Tag Archives: விஜய் சேதுபதி

வன்முறைக்கு ஆதரவான திரைப்படமா டி.எஸ்.பி? – ட்ரைலரால் கிளம்பிய சர்ச்சை.!

இந்திய அளவில் காவல் வன்முறை என்பது மாதந்தோறும் நடந்து வருகிறது. லாக்கப் இறப்புகள் என பல வகையான காவலர் அத்துமீறல்களை அனுதினமும் பார்த்து வருகிறோம். விசாரணை திரைப்படம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்ட்டாக இருந்து வரும்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து பொன்ராம் இயக்கிய டி.எஸ். பி திரைப்படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியானது. படத்தின் ட்ரைலர் மிகவும் சுமார் ரகத்தில் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். வழக்கமான போலீஸ் கதைகளத்தை கொண்டே விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சேதுபதி என்னும் படத்தில் போலீஸாக நடித்துள்ளார்.

எனவே இந்த படத்தின் தன்னை எப்படி வித்தியாசப்படுத்தி காட்டிக்கொள்ள போகிறார் என்கிற கேள்வியும் உள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் காவலர்கள் அத்திமீறுவதையும், பொதுமக்களை அடிப்பதையும் ஒரு கெத்தாக காட்டுவதை நாம் பார்க்க முடியும்.

இது தொடர்ந்து காவலர்களை வன்முறைக்கு ஊக்குவிக்கிறதோ? என்கிற கருத்து பலரிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதே மாதிரி ஒரு படமாகவே வந்திருக்கும் டி.எஸ்.பி படமும் அந்த படங்கள் ரகத்தில்தான் இருக்குமோ? என்கிற சந்தேகம் ஒரு சாராருக்கு வந்திருக்கிறது.

ஆனால் அதே சமயம் பலருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் பிடித்துள்ளது. விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி! – கூட்டணியால் வாய்ப்பிழந்த இயக்குனர்.

தமிழில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து இயக்குனர்களிடமும் கமிட் ஆகி வருகிறார் கமல். திடீரென சினிமா உலகில் தடாலடியாக இறங்கிவிட்டாரோ என தோன்றும் அளவிற்கு தயாராகி வருகிறார் கமல்.

அரசியலுக்கு சென்ற காரணத்தால் கமல் வெகுகாலமாக தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தார். ஆனால் விக்ரம் திரைப்படம் அந்த நிலையை மாற்றி போட்டது. விக்ரம் படம் கமலுக்கு நல்ல ஹிட் கொடுத்தது. அதையடுத்து திரும்பவும் தமிழில் வரிசையாக படம் நடிகக் உள்ளார் கமல்.

ஏற்கனவே வெற்றிமாறன், பா.ரஞ்சித், மணிரத்னம் என பல இயக்குனர்களிடம் பேசி வைத்திருந்தார் கமல். அந்த வகையில் அடுத்து மணிரத்னத்தோடு இவர் படம் இயக்க போவதாக தகவல்கள் இருந்தன. இந்நிலையில் அடுத்து இவர் இயக்குனர் ஹெச். வினோத் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளாராம். ஹெச். வினோத் தற்சமயம் துணிவு படத்தை இயக்கி வருகிறார். துணிவு படத்திற்கு பிறகு இவர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருந்தார். ஆனால் துணிவு படத்தின் வேலைகள் முடியாத காரணத்தால், விஜய் சேதுபதி அந்த கால்ஷீட்டை இயக்குனர் ஆறுமுக குமாருக்கு அளித்திருந்தார்.

இப்போது ஹெச்.வினோத் படத்தில் கமல் நடிப்பதால் அதில் நடிப்பதற்காக ஆறுமுக குமாருக்கு கொடுத்த கால்ஷீட்டை தள்ளிப்போட்டார் விஜய் சேதுபதி என கூறப்படுகிறது.

தமிழில் மம்முட்டி, விஜய் சேதுபதி கூட்டணியில் படம்.! – இயக்குனர் யார் தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு ஐக்கானிக் நடிகராக இருக்கிறார். வில்லனாக நடித்தாலும், ஹீரோவாக நடித்தாலும் அவரை மக்கள் ரசிக்கும் அளவில் படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார். 

அதே போல மலையாளத்தில் ஒரு சிறந்த நடிகராக நடிகர் மம்முட்டி இருக்கிறார். ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்தவர் மம்முட்டி. மேலும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர், இவர் நடித்த அம்பேத்கர் திரைப்படம் இவரது சிறப்பான நடிப்பிற்கு ஒரு உதாரணமாகும்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அது எப்படிப்பட்ட காம்போவாக இருக்கும்? அப்படி ஒரு படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தை தமிழில் கடைசி விவசாயி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்க உள்ளார்.

கடைசி விவசாயி ஒரு உலக தரம் வாய்ந்த படமாக அமைந்ததால் இவருக்கும் கூட தமிழ் சினிமாவில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஒரு நல்ல படமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்புக்கு ரெஸ்ட்.. இசைதான் பெஸ்ட்! – இசையமைப்பாளராகும் விஜய் சேதுபதி!?

பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி இசையமைப்பாளராக பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சூது கவ்வும், சேதுபதி, கடைசி விவசாயி என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் பாரபட்சமின்றி பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இவர் வில்லனாக நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களும் ஹிட் அடித்தன. இதுதவிர சின்ன பட்ஜெட்டில் கலையம்சம் பொருந்திய படங்களையும் தயாரிக்கிறார். ஹீரோ, வில்லன், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட விஜய் சேதுபதி தற்போது இசை பக்கம் தனது ஆர்வத்தை திருப்பியுள்ளாராம்.

இசை மீது முன்பிருந்தே அவருக்கு ஆர்வம் இருந்தாலும் சமீப காலமாக அதை முறையாக கற்க தொடங்கியிருக்கிறாராம். சேதுபதி படத்திற்கு இசையமைத்த நிவாஸ் கே.பிரசன்னாவிடம் ஓய்வு நேரங்களில் இசை கற்று வருகிறாராம் விஜய் சேதுபதி. எதிர்காலத்தில் ஒரு இசையமைப்பாளராகவும் தனது தனித்துவத்தை அவர் வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அடுத்த விஜய் சேதுபதி படம் சீக்கிரமே வருது – அறிவித்த தயாரிப்பாளர்

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாய் நடிப்பதை விடவும் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஆனால் முன்பெல்லாம் வருடத்திற்கு அதிக படங்கள் கொடுத்து வந்த விஜய் சேதுபதி இப்போது அந்த அளவிற்கு திரைப்படங்கள் கொடுப்பதில்லை.

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் அடுத்த படம் இடம் பொருள் ஏவல், இந்த படத்தில் இவருடன் விஷ்ணு விஷாலும் நடிக்கிறார். இந்த படத்தை திருப்பதி ப்ரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்சமயம் திரைப்படம் குறித்த தகவலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது 

”அன்புடையீர் வணக்கம்.

எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் மதிப்பும் மரியாதைக்குரிய அன்பு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும் திபாவளி வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறோம்.

இயக்குனர் திரு N.லிங்குசாமி வழங்க திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு சிறுராமசாமி அவர்களின் இயக்கத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கதையில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தினை தயாரித்து இருக்கிறோம்.

இப்படத்தில் மக்கள் செல்வன் திரு விஜய் சேதுபதி அவர்களும், நம்பிக்கை நாயகன் திரு விஷ்ணு விஷால் அவர்களும், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா மற்றும் வடிவுக்கரசி நடித்திருக்கின்றனர். அவர்களும் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களின் பாடல்களுக்கு முதல் முறையாக திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

இடம் பொருள் ஏவல்” திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகையால் இப்படத்தை மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”

எனவே விரைவில் நாம் விஜய் சேதுபதி திரைப்படத்தை எதிர்பார்க்கலாம் என நம்பப்படுகிறது.

