Tag Archives: நானும் ரவுடிதான்

நயன்தாராவுக்கு மட்டும் அதை செய்யவில்லை.. தனுஷ் செய்த வேலை.. அட பாவமே?..

நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை என்பது பலருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாக நயன்தாரா திருமண வீடியோ ஒன்று ஆவணப்படமாக வெளியானது.

அதிலிருந்து தனுஷ்க்கும் நயன்தாராவிற்கும் இடையே பெரிய பிரச்சனை இருந்து வருகிறது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் காட்சிகளை நயன்தாரா அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தார்.

ஆனால் அதற்கான என்.ஒ.சியை தனுஷிடம் அவர் பெறவில்லை. இந்த நிலையில் இதற்காக உரிமை தொகை கேட்டு ஒரு பக்கம் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனமும் சந்திரமுகி படத்தின் காட்சிகளை அதில் பயன்படுத்தியதற்காக உரிமை தொகை கேட்டு வருகின்றனர்.

இதற்கு நடுவே தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைக்கு பிறகு மீண்டும் ஒரு என்ஓசி விஷயத்தில் தலையிட்டு இருக்கிறார் தனுஷ். வி.ஜே சித்து இயக்குனராகவும் கதாநாயகனாகவும் களமிறங்கும் திரைப்படம் டயங்கரம். இந்த திரைப்படத்தில் வி.ஜே சித்துவின் காட்சிகளின் போது விஐபி திரைப்படத்தில் வரும் இசையை பயன்படுத்தி கொள்வதற்கு தனுஷிடம் அனுமதி கேட்டு இருக்கிறார் விஜே சித்து.

அதற்கு எந்தவித கட்டணமும் வாங்காமல் என்ஓசி கொடுத்திருக்கிறார் தனுஷ் இதனை அடுத்து நயன்தாரா மீது இருக்கும் தனிப்பட்ட வன்மத்தில் தான் நயன்தாராவை இப்படி பழிவாங்கி வருகிறாரா தனுஷ் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

என்ன வச்சிக்கிட்டே அந்த பேச்சு பேசுனாங்க… விக்னேஷ் சிவன் படத்தில் அவமானப்பட்ட ஆர்.ஜே பாலாஜி.!

வானொலித் துறையில் தொகுப்பாளராக இருந்து பிறகு அதன் மூலமாகவே அதிக பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர் ஜே பாலாஜியை பொருத்தவரை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமானாலும் தொடர்ந்து காமெடி நடிகனாகவே நடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதை அறிந்திருந்தார் ஆர்.ஜே பாலாஜி. அதனை தொடர்ந்துதான் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

ஆர்.ஜே பாலாஜி:

அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான எல்.கே.ஜி திரைப்படமே அரசியலை நக்கல் செய்யும் விதமாக இருந்தது. அதனால் அந்த படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. தொடர்ந்து பொதுவெளியில் அரசியல் சார்ந்து நிறைய பேசி வருகிறார். ஆர்.ஜே பாலாஜி.

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனராக இருக்கும் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் அடுத்து சூர்யா நடிக்கும் திரைப்படத்தையும் ஆர்.ஜே பாலாஜிதான் இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய முதல் திரைப்படமான நானும் அப்படித்தான் திரைப்படம் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஒரு வேனை ஓட்டுவது போன்ற காட்சி இருக்கும்.

கடுப்பான நடிகர்:

அந்த சமயத்தில் எனக்கு கார் வேன் போன்றவற்றையெல்லாம் ஓட்ட தெரியாது. எனவே நான் ஓட்டுவது போல நடிக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. நான் ஒவ்வொருமுறை காட்சியில் நடிக்கும் போதும் பட குழு எனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பது குறித்து கிண்டல் செய்து கொண்டே இருந்தனர்.

நான் அமர்ந்திருந்த வேனில் பக்கத்தில் தான் அவர்கள் பேசும் வயர்லெஸ் இருந்தது அதனால் அவர்கள் பேசுவதெல்லாம் எனக்கு கேட்டது ஒரு கட்டத்திற்கு மேல் நான் கடுப்பாகி அந்த மைக்கை எடுத்து நடிக்க தெரியாதவன் எல்லாம் நடிக்கும்போது நான் கார் ஓட்ட தெரியாமல் கார் ஓட்ட கூடாதா? சத்தம் போட்டு விட்டேன் அதற்குப் பிறகு என்னை கேலி செய்வதை அவர்கள் நிறுத்திவிட்டனர் என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.

சைக்கோவாடா நீ.. படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் கடுப்பான நயன்!..

தமிழ் சினிமாவில் காதல் திருமணங்கள் என்பது சினிமாவின் வரலாற்றில் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. சாவித்திரி ஜெமினி கணேசன் துவங்கி இப்போது இருக்கும் சினிமா வரை தமிழ் சினிமாவிற்குள் காதல் நிகழ்ந்து திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன

அப்படி தமிழ் சினிமாவில் வெகுகாலமாக பேசப்பட்டு சமீபத்தில் ஜோடியாகி இருப்பவர்கள் நடிகர் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஆவர். விக்னேஷ் அவனும் நயன்தாராவும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போதுதான் சந்தித்து கொண்டனர். 

அப்போதுதான் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. சில வருடங்கள் இருவரும் காதலித்து வந்தனர் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்து இருந்தார் விக்னேஷ் சிவன். அப்போது கூறும்போது நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பாதி படப்பிடிப்பு சென்று கொண்டிருந்த பொழுதே நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் உருவாகிவிட்டது.

இந்த சமயத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. அப்பொழுது விக்னேஷ் சிவனிடம் பேசிய நயன்தாரா, அந்த முத்தக்காட்சி முத்தம் கொடுப்பது போலவே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை கொஞ்சம் மாற்றி கூட எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

ஏனெனில் விஜய் சேதுபதி நயன்தாராவுக்கு முத்தம் கொடுப்பது போல வருவது விக்னேஷ் சிவனுக்கு வேதனையை ஏற்படுத்தலாம் என நயன்தாரா நினைத்தார். ஆனால் விக்னேஷ் சிவன் விடுவதாக இல்லை. அவருக்கு அந்த காட்சி அப்படித்தான் வரவேண்டும் என முடிவு செய்து அப்படியே அந்த காட்சியையும் எடுத்தார்.

அந்த காட்சியின்படி நயன்தாராவின் முகத்திற்கு மிக அருகில் விஜய் சேதுபதியின் முகம் வருவது போன்று அந்த காட்சி அமைந்திருக்கும். அதை முடிந்த பிறகு விக்னேஷ் சிவனை பார்த்த நயன்தாரா சரியான சைக்கோ எனக்கூறி திட்டி உள்ளார் அதை விக்னேஷ் சிவனே அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதியோட கருணை கோட்டா தெரியுமா? – விக்னேஷ் சிவன் சொன்ன சீக்ரெட்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் அவன் இயக்கிய திரைப்படங்கள் பல நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அவரது முதல் படம் முதலே இயக்கிய அனைத்து திரைப்படங்களிலுமே பெரிய நட்சத்திரங்களை வைத்தே திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

அவர் முதன் முதலில் சிம்புவை வைத்து போடா போடி என்கிற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த திரைப்படத்தை விடவும் விக்னேஷ் சிவனுக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படமாக அமைந்தது விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படம்தான்.

இந்த திரைப்படத்தின் வாய்ப்புகளை எப்படி விஜய் சேதுபதியிடம் பெற்றார் என்பதை பற்றி ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் விளக்கி உள்ளார். அதில் கூறும் பொழுது, விஜய் சேதுபதி அவருக்கு பிடித்த படங்களில் நடிப்பதை தாண்டி அவருக்கு பழக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக சில படங்களை நடித்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி நடித்துக் கொடுக்கும் பொழுது அந்த படத்தின் கதை அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு தெரிந்தவர்களுக்காக பாவப்பட்டு அவர் நடித்துக் கொடுப்பது வழக்கம்.

இதை கருணை கோட்டா என்று விக்னேஷ் என்று சொல்கிறார். அதாவது கருணையின் அடிப்படையில் சிலருக்கு படம் நடித்துக் கொடுப்பது… விக்னேஷ் சிவனும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விஜய் சேதுபதியிடம் வாய்ப்பு கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் படம் எடுத்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த படத்தை குறித்து ரொம்ப எதிர்பார்க்க வேணடாம், அதை ப்ளாப் படம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் ஆனால் எனக்காக அதை நடித்துக் கொடுங்கள் என்று விக்னேஷ் சிவன் கேட்டு கொண்டே இருந்தார். பார்த்த விஜய் சேதுபதி சரி நான் சான்ஸ் கொடுத்தால் நீ படத்தை எடுத்து விடுவாயா எனக்கு கேட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் ஆமாம் என்று கூற விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார்.

ஏனெனில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் சண்டை காட்சிகளே ஹீரோவுக்கு கிடையாது என்பதால் யாரும் அதை நடிக்க தயாராக இல்லை ஆனால் கடைசியில் விஜய் சேதுபதிக்கும் ஒரு ப்ளாக்பஸ்டர் படமாக நானும் ரவுடிதான் திரைப்படம் அமைந்தது.