ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என பரவலாக அழைக்கப்பட்ட நடிகர்களில் நடிகர் பிரசாந்தும் ஒருவர். முதல் படத்திலேயே எக்கச்சக்க வரவேற்பை பெற்ற பிரசாந்த் அந்த காலக்கட்டத்தில் விஜய் அஜித்தை விடவும் அதிக புகழ்பெற்றவராக இருந்தார்.
ஆனால் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு அதிக மார்க்கெட் கிடைக்க துவங்கிய பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைய துவங்கியது. அதற்கு பிறகு நடிகர் பிரசாந்துக்கு பெரிதாக மார்க்கெட் என்பதே இல்லாமல் போனது. ஆனாலும் அவ்வபோது மம்பட்டியான், அந்தகன் மாதிரியான திரைப்படங்களில் அவர் நடித்த வண்ணம்தான் இருந்தார்.
இந்த நிலையில் அந்த படங்களும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக வெற்றி இயக்குனர் ஹரி கூட்டணியில் அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் பிரசாந்த். அந்த படத்திற்கான திரைக்கதை வேலைகளை இருவரும் துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் இருந்து பிறகு சில காலங்களிலேயே அடையாளம் தெரியாமல் காணாமல் போனவர்தான் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கு மிகவும் குறைவான வயது என்று கூறப்படுகிறது.
17 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்தார் நடிகர் பிரசாந்த் மருத்துவ படிப்பிற்காக செல்ல இருந்த பிரசாந்திற்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தொடர்ந்து நடிகராக மாறினார் இல்லையென்றால் இந்நேரம் மருத்துவராகதான் இருந்திருப்பார்.
சாக்லேட் பாய்:
சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட பிரசாந்தோடு சேர்ந்து நடிக்க இளம் நடிகைகள் பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவரது திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு அதற்கு பிறகு அதிகமாக வரவேற்புகள் கிடைத்து வந்தன.
Prashanth at Saahasam Audio Launch
ஒரு சமயத்தில் நடிகர் அப்பாஸ் மாதிரியான இளம் நடிகர்களை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார் நடிகர் பிரசாந்த். முக்கியமாக அவர் நடித்த ஜீன்ஸ் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்தது.
அப்போது இருந்த விஜய் அஜித் மாதிரியான நடிகர்களே நடிகர் பிரசாந்தை பார்த்து பயந்தனர் என்றும் ஒரு பேச்சு உண்டு. அந்த அளவிற்கு மார்க்கெட் உயர்ந்த பிரசாந்த் பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டதை அடுத்து நிறைய பட வாய்ப்புகளை இழந்தார்.
ரீ எண்ட்ரி:
மேலும் அவரது திருமண வாழ்க்கையும் சுமுகமாக அமையவில்லை அதனை தொடர்ந்து திரை துறையில் கவனம் செலுத்த முடியாமல் சில நாட்கள் விலகி இருந்தார் பிரசாந்த். தற்சமயம் மீண்டும் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார்.
அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அவரது நடிப்பில் அந்தகன் என்கிற படம் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கிறது. தொடர்ந்து மீண்டும் திரைத்துறையில் ஒரு கலக்கு கலக்குவார் பிரசாந்த் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் பிரசாந்திடம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் உங்களுடைய ஆதரவு எந்த கட்சிக்கு என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த பிரசாந்த் கூறும் பொழுது 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் என்னுடைய அரசியல் பயணம் குறித்து அப்போது பேசிக் கொள்ளலாம்.
அந்த தேர்தலை பொருத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு தான் நான் ஆதரவு கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் பிரசாந்த் தற்சமயம் இவர் கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார் மேலும் விஜயின் நெருங்கிய நண்பராக இருப்பதால் அவர் கண்டிப்பாக விஜய்க்கு தான் ஆதரவளிப்பார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
தமிழில் தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களாக இயக்கி வந்தவர் இயக்குனர் சுந்தர் சி உள்ளத்தை அள்ளித்தா, முறைமாமன் மாதிரியான காமெடி திரைப்படங்களை இயக்கிய அதே சமயம் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான வேறு வகை திரைப்படங்களையும் முயற்சி செய்தார் சுந்தர் சி.
தற்சமயம் தொடர்ந்து அரண்மணை என்னும் பேய் படத்தின் பாகங்களை வரிசையாக இயக்கி வருகிறார் சுந்தர் சி. அந்த வகையில் அவர் இயக்கி வெளி வர இருக்கும் திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படத்திற்காக பேட்டி கொடுக்கும்போது சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டிருந்தார் சுந்தர்சி.
sundar C
அவரது திரைப்படங்கள் சில காபி அடிக்கப்பட்டு எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. அதுக்குறித்து அவரிடம் கேட்கும்போது ஆமாம் நான் தெலுங்கு படங்களை காபி அடித்து படம் எடுத்துள்ளேன். என்னுடைய திரைப்படங்கள் சிலவற்றை காபியடித்து அவர்கள் படம் எடுத்தனர்.
அவர்களை பழிவாங்க நானும் அவர்களது திரைப்படங்களை காபியடித்து படம் இயக்கினேன் என கூறியுள்ளார். அதே பேட்டியில் அமர்ந்திருந்த நடிகர் பிரசாந்த் கூறும்போது வின்னர் திரைப்படத்தை படமாக்கும்போது என்னிடம் 10 தெலுங்கு படங்களின் டிவிடிகளை கொடுத்தார்.
இந்த படத்தில் 5 படம்தான் வின்னர் படத்தின் முதல் பாதி. அடுத்த 5 படங்கள் படத்தின் இரண்டாம் பாதி என கூறினார். இவ்வாறு கூறியுள்ளார் நடிகர் பிரசாந்த்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips