Tag Archives: allu Arjun

5 நடிகைகள், ஹாலிவுட் வில்லன்… பெரிய லெவல் ப்ளான் போட்ட அட்லீ..!

ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் மார்க்கெட் என்பது இந்திய அளவில் மிக பெரிய மார்க்கெட்டாக மாறிவிட்டது. தொடர்ந்து அட்லீயை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன.

இந்த நிலையில்தான் நடிகர் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து அட்லீ தன்னுடைய அடுத்த திரைப்படத்தை துவங்கியிருக்கிறார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் ஒரு திரைப்படமாக இருக்கிறது.

ஹாலிவுட் நிறுவனங்கள்தான் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் வேலைகளை பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இப்பொழுது தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பதே பலரும் அறிந்த விஷயம்.

தீபிகா படுகோன் இல்லாமல் இன்னும் நான்கு நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் மிர்னல் தாகூர், ராஸ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் மற்றும் நடிகை பாக்கியஸ்ரீ போஸ் ஆகியோர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கின்றனர்.

இது மட்டும் இல்லாமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர்களிடம் பேசி வருகிறாராம் அட்லி. ஏனெனில் இந்த திரைப்படத்தை ஹாலிவுட் அளவில் பிரபல படுத்த வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஹாலிவுட் பிரபல நடிகர் வீல்ஸ்மித்திடம் பேசி வருகிறாராம் அட்லி. இந்த திரைப்படத்தில் வில்லனாக வீல்ஸ்மித் நடித்தால் ஹாலிவுட் வரை இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்றாலும் கூட கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் பட்ஜெட் என்பது மிக அதிகமாகும்.

ஏனெனில் நடிகர் வில் ஸ்மித் அதிக சம்பளம் வாங்க கூடிய ஒரு நடிகர் ஆவார் எனவே இது எந்த வகையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமாக இருக்கும் என்று தெரியவில்லை.

அட்லியுடன் இணையும் அல்லு அர்ஜுன்.. கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன திரைத்துறை.!

ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து இயக்குனர் அட்லிக்கு ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் நிறைய பெரிய நடிகர்கள் தங்களை வைத்து திரைப்படம் இயக்குமாறு அட்லியிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் அடுத்து தெலுங்கு சினிமாவில் ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்றிருக்கிறார் அட்லீ.

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன ஆனால் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தினால் அல்லு அர்ஜுன் தனது சம்பளத்தை அதிகரித்திருக்கிறார்.

175 கோடி சம்பளம் இதற்காக கேட்டிருக்கிறாராம் அல்லு அர்ஜுன். தெலுங்கு நடிகர்களிலேயே மிக அதிக சம்பளத்தை அல்லு அர்ஜுன்தான் பெற்றிருக்கிறார் என்று இது குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.

கேம் சேஞ்சராக மாறிய சிசிடிவி காட்சிகள்.. அல்லு அர்ஜுன் பெயரோடு இணைந்த இன்னும் இரண்டு குற்றவாளிகள்..!

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்பாம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அப்போது அங்கு படம் பார்க்க வந்த ரேவதி மற்றும் அவரது 8 வயது மகன் ஸ்ரீ தேஜ் இருவரும் அல்லுஅர்ஜுன் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி தாக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ரேவதி அங்கேயே உயிரிழந்தார். ஸ்ரீ தேஜ் இன்னமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். இதுக்குறித்து  அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த உயிரிழப்புக்கு அல்லு அர்ஜுன் தான் முக்கிய காரணம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் கைதான அல்லு அர்ஜுன் அவரது செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரங்களிலேயே வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வரில் துவங்கி பலரும் அல்லு அர்ஜுனை விமர்சிக்க துவங்கினர்.

சிலர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு கல் வீச்சு எல்லாம் நிகழ்த்தினர். இந்த நிலையில் வெளியான சில சிசிடிவி காட்சிகள் ஆட்டத்தையே மாற்றியுள்ளன.  அதாவது அல்லு அர்ஜுன் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே கூட்டம் அலைமோதிக்கொண்டு சென்றுள்ளது.

அப்போது திரையரங்க செக்யூரிட்டிகள் பலரையும் தாக்கியுள்ளனர். அந்த கூட்டத்தில் சிக்கிதான் ரேவதி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவலர்கள் கூறும்போது ஏற்கனவே கூட்டமாக இருக்கிறது என அல்லு அர்ஜூனை வர வேண்டாம் என நாங்கள் கூறினோம்.

ஆனாலும் அவர் வருவதாக கூறினார். அவர் வருவதை அறிந்தவுடன்தான் கூட்டம் ஆக்ரோஷமாக மாறியது. அந்த விஷயத்தை அறிந்து ஓடி வந்த கூட்டத்தில்தான் ரேவதி சிக்கிக்கொண்டார். திரையரங்க அலுவலர்களும் மக்களை சரியாக நிர்வகிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கில் அல்லு அர்ஜுனோடு சேர்த்து திரையரங்க உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

அல்லு அர்ஜுன் மேல தப்பு இல்லன்னு சொல்றீங்களே..? புட்டு புட்டு வைத்த தெலுங்கானா முதல்வர்.. நிஜ புஷ்பா 2 தொடங்குது போல…

பேன் இந்தியா நட்சத்திரமாக தற்சமயம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். என்னதான் பேன் இந்தியா நடிகராக இருந்தாலுமே கூட இப்பொழுது அவரைக் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் தான் சினிமா வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் முதல் நாள் ரிலீஸின்போது ஒரு திரையரங்கிற்கு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வந்திருந்தார்.

அப்படி அவர் வரும்பொழுது கூடிய கூட்டத்தின் காரணமாக ஒரு பெண்ணும் அவரது மகனும் பாதிக்கப்பட்டார்கள். அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு காரணம் அல்லு அர்ஜுன் தான் என்று கூறி அல்லு அர்ஜுனை கைது செய்தனர் ஆனால் கைது செய்யப்பட்ட 8 மணி நேரத்திற்குள்ளாகவே பெயில் வாங்கி வெளியே வந்து விட்டார் அல்லு அர்ஜுன்.

அல்லு அர்ஜுன் செய்த தவறு:

இந்த நிலையில் இதுகுறித்து தற்சமயம் கேள்விகளை கேட்க துவங்கியிருக்கிறார் தெலுங்கானா முதல்வர். அதில் அவர் கேட்கும் பொழுது சிறை வாசலையே மிதிக்காத அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்றதும் அவரை பார்ப்பதற்கு திரை பிரபலங்கள் எல்லாம் ஒரு கூட்டமாக சென்றனர்.

ஆனால் அவர்கள் யாரும் பாதிக்கப்பட்ட சிறுவனை பார்ப்பதற்கு செல்லவில்லை ஏன்? மேலும் இந்த தவறு நடப்பதற்கு அவர்தான் காரணம் திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததே முதலில் பெரிய தவறு.

அதே போல இந்த பிரச்சனை நடந்த பிறகும் கூட அல்லு அர்ஜுன் திரையரங்கிற்குள் சென்று படத்தை பார்த்து இருக்கிறார் அவரிடம் பிரச்சனையாகிவிட்டது என்று கூறி வெளியேறும்படி காவலர்கள் கூறியும் கூட வெளியேறாமல் படத்தை பார்த்து இருக்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார் முதல்வர்.

இதற்கு பதில் அளித்த அல்லு அர்ஜுன் தன்னுடைய புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைகளை செய்கிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்வருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் நேரடியாக பிரச்சனைகள் துவங்கியிருப்பது தருகிறது புஷ்பா 2 திரைப்படத்தின் கதைக்களம் போலவே உண்மையில் நடந்து வருகிறதே என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

13 நாட்கள் ஆன பிறகும் இன்னும் குறையல.. புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படமே ஆயிரம் கோடியை தாண்டி வசூலை கொடுத்தது இதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் கண்டிப்பாக 2000 கோடி தாண்டி வசூல் கொடுக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.

ஒருவேளை புஷ்பா 2 2000 கோடியை தாண்டி வசூல் கொடுத்தது என்றால் இந்தியாவிலேயே முதன்முதலாக 2000 கோடிக்கு ஓடிய திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் இருக்கும் என்றும் பேச்சுக்கள் இருந்தன.

pushpa 2

வசூல் நிலவரம்:

அதற்கு தகுந்தார் போல படம் வெளியான முதல் நாளே 200 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்தது புஷ்பா 2 திரைப்படம் தற்சமயம் 13 நாட்கள் ஆன நிலையில் இன்னும் வசூலில் பாக்ஸ் ஆபீஸ் செய்து வருகிறது புஷ்பா 2 திரைப்படம்.

அந்த வகையில் இதுவரை 1400 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது புஷ்பா 2 படம் எப்படியும் 30 நாட்கள் முடியும் நிலையில் இந்த படத்தின் வசூல் 2000 கோடியை தாண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவனுக்கு நேர்ந்த கதி.. அல்லு அர்ஜுனுக்கு விழுந்த அடுத்த பேரிடி..!

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படத்தின் முதல் நாள் ரிலீஸ் அன்று அல்லு அர்ஜுன் செய்த செயலால் பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது.

பொதுவாக சினிமா ரசிகர்கள் என்பவர்கள் பொறுப்பற்றவர்களாகதான் சமூகத்தின் பார்வையில் இருக்கின்றனர். இதனால்தான் படங்கள் முதல் நாள் ரிலீஸ் ஆகும்போது காவலுக்கு போலீஸ் வரை போடப்படுகிறது. இந்த நிலையில் ஒரு திரையரங்கில் புஷ்பா 2 வெளியானபோது அங்கு ரசிகர்களை பார்க்க சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்தார் அல்லு அர்ஜுன்.

திரையரங்கில் விபரீதம்:

pushpa 2

அப்போது கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். மற்றும் அவரது மகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இதற்காக அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

15 நாட்கள் காவலில் வைத்து அவரை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் கைது செய்யப்பட்ட 12 மணி நேரங்களுக்குள்ளாகவே சிறையில் இருந்து வெளிவந்தார் அல்லு அர்ஜுன்.

இந்த நிலையில் கவலைக்கிடமாக சேர்க்கப்பட்ட அந்த சிறுவனும் தற்சமயம் மூளை சாவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இது அல்லு அர்ஜுனை பாதிக்குமா? என ஒருப்பக்கம் கேள்விகள் எழுந்து வருகிறது..

அல்லு அர்ஜுனுக்கு குவியும் ஆறுதல்கள்… கண்ணீர் விட்ட சமந்தா.. இதெல்லாம் நியாயமா..! பிரபலங்களை விளாசும் ரசிகர்கள்..!

நடிகர் அல்லு அர்ஜுன் குறித்த விஷயம்தான் தற்சமயம் தமிழ் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

பொதுவாகவே பெரிய நடிகர்களின் திரைப்படங்களைப் பொறுத்தவரை முதல் நாள் முதல் கட்சி என்பது கோலாகலமாகதான் நடந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் ஒரு திரையரங்கில் சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களை சந்திப்பதற்காக அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.

அப்பொழுது உண்டான கூட்ட நெரிசலில் அந்த திரைப்படத்திற்கு வந்திருந்த ஒரு பெண்மணியும் அவரது குழந்தையும் பாதிக்கப்பட்டனர். அந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த சிறுவன் தற்சமயம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு அல்லு அர்ஜுன்தான் காரணம் என்று கூறி அவரை கைது செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம் இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும்எதிராகவும் நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

திரையரங்கில் நடந்த சம்பவம்:

ஒரு பக்கம் இதற்கு எப்படி அல்லு அர்ஜுன் காரணமாக இருக்க முடியும் திரையரங்கம் தான் சரியாக கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன் அன்று திரையரங்கிற்கு வராமல் இருந்திருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது.

