Tag Archives: நயன்தாரா

நயன்தாராவின் 81 ஆவது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு? – வித்தியாசமான கதையாம்.!

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாராவின் 81 ஆவது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று நயன்தாராவின் 38 ஆவது வயது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. 

நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அதற்குள்ளாக நயன்தாரா 80 திரைப்படங்களில் நடித்துவிட்டார் என்பதே பலருக்கும் வியப்பானதாக உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் யானையின் முகத்தில் நயன்தாரா கை வைப்பதை போன்ற காட்சி உள்ளது. இதனால் படத்தில் நயன்தாரா யானையை வளர்க்கும் காட்டு வாசி பெண்ணாக இருப்பாளோ? என்று பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

அனுஷ்காவை விட நயன்தாராதான் அழகு – ஆர்யாவின் நேர்மையான பேச்சு.!

தமிழில் பல படங்களில் ஹிட் கொடுத்த ஆர்யா ஒரு சாக்லேட் பாயாக அனைவராலும் பார்க்கப்படுகிறார். இப்போது இறுதியாக கேப்டன் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்களில் நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், டெடி போன்றவை முக்கியமான படங்கள்.

சமீபத்தில் நடிகை சாயிஷாவை திருமணம் செய்த இவர் தனது படங்களில் சாயிஷாவையே கதாநாயகியாக போட்டு வருகிறார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த படம் இரண்டாம் உலகம்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இந்நிலையில் படம் வெளியான புதிதில் இருவரும் இணைந்து விஜய் டிவி பேட்டி ஒன்றில் பங்கேற்றனர்.

அங்கு ஆர்யாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அழகிகளுக்கு மாட்டப்படும் க்ரீடத்தை உங்கள் கையில் கொடுத்து நயன்தாரா, அனுஷ்கா இருவரில் ஒருவருக்கு மாட்ட சொன்னால் யாருக்கு மாட்டுவீர்கள் என கேட்டனர்.

அதற்கு ஆர்யா கண்டிப்பாக நயன்தாராவிற்குதான் மாட்டுவேன் என கூறினார். அப்ப அனுஷ்கா அழகு இல்லையா? என அவரிடம் கேட்க, அனுஷ்கா அழகுதான் ஆனால் க்ரீடத்தை யாருக்காவது ஒருவருக்குதானே மாட்டணும் என கூறியுள்ளார்.

சர்ச்சையான நயன்தாரா வாடகை தாய் பிரச்சனை –  மருத்துமனையை மூட சொன்ன அரசு

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்ட நிலையில் திடீரென இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என கூறி ஷாக் கொடுத்தனர்.

என்ன விவரம் என பார்த்தபோது அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரசு விதித்திருக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் அவர்கள் குழந்தை பெற்றார்களா? இதற்கு யார் ஆலோசகராக இருந்தார்கள்? போன்ற விவரங்களை நயன்தாரா தரப்பிடம் பெற்றனர்.

அதன்படி நயன்தாராவின் குடும்ப மருத்துவரே இவர்களுக்கு வழிக்காட்டியது தெரிந்தது. ஆனால் அவர் தனது மருத்துவமனையை மூடிவிட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் நயன்தாரா மருத்துவம் பெற்ற மருத்துவமனையில் விசாரனை நடத்தப்பட்டது. ஆனால் வாடகைதாய் குறித்த சரியான ஆவணங்களை அவர்கள் வைத்தில்லாமல் இருப்பது தெரியவே அந்த மருத்துவமனையை மூடும்படி எச்சரிக்கை நோட்டீஸ் அரசு தரப்பில் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா எந்த சட்ட விதிமீறல்களையும் செய்யவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் குழந்தைக்கு வாடகைத்தாய் யார்? – கமிஷனருக்கு போன புகார்!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிறந்த விவகாரத்தில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் நடிகை நயன்தாராவுக்கும் – விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 4 மாதங்கள் முன்னதாக குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து திருமணமாகி எப்படி 4 மாதங்களில் குழந்தை பிறக்கும் என பலரும் கேள்விகளை எழுப்பினர்.

தம்பதியர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றிருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறுவதற்கான தகுதி மற்றும் விதிமுறைகளை விக்னேஷ் சிவன் – நயன்தாரா மீறியிருப்பதாகவே கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியருக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த வாடகைத்தாய் துபாயில் உள்ளதாக தகவல்கள் கசிந்தது.

