Tag Archives: விக்ரமன்

நைட் 12 மணிக்கு வந்து என்கிட்ட டவுட் கேட்பாரு… பூவே உனக்காக படத்தில் நாகேஷ் குறித்த அனுபவம்.. பகிர்ந்த விக்ரமன்..!

தமிழ் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் இயக்குனர் விக்ரமன் முக்கியமானவர். இப்பொழுதும் இயக்குனர் விக்ரமனின் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை.

வானத்தைப்போல சூரியவம்சம் மாதிரியான திரைப்படங்களை இன்னுமுமே தொலைக்காட்சிகளிலும் ஆன்லைனிலும் மக்கள் பார்த்து வருவதை பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு பார்த்தால் சலிக்காத அளவிற்கான திரைப்படம் பூவே உனக்காக முக்கியமான திரைப்படம். விஜய்யின் சினிமா வாழ்க்கையை மாற்றியதிலும் பூவே உனக்காக படத்தில் முக்கிய பங்குண்டு. அதற்கு முன்பு வரை பிளேபாய் மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய்யை ஒரு காதல் கதாபாத்திரமாக மாற்றிய திரைப்படம் பூவே உனக்காக.

பூவே உனக்காக திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களான நம்பியார் மற்றும் நாகேஷ்  இருவரும் நடித்திருந்தனர். அதில் நாகேஷோடு தனது அனுபவம் குறித்து விக்ரமன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் விக்ரமன் கூறும் பொழுது ஒரு காட்சியில் நாகேஷின் ஸ்கூட்டர் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிடும்.

அந்த காட்சியை நாங்கள் எடுத்து முடித்த பிறகு ஏனோ நாகேஷுக்கு அந்த காட்சி சரியாக படவில்லை. அன்று இரவு 12 மணிக்கு எனது அறையின் கதவை தட்டினார். கதவை திறந்ததும் அந்த காட்சி நான் ஒழுங்காக நடிக்கவில்லை என்று நினைக்கிறேன் உனது முகமே அப்பொழுது வாட்டமாக இருந்தது என்று என்னிடம் கேட்டார்.

உடனே நான் அப்படியெல்லாம் இல்லை சார். அந்த காட்சி மிக நன்றாக வந்துள்ளது. திரையரங்குகளில் பார்க்கும்பொழுது உங்களுக்கு தெரியும் என்று கூறினேன். ஆனால் நாகேஷ் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை. அப்படி ஒரு சின்சியரான நடிகர் நாகேஷ் என்று அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் விக்ரமன்.

அதை வேற பண்ணீட்டாய்ங்களா?. அட பாவிகளா… விக்ரமன் படத்தை பார்த்து அவரே அதிர்ச்சியான தருணம்.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். ஒரு காலக்கட்டத்தில் இயக்குனர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மெஹா ஹிட் வெற்றிகள்தான். பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு விக்ரமன் இயக்கும் பாணியிலான திரைப்படங்களின் வரத்து குறைந்தது.

மேலும் சில தனிப்பட்ட காரணங்களால் அதிக பிரபலமாக இருந்த காலக்கட்டத்திலேயே விக்ரமன் தமிழ் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். பிறகு சில வருடங்கள் கழித்து அவர் திரைப்படங்கள் இயக்கினார். ஆனால் அவ்வளவாக அது வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவரிடம் பிரியமான தோழி திரைப்படத்தின் கன்னட ரீமேக் குறித்து பேசப்பட்டது. அந்த கன்னட ரீமேக்கில் வரும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் விக்ரமன்.

வி ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். மீரா ஜாஸ்மின் அவருக்கு தோழியாகவும், நமீதா ஜோடியாகவும் நடித்திருந்தார். அதில் ஜோதிகாவும் மாதவனும் முதன் முதலில் சந்திக்கும் அந்த காட்சியை மிக கவர்ச்சியாக நமீதாவை வைத்து எடுத்திருந்தனர்.

vikraman

அதனை பார்த்துதான் விக்ரமன் அதிர்ச்சியானார். அந்த காட்சியை எவ்வளவு டீசண்டாக எடுத்திருந்தேன். இப்படி பண்ணி வச்சி இருக்காங்களே. வி ரவிச்சந்திரன் வேற எனக்கு நல்ல நண்பர். அவர் இப்ப நான் பேசுறதை பார்த்தால் போன் பண்ணி பேசுவார் என கூறினார் விக்ரமன்.

மேலும் அவர் கூறும்போது இப்படி என் படத்தை கன்னடத்தில் ரீமேக் பண்ணின விஷயமே எனக்கு தெரியாது. நல்ல வேளை என் பேர் இதுல வரலை என விக்ரமன் கூற உடனே தொகுப்பாளர் இல்ல சார் படத்தில் கதைனு போட்டு உங்க பேரைதான் போட்டு இருக்காங்க என கூறினார்.

அதனை கேட்ட விக்ரமன் அதையும் பண்ணிட்டாய்ங்களா. அட பாவிகளா என சிரித்துக்கொண்டே பேசியிருந்தார்.

கே.எஸ் ரவிக்குமார் மீது பொறாமையா? ஓப்பனாக பதில் அளித்த இயக்குனர் விக்ரமன்.!

கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவில் டாப் 10 இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஆவார்.

இப்போது இருக்கும் இயக்குனர்களை விடவும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களான கமல் ரஜினியை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படங்களை எல்லாம் இயக்குவதற்கு முன்பு இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அதற்கு பிறகு தான் அவருக்கு இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது.

ks ravikumar

இந்த நிலையில் இதுகுறித்து விக்ரமனிடம் கேட்கும்பொழுது கே.எஸ் ரவிக்குமாரின் வளர்ச்சி என்றுமே எனக்கு வருத்தத்தை அளித்தது கிடையாது ஏனெனில் கே.எஸ் ரவிக்குமாருக்கு மக்களை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.

கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களே அவரை தேடி வந்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றால் அவரிடம் அப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கிறது என்பதற்காகதான். அஜித் மாதிரியான நடிகர்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு இயக்குனருக்கு வாய்ப்பை கொடுத்து விட மாட்டார்கள்.

அப்படியும் கே எஸ் ரவிக்குமார் அஜித்தை வைத்து நிறைய படங்களை இயக்கியிருக்கிறார் அந்த அளவிற்கு திறமைசாலி தான் என்று கூறியிருக்கிறார் விக்ரமன்.

கே.எஸ் ரவிக்குமாருக்காக இறங்கி வந்த இயக்குனர் விக்ரமன்… தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் இதை பண்ணியிருக்க மாட்டாங்க!.

KS Ravikumar : தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக வரும் ஒவ்வொரு நபருக்கும் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அடுத்த கட்ட ஆசையாக இருக்கும். இப்படி கனவுகளோடு வரும் நபர்கள் அவ்வளவு எளிதில்  இயக்குனராக முடியாது.

முன்பெல்லாம் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிறகுதான் அவர்களுக்கு இயக்குனர் ஆவற்கான வாய்ப்பு கிடைக்கும் அதுவும் அவர்கள் உதவி இயக்குனராக எந்த இயக்குனரிடம் பணி புரிந்தார்களோ அந்த இயக்குனர்களின் பரிந்துரைகள் கிடைக்க வேண்டும்.

இல்லை என்றால் இயக்குனர் ஆவது கடினம் என்கிற நிலை இருந்தது இதனாலேயே அப்போது உதவி இயக்குனராக சேர்ந்த பலரும் பல வருடங்கள் பல திரைப்படங்களில் பணிபுரிந்து வந்தனர். அப்படி தமிழ் சினிமாவில் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர்தான் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.

கே.எஸ் ரவிக்குமாருக்கு வந்த வாய்ப்பு:

அவர் உதவி இயக்குனராக பணி புரிந்து வந்த காலகட்டத்திலேயே இயக்குனர் விக்ரமன் பெரும் இயக்குனராக இருந்தார். பல இயக்குனர்களின் திரைப்படங்களில் அப்பொழுது கே.எஸ் ரவிக்குமார் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் விக்ரமனின் புது வசந்தம் திரைப்படத்திலும் வந்து உதவி இயக்குனராக சேர்ந்தார் கே.எஸ் ரவிக்குமார்.

அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த பொழுது அவரின் பணி சிறப்பாக இருப்பதை விக்ரமன் கவனித்தார். இவர் உதவி இயக்குனராக இருப்பதை விடவும் இயக்குனராக பணி புரிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் இயக்குனர் விக்ரமன்.

