இளம் வயதிலேயே மலையாளம் தமிழ் இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனால் மலையாளம் தெலுங்கு தமிழ் என்று மூன்று மொழிகளிலும் ஒரு புகழ் பெற்ற நடிகராக இவர் இருந்து வருகிறார்.
முக்கியமாக தமிழில் கமல் ரஜினிகாந்த் என்ற இரண்டு பேரும் நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் நிவேதா தாமஸ். தர்பார் திரைப்படத்தின் போதே நிவேதா தாமஸின் உடல் எடை அதிகரித்து இருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளே அவருக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்து இருக்கிறார் நிவேதா தாமஸ்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய நடிகர்களுடன் நடித்து அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை நிவேதா தாமஸ். நிவேதா தாமஸை பொறுத்தவரை அவர் துணை கதாபாத்திரங்களாக நடிக்கும் பொழுதே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று கூறலாம்.
முதன்முதலாக குருவி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திலேயே இவருக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்திருந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பாபநாசம், ஜில்லா, தர்பார் மாதிரியான படங்களில் எல்லாம் முக்கிய கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார்.
நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார் இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன. தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நிவேதா தாமஸ்.
நிவேதா தாமஸ் உடல் எடை:
nivetha thomas
இப்படி வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் திடீரென்று இவரின் உடல் எடை அதிகரித்து இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் என்ன அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டீர்களே என்று நிவேதா தாமஸை கேட்டு வருகின்றனர்.
மேலும் நடிகை அனுஷ்காவும் இப்படித்தான் சினிமாவில் பெரிய இடத்தில் இருந்தார். ஆனால் உடல் எடை அதிகரித்த பிறகு அவரால் அதை குறைக்க முடியவில்லை. அதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார் நிவேதா தாமஸ். அந்த நிலையை நீங்கள் அடைந்து விடக்கூடாது எனவே அவர் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இது குறித்து பேசி வருகின்றனர் ரசிகர்கள்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips