நடிகர் அஜித் நடித்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் திரைப்படம் என்றாலே படம் முழுக்க சண்டை காட்சிகள் மாஸ் எண்ட்ரி என்றுதான் இருக்கும்.
ஆனால் அதிலிருந்து வித்தியாசமாக ஒரு சில சமயங்களில் திரைப்படங்கள் திரைக்கு வருவதுண்டு. அப்படியாக வரும் திரைப்படங்களில் விடாமுயற்சியும் ஒன்று. வழக்கமான தமிழ் சினிமா திரைப்படங்களில் இருந்து வேறுப்பட்டு ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்தது.
இதனால் இந்த திரைப்படத்திற்கு திரையரங்கிலேயே நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படம் திரையரங்கில் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது. காணாமல் போன தனது மனைவியை தேடி தனி ஒரு மனிதனாக ஒரு சாதாரண ஆள் செய்யும் முயற்சிகளே கதையாக இருந்தது.
vidamuyarchi
பெரும்பாலும் இந்த மாதிரி சாதாரண நபர் கதாபாத்திரத்தில் யாரும் நடிப்பதில்லை. போலீஸ் ஆபிசர் அல்லது ரவுடி எனதான் நடிப்பார்கள். அந்த வகையிலேயே இந்த படம் வித்தியாசமாக இருந்தது.
இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான பிறகு இந்திய அளவில் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் திரைப்படங்களில் நெட்ப்ளிக்ஸில் நம்பர் 1 இடத்தில் விடாமுயற்சி திரைப்படம் இருக்கிறது.
இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து வேற்றுமொழி படங்கள் மற்றும் சீரியஸ்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைய தொடங்கி இருக்கின்றன.
அதற்கு முன்பு திரைப்படங்களை மட்டும் பார்த்து வந்த மக்கள் தற்சமயம் வெப் சீரிஸ்களையும் பார்க்க துவங்கியிருக்கின்றனர். அப்படியாக வேறு மொழிகளில் வரும் வெப்சீரிஸ்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக துவங்கியிருக்கின்றன.
அப்படியாக சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரிஸ் தான் ஸ்குவிட் கேம். ஸ்குவிட் கேம் சீரீசை பொருத்தவரை மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதைக்களத்தை கொண்ட சீரிஸ் ஆகும்.
அதாவது பணத்திற்காக கஷ்டப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை ஒரு விளையாட்டை விளையாடுவதற்காக தேர்ந்தெடுப்பார்கள். அந்த விளையாட்டில் ஜெயிப்பவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சன்மானமாக கொடுக்கப்படும்.
விறு விறுப்பான சீரிஸ்:
ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் அந்த விளையாட்டில் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வா? சாவா? என்னும் போராட்டத்தில் தான் விளையாட்டு நடக்கும். அதில் பிழைப்பவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
squid game season 2
இப்படியாக எல்லா கட்டத்தையும் தாண்டி ஜெயிப்பவருக்குதான் இந்த தொகை வழங்கப்படும். இந்த நிலையில் முதல் பாகத்தில் இதற்குள் மாட்டி தப்பித்து அந்த தொகையை ஜெயித்து வெளியில் வருகிறார் கதாநாயகன். ஆனால் வெளியில் வரும்போது அந்த இறப்புகளால் கதாநாயகன் மிகவும் பாதிக்கப்படுகிறார்.
தற்சமயம் அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது இதில் கதாநாயகன் மீண்டும் அந்த விளையாட்டுக்கள் சென்று அதில் மாட்டிக்கொள்ள இருப்பவர்களை காப்பாற்ற பார்க்கிறார். இந்த நிலையில் அவரால் இந்த நபர்களை காப்பாற்ற முடிகிறதா? இல்லை மீண்டும் அந்த விளையாட்டுக்குள் சென்று இவர் மாட்டிக் கொள்கிறாரா என்பது கதையாக இருக்கிறது.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டாம் பாகமும் தமிழில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வருகிற டிசம்பர் 26 இந்த சீரிஸ் netflixல் வெளியாகிறது.
ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமே கார்ட்டூன்களில் பிரபலமான சீரிஸாக ஒன் பீஸ் உள்ளது. இது 1997 ஆம் ஆண்டு முதலே கார்ட்டூனாக வந்து கொண்டிருந்தது. இணையம் வளர்ந்ததை அடுத்து ஜப்பான் அனிமேக்கள் உலகம் முழுக்க பிரபலமானதை அடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் அவற்றின் மீது ஆர்வம் காட்டி வந்தது.
இந்த நிலையில் ஒன் பீஸ் சீரிஸை லைவ் ஆக்ஷனாக வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ். ஒரு சிறப்பான அட்வெஞ்சர் கதையாக ஒன் பீஸ் அமைந்துள்ளது.
சீரிஸின் கதை:
இந்த கதை பைரேட் எனப்படும் கடற் கொள்ளையர்களை பற்றிய கதை. பைரேட்களின் ராஜா என அழைக்கப்படும் கேப்டன் கோல்டு ரோஜர், ஒரு நாள் மரேன் ஆட்களிடம் மாட்டி கொள்கிறார். அவர் இறப்பதற்கு முன்பு ஒன் பீஸ் என்று ஒரு புதையலை கடலில் ஒளித்து வைத்திருப்பதாக கூறுகிறார்.
அதிலிருந்து மக்களில் பலர் பைரேட்டாக மாறி ஒன் பீஸை தேட துவங்குகின்றனர். ஆனால் யாருக்குமே இது கிடைக்கவில்லை. இந்த நிகழ்வு நடந்து 22 வருடங்களுக்கு பிறகு மங்கி டி லூஃபி என்னும் சிறுவன் பைரேட் ஆகிறான்.
அவன் அந்த ஒன் பீஸ் புதையலை தேடி செல்கிறான். புதையலை ஒருவர் தனியாக தேடி செல்ல முடியாது அல்லவா!.. எனவே அவன் அவனுக்கான குழுவை தேடுகிறான். அவனுக்கு நாமி, ரோரோனா சோரோ, யூசஃப், சஞ்சி ஆகிய நண்பர்கள் கிடைக்கின்றனர்.
இவர்கள் உதவியுடன் பல ஆபத்துகளை தாண்டி மங்கி டி லூஃபி எப்படி ஒன் பீஸை கண்டறிய போகிறான் என்பதே முழுக்கதையாகும். அதன் ஒரு துவக்கமாக இந்த முதல் சீசன் அமைந்துள்ளது.
இந்திய வரலாற்றிலேயே இரண்டு அரசுகளை ஆட்டம் காண வைத்த மிகப்பெரும் கடத்தல் மாஃபியாவாக இருந்தவர் வீரப்பன். கர்நாடகா, தமிழ்நாடு என இரண்டு அரசுகளும் முயன்றும் கூட வீரப்பனை பிடிப்பது என்பது அரசுக்கே கடினமான காரியமாகதான் இருந்தது. சத்யமங்கலம் காட்டை தனக்கான பாதுக்காப்பு கோட்டையாக வீரப்பன் மாற்றியதே இதற்கு காரணமாக இருந்தது.
சந்தன மரங்களை கடத்துதல், யானைகளை கொன்று அவற்றின் தந்தங்களை கடத்துதல் போன்றவை வீரப்பன் செய்த முக்கிய குற்றங்களாக இருந்தன. ஆனால் அவர் காவல் அதிகாரிகளையும், வனத்துறை அதிகாரிகளையும் கொலை செய்ய துவங்கிய பிறகே அவர் மீது அரசு அதிக கவனம் செலுத்த துவங்கியது.
பொதுவாக வீரப்பன் பற்றி எந்த ஒரு படமோ, புத்தகமோ அல்லது தொடரோ வந்தாலும் அதில் வீரப்பனை நல்லவனாக அல்லது கெட்டவனாக காண்பிப்பது உண்டு. மக்கள் தொலைக்காட்சியில் ஏற்கனவே வீரப்பன் கதையை அடிப்படையாக கொண்டு சந்தன காடு என்கிற தொடர் வந்தது. ஆனால் அதில் வீரப்பனை நல்லவராக முன்னிலைப்படுத்தி அந்த தொடரை எடுத்திருந்தனர்.
ஆனால் தற்சமயம் நெட்ப்ளிக்ஸ் வீரப்பன் குறித்து எடுத்திருக்கும் ஆவணப்படம் மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வீரப்பனின் இரு முகத்தையும் காண்பிப்பதாக இந்த தொடர் உள்ளது. முக்கியமாக வீரப்பனின் படையில் இருந்தவர்கள், வீரப்பனின் மனைவி மற்றும் அப்போது பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள் போன்ற முக்கிய நபர்களிடம் இருந்து ஆதாரங்களை திரட்டி இந்த ஆவண படத்தை தயார் செய்துள்ளனர்.
வீரப்பனின் வளர்ச்சி துவங்கி வீழ்ச்சி வரை பேசும் இந்த தொடர் தமிழில் வந்த முக்கியமான ஆவணத்தொடராகும்.
நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் வெளிவரும் பல பிரபலமான தொடர்களில் முக்கியமான தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். வெளியானது முதலே உலக அளவில் இந்த சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஹாக்கின்ஸ் என்னும் கிராமத்தில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது இந்த சீரிஸ். லெவன் எனப்படும் ஒரு சிறுமி இந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார். அவருக்கு சிறப்பு சக்திகள் இருக்கும். அதை கொண்டு எப்படி இந்த மர்மங்களில் இருந்து மக்களை காக்க போகிறார் என்பதாக கதை செல்லும்.
இதன் நான்காவது சீசனில் இந்த மர்மங்களை செய்யும் முக்கிய நபரை கண்டுப்பிடித்து அவனை அழிப்பதற்கான திட்டங்களை நோக்கி சீரிஸ் செல்லும். நான்காம் சீசன் இறுதியில் மொத்த கிராமமும் வில்லனின் பிடியில் சிக்கி கொள்வதோடு கதை முடியும்.
இந்த நிலையில் போன வருடம் மொத்த சீசனும் தமிழ் டப்பிங்கில் வெளியானது. எனவே தமிழ் ரசிகர்களிடமும் கூட இந்த சீரிஸ் பிரபலமானது. தற்சமயம் இதன் ஐந்தாவது சீசனுக்காக அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர்.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் ஐந்தாவது சீசனை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்சமயம் வந்த அறிவிப்பின்படி ஐந்தாவது சீசன் அடுத்த வருடம் வெளியாகும். இதுதான் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் இறுதி சீசனாக இருக்கும் என அறிவித்துள்ளது நெட்ப்ளிக்ஸ்.
நேரடியாவே மோதிக்கலாமா? என்பது போல நேரடி போட்டியில் விஜய்யும் அஜித்தும் இறங்கினர். இதையடுத்து பொங்கலை முன்னிட்டு இவர்கள் இருவரும் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாகின.
தல தளபதி மோதல் என்பது இன்று நேற்று நடக்கும் பிரச்சனையல்ல. பல ஆண்டுகளாக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். திரை துறையில் அவர்களை தக்க வைத்து கொள்ளவும் இந்த போட்டி அவர்களுக்கு உதவுகிறது.
இந்த நிலையில் வாரிசு துணிவு இரண்டு திரைப்படங்களுமே நல்ல வசூல் சாதனை படைத்து நல்ல வெற்றியை கண்டுள்ளது. இதற்கு அடுத்து இரு படங்களுமே ஓ.டி.டியில் வெளியாக இருக்கின்றன.
ஆனால் ஓ.டி.டியில் கூட போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் இரு படங்களும் வெளியாக இருக்கின்றன. வாரிசு, துணிவு இரு படங்களுமே வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி ஓ.டி.டிக்கு வரவிருக்கின்றன.
வாரிசு திரைப்படம் அமேசான் ப்ரைமிலும், துணிவு திரைப்படம் நெட்ப்ளிக்ஸிலும் வெளியாக இருக்கிறது.
தற்சமயம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மொழி எல்லாம் கடந்து அனைத்து சினிமாக்களையும் பார்க்க துவங்கிவிட்டனர். அனைத்து திரைப்படங்களையும் விமர்சனம் செய்கின்றனர்.
நெட்ப்ளிக்ஸ் போன்ற வெளிநாட்டு ஓ.டி.டியில் வரும் பல தொடர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.
அப்படியாக உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வரும் ஒரு தொடர்தான் த லாஸ்ட் ஆஃப் அஸ் (The last of Us). கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அன்று இந்த தொடர் ஹெச்.பி.ஒ மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
அதுவும் இந்த தொடரின் முதல் எபிசோடு மட்டுமே வெளியாகியுள்ளது.
ஆனால் அதற்குள்ளாகவே இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது மொத்த உலக மக்களில் பாதி பேர் சோம்பியாக மாறிவிட மிச்சம் இருக்கும் மனிதர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது கதையாக உள்ளது.
வழக்கமான சோம்பி படங்களில் இதுதான் கதையாக இருக்கும். ஆனால் இதை தாண்டியும் இதில் பல விஷயங்கள் பேசியிருப்பதை ட்ரைலர் வழியாக பார்க்க முடிகிறது.
இந்த தொடர் ஏற்கனவே வீடியோ கேமாக வெளிவந்து பெரும் ஹிட் அடித்ததும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஜோயல் என்பவரின் குடும்பத்தார் இதில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கின்றனர். இந்த சீரிஸின் ட்ரைலரை காண இங்கு கிளிக் செய்யவும்.
இந்த வருடம் துவங்கியதும் பலரும் பல குறிக்கோள்களை வைத்துக்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என வருடத்தை துவங்கியிருப்போம்.
Made using TurboCollage from www.TurboCollage.com
அதே போல இந்த வருடம் இந்தியாவில் அதிக சப்ஸ்க்ரிப்சனை பெற வேண்டுமெ என டார்கெட் வைத்து இறங்கியுள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். பொங்கலை முன்னிட்டு வரிசையாக நெட்ப்ளிக்ஸ் பண்டிகை என்னும் ஹாஸ் டேக்கை பிரபலப்படுத்தி வருகிறது நெட்ப்ளிக்ஸ்.
இந்த வருட துவக்கத்திலேயே பல தென்னிந்திய திரைப்படங்களின் ஓ.டி.டி ரைட்ஸை நெட்ப்ளிக்ஸ் வாங்கிவிட்டது. தற்சமயம் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ரயில் விடுவது போல வாங்கிய படங்களின் லிஸ்ட்டை விட்டு வருகிறது நெட்ப்ளிக்ஸ்.
அதில் தமிழ் திரைப்படங்கள் என பார்க்கும்போது
அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் ஏ.கே 62
தனுஷ் நடிக்கும் வாத்தி
விக்ரம் நடிக்கும் தங்கலான்
சமுத்திரக்கனி நடிக்கும் தலைக்கூதல்
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா
பாரதி ராஜா அருள்நிதி நடிக்கும் ப்ரொடக்ஷன் 24 (பெயர் வைக்கவில்லை)
ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ப்ரொடக்ஷன் நம்பர் 20
விதார்த் மற்றும் யோகி பாபு நடிக்கு ப்ரொடக்ஷன் நம்பர் 18
உதயநிதி நடிக்கும் மாமன்னன்
லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா நடிக்கு ஜிகர் தண்டா டபுள் எக்ஸ்
சந்திரமுகி 2
கார்த்தி நடிக்கும் ஜப்பான்
ஜெயம் ரவி நடிக்கும் இறைவன்
விஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யான்
இத்தனை தமிழ் படங்களையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே வாங்கிவிட்டது. இதில் சில படங்களுக்கு இன்னும் படப்பிடிப்பே துவங்கவில்லை. இந்த படங்கள் யாவும் திரையரங்கில் வெளியான பின்னர் நெட்ப்ளிக்ஸில் வெளியாகும்.
இன்னும் அப்டேட் வரவிருக்கிறது என்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் துவங்கியதுமே ஒரு ஓ.டி.டி ரேஸ் துவங்கியுள்ளது என கூறலாம். ஓ.டி.டியை பொறுத்தவரை இந்தியா இதில் பெரிய சந்தையாகும். தற்சமயம் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் இங்கு ஓ.டி.டியில் முக்கியத்துவம் வகித்து வருகின்றன.
நெட்ப்ளிக்ஸ் சந்தா தொகை அதிகம் என்பதால் பெரும்பாலும் அதிகம் யாரும் நெட்ப்ளிக்ஸ் மீது ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இந்த மாதம் பல படங்களை நேரடியாக நெட்ப்ளிக்ஸ் அதன் ஓ.டி.டி தளத்தில் வெளியிட உள்ளது.
அதே போல திரையரங்கில் வெளியான சில படங்களையும் ஓ.டி.டியில் வெளியிட உள்ளது. அந்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
01.காப்பா – kaapa
22 டிசம்பர் 2022 அன்று வெளியான காப்பா என்கிற திரைப்படம் தற்சமயம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகரான ப்ரித்திவிராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் ப்ரித்திவிராஜ்க்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. வருகிற ஜனவரி 19 ஆம் தேதி இந்த படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
02.பட்டி – Buddy
தெலுங்கின் புகழ்பெற்ற நடிகரான விஜய் தேவரக்கொண்டா நடித்து திரைக்கு வரவிருக்கும் படம் பட்டி. ஆர்யா நடித்த டெடி படத்தில் வரும் உயிருள்ள டெடி பியர் போல இந்த படத்திலும் கதாநாயகனுடன் ஒரு டெடி இருப்பதாக படம் அமைந்துள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு,மலையாளம், தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
03.போலா சங்கர் – Bhola Shankar
தெலுங்கின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து நெட்ப்ளிக்ஸில் வர இருக்கும் திரைப்படம் போலா சங்கர். ஏற்கனவே சிரஞ்சீவி படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருப்பதால் இந்த படம் எப்படியும் இரண்டு மாதம் தாமதமாகவே வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த படமும் கூட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
04.அமிகோஸ் – Amigos
புது இயக்குனர் மற்றும் புது நடிகர்களை கொண்டு தயாராகி வரும் திரைப்படம் அமிகோஸ். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம் என கூறப்படுகிறது. இது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
05.புட்ட பொம்மா – Butta bomma
புட்ட பொமா ஒரு கேரள காதல் கதை திரைப்படமாகும். இந்த படத்திற்கு தமிழ் மக்கள் மத்தியிலும் கூட வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் அஜித் படங்களில் சிறுமியாக நடித்த அனிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படமும் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக இருக்கிறது.
06.தசரா – dasara
தெலுங்கு சினிமாவில் நடிகர் நானி நடித்து புஷ்பா மாதிரியே வரவிருக்கும் திரைப்படம் தசரா. இந்த படத்திற்கு தெலுங்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதன் ஒ.டி.டி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளது.
இந்த படமும் தமிழ் மொழியில் வரவிருக்கிறது.
07.தமகா – Dhamaka
தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்து திரைக்கு வரவிருக்கும் தமகா திரைப்படத்தை வெளியாவதற்கு முன்பே வாங்கியுள்ளது நெட்ப்ளிக்ஸ். ரவி தேஜாவிற்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இந்த படம் தமிழ் டப்பிங்கில் வெளிவரவில்லை.
08. கார்த்திகேயா 8
வலிமை படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்து அவரது எட்டாவது படம் திரைக்கு வர இருக்கிறது. இன்னும் இந்த படத்திற்கு பெயர் கூட வைக்கவில்லை. ஆனால் அதற்குள் இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளது.
இந்த படமும் தமிழ் மொழியில் வெளியாகவில்லை.
09.மீட்டர்
தெலுங்கு சினிமாவில் கிரன் அப்பவரம் மற்றும் அதுல்யா ரவி நடித்து தயாராகி வரும் திரைப்படம் மீட்டர். தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் ஓ.டி.டியையும் நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. இந்த படம் தெலுங்கு மொழியில் மட்டுமே வெளி வர உள்ளது.
10.18 பேஜஸ் – 18 Pages
நிகில் சித்தார்த்தா மற்றும் அனுபாமா பரமேஸ்வரன் நடித்து கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி வெளியான திரைப்படம் 18 பேஜச். ஏற்கனவே இவர்கள் இருவரும் நடித்து வெளிவந்த கார்த்திகேயா 2 திரைப்படம் நல்ல வெற்றியை தந்ததால் அடுத்த படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஓ.டி.டி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளது எனவே கூடிய விரைவில் இந்த படத்தை நெட்ப்ளிக்ஸில் எதிர்பார்க்கலாம்.
மேலும் சில படங்களும் நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டியில் வர இருக்கின்றன.
2022 ஆம் ஆண்டில் பல ஹாலிவுட் படங்கள் வெளியாகின. இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாவதில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.
