Tag Archives: actress saranya

இதான் சான்ஸ்ன்னு அடி பின்னிட்டாங்க… அம்மா நடிகையிடம் துடைப்ப கட்டையில் அடி வாங்கிய தனுஷ்!..

Dhanush : தமிழில் படத்தின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் சில நடிகர்களில் நடிகர் தனுஷும் முக்கியமானவர். அதிகபட்சம் தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் இளைஞர்களை குறி வைத்து இருக்கும்.

அதிகப்பட்சம் அவர் தற்போதைய தலைமுறைக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் .அதே சமயம் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அது சிறப்பான கதாபாத்திரமாக இருந்தால் அதை நடிக்க தயாராக இருக்கிறார் தனுஷ்.

dhanush

வெற்றிமாறன் கூட ஒரு பேட்டியில் கூறும்போது அசுரன் திரைப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிய பிறகு பல நடிகர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தனுஷ் அந்தக் கதையைக் கேட்ட உடனேயே அதற்கு ஒப்புக்கொண்டார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனுஷிற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான சில திரைப்படங்களில் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும். அது குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

தனுஷிற்கு விழுந்த அடி:

அதில் அவர் கூறும் பொழுது நடிகை சரண்யாதான் அந்த திரைப்படத்தில் தனுஷிற்கு அம்மாவாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் சரண்யா என கூறலாம். ஏனெனில் அவரது இறப்பிற்கு பிறகுதான் படத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்த நிலையில் ஒரு காட்சியில் துடைப்பத்தை வைத்து தனுஷை அடிப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது.

அப்பொழுது சரண்யா எப்படி சார் இதை வைத்து நான் உங்களை அடிப்பது என்று தயங்கி இருக்கிறார். அதற்கு தனுஷ் நடிப்புக்காக தானே நிஜமாகவா அடிக்கப் போகிறீர்கள் என்று கூறி அந்த காட்சியில் அடிக்க வைத்திருக்கிறார். ஆனால் அந்த காட்சி எடுக்கப்பட துவங்கிய உடனே நிஜமாகவே துடைப்பத்தை வைத்து அடித்து இருக்கிறார் சரண்யா.

இதனால் பலமாக அடி விழுந்தது என்று அந்த பேட்டியில் கூறுகிறார் தனுஷ். என்ன மேடம் அடிப்பதற்கே முதலில் தயங்கினீர்கள் இப்பொழுது என்னவென்றால் இப்படி சுளீரென்று அடிக்கிறீர்களே என்று தனுஷ் கேட்ட பொழுது இல்லை தம்பி ஒரே டேக்கில் இந்த காட்சி ஓ.கே ஆக வேண்டும்.

இல்லை என்றால் திரும்பத் திரும்ப உங்களை நான் அடிக்க வேண்டி இருக்கும் இல்லையா? அதனால் தான் காட்சியை சரியாக செய்ய வேண்டும் என்று அப்படி செய்து விட்டேன் என்று எதார்த்தமாக கூறி இருக்கிறார்கள் சரண்யா.

மாசம் 10,000 ரூபாய்தான் எனக்கு சம்பளம்!.. திட்டவட்டமாக கூறியும் காதலனை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகை!..

சினிமா உள்ள வரை அதில் காதல் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. பிரபல நடிகைகளுக்கு சினி துறையில் உள்ள வேறு பிரபலங்களுடன் காதல் ஏற்பட்டு திருமணம் நடப்பது சகஜமான ஒரு விஷயமாகும். ஆனால் பொதுவாக நடிகைகளை பொறுத்த வரை சினிமாவில் சாதிப்பது என்பதை தாண்டி வாழ்க்கையில் செட்டில் ஆவதற்காகவே நடிகை ஆவார்கள்.

உதாரணமாக பார்த்தால் நடிகை ஆன ஒரு சில காலங்களில் பெரும் புள்ளி ஒருவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விடுவார்கள் நடிகைகள். எனவே வாழ்க்கையில் ஒரு பெரும் பிரபலத்தை திருமணம் செய்வதற்கான ஒரு கருவியாக தான் அவர்கள் சினிமாவை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையிலும் சாதாரண நபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கதைகளும் சினிமாவில் நடந்திருக்கின்றன. அப்படியான கதை தான் பொன்வண்ணன் மற்றும் சரண்யாவின் காதல் கதை. பொன்வண்ணன் இது குறித்து ஒரு பேட்டியில் கூறும்பொழுது சரண்யா என்னை காதலித்த பொழுது அவரிடம் எனது பொருளாதார நிலையை முழுமையாக கூறினேன்.

அப்பொழுது எனக்கு கிடைத்த சம்பளம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் நான் அவரிடம் கூறும் பொழுது எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம் எனது ஒரு வருட சம்பளத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளேன். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருக்கிறது அந்த வங்கி கணக்கு புத்தகத்தையும் உன்னிடம் கொடுத்து விடுகிறேன்.

திருமணம் செய்த பிறகு மாதம் என்னால் பத்தாயிரம் ரூபாய் தர முடியும் அதற்குள் உன்னால் குடும்பம் நடத்த முடியும் என்றால் என்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் பொன்வண்ணன். ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சரண்யா அதை ஏற்றுக்கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இயக்குனர் சேரனுக்கு எதிராக சரண்யா பொன்வண்ணன் புகார்!… என்ன ஆச்சு இவருக்கு?…

Saranya and Cheran:தவமாய் தவமிருந்து திரைப்படம் வெளியாக பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படத்தின் இயக்குனர்  மற்றும் கதாநாயகன் சேரன். அந்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் சரண்யா பொன்வண்ணன் தந்தை மற்றும் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சேரன் படங்கள் பெரும்பாலும் குடும்பத்தை மையப்படுத்தியே எடுக்கப்படும். குடும்பம், காதல், நட்பு என்று எல்லாவற்றிற்கும் திரையில் முக்கியத்துவம் கொடுப்பவர் இயக்குனர் சேரன். இவருடைய படங்கள் பார்த்துவிட்டு கண்ணீர் விடாதவர்கள் யாரு இருக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக கதையை படமாக்கக்கூடியவர்.

அந்த வரிசையில் அமைந்தது தான் “தவமாய் தவமிருந்து”. இந்த படம் வெளியாகி ஆண்டுகள் பல கடந்தாலும் தான் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை நிருபர்களுக்கு பகிர்ந்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

படப்பிடிப்பில் இயக்குனர் சேரன் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இது போன்றதொரு படத்தில் இனியும் நடிக்கக் கூடாது என்ற எண்ணம் அப்போது தோன்றியதாக சரண்யா தெரிவித்திருந்தார்.

சரண்யா பொன்வண்ணன் “அம்மா”கதாப்பாத்திரத்தில் மட்டும் அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தாய்மார்கள் மனதை கொள்ளை கொண்டவர் என்றுகூட கூறலாம்.

அம்மா கதாப்பாத்திரமா உடனடியாக சரண்யாவை புக் செய்துவிடலாம் என்று பேசக்கூடிய அளவிற்கு நடிக்கக் கூடியவர்.

அவரையே சேரன் படப்பிடிப்பில் படாதபாடு படுத்திவிட்டார். வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் என்பது போல சீரியசான இயக்குனர்களால் தான் நினைத்தபடி தனது படத்தை எடுத்துமுடிக்க முடியும் என்பது உண்மைதான். அப்படித்தான் சேரனு தன்னுடைய எதிர்பார்ப்பு நடிப்பில் வரும் வரை யாரையும் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார் என்று சரண்யா கூறியிருந்தார்.

அந்த சீன்ல புடிக்காமதான் நடிச்சேன்.. ஆனா நிறைய விருது கிடைச்சது!.. நடிகை சரண்யா வேண்டா வெறுப்பாக நடித்த காட்சி!.

தமிழ் சினிமாவில் அம்மாவாக நடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சரண்யா. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுடன் அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா. அதையும் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய கூடியவர் சரண்யா.

அம்மாக்களிலேயே நகைச்சுவை கதாபாத்திரம், சீரியஸான கதாபாத்திரம் என இரண்டிலுமே இவர் சிறப்பாக நடிப்பார். உதாரணமாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முற்றிலும் சீரியஸான கதாபாத்திரமாக இருப்பார். ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அவ்வளவிற்கு மாற்றமாக நடித்திருப்பார் சரண்யா.

இவர் ஒரு பேட்டியில் எம் மகன் திரைப்படத்தில் நடித்த அவரது அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது எம் மகன் படத்தில் குழாயடியில் உருளும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. பொதுவாகவே இந்த மண் தண்ணீர் போன்றவை எனது உடலில் படுவது எனக்கு பிடிக்காது. எனவே நான் அதில் நடிக்க மாட்டேன் என கூறினேன்.

உடனே அந்த காட்சியில் நடிப்பதற்கு வடிவேலு தயாராக இருந்தார். ஆனால் அந்த காட்சி சரண்யா நடித்தால்தான் நன்றாக இருக்கும் என நினைத்தார் இயக்குனர். எனவே சரண்யாவை அழைத்த திருமுருகன், இந்த காட்சியை வடிவேலு நிமிடத்தில் நடித்துவிடுவார். ஆனால் நீங்கள் நடித்தால்தான் இது நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

சரி என வேண்டா வெறுப்பாக அந்த காட்சியில் நடித்துள்ளார் சரண்யா. ஆனால் அந்த படம்தான் அவருக்கு மாநில விருதை பெற்று தந்தது. இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.