Tag Archives: பிரின்ஸ்

அந்த படத்தில் நடிச்சதுதான் நான் செஞ்ச தப்பு!.. ஓப்பனாக ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன்!.

Actor sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா நடிகர்களில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராவார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வந்த மாவீரன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் அயலான். அயலான் திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனெனில் இந்த திரைப்படம் இவரது தயாரிப்பிலேயே தயாராகி வருகிறது.

அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் பட்ஜெட் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. படத்தை முடிப்பதற்காக பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan

இதற்கு முன்பு வெளியான டான் திரைப்படமும் கூட சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான படமாக அமைந்திருந்தது. அந்த படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கு ஓடி பெரும் லாபம் ஈட்டி கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

அதே சமயத்தில் வெளியான சர்தார் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்ததால் யாரும் பிரின்ஸ் திரைப்படத்தை கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து ஒரு பேட்டியில் பேசிய சிவகார்த்திகேயன், “பிரின்ஸ் படத்தில் நான் நடித்திருக்க கூடாது. வேறு யாராவது ஒரு நடிகர் அந்த படத்தில் நடித்திருந்தால் அந்த படம் வெற்றியடைந்திருக்கும்.

நான் நடித்ததால் மக்கள் என்னிடம் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். அதுவே பட தோல்விக்கு காரணமாக அமைந்தது என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

தெலுங்கில் ப்ளாப் அடித்த ப்ரின்ஸ் – 4 நாள் வசூல் இவ்வளவுதானா?

சிவகார்த்திகேயன் நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிரின்ஸ். வரிசையாக டாக்டர், டான் என படங்கள் அனைத்தும் ஹிட் படங்களாக அமைந்ததால் பிரின்ஸ் படத்தின் மீது சிவகார்த்திகேயனுக்கு அதிக நம்பிக்கை இருந்தது.

மேலும் தெலுங்கு ரசிகர்களை டார்கெட் செய்தே பிரின்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. எனவேதான் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கினார். 

இவர் ஏற்கனவே தெலுங்கில் ஒரு ஹிட் படம் கொடுத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் கூட தெலுங்கு தயாரிப்பாளர்தான்.

படம் தமிழில் அதிக வரவேற்பை பெறாததை போலவே தெலுங்கிலும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. 

கிட்டத்தட்ட 4 நாள் ஓடியும் 4 கோடி ரூபாய்தான் வசூலித்து உள்ளதாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு தோல்வியை பிரின்ஸ் படம் அடைந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பார்ப்பதற்கு அப்பாவில் போல் இருக்கும் இவர்தான் –  இயக்குனரை வச்சு செய்த சிவகார்த்திகேயன்

தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்கள் எல்லாம் பெரிய ஹீரோக்கள் படங்களாகதான் இருக்கும். ஆனால் இந்த முறை வித்தியாசமாக வளர்ந்து வரும் கதாநாயகர்களின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடித்த சர்தாரும், சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸும் வெளியாகின. பிரின்ஸ் திரைப்படம் மக்களிடையே அதிக எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும் கூட இப்போது வரை நல்ல விதத்தில் வசூல் பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் நம்ம வீட்டு பிரின்ஸ் என்கிற நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. அதில் பிரின்ஸ் படத்தின் இயக்குனர் அனுதீப்பிடம் என்ன படித்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. உடனே அவர் சார்டட் அக்கவுண்ட் என கூறினார்.

இதை கேட்டு சிரித்த சிவகார்த்திகேயன். அவர் ஒவ்வொரு பேட்டியிலும் ஒவ்வொரு படிப்பு படித்திருப்பதாக கூறுவார் என கூறினார்.

வீடியோவை காண க்ளிக் செய்யவும்