ஆனால் துபாயில் வாடகைத்தாய் முறை சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாம். இதனால் எந்த அடிப்படையில் அவர்கள் குழந்தை பெற்றார்கள் என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறுதல் போன்ற செயல்பாடுகள் மூலமாக இளைய சமுதாயத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஆனால் விசாரணை குழு விசாரித்து அறிக்கை சமர்பித்தப்பின் அரசின் உத்தரவை பொறுத்து காவல்துறையின் நடவடிக்கை அமையும் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

நயன்தாரா குழந்தை பெற்றது சட்ட ரீதியாக சரியா? – அதிகரிக்கும் விவாதங்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக காதலர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராதான் முதல் இடத்தை வகிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும், எனவே தாங்கள் தாய், தந்தையர் ஆகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தனர். திருமணமாகி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் எப்படி இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்கிற கேள்வி வந்தது. அவர்கள் வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் குழந்தைகள் விற்பனை என்பது சட்ட விரோதமாக அதிகமாக நடப்பதால் வாடகை தாய் அமர்த்துவதில் அரசு சில சட்டங்களை விதித்துள்ளது. அவை:

வாடகை தாய் அமர்த்தும் தம்பதிகளுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும்.

இருவரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவர்களுக்கு வாடகை தாயாக இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பண ரீதியாக அவர்கள் வாடகை தாயாக இருக்க கூடாது. இந்த வாடகை தாய் முறை தம்பதிகளுக்கு உதவும் மனபான்மையில் செய்து கொடுப்பதாகவே இருக்க வேண்டும்.

வாடகை தாய்க்கு 16 மாத காலம் இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை எல்லாம் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் பின்பற்றி இருப்பார்களா? என்பது குறித்து தொடர்ந்து மக்களிடையே விவாதங்கள் சென்றுக்கொண்டுள்ளன.

விக்கி, நயன் இருவருமே இன்னும் இதுக்குறித்து பொது மக்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதோ வர போகிறது நயன் விக்கி திருமண வீடியோ – தகவல் அளித்த நெட் ப்ளிக்ஸ்

தமிழ் சினி உலகில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மாதிரி வேறு எந்த பிரபலமான ஜோடிகளையும் நாம் பார்க்க முடியாது. எவ்வளவோ திரை பிரபலங்கள் தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

ஆனால் பல வருடங்கள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டதாலும், நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை என்பதாலும் இவர்கள் மிகவும் பிரபலமான ஜோடிகளாக இருந்தனர்.

சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணம் பல்வேறு விதிமுறைகளுக்கு கீழ் நடைப்பெற்றது என கூறலாம். ஏனெனில் இந்த திருமணத்தை விடியோவாக எடுத்து அதை நெட்ப்ளிக்ஸில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக நெட்ப்ளிக்ஸ் இவர்களுக்கு பெரும் தொகையை அளித்திருந்தது.

இதனால் திருமணத்தில் யாரையும் வீடியோ எடுக்கவோ போட்டோ எடுக்கவோ அனுமதிக்கவில்லை. இந்த வீடியோவை எடுப்பதற்கு இயக்குனர் கொளதம் மேனனை நியமித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வீடியோ குறித்த டீசர் ஒன்றை வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ், விரைவில் இந்த வீடியோ வெளியாகும் என கூறியுள்ளது. இதற்கு பியாண்ட் த ஃபேரி டெல் என பெயரிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ்

ட்ரெண்ட் ஆகி வரும் விக்கி நயன் திருமண புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடிதான் திரைப்படத்தின்போது துவங்கியது விக்கி நயன் காதல் கதை. அதன் பிறகு நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் காதலர்களாக இருந்து வந்தனர்.

இறுதியாக இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்ததை அடுத்து நேற்று அவர்களது திருமணம் மாம்மல்லபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரமாண்டமாக நடந்தது.

பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தனர். அனைவரும் நயன் விக்கி ஜோடியை வாழ்த்திவிட்டு சென்றனர். 30 க்கும் அதிகமான பதார்த்தங்களை வைத்து அவர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த விழாவை ஒளிப்பரப்புவதற்கான உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்ததால் திருமணம் குறித்த போட்டோக்கள் கூட பெரிதாக வெளியாகாமல் இருந்தது.

போதாக்குறைக்கு திருமணத்திலும் கடுமையான விதிமுறைகள் இருந்ததாம். இதனால் யாரையும் போட்டோக்கூட எடுக்க அனுமதிக்கவில்லையாம். இந்த நிலையில் தற்சமயம் தனது திருமண போட்டோக்களை நயன் தாரா வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோக்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

15 க்கு மேல சாப்பாடுகள்  –  நயன்தாரா கல்யாண விருந்து உணவு பட்டியல் 

வெகு காலமாக தமிழ் சினிமாவில் காதல் ஜோடியாக வலம் வருபவர்களாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருந்தனர். பல நாட்களாக இருவரும் திருமணம் செய்து கொள்வது பற்றிய பேச்சு தமிழ் திரையுலகில் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று ஜூன் 09 அன்று இருவரும் திருப்பதியில் திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் திருமணமானது மாமல்லபுரத்தில் உள்ள ப்ரைவேட் ரெசார்ட்டில் நடத்தப்பட்டது. திருமணத்தில் பெரும் நடிகர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு சிறந்த உபசரிப்பை செய்ய வேண்டியது அவசியமானது. எனவே வலுவான ஒரு விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் நயன்தாரா.

அதன்படி விருந்தில் பன்னீர் பட்டாணி கறி, பருப்பு கறி, அவியல், மோர் குழம்பு,, உருளை கார மசாலா, வாழக்காய் வருவல், சேனை கிழங்கு வறுவல், கேரட் போன்ஸ் பொறியல் இன்னும் பல உணவுகள் இடம் பெற்றுள்ளன.

வெகு நாட்களாக இருந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அதிரி புதிரியான விருந்தை அளித்துள்ளார் நயன்தாரா. 

ஆனால் நான் வெஜ் பிரியர்களுக்கு பிடித்த வகையில் ஒரு உணவுக்கூட இடம் பெறவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய செய்தியாகும்.

வெளியாகி வரும் நயன் விக்கி புகைப்படங்கள் – கோலகலமான திருமணம்

வெகு காலமாக தமிழ் சினிமாவில் காதல் ஜோடியாக வலம் வருபவர்களாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருந்தனர். பல நாட்களாக இருவரும் திருமணம் செய்து கொள்வது பற்றிய பேச்சு தமிழ் திரையுலகில் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று ஜூன் 09 அன்று இருவரும் திருப்பதியில் திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் திருமணமானது மாமல்லபுரத்தில் உள்ள ப்ரைவேட் ரெசார்ட்டில் நடத்தப்பட்டது. இன்று திருமணம் முடிந்த நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் வெளிவந்துக்கொண்டுள்ளன.

அவர்களது திருமணத்தை வீடியோவாக எடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இந்த வீடியோ எடுக்கும் பணி இயக்குனர் கொளதம் மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் திருமணத்தில் செல்போன் கொண்டு வீடியோ எடுக்க கூட அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

நயன்தாரா திருமணத்திற்கு வீடியோ எடுக்கப்போகும் பிரபல இயக்குனர்..! –  இவருக்கா இந்த நிலைமை?

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தமிழ் திரைத்துறையில் வெகுநாட்களாக காதல் ஜோடிகளாக இருந்து வருகின்றனர். வருகிற ஜூன் 9 ஆம் தேதியன்று இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆக இருக்கின்றது. இந்நிலையில் தமிழ் திரையுலகத்திற்கும், மக்களுக்கும் இதில் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.

எனவே இவர்களது திருமணத்தை ஒ.டி.டி வழியாக வெளியிடலாம். மக்கள் அதை விரும்பி பார்ப்பார்கள் என திட்டமிடப்பட்டது. எனவே நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிப்பரப்ப உள்ளது.

இந்த திருமணத்தை ஒரு திரைப்படம் போல எடுக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த திருமண வீடியோ ஆல்பத்தை எடுக்க பெரிய இயக்குனரை பணியமர்த்தி உள்ளனர்.

அதன்படி புகழ்பெற்ற இயக்குனர் கெளதம் மேனன் இந்த வீடியோ ஆல்பத்தை இயக்க இருக்கிறார். நெட்ப்ளிக்ஸில் வெளியாகும்போது அந்த திருமணம் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.