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகி இருந்தார்.

அந்த திரைப்படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது திருடனாக இருக்கும் வால்மீகியாக தியாகராஜ பாகவதர் நடித்தார். அப்போது அரசன் நீ யார் என்று அவரிடம் கேட்கும்பொழுது நான் ஒரு கைதி என்பார் தியாகராஜ பாகவதர்.

அதோடு அந்த காட்சி முடிந்தது ஏனெனில் அப்போது பட பூஜைக்காக எடுக்கப்பட்ட காட்சி அது. அதன் பிறகு அன்று மாலையே அவர் மீது ஏதோ ஒரு குற்றம் காரணமாக அவரை கைது செய்தனர். உண்மையாகவே கைதியானார் தியாகராஜ பாகவதர். எனவே தமிழில் ஒரு வார்த்தை என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று வாலி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

பார்த்தவுடன் காதல் கொண்ட எம்.ஜி.ஆர்! – எம்.ஜி.ஆர் ஜானகி காதல் கதை!

இப்போது பல நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது, அதில் நடிக்கும் நாயகி மீது காதல் ஏற்பட்டு அவர்களை திருமணம் செய்துக்கொள்வதை பார்க்க முடிகிறது.

நடிகர் சூர்யா, அஜித், கெளதம் கார்த்தி இன்னும் பல நடிகர்கள் அப்படிதான் திருமணம் செய்துள்ளனர். ஆனால் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலத்திலும் இதே போல சில காதல் கதைகள் நிகழ்ந்துள்ளன. அதில் ஜெமினி கணேசன், சாவித்திரி கதை பலருக்கும் தெரிந்த கதையாக இருக்கும்.

ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடையதும் கூட அப்படி ஒரு காதல் கதைதான் என்பது உங்களுக்கு தெரியுமா? எம்.ஜி.ஆர் சினிமாவில் வந்த புதிதில் அதில் பெரும் நாயகராக இருந்தவர் தியாகராஜ பாகவதர். இவர் காலத்திற்கு அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்தான் எம்.ஜி.ஆர்

அப்போது தியாகராஜ பாகவதர் ராஜமுக்தி என்கிற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜானகி என்கிற பெண் நடித்தார். அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆர் ஜானகியை பார்த்து அவர் மீது காதல் கொண்டார்.

மேலும் இந்த விஷயத்தை அவர் தியாகராஜ பாகவதரிடமும் தெரிவித்தார். இதையறிந்த பாகவதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு அந்த காதல் இருவருக்கும் இடையே நீடித்து திருமணமும் செய்துக்கொண்டனர்.