படம் ரிலீஸ் பண்றேன்னு அதிகமா அடி வாங்கிட்டு இருக்கேன் – வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தற்சமயம் நட்சத்திரங்கள் பலரும் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். படம் தயாரிக்கும்போது திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஏனெனில் ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் அது ஒட்டு மொத்தமாக தயாரிப்பாளர்களை பாதிக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதியும் கூட பல படங்களை தயாரித்து வருகிறார். தற்சமயம் மாமனிதன் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி “நல்ல கதைகளை பார்க்கும்போது அவற்றை தயாரிக்க ஆவலாக உள்ளது. ஆனால் அப்படியான சில படங்கள் பெரிதான வசூலை தராத போது அது என்னை அதிகமாக பாதிக்கிறது. ஆனால அதே சமயம் அந்த படங்கள் ஓட வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இருக்கிறது” என கூறியுள்ளார்.

பொதுவாக நடிக்கும் படத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி என்றாலும், தயாரிப்புக்காக அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவருக்கு பல சமயங்களில் எதிர்ப்பார்த்த வரவேற்பை அளிப்பதில்லை என சினி வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

விக்ரம் படத்துல விஜய் சேதுபதிக்கு ஏன் தங்க பல் இருந்துச்சி தெரியுமா- எல்லாத்தையும் விவரமா பண்ணுன லோகேஷ்

விக்ரம் திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் நல்ல வசூலை கண்டு வருகிறது. விக்ரம் திரைப்படமானது ஒரு ஆரம்பம் மட்டுமே அடுத்து இதை வைத்து கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய மூன்று படங்கள் வர உள்ளன என கூறப்படுகிறது. இதற்கு இடையே விஜய்யை வைத்து ஒரு படத்தையும் இயக்குகிறார் லோகேஷ்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார் என கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த படத்தில் அவர் ஒரு போதை பொருளை அதிகமாக பயன்படுத்தும் காட்சி வரும். க்ருஸ்டல் மெத் என அழைக்கப்படும் இந்த போதை பொருள் உடலுக்கு அதிகமான சுறு சுறுப்பை அளிக்க கூடியதாம். அதே சமயம் நமது மூளை மற்றும் நரம்பியல் பகுதிகளில் வெகுவான பாதிப்பை ஏற்படுத்துமாம். 

மேலும் அதை வெறும் பற்களில் கடிக்கும்போது பற் சிதைவை ஏற்படுத்துமாம். எனவே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பற் சிதைவை தடுக்கவே இரண்டு பற்களை மட்டும் தங்கத்தில் போட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இவ்வளவு விஷயங்களை லோகேஷ் நுண்ணியமாக ஆராய்ந்துள்ளார் என பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

மூணு வருஷத்துக்கு நடிக்கிறதா இல்லை – குழப்பமான கட்டத்தில் இருக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி என கூறினால் அவர் ஹீரோவாக நடித்த படங்களை காட்டிலும் வில்லனாக நடித்த படங்களே மக்கள் கண் முன் வந்து செல்கிறது. ஏனெனில் ஹீரோ கதாபாத்திரத்தை விடவும் வில்லன் கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்வதாக கூறப்படுகிறது.

நடிப்பாக இப்போது வெகுவாக பேசப்படும் ஒரு நாயகராக விஜய் சேதுபதி இருக்கிறார். தற்சமயம் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கூட சந்தனம் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரம் தனியாக பேசப்படும் அளவிற்கு அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

இதனால் தொடர்ந்து அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் விஜய் சேதுபதி. இப்படியே போனால் இடைவெளியே இல்லாமல் நடிக்க வேண்டிய நிலை அவருக்கு இருக்கிறதாம்.

எனவே யாராவது புது கதையை எடுத்துக்கொண்டு வந்தால் அடுத்த மூன்று வருடத்திற்கு காத்திருக்க தயாரா? என கேட்கிறாராம். ஏனெனில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு அவர் படங்களில் கமிட் ஆகி விட்டாராம். அதே சமயம் நல்ல கதைகள் வரும்போது அவற்றை விடவும் மனமில்லாத காரணத்தால் குழப்பமான மனநிலையில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி.