Tag Archives: மிர்னல் தாகூர்

அசத்தும் அழகில் மிர்னல் தாக்கூர்.. வெளியான பிக்ஸ்..!

சீதாராமம் என்கிற திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுக்க பிரபலம் அடைந்த ஒரு கதாநாயகியாக மாறியவர் மிர்னல் தாக்கூர்.

ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்த மிர்னல் தாகூருக்கு தெலுங்கில் வந்த ஜெர்சி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த பிறகு தென்னிந்தியாவில் நிறைய நல்ல கதைகளை கொண்ட திரைப்படங்கள் வருவதை தெரிந்து கொண்டார் மிர்னல் தாகூர்.

அதுவரை பாலிவுட்டில் அதிக கவர்ச்சியாக நடித்து வந்த அவர் தென்னிந்திய சினிமாவிற்கு வந்து நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

 

அப்படியாக அவர் நடித்த தி ஃபேமிலி ஸ்டார், ஹாய் நானா மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றன. இப்பொழுது நல்ல மார்க்கெட்டை பெற்ற ஒரு நடிகையாக மிர்னல் தாகூர் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இப்பொழுது அதிக வைரல் ஆகி வருகின்றன.

 

சீதா ராமம் கதாநாயகியா இது! – உச்சக்கட்ட கவர்ச்சியில் மிர்னல் தாகூர்..!

2012 ஆம் ஆண்டு பாலிவுட் வெப் சீரிஸ் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானவர் மிர்னல் தாகூர். இந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் கதாநாயகி ஆவதற்கான முயற்சியை 2012 முதலே எடுத்துவந்தார் மிர்னல் தாகூர்.

ஆனால் குறைவான திரைப்படங்களிலேயே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் மனம் தளராமல் முயற்சித்து வந்தார் மிர்னல் தாகூர். 2019 இல் கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் நடித்தது மூலம் பாலிவுட்டில் கொஞ்சம் வாய்ப்புகள் கிடைத்தது.

அதனை தொடர்ந்து டூஃபான்,தமாகா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவர் நடித்து போன வருடம் வெளியான சீதா ராமம் திரைப்படம்தான் மக்கள் மத்தியில் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

மேலும் தென்னிந்தியாவில் இவர் பிரபலமாவதற்கும் சீதா ராமம் முக்கியமாக உதவும் படமாக அமைந்தது. சீதா ராமத்திற்கு பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் மிர்னல் தாகூர்.

தற்சமயம் நானியின் 30 ஆவது படத்தில் நடித்து வருகிறார் மிர்னல் தாகூர். இது மட்டுமின்றி பாகுபலி கதையை மையமாக வைத்து வெளியாகவிருக்கும் பாகுபலி பிஃபோர் த பிகினிங் என்ற டிவி சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சீதா ராமம் திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த மிர்னல் தாகூர் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தளுக்கு மொழுக்கு அழகை மொத்தமா காட்டிட்ட! – சீதா ராமம் நடிகையின் கவர்ச்சி அவதாரம்

பாலிவுட்டில் டிவி சீரிஸின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மிர்னல் தாகூர். 2012 இல் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார். 2014 இல் இரண்டு படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவை யாவும் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. பிறகு 2014 முதல் 2018 வரை இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. 2020க்கு பிறகு இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வர துவங்கின.

தெலுங்கில் நானி நடித்து வெளிவந்த ஜெர்சி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கதாநாயகியாக இவர் நடித்தார். அதன் பிறகு போன வருடம் இவர் நடித்த சீதா ராமம் திரைப்படம் வெளியானது.

சீதா ராமம் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தென்னிந்தியாவில் இவருக்கு அதிக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் கூட இவர்கள் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் உலா வருகின்றன.

இந்த நிலையில் பாலிவுட்டில் அக்‌ஷய் குமாருடன் இவர் ஒரு ஆல்பம் பாடல் நடித்துள்ளார். அதில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் மிர்னல் தாகூர். சீதா ராமம் திரைப்படத்தில் அவரை புடவை கட்டி பார்த்த ரசிகர்களுக்கு இது ஆச்சரியமான சம்பவமாக அமைந்துள்ளது.

அந்த ஆல்பம் பாடலை காண இங்கு க்ளிக் செய்யவும்.