Tag Archives: airtel

போன் காலுக்கு தனி பேக்.. ஆனா இதுக்கு தனி பேமண்ட்.. கஸ்டமர்களுக்கு புது அதிர்ச்சி கொடுத்த சிம் நிறுவனங்கள்..!

சிம் நிறுவனங்கள் என்னதான் புது புது டாரிஃப் ப்ளான்களை அறிவித்தாலும் அவை ட்ராய் எனப்படும் (Telecom Regulatory Authority of India) இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கீழ் கட்டுப்பட்டுதான் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வருடம் வரை கால்களுக்கு மட்டும் என்று தனி ரீச்சார்ச் ப்ளான்களே இருந்து வந்தன. இந்தியாவில் ஆண்ட்ராய்ட் அல்லாத ஃப்யிச்சர் போன் எனப்படும் சாதாரண மொபைல்களை பயன்படுத்தும் பயனர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அவர்களது தேவைக்கு இணையம் இல்லாத ரீச்சார்ச் ப்ளான்களே போதுமானதாக இருக்கிறது. ஆனால் சிம் நிறுவனங்கள் எதுவுமே அவர்களுக்கு ஏற்ற ப்ளான்களை வெளியிடவில்லை. இதனால் கால்களை மட்டும் பேசுவதற்கும் அவர்கள் இணையத்துடன் கூடிய ப்ளான்களை போட வேண்டி இருந்தது.

இந்த நிலையில் ட்ராய் அதிரடியாக ஒரு விதிமுறையை அறிவித்தது. அதன்படி சிம் நிறுவனங்கள் இணையம் அல்லாத அன்லிமிடெட் கால்களை கொண்ட ரீச்சார்ச் திட்டங்களை அமல்ப்படுத்த வேண்டும். அந்த வகையில் அனைத்து சிம் நிறுவனங்களும் தற்சமயம் அப்படியான திட்டங்களை அமல்ப்படுத்தி உள்ளன.

ஆனால் அதற்கு நடுவே பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செயல் ஒன்றை சிம் நிறுவனங்கள் செய்துள்ளன. இதற்கு முன்பு டேட்டாவுக்கு என்று இன்ஸ்டண்ட் ப்ளான்களை சிம் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

அதன்படி 19 ரூபாய்க்கு 2 ஜிபி இணையம் என்கிற சின்ன பேக்குகள் இருந்தன. அவை இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அவற்றிற்கான காலகெடுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு இந்த பேக்குகளை போட்டால் டேட்டா நாம் ஏற்கனவே போட்டிருக்கும் பேக்குகள் தீரும் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என இருந்தது.

அதை இப்போது மாற்றி ஒரு நாள் கால அவகாசத்திற்குள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாற்றியுள்ளன சிம் நிறுவனங்கள். ஆண்ட்ராயிடு மொபைல் பயன்படுத்தினாலும் பெரிதாக டேட்டாவை பயன்படுத்தாத பயனர்கள் இருப்பார்கள். அதே போல வீட்டில் ஃபைபர் இணையம் வைத்திருப்பவர்கள் வெளியில் செல்லும்போது மட்டுமே இணையத்தை பயன்படுத்துவார்கள்.

அவர்கள் எல்லாம் கால் பேசுவதற்கு மட்டும் கார்டு போட்டுக்கொண்டு இணைய பயன்பாட்டுக்கு இந்த குறைந்த விலை டேட்டா பேக்குகளை போட்டு கொள்ளலாம் என நினைப்பார்கள். அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில்தான் சிம் நிறுவனங்கள் இந்த வேலையை பார்த்துள்ளன.

எனவே ஆண்ட்ராயிடு பயனாளர்களுக்கு வேறு வழியே இல்லை. தினசரி இணையத்துடன் கூடிய அன்லிமிடெட் கால்ஸ் பேக்குகளையே அவர்கள் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஃபியூச்சர் மொபைல்களை கொண்ட பயனாளர்கள் மட்டுமே அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட பேக்குகளை பயன்படுத்த வேண்டும் என தெளிவாக இப்படி ஒரு ஏற்பாட்டை பார்த்துள்ளன சிம் நிறுவனங்கள் என இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் பயனாளர்கள்.

ஜியோ ஏர்டெலுக்கு வந்த ஆபத்து.. இணைய சேவை வழங்க இந்தியாவுடன் பேசும் எலான் மஸ்க்.. இதில் சாதக பாதகங்கள் என்ன?

உலக அளவில் இணையத்தின் வளர்ச்சி என்பது கட்டுக்கடங்காத அளவில் பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகளே தொடர்ந்து இணைய பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் அளவிற்கு இணையத்தின் வளர்ச்சியானது உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் ஜியோ ஏர்டெல் மாதிரியான நிறுவனங்கள்தான் இன்னமும் அதில் முன்னிலை வகுத்து வருகின்றன. தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொழில் போட்டியில் நிறைய சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும் பிராட்பேண்ட் கனெக்ஷனில் அடுத்து ஒரு தொழில்நுட்பமாக ஏர் பைபர் என்கிற முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர் இந்த இரண்டு நிறுவனத்தினர். இதற்கு நடுவே தற்சமயம் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்டார்லிங்க் நிறுவனமும் இந்தியாவில் இணைய வசதியை வழங்குவதற்கான வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

ஸ்டார்லிங்க் நிறுவனமானது மற்ற நிறுவனங்கள் மாதிரி செல்போன் டவர் வழியாக இணையத்தை வழங்காமல் நேரடியாக சேட்டிலைட் மூலமாக இணையத்தை வழங்குகிறது. இதனால் உலகத்தின் எந்த மூளைக்கு சென்றாலும் இணைய வசதி கிடைக்கும் இடத்தில் ஸ்டார்லிங்கின் தொழில்நுட்பம் அமைந்திருக்கிறது.

ஆனால் கட்டண விகிதத்தில் பார்க்கும் பொழுது இந்தியாவில் வசூலிக்கப்படும் இணைய கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறது ஸ்டார்லிங்க் நிறுவனம். எனவே இந்தியாவிற்கு ஸ்டார்லிங்க் நிறுவனம் வருகிறது என்றால் அது கண்டிப்பாக இந்த இரண்டு முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்காது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கிறது.

ஆனால் இந்தியாவிற்கு ஸ்டார்லிங்க் வருகிறது என்றால் அதற்கு தகுந்த கட்டண விகிதத்தில் தான் இணைய கட்டணம் இருக்கும் என்றும் ஒரு பக்கம் பேசப்படுகிறது எப்படி இருந்தாலும் இந்த வருட இறுதியில் ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ரீச்சார்ச் திட்டங்களில் மாற்றத்தை கொண்டு வந்த ஜியோ ஏர்டெல்.. அரசின் புது நடவடிக்கையால் வந்த விளைவு.!

ஒரு காலக்கட்டத்தில் மக்கள் மொபைல் ரீச்சார்ஜ் என்றால் 10 ரூபாய்க்கு கார்டு வாங்கி போட்டு வந்தனர். ஆனால் இப்போது ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை என்பது எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. ரீச்சார்ஜ்க்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

பாமர மக்கள் பலரும் மாதா மாதம் மொபைல் ரீச்சார்ஜ் செய்யவே பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னமும் இணைய வசதி இல்லாத பேசிங் மொபைல்களை பயன்படுத்துபவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து அவர்களுக்கு பயன்படும் வகையிலான பேக்குகள் எதையும் தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. மாறாக அனைத்து பேக்குகளுமே இண்டர்நெட் வசதி கொண்ட பேக்குகளாகவே இருந்து வந்தன.

இதனால் பேசிக் மொபைல் வைத்திருப்பவர்கள், மற்றும் இணையத்தின் தேவை இல்லாதவர்கள் கூட இணையத்துடன் கூடிய பேக்குகளை ரீச்சார்ச் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இந்த நிலையில் போன் மட்டும் செய்துக்கொள்ளும் வகையில் பேக்குகளை அறிமுகப்படுத்த வேண்டும் என போன வருடமே அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் ஜியோ இரண்டு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது 458 ரூபாய்க்கு 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 1958 ரூபாய்க்கு ஒரு வருடம் முழுக்க அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 10 எஸ்.எம்.எஸ்களை வழங்கியுள்ளது ஜியோ.

ஏர்டெல் நிறுவனம் 509 ரூபாய்க்கு 84 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 900 எஸ்.எம்.எஸ், அதே போல 1999 ரூபாய்க்கு ஒரு வருடம் முழுக்க அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 3600 எஸ்.எம்.எஸ்களை வழங்கியுள்ளது.

இந்த திட்டங்களுக்கு தற்சமயம் வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.

இன்று வெளியாகவிருக்கும் ஜியோ ஏர்  ஃபைபர்!.. என்னவெல்லாம் இருக்கு..

மொத்த இந்தியாவிற்கும் தற்சமயம் ஏர்டெல் மற்றும் ஜியோ இரு நிறுவனங்களும் போட்டி நிறுவனங்களாக இருந்து வருகின்றன. நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் வரும் புதிய புதிய விஷயங்களை இவை போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவிற்குள் கொண்டு வந்து கொண்டுள்ளன.

தொழில்நுட்பத்தில் அடுத்த பாய்ச்சலாக ஏர் ஃபைபர் என்கிற விஷயம் இருந்து வருகிறது. இணையத்தை ஃபைபர் ஒயர் கொண்டு கொடுத்து வருவதின் அடுத்தக்கட்ட தொழில்நுட்பமாக ஃபைபர் ஒயர் இலலாமல் இண்டர்நெட் வழங்குவதே இதன் நோக்கமாகும்.

இதன் மூலம் சின்ன சின்ன கிராமங்களுக்கு கூட அதிவேக இணையத்தை வழங்க முடியும். போன வருடம் தீபாவளியன்றே தனது ஏர் ஃபைபர் திட்டம் குறித்து ஜியோ கூறியிருந்தது. ஆனால் ஜியோவிற்கு முன்பாகவே ஏர்டெல் நிறுவனம் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் ஏர் ஃபைபரை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஜியோ நிறுவனம் தனது ஏர் ஃபைபரை வெளியிட உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் ஏர் ஃபைபரை கொண்டு வர போவதாக ஜியோ கூறியுள்ளது. இதற்கான டிவைசின் விலை 6000 ரூபாய் என கூறப்படுகிறது.

5ஜி இணையத்துடன் வரும் ஜியோ ஏர் ஃபைபர் 1ஜிபி பெர் செகண்ட் வரை இணையம் வழங்கவுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் சிக்னல் அளவை பொறுத்து இணையத்தின் வேகத்தில் மாற்றம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.