கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருந்த திரைப்படம் வாடிவாசல்.
வாடிவாசல் என்று வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இப்பொழுது இந்த திரைப்படம் உருவாகாமல் இருந்து வருகிறது.
ஆனால் இந்த திரைப்படத்திற்காக 18 கோடி முன்பணமாக பெற்று இருக்கிறாராம் வெற்றிமாறன். இந்த நிலையில் இன்னும் படம் உருவாகாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகவே சென்று கொண்டே இருக்கிறது.
இதற்கு நடுவே சிம்பு வெற்றிமாறனின் திரைப்படம் அடுத்து துவங்கி இருக்கிறது இந்த படத்திற்குப் பிறகு மீண்டும் வாடிவாசலின் படபிடிப்பு துவங்க இருக்கிறது என்று பேச்சுகள் இருக்கின்றன.
ஆனால் வாடிவாசல் நாவலின் கதைகளத்தை வைத்து இந்த படம் நகரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாக வெற்றிமாறன் வேறு வகையான கதை ஒன்றை எழுதி இருக்கிறார் அந்த கதை தான் அடுத்து படமாக வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.
Vetrimaaran: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு பெரும் வரவேற்பு உண்டு. ஏனெனில் வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வெறுமனே படம் என்பதை தாண்டி பல விஷயங்களை பேசக்கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்சமயம் விடுதலை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் வாடிவாசல். வாடிவாசல் என்கிற பெயரில் ஏற்கனவே வந்த நாவலை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாதான் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்தது. ஆனால் இயக்குனர் பாலாவுடன் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார்.
அதே போல தற்சமயம் வாடிவாசல் திரைப்படத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து கூட அப்டேட் எதுவும் வராமலே இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்தும் விலகுவதாக கூறப்படுகிறது.
வழக்கம் போல வெற்றிமாறன் தனுஷை கதாநாயகனாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்க போகிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இதனையடுத்து இழுபறியில் சென்றுக்கொண்டுள்ளது வாடிவாசல் திரைப்படம்.
Surya and Vetrimaaran : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் திரைப்படம் வாடிவாசல். சிசு செல்லப்பா என்னும் எழுத்தாளர் எழுதிய வாடிவாசல் என்னும் நாவலின் தழுவலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
ஆனால் தற்சமயம் ஏற்பட்ட அமீர் பருத்திவீரன் பிரச்சனை இந்த படத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் வாடிவாசல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமீரும் நடிக்கிறார்.
அமீருக்கும் கார்த்திக்கும் இருக்கும் பகையின் காரணமாக இந்த திரைப்படத்தில் பிரச்சனை ஏற்படலாம் என்று பேச்சுக்கள் இருந்தது. ஆனால் வெற்றிமாறனை பொறுத்தவரை அவர் அமீரின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவர் சூர்யாவிற்கு பதிலாக வேறு கதாநாயகனை மாற்றுவார் என்று பேச்சுக்கள் இருந்தன.
ஆனாலும் சூர்யா இந்த படத்தில் நடிப்பதில் வெகு தீவிரமாக இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன இந்த நிலையில் அடுத்து ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் நடிப்பதற்கு சூர்யாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த திரைப்படத்தில் நடிக்க துவங்கிய பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகக்கூடாது என்று அந்த பட நிறுவனம் அவருக்கு விதிமுறை போட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் ஆரம்பித்து வைத்துவிட்டு அந்த ஆங்கில படத்திற்கு நடிக்க சென்றால் இடையில் வந்து வாடி வாசலிலும் நடித்துக் கொள்ளலாம் என்பது சூர்யாவின் விருப்பமாக இருக்கிறது. இதனை அறிந்த வெற்றிமாறன் ஒரு பத்து நாள் மட்டும் படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்று கூறி இருக்கிறார்.
ameer
அந்த பத்து நாளும் இயக்குனர் அமீர் மற்றும் சூர்யா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைதான் எடுக்கப் போகிறார் என்ற பேச்சுக்கள் இருக்கின்றன ஏனெனில் மற்ற காட்சிகளை எடுத்த பிறகு சூர்யா இறுதியில் அமீருடன் நடிக்க மாட்டேன் என்று கூறினால் வேறு வழியில்லாமல் அமீருக்கு பதிலாக வேறு ஆளை நடிக்க வைக்க வேண்டி இருக்கும்.
எனவே முதலிலேயே அமீருடன் கூடிய காட்சிகளை எடுத்துவிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் வெற்றிமாறன். இந்த பத்து நாள் படப்பிடிப்பு நடிக்காவிட்டால் சூர்யாவால் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போகலாம் எனவே வேறு வழியின்றி சூர்யா நடிப்பார் என்பதற்காகதான் வெற்றிமாறன் இப்படி செய்கிறார் என்று பேசப்படுகிறது.
Ajith and Vetrimaaran : பொதுவாக தமிழ் சினிமாவில் புது முயற்சிகளை எடுத்து படமெடுக்கும் இயக்குனர்கள் வெகு அரிதாகவே பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுப்பார்கள். வெற்றிமாறன், மிஸ்கின் போன்ற இயக்குனர்கள் எல்லாம் அந்த வகையை சேர்ந்தவர்கள்தான்.
இயக்குனர்களுக்கு என்று தனியாக ரசிகப்பட்டாளம் இருக்கும் அளவு வரவேற்பை பெற்றவர் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் உருவாகி வருகின்றன.
ஆனால் வெற்றிமாறன் இன்னமும் விஜய் அஜித் மாதிரியான பெரிய ஹீரோக்களை வைத்து எந்த ஒரு திரைப்படமும் இயக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து அவர் இயக்கவிருந்த திரைப்படம் வாடிவாசல். சி.சு செல்லப்பா எனும் எழுத்தாளர் எழுதிய வாடிவாசல் என்னும் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட இருக்கிறது.
முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருந்தார். ஆனால் அமீர் பருத்திவீரன் திரைப்பட பிரச்சனையில் சூர்யாவிற்கும் பங்கிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே அமீரின் நண்பர் என்பதால் வெற்றிமாறன் சூர்யாவை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
vaadivasal
இதற்கு நடுவே படத்தின் கதையை கேட்ட நடிகர் அஜித்குமார் அந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. ஏற்கனவே விஸ்வாசம் திரைப்படத்திலேயே அஜித்திற்கு கிராமத்து ஆள் போனற வேஷம் பக்காவாக பொருந்தியிருந்தது. இந்த நிலையில் அவர் இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் அஜித்துக்குமே இந்த படம் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுதி வெளிவந்த ஜல்லிக்கட்டு தொடர்பான நாவல் வாடிவாசல்.
இந்த நாவல் தற்சமயம் படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா, ஆண்ட்ரியா, அமிர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன. படம் ஜல்லிக்கட்டு தொடர்பானது என்பதால் காளைகளை படத்தில் காட்ட வேண்டியது வரும். காளையுடன் சண்டைக்காட்சிகள் இருக்கும். அவற்றிற்கு கிராபிக் முறையில்தான் காட்சியை அமைக்க வேண்டி வரும்.
எனவே இதற்காக வெற்றி மாறன் சிறப்பான வி.எஃப்.எக்ஸ் குழுவை இறக்க திட்டமிட்டார். அப்படியாக விசாரித்து அவதார் படத்தில் பணிப்புரிந்த ஒரு வி.எஃப்.எக்ஸ் குழுவை தற்சமயம் வாடிவாசல் திரைப்படத்திற்காக நியமித்துள்ளனர்.
அவதார் குழு வி.எஃப்.எக்ஸ் செய்வதால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips