Tag Archives: விஷ்ணு ப்ரியா

சில்க் ஸ்மித்தாவின் கல்லறை எங்கே!.. விலகாத மர்மம்!. மனம் வருந்தும் விஷ்ணு ப்ரியா.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடிகர்கள் பிரபலமாக இருந்தாலும் அதில் சிலர் கடைசி காலங்களில் திடீரென காணாமல் போயிருக்கின்றனர். உதாரணமாக நடிகை சாவித்திரி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தார்.

நடிகர்களில் சிறந்த நடிகராக எப்படி சிவாஜி இருந்தாரோ அதேபோல நடிகைகளில் சிறந்தவராக நடிகை சாவித்திரி இருந்தார். ஆனால் அவரது இறுதி காலகட்டங்கள் மிகவும் மோசமாக இருந்தன. அதேபோல சந்திரபாபுவிற்கும் மோசமான இறுதி காலகட்டமே அமைந்தது.

அந்த வரிசையில் சில்க் ஸ்மிதாவும் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வந்து சில காலங்களிலேயே பெரும் வரவேற்பை பெற்று அதிகமான பட வாய்ப்புகள் பெற்று நடித்தவர் சில்க். பட்டி தொட்டி எங்கும் தமிழகத்தில் அவரது பெயரை அனைவருக்கும் தெரியும்.

அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தவர் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது உறவுக்கார பெண்ணான விஷ்ணு பிரியா அப்போது வெளியூரில் படித்துக் கொண்டிருந்தார். அவர் தற்சமயம் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார். இவர் சென்னைக்கு திரும்ப வந்த பொழுது சில்க் ஸ்மிதாவின் கல்லறையை தேடி சென்னை முழுக்க அலைந்துள்ளார்.

அப்பொழுது பலரிடம் கேட்ட பொழுது ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு பின்புறம் உள்ள சுடுகாட்டில் அவர் புதைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. சரி என்று அவர் ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு போய் தேடிய பொழுது அங்கு அப்படி ஏதும் கல்லறைகள் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

அதன் பிறகு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் தெரிந்தவர்களிடம் விசாரித்த போது உண்மையிலேயே பின்னாடி கல்லறைகள் உள்ளன என தெரிந்தது. அங்கு சென்ற பொழுது அங்கு நிறைய கல்லறைகள் இருந்தன. அப்போது அங்கு வெகு வருடங்களாக வேலை பார்த்து வந்த ஒருவரிடம் சில்க் ஸ்மிதாவின் கல்லறை எது என்று கேட்டுள்ளார் விஷ்ணு பிரியா.

அதற்கு பதில் அளித்த அவர் ஒரு நடிகரின் கல்லறைகாட்டி இதற்கு அடியில் தான் சில்க் ஸ்மிதாவின் உடல் உள்ளது என கூறியுள்ளார். என்ன இப்படி சொல்கிறீர்கள் என அதிர்ச்சியாக விஷ்ணுபிரியா கேட்க ஆமாம் சில்க் ஸ்மிதாவிற்கு தனியாக கல்லறை எதுவும் எழுப்பவில்லை.

அதனால் அவரை புதைத்த இடத்தின் மேலேயே இன்னொருவரை புதைத்து அங்கு கல்லறை எழுப்பி விட்டார்கள் என்று கூறினார். எனவே இறுதி வரை என்னால் சில்க் ஸ்மிதாவின் கல்லறையை கண்டுபிடிக்கவே முடியவில்லை என மனம் வருந்தி கூறியுள்ளார் விஷ்ணு பிரியா.