பல வகையான திரைப்படங்களை தமிழ் டப்பிங் செய்து தமிழ் சப்ஸ்க்ரைபர்களுக்காக நெட்ப்ளிக்ஸ் வெளியிடுகிறது. 2022 ஆம் ஆண்டு அப்படி வெளிவந்த 05 முக்கியமான தமிழ் டப்பிங் திரைப்படங்களை இப்போது பார்க்கலாம். இந்த திரைப்படங்கள் யாவும் வேறு வேறு வருடங்களில் வந்திருந்தாலும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தால் 2022 ஆம் ஆண்டுதான் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
01.The Gray man
க்ரே மேன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படம் என கூறலாம். ஏனெனில் கோலிவுட் கதாநாயகனான நடிகர் தனுஷ் அதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார்.
சி.ஐ.ஏவின் ஏஜெண்டாக இருக்கும் கதாநாயகன், அதில் ஒரு ரகசியத்தை கண்டறிந்து அதை நோக்கி பயணிக்கிறார். அப்போது வில்லன்களின் ஆட்களால் தொடர்ந்து தாக்கப்படும் கதாநாயகன் எப்படி தப்பித்து உண்மையை கண்டறிகிறார் என்பதே கதை.
இதில் லோன் உல்ஃப் என்னும் கதாபாத்திரத்தில் தனுஷ் ஒரு அடியாளாக வருகிறார். தனுஷ்தான் இந்த படத்தின் கதாநாயகன் என நினைத்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், லோன் உல்ஃப் கதாபாத்திரமும் கூட சற்று கெத்தான கதாபாத்திரமாகவே இருந்தது.
02.The Adam Project
த ஆடம் ப்ரோஜக்ட் திரைப்படம் டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆடம் என்கிற சிறுவனின் வீட்டிற்கு அருகில் திடீரென ஒரு விண்கலன் இறங்குகிறது. அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்குகிறான்.
அவன் ஆடமிடம் உதவி கேட்க ஆடமும் உதவி செய்கிறான். ஆனால் பிறகுதான் அந்த இளைஞன் சிறுவனான ஆடமின் எதிர்காலம் என்று. ஆடம் எதிர்காலத்தை காப்பதற்காக அதில் இருந்து இறந்த காலத்திற்கு பயணம் செய்து வருகிறான்.
அதற்கு இறந்த காலத்தில் இருக்கும் குட்டி ஆடம் உதவி செய்கிறான். கதை கேட்பதற்கு இடியாப்ப சிக்கலாக தோன்றினாலும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
03.மிஸ்டர் ஹாரிகன்ஸ் போன் (Mr harrigans phone)
ஹாரிகன் என்பவர் ஒரு தொழிலதிபர் ஆவார். அவருக்கென்று எந்த ஒரு சொந்தமும் கிடையாது. அவருக்கு புத்தகம் படிக்க பிடிக்கும். எனவே இதற்காக ஒரு சிறுவனை வேலைக்கு அமர்த்துகிறார். தினசரி புத்தகம் படிப்பதுதான் அவனது வேலை. இந்நிலையில் ஒரு நாள் ஹாரிகன் இறக்கிறார்.
அவருக்கு பிடித்த அவரது போனை அவருடன் வைத்து புதைக்கின்றனர். இறந்த பிறகும் அந்த சிறுவன் ஹாரிகனுக்கு மெசேஜ் செய்கிறான். அவன் மெசேஜ் செய்து அவரிடம் கேட்பது எல்லாம் மர்மமான முறையில் நிஜமாக நடக்கிறது. இந்நிலையில் அந்த சிறுவன் எப்படி இதை சமாளிக்க போகிறான் என்பதே கதை.
04.The curse of bridge hollow – த கர்ஷ் ஆஃப் ப்ரிட்ஜ் ஹாலோ
ஹோவர்ட் கார்டன் என்கிற நபர் ஒரு நகரில் தன் மகளான சிட்னியுடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில் பொதுவாக ஹாலோவின் பண்டிகை எனும் நாள் கொண்டாடப்படும். அதே போல அந்த நகரிலும் ஹாலோவின் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் சிட்னி செய்யும் சிறு தவறால் ஹாலோவினில் வைக்கப்பட்டுள்ள பேய் பொம்மைகளுக்கு உயிர் வந்துவிடுகிறது. பிறகு அதை சிட்னியும் அவள் தந்தை கார்டனும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.
05.ஃபாலிங் பார் க்ருஸ்மஸ் – Falling for Christmas
பெரும் தொழிலதிபரின் மகளான சைரா ஒரு கிருஸ்மஸ் விடுமுறைக்காக ஒரு கிராமத்திற்கு வருகிறார். அந்த கிராமத்தில் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தால் பழைய நினைவுகளை இழக்கிறார் சைரா.
அந்த சமயத்தில் ஜேக் என்னும் நபர் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். இந்த நிலையில் சைரா எப்படி பழைய நினைவை பெறுகிறார்? ஜேக்குக்கும் அவருக்குமான காதல் எப்படியானதாக இருக்கும்? இந்த கிருஸ்மஸ் இவர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை எல்லாம் படம் சுவாரஸ்யமாக சொல்கிறது.
தமிழ்நாட்டில் கிருஸ்மஸ் சாதரண பண்டிகையாக இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக கிருஸ்மஸ் உள்ளது. எனவே கிருஸ்மஸ் தொடர்பான திரைப்படங்களும் கூட வெளிநாடுகளில் அதிகமாக வெளியாகின்றன.
அப்படியாக இந்த வருடம் வெளியான திரைப்படம்தான் falling for christmas என்கிற திரைப்படம். படக்கதைப்படி சியாரா ஒரு கார்ப்பரேட் முதலாளியின் மகள், ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலத்தை இவர் காதலித்து வருகிறார். கிருஸ்மஸை கொண்டாட இவர்கள் ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள்.
பனிமலையை ஒட்டியுள்ள அந்த கிராமத்தில் ஒரு லாட்ஜ் வைத்து நடத்தி வருபவர்தான் கதாநாயகன் ஜேக். இந்த நிலையில் காதலனுடன் மலைக்கு செல்லும் சியாரா அங்கு விபத்தாகிறார். அவரை கண்டறியும் ஜேக் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்.
தலையில் அடிப்பட்டதால் தான் யார் என்பதையே மறக்கிறார் சியாரா. எனவே ஜேக் அவரது லாட்ஜில் சியாராவை தங்க வைக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் வருகிறது. அதே சமயம் அந்த லாட்ஜ் நஷ்டத்தில் போய் கொண்டிருப்பதால் அதையும் கூட விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் கதாநாயகனின் காதல் கை கூடுமா? அந்த லாட்ஜை அவர் எப்படி காப்பாற்ற போகிறார்? என்பது கதையாக செல்கிறது. இந்த வருட கிருஸ்மஸ்க்கு பார்ப்பதற்கு ஏற்றப்படம் என இதை கூறலாம்.
நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்த படம் தமிழ் மொழியில் கிடைக்கிறது.
நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு பான் இந்தியா கதாநாயகன் ஆவார். இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் நல்ல ஹிட் கொடுத்த திரைப்படமாகும்.
இதற்கு பிறகு சாஹோ, ராதே ஷியாம் என வரிசையாக பேன் இந்தியா படமாக நடித்தார் பிரபாஸ். ஆனால் இந்த படங்கள் எதுவுமே பாகுபலி அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.
அதிலும் ராதே ஷியாம் திரைப்படம் பயங்கரமான தோல்வியை கண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என கூறப்படுகிறது. இதையடுத்து மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் மூலம் பிரபாஸ் நடித்து உருவான படம் ஆதிபுருஷ். இதுவும் கூட எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 100க்கும் அதிகமான நாடுகளில் தங்களது ஓ.டி.டி சேவையை வழங்கி வருகிறது. இந்தோனிசியாவில் உள்ள நெட்ப்ளிக்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாஸை கலாய்த்து பதிவு ஒன்றை போட்டிருந்தனர்.
அதில் பிரபாஸ் நடித்த சாஹோ திரைப்படம் குறித்து விமர்சிக்கப்பட்டது. இந்த பிரச்சனை பெரிதாகவும் நெட்ப்ளிக்ஸ் இந்தோனிசியா அந்த டிவிட்டை அழித்துவிட்டது. இதனால் கோபமான பிரபாஸின் ரசிகர்கள் தொடர்ந்து நெட்ப்ளிக்ஸை அன்இன்ஸ்டால் செய்து தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips