Tag Archives: Actor Ranjith

என்னடா பண்ணீடுவ என்ன? ரஞ்சித்தால் கடுப்பான ரவீந்தர்.. சூடுப்பிடிக்கும் சண்டை.. கவுண்டம்பாளையமான biggboss..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்ததன் மூலமாக மிக எளிமையாக பிக் பாஸ்க்கு வந்தவர் நடிகர் ரஞ்சித்.

நடிகர் ரஞ்சித் வந்த ஆரம்ப நாட்களில் இருந்து மொத்தமாக திரைப்படங்களில் இருந்து மாறுபட்டவராக இருந்தார். பெரும்பாலும் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில்தான் ரஞ்சித் நடித்து வந்தார்.

ஆனால் பிக்பாஸில் அவ்வளவுக்கும் மொத்தமாக மாறிய ஒரு நபராக ரஞ்சித் இருந்து வருகிறார். தொடர்ந்து ரஞ்சித் மிக சாந்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வருவதை பார்க்க முடிந்தது.

 

ரவீந்தர் ரஞ்சித் சண்டை:

ஆனால் இன்று ரஞ்சித்துக்கும் ரவீந்திருக்கும் இடையே பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் இந்த காட்சிகள் வெளியாக இருக்கின்றன.

இது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது உன்னால் என்ன செய்ய முடியுமோ பண்ணிக்க என்று சத்தம் போட துவங்கியிருக்கிறார் ரவீந்தர். இது பிக் பாஸ் காதுக்கு போகும் நிலையில் பிரச்சனை இன்னும் பெருசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி இது குறித்து சனி ஞாயிறு கிழமைகளில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 நிமிசத்துல கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்! ஆபாச படம் பார்த்து கெட்டுபோகும் 2k கிட்ஸ்! ஆதங்கப்பட்ட நடிகர் ரஞ்சித்!

இயக்குனர் கே.எஸ். ராஜ்குமார் இயக்க சிவரஞ்சனி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த  பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். இதைத் தொடர்ந்து மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், சேரனின் பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, தேசிய கீதம் மற்றும் புதுமை பித்தன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் இயக்கிய பீஷ்மர் படத்திற்கு பிறகு திரை உலகில் நடமாட்டமே இல்லாமல் இருந்த நடிகர் ரஞ்சித் தற்போது, குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தை இயக்கி, அதில் அவரே  நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், திருப்பூரில் நடைபெற்ற கிராமிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர், அதனை பார்த்து ரசித்தது மட்டுமில்லாமல், 2k கிட்சை குறிவைத்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். 

அதாவது கிராமிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் குழந்தைகளை பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இன்றைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க கண்டதை பகிர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். 

மேலும், ஆபாச படமா பாத்து இப்போ இருக்க பசங்க  கெட்டுப்போறாங்க, அவர்களால் 10 நிமிஷம் கூட போன் இல்லாமல் இருக்க முடியாது என்றும் கையில் போன் இல்லை என்றால் அவர்களின் கை, கால் நடுங்க ஆரம்பிச்சிடும்னும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கேட்டார்கள் என்பதற்காகவே பெற்றோர் கஷ்டப்பட்டு செல் போனை வாங்கித் தருவதாகவும் ஆனால், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும்  நடிகர் ரஞ்சித் அந்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் கோயம்புத்தூர் பாசை பேசும் நடிகர் மீது 2k கிட்ஸ் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதனால் காண்டான 2k கிட்ஸ் கமென்ட்களில் கதறி வருகின்றனர்.

ஒரு பெண்ணுக்கு நாகரிகம் என்பது முக்கியம்!.. த்ரிஷா விஷயம் குறித்து பதிலளித்த நடிகர் ரஞ்சித்!..

Actor Ranjith: சினிமா நடிகர்களில் தற்சமயம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசும் நடிகர்களில் நடிகர் ரஞ்சித்தும் இணைந்திருக்கிறார். நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் பிரபலமாக நடித்து வந்த நடிகர் ஆவார்.

அவர் சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தற்சமயம் இவர் ஒரு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொழுது இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவரிடம் நடிகை திரிஷா விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ரஞ்சித் திரிஷா விவகாரத்தை பொருத்தவரை அந்த அரசியல்வாதிகளிடமும் திரிஷா விடமும் எனக்கு நெருங்கிய பழக்கம் கிடையாது. ஆனால் யாராக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு நாகரிகம், மரியாதை என்பது முக்கியம். அதை சீண்டும் வகையில் பேசக்கூடாது. அது நடிகையாக இருந்தாலும் எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களை குறித்து அவதூறு பேசுவது என்பது தவறுதான் என்று கூறியிருக்கிறார்.

trisha

பொதுவாகவே மக்கள் மனதில் நடிகைகள் என்றாலே அது குறித்து தவறான கண்ணோட்டம் தான் இருக்கிறது என்று பேசிய ரஞ்சித் தமிழகம் குறித்து பேசும் பொழுது தமிழகத்தில் நூற்றுக்கு 90% மது இருக்கிறது ஒவ்வொரு முறை அரசாங்கம் அமைக்கும் பொழுதும் மதுவை குறைப்போம் என்று கூறிவிட்டு பிறகு கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கின்றனர்.

அதேபோல காசுக்கு ஓட்டை விற்கின்றனர். எனவே மக்களும் திருந்த வேண்டும். எனவே ஒரு விஜய் அல்ல ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது இதுவரை வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதிகள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று யாரும் அது குறித்து கேள்வி கேட்கவில்லை. எனவே மக்கள் மாற வேண்டும் என்று கூறி இருக்கிறார் நடிகர் ரஞ்சித்.