இந்த முறை பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருந்ததை பார்க்க முடிந்தது. நிறைய படங்கள் இந்த முறை பொங்கலுக்கு வெளியானது. அதற்கு முக்கிய காரணமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்தது.
விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் அன்று வெளியாகவில்லை. இதனால் அந்த சமயத்தில் இந்த திரைப்படங்கள் எல்லாம் களம் இறங்கின.
அதில் எதிர்பாராத விதமாக களம் இறங்கிய திரைப்படம்தான் மத கஜ ராஜா. மத கஜ ராஜா திரைப்படம் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பே உருவான திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கூட காமெடி நடிகராக நடித்திருந்தார். இதனால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் வரை பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் படைத்த திரைப்படமாக மத கஜ ராஜா திரைப்படம்தான் இருந்து வருகிறது.
படம் வெளியாகி 12 நாட்களில் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது மத கஜ ராஜா. இந்த திரைப்படம் 100 கோடி வெற்றி பெறவும் வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
பொங்கல் மற்றும் தீபாவளி மாதிரியான சிறப்பு தினங்கள் எல்லாம் தொடர்ந்து படங்கள் வெளியிடுவதற்கான தினங்களாக உள்ளன. அதிலும் 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் பல படங்களை பொங்கலுக்கு வெளியிடவே திட்டமிடுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஆரம்பத்தில் விடாமுயற்சி திரைப்படம்தான் திரைக்கு வர இருந்தது. ஆனால் விடாமுயற்சி பட வேலைகள் முடியாத காரணத்தால் அந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. மாறாக பிப்ரவரி 6 ஆம் தேதி அந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு காத்திருப்பில் இருந்த நிறைய திரைப்படங்கள் களம் இறங்கின. அப்படியாக களம் இறங்கிய திரைப்படங்களில் மதகஜராஜா திரைப்படமும் ஒன்று.
12 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அதிக நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் மதகஜ ராஜா. இதனால் பொங்கல் ரேசில் மற்ற படங்களை முறியடித்து மத கஜ ராஜா முதல் இடத்தை பிடித்தது.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு கூட மதகஜ ராஜா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் இந்த படம் இயக்குனர் சுந்தர் சி, விஷால், அஞ்சலி ஆகியோருக்கு முக்கிய படமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் 46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மத கஜ ராஜா. படத்தின் வசூல் இன்னமுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஷால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் வரவேற்பை பெற்று வரும் நடிகராக மாறியுள்ளார். சமீப காலங்களாக விஷாலுக்கு சொல்லி கொள்ளும்ப்படியாக திரைப்படங்கள் என்று எதுவுமே வெளிவரவில்லை. அவர் நடித்த லத்தி திரைப்படம் வரை பெரிதாக வரவேற்பு இல்லாத நடிகராகதான் இருந்து வந்தார் விஷால்.
ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து அவருக்கு வரவேற்பை ஏற்படுத்தும் மற்றுமொரு திரைப்படமாக மதகஜராஜா திரைப்படம் அமைந்துள்ளது. மதகஜராஜா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.
விஷாலுக்கு இருந்த கை நடுக்கம்:
ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பு நடந்த விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் மைக்கை பிடித்து பேசியதை பலரும் பார்த்திருக்கலாம். படத்தின் ப்ரோமஷனுக்காக விஷால் வேண்டுமென்றே கையில் நடுக்கம் ஏற்பட்டது போல நடித்துள்ளார் என இதுக்குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் இதுக்குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பேசியுள்ளார். அவர் கூறும்போது விஷாலுக்கு கை நடுக்கம் ஏற்பட்டது என கூறுவதெல்லாம் வெறும் நடிப்புதான். அவர் சிம்பதி உருவாக்கி அதன் மூலமாக படத்துக்கு ப்ரோமோஷன் தேட பார்த்தார்.
ஆனால் அதுவே அவருக்கு எதிர்வினையாக முடிந்தது. உண்மையில் விஷால் எங்கிருக்கிறார் என்பது பலருக்குமே தெரியாத விஷயமாக இருந்தது. அவர் எங்கோயோ முடங்கி கிடந்தார். அதனால்தான் குஷ்பு மேடையில் பேசும்போது கூட விஷால் உன்னை கண்டுப்பிடிப்பது எங்களுக்கு சிரமமாக இருந்தது என ஒருமையில் பேசியிருந்தார். என்று அந்த நிகழ்வு குறித்து பகிர்ந்திருந்தார் வலைப்பேச்சு பிஸ்மி.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips