Tag Archives: லவ்வர்

கவினுக்கு அவ்வளவு சம்பளம் தராங்க!.. நான் என்ன தக்காளி தொக்கா… சம்பள பிரச்சனையில் இறங்கிய குட் நைட் மணிகண்டன்!..

நடிகர்கள் கொஞ்சம் பிரபலமாக துவங்கிய பிறகு அவர்கள் செய்யும் முதல் விஷயம் தங்களது சம்பளத்தை உயர்த்துவதுதான். இது பெரிய நடிகர்களில் துவங்கி சின்ன நடிகர்கள் வரை தமிழ் சினிமாவில் பரவலாக இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமாகும் புது நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு தங்களது சம்பளத்தை அதிகரித்து விடுகின்றனர்.

நடிகர் கவின் கூட அப்படியாக தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் கவின் அதன் பிறகு வெகு நாட்களாக தமிழ் சினிமாவில் நடிகராவதற்கு முயற்சித்து வந்தார். அந்த வகையில் அவருக்கு லிஃப்ட் என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அது ஒரு ஹாரர் திரைப்படம் என்றாலும் அதற்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து கவின் நடித்த திரைப்படம் டாடா. இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கண்டது. டாடா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கவின் தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தியுள்ளார்.

அதே போல நடிகர் மணிகண்டனும் ஜெய் பீம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதற்கு பிறகு குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து மணிகண்டனுக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. எனவே அவரும் அவரது சம்பளத்தை 2 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக மணிக்கண்டன் இருக்கிறார்.

இது என்ன பாகவதர் படமா? இம்புட்டு நீளமா எடுத்து வச்சிருக்காய்ங்க- லவ்வர் படத்தை பங்கமாய் கலாய்த்த புளூ சட்டை மாறன்

மணிகண்டன், கௌரி பிரியா ஆகியோரின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் “லவ்வர்”. இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் இயக்க, சான் ரோல்டன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தபோதே இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது. மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க கதாநாயகனாக வளர்ந்துள்ளார். அவர் இதற்கு முன்பு நடித்த “குட் நைட்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

“குட் நைட்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது “லவ்வர்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் “குட் நைட்” திரைப்படம் போல் அல்லாமல் இத்திரைப்படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுக்கு இத்திரைப்படம் திருப்தியளிக்கவில்லை என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான புளு சட்டை மாறன் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலில் இத்திரைப்படத்தை தனது யூட்யூப் வீடியோவில் விமர்சித்துள்ளார்.

“திரைப்படத்தின் முதல் பாதியை ஓஹோ என்று புகழ முடியாது என்றாலும் ஓரளவுக்கு தலைவலி இல்லாமல் நன்றாக சென்றது. ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் ஹீரோ ஹீரோயினிடம் ‘உன்னை காதலிக்க எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு’ என அதையே கேட்டுக்கொண்டே இருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதுமே திரும்ப திரும்ப பேசி எரிச்சலூட்டிக்கொண்டே இருக்கிறார். அந்த ஹீரோயின் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்தாலும் அதனை இவரே கெடுத்துவிடுகிறார்” என்று கூறிய அவர்,

“திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மிக நீளமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். பத்து வினாடியில் முடிக்க வேண்டிய காட்சியை 15 வினாடிகள் எடுத்து வைத்திருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு பாகவதர் படங்களை போல் வலுக்கட்டாயமாக பாடல்களை இறக்கிவைத்துவிட்டார்கள்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “மொத்தத்தில் இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்றால், இந்த படத்தில் தேவையில்லாத காட்சிகளை எல்லாம் மிகவும் நீளமாக எடுத்து வைத்திருக்கிறார்கள். தேவையான காட்சிகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். படத்தில் காமெடி மிஸ்ஸிங், ரசிக்கும்படியான பாடல்கள் மிஸ்ஸிங், இது எல்லாம் இருந்திருந்தால் இந்த படம் ரொம்ப நல்ல படமாக வந்திருக்க வேண்டியது. சொல்ல வந்த விஷயத்தை அளவுக்கதிகமா சொல்லி சுமாரான படமாக எடுத்து வைத்திருக்கிறார்கள்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

டேய் கம்முனாட்டி உனக்கு இருக்குடா!.. நடிகர் மணிகண்டன் காதல் வாழ்க்கையில் விளையாடிய நண்பர் யார் தெரியுமா?

Jai bhim Manikandan : ஜெய் பீம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அதற்கு முன்பே காதலும் கடந்து போகும், காலா மாதிரியான சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜெய் பீம்.

ஏனெனில் ஜெய் பீம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தனைக்கும் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் கூட இல்லாத படம்தான் என்றாலும் கூட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

actor-manikandan

அதனை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மணிகண்டன். தற்சமயம் இவர் நடித்திருக்கும் லவ்வர் என்கிற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

அதில் அவர் கூறும் பொழுது பள்ளி பருவத்தில் அவருக்கு இருந்த காதல் குறித்து கேட்கப்பட்டது. அப்பொழுது கூறியவர் என்னுடன் ஒரு நண்பன் இருந்தான் அவன் மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களை பார்த்துவிட்டு காதல் செய்யாமல் இருப்பது தான் பெரிய கெத்து என்று பேசி வந்தான்.

நானும் அதெல்லாம் உண்மை என்று நம்பி பள்ளி காலத்தில் துவங்கி கல்லூரி வரை காதலிக்காமலேயே இருந்து விட்டேன். அந்த கம்முனாட்டி மட்டும் என் கண்ணில் பட்டான் என்றால் அவனுக்கு இருக்கு என்று கூறிய மணிகண்டன் அந்த நண்பனின் பெயர் பிரவீன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படியான ஒரு நண்பன் எல்லாருக்குமே உண்டு என்று இதற்கு நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.