Ks ravikumar

எனவே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஆர்.பி சௌத்ரியை அழைத்து என்னிடம் கே.எஸ். ரவிக்குமார் என்று ஒரு நபர் வேலை பார்க்கிறார். அவர் மிகவும் நன்றாக பணிபுரிகிறார் அவருக்கு இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு பல படங்களில் பணிப்புரிந்தும் கூட எந்த இயக்குனரும் இப்படி ஒரு வாய்ப்பை வாங்கி கொடுத்ததில்லை. தமிழ் சினிமாவிலேயே ஒரே ஒரு திரைப்படம் தன்னுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்ததற்காக எந்த ஒரு இயக்குனரும் அந்த நபருக்கு இயக்குனர் ஆவதற்கான வாய்ப்பை வாங்கி தந்ததில்லை. ஆனால் விக்ரமன் அதை செய்தார். இதை அவரே ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர்கள் எல்லாம் அஜித்தை கை விட்டப்ப கூட நான் அவருக்காக நின்னேன்!. இயக்குனர்களுக்கு எதிரியாக தல மாற இதுதான் காரணம்!

Actor Ajith: விஜய்யை போலவே தமிழ் சினிமாவில் அதிகமான ரசிக பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். தனது திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்போதும் கூட குறைவான அளவிலேயே திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஜித்.

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய இடைவெளி விட்டுதான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் வெகுநாட்களாக நடந்து வருகிறது. விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுகின்றனர்.

ajithkumar

ஆனால் அஜித் ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நீண்டுக்கொண்டே செல்கிறது. அஜித் பிரபலமாக இருந்த காலக்கட்டத்திலேயே நிறைய திரைப்படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ஆதரவு கொடுத்த இயக்குனர்:

அப்போது பிரபலமாக இருந்த மற்ற நடிகர்கள் யாரும் அப்படி சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதில்லை. நடிகர் விக்ரமன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தப்போது அந்த திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்று இருந்தது.

unnidathil-ennai-koduthen

அந்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் நினைத்தார். இந்த நிலையில் இயக்குனர்கள் தங்களுக்கென்று ஒரு சங்கம் துவங்கியிருந்தனர். அஜித் அந்த சங்கத்திற்கு எதிராக இருந்தார்.

இதனால் அவரை வைத்து படம் இயக்க கூடாது என சங்கத்தில் முடிவு செய்திருந்தனர். இதனால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் அஜித். இந்த நிலையில் அஜித்தை சந்தித்து அவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார் விக்ரமன். ஏற்கனவே புதிய மன்னர்கள் படத்திலேயே அஜித்தை விக்ரமின் நண்பனாக நடிக்க வைக்க இருந்ததாகவும் ஆனால் அப்போது அஜித் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார் விக்ரமன்.

நாட்டாமை படத்தில் நடிச்சதால அந்த படத்தில் சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கல!.. அப்ப கார்த்திக்கு மட்டும் சலுகையா!..

Sarathkumar: தமிழ் சினிமா நடிகர்களில் இளமைக்காலங்களில் பெரும் பிரபலமாக இருந்தவர் நடிகர் சரத்குமார். சரத்குமார் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு என்பது மிகவும் அதிகமாக இருந்தது.

இதனை அடுத்து பல இயக்குனர்களும் சரத்குமார் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இந்த நிலையில் தான் கே.எஸ் ரவிக்குமார் சரத்குமாரை கதாநாயகனாக வைத்து நாட்டாமை திரைப்படத்தை இயக்கினார்.

நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை அடுத்து சரத்குமாரை வைத்து இரட்டை வேடத்தில் படம் இயக்குவதற்கு நிறைய இயக்குனர்கள் ஆர்வம் காட்ட துவங்கினர்.

இந்த நிலையில்தான் இயக்குனர் விக்ரமன் வானத்தைப்போல திரைப்படத்தின் கதையை எழுதி இருந்தார். இந்த கதையை எழுதும் போது இதில் சரத்குமார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தார் இயக்குனர் விக்ரமன்.

ஆனால் அதற்கு முன்பே நாட்டாமை படம் வெளியானதால் பிறகு இதில் சரத்குமார் நடிப்பது சரியாக இருக்காது என்று விக்ரமன் நினைத்தார். ஏனெனில் இந்த இரண்டு திரைப்படங்களிலுமே அண்ணன் மற்றும் தம்பி கதாபாத்திரம் கதாநாயகனின் இரட்டை வேடங்களாக இருக்கும்.

unnidathil-ennai-koduthen

எனவே நாட்டாமை போலவே வானத்தைப்போல படமும் அமைந்துவிடும் என்று யோசித்த விக்ரமன் அதில் இருந்து சரத்குமாரை நீக்கிவிட்டார். ஆனால் அதே விக்ரமன் கார்த்திக்கை வைத்து படம் இயக்கும்போது அப்படி செய்யவில்லை.

கார்த்திக் நடிப்பில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்கிற திரைப்படத்தை இயக்கினார் விக்ரமன். அதற்கு முன்பு கார்த்தி நந்தவனத் தெரு என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். நந்தவன தேரு திரைப்படத்தின் கதையும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் கதையும் ஒன்றுதான்.

இருந்தாலும் விக்ரமன் எந்த ஆட்சேபனையும் கூறாமல் கார்த்தியை வைத்து அந்த படத்தை இயக்கினார் ஆனால் சரத்குமாருக்கு மட்டும் வாய்ப்பை நிராகரித்து விட்டார்.

இந்த படத்தை வேற ஹீரோவை வச்சி சக்ஸஸ் பண்ணி காட்டுறேன் பாக்குறீங்களா!.. கார்த்திக்கு ஓப்பன் சேலஞ் வைத்த இயக்குனர்!.

Actor Karthik and Vikraman : 90களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். பெரும்பாலும் விக்ரமன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் குடும்பக் கதையாகவே இருக்கும். மிகவும் சிம்பிளான கதைகளை எடுத்துக் கொண்டு அதனை சிறப்பாக திரைக்கதை அமைத்து மக்கள் பார்க்கும் வகையில் சுவாரசியமாக திரைப்படமாக மாற்றுவதில் விக்ரமன் கெட்டிக்காரர் என்று கூறலாம்.

இந்த நிலையில் அப்போது இருந்த பெரும் நடிகர்கள் பலரும் விக்ரமன் திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் ஒவ்வொரு ஹீரோவை வைத்தும் ஒரு திரைப்படமாவது இயக்கி வந்தார் விக்ரமன். அப்படி அவர் கார்த்திக்கை வைத்து இயக்கிய திரைப்படம்தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.

இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரோஜா நடித்திருப்பார். திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பாதி படப்பிடிப்புகள் முடிந்த பிறகு நடிகர் கார்த்திக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் இல்லாமல் போனது. ஏன் அவர் நடிக்க விரும்பவில்லை என்று விக்ரமன் சென்று கேட்டபொழுது இதற்கு முன்பு நந்தவனத் தெரு என்ற ஒரு திரைப்படத்தில் நடித்தேன்.

நடிக்க மறுத்த கார்த்திக்:

அந்த திரைப்படத்திலும் கதாநாயகியை பாடகியாக்குவதுதான் கதையாக இருந்தது. இந்த படமும் அதே கதையை கொண்டிருப்பதால் இது ஓடுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் கார்த்திக்.

அதனை கேட்ட விக்ரமனிற்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவர் இது அந்த படத்தில் இருந்து இது கொஞ்சம் மாறுப்பட்ட கதைதான். இந்த திரைப்படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றால் பிரச்சனை இல்லை.

இந்த தயாரிப்பாளரின் வேறு திரைப்படத்தில் நீங்கள் நடித்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் இதே திரைப்படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து வெற்றி படமாக்கி காட்டுகிறேன் பார்க்கிறீர்களா? என்று கூறியிருக்கிறார் விக்ரமன்.

அதனை கேட்ட கார்த்திக் நீங்கள் இவ்வளவு உறுதியாக இந்த கதையை நம்புகிறீர்கள் என்றால் நான் இதில் நடிக்கிறேன் சார் என்று கூறியிருக்கிறார் அதேபோல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் நந்தவனத் தெரு  திரைப்படத்தை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது.

வேணும்னே இப்படி பண்றியா!.. கார்த்தி படத்தில் இருந்து சார்லியை தூக்கிய இயக்குனர்!.. ரொம்ப கோபக்காரர் போல!..

Vikraman and Charlie : தமிழ் சினிமாவில் எப்போதும் சின்ன நடிகர்களை பொறுத்தவரை மிகவும் கவனமாக வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை என்றால் அது அவர்களது எதிர்காலத்திலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

இயக்குனர் விக்ரமனை பொருத்தவரை அவரது திரைப்படங்களில் தொடர்ந்து சில நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார். சார்லி ரமேஷ் கண்ணா மணிவண்ணன் போன்ற நடிகர்களுக்கு காமெடி கதாபாத்திரங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் விக்ரமன்.

இப்படி இருக்கும் பொழுது உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் விக்ரமன். இந்த திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாகவும் நடிகை ரோஜா கதாநாயகியாகவும் நடித்தனர். இதில் காமெடி கதாபாத்திரத்தில் சார்லியை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் விக்ரமன்.

இது குறித்து சார்லிடம் பேசும் பொழுது அவரும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பு துவங்கும் நாளில் படப்பிடிப்பிற்கு சார்லி வரவில்லை மாறாக அவர் வேறு ஒரு படத்தின் படபிடிப்பிற்கு சென்றுவிட்டார்.

அவர் வேறுபடத்தில் நடிப்பதாக இருந்திருந்தால் அதை விக்ரமனிடம் முன்பே கூறியிருக்க வேண்டும். அப்படி கூறியிருந்தால் விக்ரமனும் வேறு காமெடி நடிகரை மாற்றி இருப்பார். ஆனால் அவரிடம் நடிக்க வருகிறேன் என்று கூறிவிட்டு வராமல் போனது விக்ரமனிற்கு கோபத்தை ஏற்படுத்தியது உடனே அவர் ரமேஷ் கண்ணாவை அழைத்து அவருக்கு அந்த காமெடி கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார் அதன் பிறகு அவர் எடுத்த பெரும்பான்மையான படங்களில் சார்லிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை விக்ரமன்.

அந்த படத்தை பார்த்ததும் இவ்வளவு கேவலமா எடுத்துருக்கேன்னு இருந்துச்சு.. ஆனா திருப்பி அடிச்சேன்.. மாஸ் காட்டிய இயக்குனர் விக்ரமன்!.

தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இப்போதைய லோகேஷ் கனகராஜ் போல அப்போது விக்ரமன் இயக்குகிறார் என்றாலே ஒரு கூட்டம் இருக்கும். அந்த அளவிற்கு மக்கள் விரும்பும் வகையில் குடும்ப கதைகளாக இயக்க கூடியவர் விக்ரமன்!.

ஆனால் விக்ரமனிற்கும் தோல்வியை கொடுத்த படங்கள் இருக்கின்றன. 1991 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பெரும்புள்ளி. அவர் இயக்கியதிலேயே கேவலமான திரைப்படம் பெரும்புள்ளிதான் என்று இயக்குனர் விக்ரமனே தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு அவருக்கு அந்த படம் விரக்தியை ஏற்படுத்தியதுடன் பட வாய்ப்புகளையும் குறைத்தது. இந்த நிலையில் குறைந்த பட்ஜெட்டில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கினார் விக்ரமன். அதில் ஒன்று கோகுலம். மற்றொன்று நான் பேச நினைப்பதெல்லாம்.

படம் தோல்வியடைந்ததை அடுத்து பிறகு எடுக்கும் படம் அனைத்தும் கண்டிப்பாக வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று இந்த இரண்டு திரைப்படத்திலும் அதிக கவனம் செலுத்தினார். இதற்கு மேல் துணிச்சலாக இன்னொரு காரியம் செய்தார் விக்ரமன்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் ஒரு மாத இடைவெளியில் வெளியிட்டார். கோகுலம் திரைப்படம் 11 ஜூன் 1993 அன்றும் நான் பேச நினைப்பதெல்லாம் திரைப்படம் 9 ஜூலை 1993 லும் வெளியானது. ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றி பெற்றது.

அந்த படத்துல விஜய் நடிச்சா சரியா இருக்காது!.. சண்டை போட்ட நாகேஷ்!..

சினிமா நடிகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படங்கள் என்று சில திரைப்படங்கள் இருக்கும். அவை அவர்களுக்கு பெரும் முன்னேற்றத்தை பெற்றுக் கொடுத்திருக்கும் அப்படியான சில படங்கள் நடிகர் விஜய்க்கும் உண்டு அதில் முக்கியமான திரைப்படம் பூவே உனக்காக.

இந்தத் திரைப்படத்திற்கு முன்பு வரை அதிகமாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் திரைப்படத்தில்தான் விஜய் நடித்தார். அந்த திரைப்படங்களில் எல்லாம் ஒரு ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்தில்தான் விஜய் நடித்து வந்தார். முக்கியமாக நடிகை சங்கவி அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் அந்த திரைப்படங்கள் குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இதனால் விஜய்க்கும் வரவேற்பு கிடைக்காமலே இருந்தது ஆனால் பூவே உனக்காக திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறப்பான திரைப்படமாகும். அதுதான் விஜய்யின் சினிமா வாழ்க்கையை பெரிதாக மாற்றி அமைத்த திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தின் கதையை எழுதிய பிறகு இதில் முக்கியமான சில பழைய நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று விக்ரமன் நினைத்தார். எனவே நடிகர் நாகேஷிடமும் நம்பியாரிடமும் இது குறித்து பேசினார். அப்பொழுது படத்தின் கதையை கேட்ட நாகேஷ் இந்த கதைப்படி படத்தின் மொத்த கதையும் அந்த கதாநாயகன் கதாபாத்திரத்தின் மேல்தான் இருக்கிறது.

இப்படியான ஒரு வலுவான கதாபாத்திரத்தை விஜய்யால் தாங்க முடியாது அதனால் அவன் இந்த திரைப்படத்திற்கு சரியாக இருக்கமாட்டான் என்று நாகேஷ் கூறினார் .இருந்தாலும் விக்ரமனிற்க்கு விஜய் மீது அதிக நம்பிக்கை இருந்தது.

பிறகு படப்பிடிப்பு நடக்க துவங்கியவுடன் நாகேஷ் விஜய்யின் நடிப்பை பார்த்த பிறகு விஜய்யால் இந்த படத்தில் நடிக்க முடியும் என்று தெரிந்து கொண்டார்.

நான் சினிமாவை விட்டு போக என் மனைவிதான் காரணம்!.. விக்ரமனிற்கு நடந்த மனதை உருக்கும் கதை…

தமிழ் சினிமாவில் குடும்ப திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். இப்போது லோகேஷ் கனகராஜ் உள்ளது போலவே அப்பொழுது தோல்வியே காணாத ஒரு இயக்குனராக இருந்தவர் விக்ரமன்.

அவர் இயக்கும் குடும்ப திரைப்படங்கள் அனைத்தும் பலமுறை பார்த்தாலும் அழுக்காது என்கிற அளவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த திரைப்படங்கள். அவற்றில் வானத்தைப்போல, சூர்யவம்சம் போன்ற திரைப்படங்கள் இப்போது தொலைக்காட்சிகளில் போட்டாலும் பார்ப்பதற்கு ரசிகர் கூட்டம் இருப்பதை பார்க்க முடிகிறது.

ஆனால் அப்படிப்பட்ட விக்ரமன் எதற்கு சினிமாவை விட்டு திடீரெனப் போனார் என்கிற விஷயம் பலருக்கும் தெரியாததாக இருந்தது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் விக்ரமன் கூறும்போது எனது மனைவியுடன் பல வருடம் நட்பாக இருந்த பிறகு அவரை நான் திருமணம் செய்தேன்.

எங்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம் உண்டு. ஆனால் சில காலங்களுக்கு முன்பு அவர் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. அதனை அடுத்து அவரை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.

எனவே மனைவியை விட சினிமா முக்கியமா என்று யோசித்து சினிமாவை விட்டுவிட்டு மனைவிக்காக தற்சமயம் வீட்டிலேயே இருந்து வருகிறேன். என் மனைவியை பார்த்துக் கொள்வதுதான் தற்சமயம் எனது முழு நேர வேலையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அறமே வெல்லும்! – விக்ரமனிற்கு குவியும் ஆதரவுகள்

தமிழில் இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஜனனி, தனலெட்சுமி போன்ற பல போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இன்னும் சிலர் மட்டும் போட்டியில் இருந்து வருகின்றனர். இதில் யார் வெல்ல போவது என்கிற போட்டிதான் தற்சமயம் பெரிதாக சென்றுக்கொண்டுள்ளது.

அசிம் மற்றும் விக்ரமன் இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் துவங்கிய நாள் முதலே அசிம் பலருடன் சண்டை போட்டுக்கொண்டு, இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார். இதனால் அசிம் மீது பலருக்கு வெறுப்பு இருந்து வந்தது. அதே காரணத்தால் அசிமிற்கு ரசிக வட்டாரமும் உருவானது.

அதே போல விக்ரமன் அரசியல் ரீதியான பார்வையில் இருப்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் பேசும் முன் மிகவும் யோசித்து பேசி வந்தார் என கூறப்படுகிறது. தன்னை திட்டுபவர்களிடம் கூட அவர் இழிவான வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

எனவே இருவரில் விக்ரமன்தான் ஜெயிக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர். பிக்பாஸில் மக்கள் போடும் ஓட்டை வைத்துதான் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுகின்றனர். எனவே அறம் வெல்லும் என்கிற ஹேஷ் டேக்கை விக்ரமனிற்காக ட்ரெண்ட் செய்து வருகின்றனர் மக்கள்.