Tag Archives: சில்க் ஸ்மித்தா

தமிழ்நாட்டின் ராணி நடிகை.. சில்க் ஸ்மித்தா பற்றி வெளிவரும் திரைப்படம்.. வெளியான டீசர்.!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக ஒரு காலகட்டத்தில் இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து அவருக்கான ரசிக பட்டாளம் என்பதே அதிகமாக இருந்து வந்தது.

அப்போதைய சமயங்களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட இடம் இருந்து வந்தது. அதில் நிறைய நடிகைகள் அவர்களுக்கு என்று தனி இடத்தை பிடித்தனர்.

அந்த வரிசையில் சில்க் ஸ்மிதா முக்கியமானவராக இருந்தார். தொடர்ந்து சில்க் ஸ்மிதா நடிப்பதாலேயே அவரது திரைப்படங்களை நிறைய பேர் பார்க்க துவங்கினார்கள்.

சில்க் ஸ்மித்தா படம்:

silk smitha

அதனால் படங்களில் ஒரு பாடலாவது சில்க் ஸ்மிதாவிற்கு வைக்கப்பட்டது ஆனால் அவர் வாழ்ந்த காலத்தை விடவும் சில்க் ஸ்மிதா இறந்த பிறகு தான் அவரைக் குறித்து நிறைய மக்கள் மத்தியில் பேச்சுக்கள் வந்தன.

பிறகு அவருடைய வாழ்க்கை கதையை படமாக்க துவங்கினர் அந்த வகையில் ஏற்கனவே ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்கிற ஒரு திரைப்படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது.

ஆனால் அவரது வாழ்க்கை குறித்து அவ்வளவாக தரவுகள் எதுவும் அந்த திரைப்படத்தில் பார்க்க முடியவில்லை. சில்க் ஸ்மித்தா குறித்து வந்த வதந்திகளை மட்டுமே கொண்டு அந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதே கதையை இப்பொழுது தமிழில் திரைப்படமாக்க முடிவு செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு சில்க் ஸ்மித்தா – குயின் ஆஃப் சவுத் என பெயரிடப்பட்டுள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்திரிகா ரவிதான் இந்த படத்தில் நடித்திருந்தார்.

மேக்கப் மேன் கார் ட்ரைவர்னு எல்லாம் பார்க்க மாட்டார்!.. சில்க் ஸ்மித்தா பற்றி பேசிய இயக்குனர்..!

1980களில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதாவாகதான் இருக்க முடியும். பொதுவாக கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு இவ்வளவு வெளிப்படையாக ரசிக பட்டாளம் இருந்ததா என்பது சந்தேகம்தான்.

ஆனால் சில்க் ஸ்மிதாவிற்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் இருந்தது அவருக்காகவே திரைப்படத்தை பார்ப்பதற்கு வந்த கூட்டமும் அப்பொழுது உண்டு. கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களுடன் தொடர்ந்து நடித்த ஒரு கவர்ச்சி நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதாவாகதான் இருக்கும்.

சில்க் ஸ்மிதாவை பொருத்தவரை அவர் திரைப்படங்களில் கவர்ச்சியான ஒரு கதாபாத்திரமாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அவரைப் போன்ற ஒரு நல்ல பெண்ணை பார்க்க முடியாது என்று கூறுகின்றனர் அவருடன் பழகியவர்கள்.

ரம்யா கிருஷ்ணன் கணவர்:

அந்த வகையில் இயக்குனரும் ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணா வம்சி சில்க் ஸ்மிதா குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவில் இயக்குனர் ஆவதற்காக கடினமாக நான் உழைத்துக் கொண்டிருந்த சமயம்.

அப்பொழுது சினிமாவில் எனக்கு எந்த வேலை கொடுத்தாலும் அதை நான் செய்வதற்கு ஆயத்தமாக இருந்தேன். இந்த நிலையில் இயக்குனர் வரப்பிரசாத் ராவிடம் என்னை அறிமுகப்படுத்த ஒருவர் அழைத்துச் சென்றார்.

அந்த இயக்குனரின் திரைப்படத்தில்தான் அப்பொழுது சில்க் நடித்து கொண்டிருந்தார். அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் நான் வேலை பார்ப்பதை பார்த்து சில்க் ஸ்மிதா என்னை பாராட்டினார். அதற்குப் பிறகு சில்க் ஸ்மிதாவும் சில திரைப்படங்களை தயாரித்தார்.

சில்க்குடன் பணிப்புரிந்த அனுபவம்:

அப்பொழுது அந்த திரைப்படங்களிலும் நான் பணிபுரிந்து இருக்கிறேன் அதற்கு பிறகு எனக்கு இயக்குனராகவாய்ப்பு கிடைத்தது. நான் திரைப்படங்கள் இயக்குவதற்கு சென்றுவிட்டேன். பிறகு பல வருடங்கள் கழித்து ஒருமுறை நான் ஸ்டூடியோவில் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு கார் எனக்கு முன்பு வேகமாக வந்து நின்றது.

அதிலிருந்து சில்க் ஸ்மிதா கீழே இறங்கினார். என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். அதை கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது நீங்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பதுதான் மேடம் ஆச்சரியம் என்று கூறினேன்.

பிறகு உங்களது திரைப்படம் நன்றாக இருந்தது அதை நான் பார்த்தேன் என்று கூறி என்னை வாழ்த்திவிட்டு சென்றார். சில்க் ஸ்மிதாவை பொருத்தவரை அவருடன் வேலை பார்க்கும் கார் டிரைவராக இருந்தாலும் சரி மேக் அப் மேனாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தக்கூடியவர்.

ஏனெனில் ஏழையாக இருந்து சினிமாவிற்கு வந்தவர் சில்க் ஸ்மிதா என்று கூறுகிறார் இயக்குனர் கிருஷ்ணா வம்சி.

கமலுடன் நடனமாடியப்போது கண்ணீர் விட்ட சில்க் ஸ்மிதா!.. சினிமாவே வேண்டாம் என முடிவெடுக்க காரணம் என்ன?

Silk Smitha: கவர்ச்சி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் பெரிதாக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சில்க் ஸ்மித்தா. அப்போதெல்லாம் சினிமாவில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. கவர்ச்சி காட்சிகளுக்காகவே திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம் அப்போது இருந்தது.

அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில்க் ஸ்மித்தாவின் நடிப்பு இருந்ததால் பலரும் அவரது திரைப்படங்களுக்கு விரும்பி செல்ல துவங்கினர். ஆனால் சில்க் ஸ்மித்தாவிற்கு ஒரு நடிகை ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது.

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு தேடி வந்த சில்க் ஸ்மித்தாவிற்கு முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என நினைத்த சில்க் ஸ்மித்தா வண்டி சக்கரம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு அவர் கவர்ச்சி நடிகையாக அவர் நடிக்க துவங்கினார். பிறகு எவ்வளவு முறை அவர் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டாலும் மீண்டும் மீண்டும் கவர்ச்சியாக நடிக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் பாலு மகேந்திரா மூன்றாம் பிறை திரைப்படத்தை இயக்கினார்.

அந்த படத்தின் கதைப்படி கதாநாயகி மனநல பாதிக்கப்பட்டவர் என்பதால் ஸ்ரீதேவியை வைத்து கவர்ச்சி காட்சிகள் வைப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. எனவே அதற்காகவே அந்த படத்தில் சில்க் ஸ்மித்தாவை நடிக்க வைத்து அவருக்கு பொன்மேனி உருகுது என்கிற கவர்ச்சி பாடலையும் வைத்தார்.

அந்த பாடலின் போது உடலில் குறைவான அளவில் உடையணிந்து காலில் செருப்பு கூட இல்லாமல் ஆடுவார் சில்க் ஸ்மித்தா. அதுக்குறித்து ஒருமுறை கூறும்போது அந்த படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அந்த குளிரில் இவ்வளவு குறைவான ஆடையை போட்டு ஆடுவது கடினமாக இருந்தது. இதனால் நான் அன்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

சினிமாவை விட்டே போய்விடலாம் என்றெல்லாம் தோன்றியது. ஆனால் அந்த பாடலை திரையரங்கில் பார்த்தப்போது வெகு சிறப்பாக வந்திருந்தது என கூறுகிறார் சில்க் ஸ்மித்தா!.

சின்ன நடிகருக்கு பெரும் கதாபாத்திரம் கொடுத்த நடிகை!.. இந்த பொண்ணையா தப்பா பேசுறாங்க!..

Tamil Comedy Actor Omakuchi Narasimman : தன் மெலிந்த உடலை வைத்து காமெடி காட்சிகள் தான் எடுப்பார்கள் என அவருக்குத் தெரியும். அவரை நிற்க வைத்து டேபிள் ஃபேனை திருப்பி விட்டு காற்றில் பறந்து விடுவது போலக்கூட காட்சி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு நீதிபதி வேடத்தை தர…

ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்கு வரும் முன் நாடகத்தில் நடித்தார். ‘நாரதரும் நான்கு திருடர்களும்’ என்கிற நாடகத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் வேடம் அவருக்கு. ஜப்பானிய கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை வைத்து எழுத நரசிம்மனோ அதை ‘ஓமக்குச்சி’ ஆக்கி விட்டார்.

குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் ஓமக்குச்சி விசுவை பார்த்து சாப்பிட்டாச்சான்னு கேட்பார். சாப்பிட்டுட்டு சாப்பிடலைன்னு சொன்னா சாப்பாடு வாங்கித்தரப்போறியா..இல்லை…ன்னு விசு ஒரு குழப்பல் போடுவார். ஓமக்குச்சி தலைசுற்றி ஓடிவிடுவார்.

அடுத்த காட்சியில் விசு ‘சாப்பிட்டியா’ன்னு கேட்டதும் “பதிலுக்கு சாப்ட்டியான்னு கேட்கமாட்டேனே”ன்னு சொல்லிட்டு “பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை செய்யற டாக்டருக்கு உடம்பு சரியில்லை”ன்னு சொல்லி மாட்டிக்குவார். உடனே விசு ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார…” ஆரம்பிச்சு தொணதொணப்பார். ஓமக்குச்சி தலையை பிய்த்துக்கொண்டு ஓடி விடுவார்.

சூரியன் படத்தில் கவுண்டமணி புதைசேற்றில் மாட்டிக்கொள்வார். கவுண்டமணி விழுந்ததும் ஜாங்குசக்கு ஜஜக்குஜக்குன்னு ஓமக்குச்சி பாடிட்டு போவார்…செம…

பல படங்களில் ஓமக்குச்சியின் காமெடி வயிறு வலிக்க செய்யும். கவுண்டமணி ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருப்பார். ஓமக்குச்சி அங்கே வந்து “எச்சூஸ்மி…ஸ்கோர் என்ன?…ரேடியா இல்லைல்லா….கன்ட்ரி வில்லேஜ்…”ன்னு அவர் பேசுவதும் கவுண்டமணி தலைமுடியை பிடித்து அடிப்பதும்….

இப்படி காமெடியாகவே நடித்த ஓமக்குச்சி கடைசியாக நடித்த படம் தலைநகரம். அதில் வடிவேலுவை ஹீரோ மாதிரி போஸ் கொடுக்கச் சொல்வார் மயில்சாமி. அப்போது வடிவேலு எல்லாவற்றையும் உடைப்பார். அருகே நிற்கும் ஓமக்குச்சியை தலைக்கு மேலே சுற்றி கீழே போடுவார். அதில் ஓமக்குச்சி தலை சாய்ந்தது விடும்..

நன்றாக ரசிக்கப்பட்ட அந்தக் காமெடி தான் கடைசி…அதோடு உடல்நலமில்லாமல் இரண்டு வருடத்தில் இறந்து போனார் நரசிம்மன். நரசிம்மன் கவுண்டமணி அட்டகாசமான காம்பினேஷன் என்றாலும் அவருக்கு அழகான அறிவுப்பூர்வமான பாத்திரமாக நீதிபதி பாத்திரம் தெலுங்கில் கிடைத்தது. சில காட்சிகள் தான். ஆனால் ஓமக்குச்சிக்கு அது பெரிய பாத்திரம் தானே.

பிரேமின்ச்சி சூடு என்கிற அந்தத் தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளரும் இதேப்போல நல்ல பாத்திரங்களுக்கு ஏங்கியவர் தான். தனக்கு கிடைக்காததை தானே உருவாக்கலாம் என இந்தப்படத்தை தயாரித்து நடித்தார். ராஜேந்திரபிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், போன்றோருடன் நாயகியாக நடித்த அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நடிகை. ஆம்….சில்க் ஸ்மிதா தான் அவர்.

சில்க் ஸ்மித்தாவின் கல்லறை எங்கே!.. விலகாத மர்மம்!. மனம் வருந்தும் விஷ்ணு ப்ரியா.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடிகர்கள் பிரபலமாக இருந்தாலும் அதில் சிலர் கடைசி காலங்களில் திடீரென காணாமல் போயிருக்கின்றனர். உதாரணமாக நடிகை சாவித்திரி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தார்.

நடிகர்களில் சிறந்த நடிகராக எப்படி சிவாஜி இருந்தாரோ அதேபோல நடிகைகளில் சிறந்தவராக நடிகை சாவித்திரி இருந்தார். ஆனால் அவரது இறுதி காலகட்டங்கள் மிகவும் மோசமாக இருந்தன. அதேபோல சந்திரபாபுவிற்கும் மோசமான இறுதி காலகட்டமே அமைந்தது.

அந்த வரிசையில் சில்க் ஸ்மிதாவும் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வந்து சில காலங்களிலேயே பெரும் வரவேற்பை பெற்று அதிகமான பட வாய்ப்புகள் பெற்று நடித்தவர் சில்க். பட்டி தொட்டி எங்கும் தமிழகத்தில் அவரது பெயரை அனைவருக்கும் தெரியும்.

அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தவர் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது உறவுக்கார பெண்ணான விஷ்ணு பிரியா அப்போது வெளியூரில் படித்துக் கொண்டிருந்தார். அவர் தற்சமயம் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார். இவர் சென்னைக்கு திரும்ப வந்த பொழுது சில்க் ஸ்மிதாவின் கல்லறையை தேடி சென்னை முழுக்க அலைந்துள்ளார்.

அப்பொழுது பலரிடம் கேட்ட பொழுது ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு பின்புறம் உள்ள சுடுகாட்டில் அவர் புதைக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. சரி என்று அவர் ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு போய் தேடிய பொழுது அங்கு அப்படி ஏதும் கல்லறைகள் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

அதன் பிறகு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் தெரிந்தவர்களிடம் விசாரித்த போது உண்மையிலேயே பின்னாடி கல்லறைகள் உள்ளன என தெரிந்தது. அங்கு சென்ற பொழுது அங்கு நிறைய கல்லறைகள் இருந்தன. அப்போது அங்கு வெகு வருடங்களாக வேலை பார்த்து வந்த ஒருவரிடம் சில்க் ஸ்மிதாவின் கல்லறை எது என்று கேட்டுள்ளார் விஷ்ணு பிரியா.

அதற்கு பதில் அளித்த அவர் ஒரு நடிகரின் கல்லறைகாட்டி இதற்கு அடியில் தான் சில்க் ஸ்மிதாவின் உடல் உள்ளது என கூறியுள்ளார். என்ன இப்படி சொல்கிறீர்கள் என அதிர்ச்சியாக விஷ்ணுபிரியா கேட்க ஆமாம் சில்க் ஸ்மிதாவிற்கு தனியாக கல்லறை எதுவும் எழுப்பவில்லை.

அதனால் அவரை புதைத்த இடத்தின் மேலேயே இன்னொருவரை புதைத்து அங்கு கல்லறை எழுப்பி விட்டார்கள் என்று கூறினார். எனவே இறுதி வரை என்னால் சில்க் ஸ்மிதாவின் கல்லறையை கண்டுபிடிக்கவே முடியவில்லை என மனம் வருந்தி கூறியுள்ளார் விஷ்ணு பிரியா.