Tag Archives: actor jeeva

மர்ம கதை இயக்குனரோடு கூட்டணி.. ரிஸ்க் எடுக்கும் ஜீவா..

ஒரு காலகட்டத்தில் வளர்ச்சி பெற்ற நடிகராக இருந்து வந்தாலும் கூட தற்சமயம் தொடர்ந்து பெரிதாக வரவேற்பு இல்லாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ஜீவா.

ஜீவா சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்றுத் தரவில்லை. ஆனால் அவர் நடித்த பிளாக் என்கிற திரைப்படம் மட்டும் பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது.

ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 10 கோடிக்கு ஓடி வசூல் சாதனை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து அடுத்து ஜீவா மீண்டும் பிளாக் திரைப்படத்தை இயக்கிய கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

பிளாக் திரைப்படத்தை பொறுத்த வரை இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தின் கதையமைப்பு நிறைய பேருக்கு புரியவில்லை என்று கூறி இருந்தனர்.

எனவே அடுத்து கேஜி பாலசுப்ரமணியம் இயக்கம் திரைப்படத்திலாவது மக்களுக்கு புரியும் வகையில் கதையை கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யவம்சம் 2 வில் களம் இறங்கும் ஜீவா.. இன்னும் யாரெல்லாம் நடிக்கிறாங்க..!

1997 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் சூரியவம்சம்.

இந்த திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தனர். இந்த திரைப்படம் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான படமாக இருந்து வருகிறது.

சரத்குமார் மற்றும் தேவயானி கூட்டணியில் அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்கள் வந்தன. சமீபத்தில் வந்த 3 BHK திரைப்படத்தில் கூட சரத்குமாரும் தேவயாணியும் சேர்ந்து நடித்திருந்தனர்.

அந்த திரைப்படமும் இப்பொழுது வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து சூரியவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுக்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரத்குமாரின் மகன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கவில்லை. வேறு இயக்குனர் தான் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இந்த படம் குறித்து எதிர்பார்ப்பு இப்பொழுது அதிகரித்து இருக்கிறது.

உனக்கு அறிவு இருக்கா.. பாலியல் விவாகாரம் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி.. கடுப்பான ஜீவா..!

தற்சமயம் தமிழகம் இந்தியா முழுவதுமே பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக கேரளாவில் இருக்கும் பாலியல் சர்ச்சை பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கேரளாவில் பிரபலமான நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதிலிருந்து இந்த பிரச்சனை சூடு பிடிக்க துவங்கியது.

இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு கேரளாவில் இருக்கும் நடிகைகள் பலரும் அச்சம் கொள்ள துவங்கினார்கள் பிறகு இது குறித்த விசாரணை நடத்தப்பட்ட பொழுது கேரளாவில் இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் தான் இதை செய்தார் என்பது வெட்ட வெளிச்சமானது.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் பினராய் விஜயன் ஆணைக்கு இணங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா என்பவரின் தலைமையின் கீழ் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் முக்கிய வேலை என்னவென்றால் கேரளா சினிமாவில் இருக்கும் பிரபலங்களை சந்தித்து அவர்களிடம் பாலியல் தொடர்பாக மலையாளத்தில் நடந்த சீண்டல்கள் குறித்த அனுபவங்களை அறிக்கையாக தயார் செய்ய வேண்டும்.

கேரள விவகாரம்:

அந்த வகையில் சில வருடங்களாக ஹேமா கமிட்டி மறைமுகமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மொத்த அறிக்கையும் தயாராக வைத்துள்ளது ஹேமா கமிட்டி.  இதில் கேரளாவை சேர்ந்த பல பிரபலங்களின் பெயர்கள் அடிபடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பேரீச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மற்ற சினிமாக்களும் இதே போல ஒரு கமிட்டியை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று கூறத் தொடங்கி இருக்கின்றனர். நடிகர் விஷால் கூட தமிழிலும் இப்படி ஒரு கமிட்டியை கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகர் ஜீவாவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது ஜீவா நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று புரியவில்லை என்று திரும்பவும் கேட்டார். பிறகுதான் அவருக்கு பத்திரிகையாளர் கூறுவது என்னவென்று புரிந்தது.

நடிகர் ஜீவா:

அதற்கு பதில் அளித்த ஜீவா சினிமாவும் மோசமாக தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை கேட்ட பொழுது எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஆரம்பத்தில் ஏற்கனவே மீடூ என்கிற ஒரு பிரச்சனை உருவானது.

அதனுடைய இன்னொரு வர்ஷன்தான் இதுவும், எனவே சினிமா முதலில் ஆரோக்கியமானதாக மாற வேண்டும் என்று கூறியிருந்தார் ஜீவா. மேலும் நாம் இந்த விஷயம் தொடர்பாக இப்போது பேச வேண்டாம் நான் வேறு ஒரு விஷயத்துக்காக இங்கு வந்திருக்கிறேன் என்று கூறினார்.

ஆனால் அப்பொழுதும் பத்திரிகையாளர் திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்க அதனால் கோபமான ஜீவா அறிவு இருக்கா என்று கோபத்தில் பத்திரிகையாளர்களை திட்டி விட்டார். இதனால் அங்கு சர்ச்சை நிலவியது அதற்குப் பிறகு ஜீவாவை அழைத்து சென்று இருக்கின்றனர்.