மேலும் வருகிற அல்லு அர்ஜுனும் திரையரங்கிற்கு கூறிவிட்டு வந்திருக்க வேண்டும் அப்படி வந்திருந்தால் அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி இருப்பார்கள். எனவே அல்லு அர்ஜுன் மீது தான் தவறு என்று ஒரு பக்கம் பேச்சு இருந்து வந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பெயில் வாங்கி வீட்டிற்கு வந்து விட்டார் அல்லு அர்ஜுன். அப்பொழுது அவர் தனது குடும்பத்தாரை சந்தித்த பொழுது அவர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிக வைரல் ஆகி வருகிறது.

வெளியில் வந்த அல்லு அர்ஜுன்:

மேலும் சமந்தாவும் அவருக்கு ஆதரவு ஆறுதல் தெரிவித்து கண்ணீர் மல்க பதிவு ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் பிரபலங்கள் பலருமே அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ராணா டகுபதி, நாகசைதன்யா, விஜய் தேவரகொண்டா போன்றவர்கள் எல்லாம் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் கடுப்பான நிறைய ரசிகர்களும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் இதனால் கடுப்பான மக்கள் சிலரும் இருக்கின்றனர். அவர்கள் கூறும் பொழுது இப்படி ஒரு விபத்து நடந்த பொழுது அந்த குடும்பத்தாருக்கு ஆதரவு தெரிவித்து எந்த ஒரு பிரபலமும் பதிவு போடவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் காவல் நிலையம் சென்று வந்ததற்கு இவ்வளவு பெரிய சீன் கிரியேட் செய்கிறார்கள் என்று கூறி வருகின்றனர். எப்படி இருந்தாலும் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே வெளியில் வந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தான் கொடுத்திருக்கிறது.

இதுதான் பின்னணியில் நடந்தது? அரசியல் காரணங்களால் கைதான அல்லு அர்ஜுன்..!

ரசிகை ஒருவர் இறந்த பிரச்சனைகள் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படத்தின் முதல் நாள் ஓப்பனிங் ஷோவிற்கு சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுக்கிறேன் என்று அல்லு அர்ஜுன் ஒரு திரையரங்கிற்கு வந்திருந்தார்.

அப்பொழுது அந்த திரையரங்கிற்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்த பெண்மணி ஒருவர் கூட்டத்தில்  உயிரிழந்தார். மேலும் அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து வழக்கில் அல்லு அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று முடிவு செய்யப்பட்டது.

அரசியல் காரணம்:

ஏனெனில் அன்று அல்லு அர்ஜுன் அந்த ஷோவிற்கு வரவில்லை என்றால் இந்த கூட்ட நெரிசல் உருவாகி இருக்காது என்பது பலரது கருத்தாக இருந்தது. அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நேரங்களிலேயே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

allu arjun

இன்று காலையிலேயே அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் கைதானதற்கு பின்னால் ஒரு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருந்து வருகிறது. ஏனெனில் தெலுங்கானாவின் முதலமைச்சர் ஆன ரேவந்த் ரெட்டி முதலமைச்சரானபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்து எந்த ஒரு பதிவையும் அல்லு அர்ஜுன் போடவில்லை.

அதுவும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கட்சியில் நின்ற அவரது நண்பரான சில்பா ரவி என்பவருக்கு ஆதரவாக நிறைய முறை அல்லு அர்ஜுன் பேசியிருக்கிறார். அதுவுமே கூட இந்த கைக்கு பின்னால் காரணமாக இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

அல்லு அர்ஜுன் கைது.. புஷ்பா 2 வால் வந்த வினை..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் ஆர்யா திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து பிரபலமான அல்லு அர்ஜுன் தென்னிந்திய அளவில் நிறைய ரசிகர்களை பிடிக்க தொடங்கினார். அந்த வகையில் இந்திய அளவில் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் புஷ்பா.

புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் வரவேற்பை பெற்ற நடிகராக மாறினார் அல்லு அர்ஜுன். அந்த திரைப்படமும் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் தற்சமயம் வெளியாகி அதுவும் எக்கசக்கமான வசூலை பெற்று வருகிறது.

அல்லு அர்ஜுன் கைது:

allu arjun

ஆனால் இந்த படத்தின் முதல் நாள் ஒரு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. புஷ்பா திரைப்படத்தின் முதல் நாள் ஒரு திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வருகை தந்திருந்தார். அப்பொழுது அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டமாக சென்றதில் ஒரு பெண் அந்த கூட்டத்தில் மாட்டி இறந்து விட்டார்.

அவருடைய குழந்தையும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் தற்சமயம் அல்லு அர்ஜுனை கைது செய்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு அன்று வராமல் இருந்திருந்தால் இந்த சம்பவிதம் நடந்திருக்காது.

எனவே இதற்கு அல்லு அர்ஜுன்தான் காரணம் என்று கூறி அவரை கைது செய்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு தருவதாக அறிவித்தும் கூட அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆறாவது நாள் சரிந்த புஷ்பா வசூல்..! இதுதான் காரணமா?..

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அதிக வெற்றியை பெற்று வரும் திரைப்படமாக புஷ்பா திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான பொழுது அந்த படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன.

அதனை தொடர்ந்து இந்த படம் கண்டிப்பாக பெரும் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே முதல் பாகமே ஆயிரம் கோடியை தாண்டி பெரிய வசூலை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரித்தது.

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் முதல் பாகத்தை விட அதிக பிரம்மாண்டத்தோடு எடுக்கப்பட்டது. தற்சமயம் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெறும் ஐந்தே நாட்களில் 900 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்திருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது.

pushap 2

ஆறாவது நாள் வசூல்:

மேலும் புஷ்பா 2 வெளியான இந்த சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் வேறு எந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகவில்லை. இது புஷ்பா திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இதனால் கூட படத்தின் வசூல் இவ்வளவு சீக்கிரத்தில் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 நாட்கள் வரிசையாக அதிக வசூலை கொடுத்து வந்த புஷ்பா திரைப்படம் ஆறாவது நாள் வசூல் குறைந்து இருக்கிறது.

ஆறாவது நாள் வெறும் 35 கோடி தான் வசூல் செய்துள்ளது புஷ்பா திரைப்படம். இப்படி குறைந்தாலும் கூட 1500 கோடி வரை இந்த படம் வசூல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

5 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல் சாதனை..! 1000 கோடியை நெருங்கியாச்சு போல..!

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே தற்சமயம் சண்டை காட்சிகள் கொண்ட படங்களுக்கு மவுஸ் அதிகரித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் தொடர்ந்து பெரிய ஹிட் கொடுக்கும் படங்கள் எல்லாம் இந்த மாதிரியான படங்களாக தான் இருக்கின்றன. அந்த வரிசையில் ஏற்கனவே தெலுங்கில் படமாக்கப்பட்டு இந்திய அளவில் வெளியான புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து இருந்தது.

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் குறித்து பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார் போல உருவான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளே 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரிய சாதனையை செய்தது.

5 நாள் வசூல்:

pushap 2

தமிழ் சினிமாவில் உள்ள எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை தற்சமயம் புஷ்பா திரைப்படம் செய்து வருகிறது என்று கூறலாம். இந்த நிலையில் படம் வெளியாகி ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் உலக அளவில் 900 கோடி ரூபாய் வசூல் செய்து கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு டஃப் கொடுத்திருக்கிறது புஷ்பா 2 திரைப்படம்.

போற போக்கை பார்த்தால் தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 திரைப்படம்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது தற்சமயம் தென்னிந்தியாவில் அதிக வசூல் கொடுக்கும் படங்களில் தெலுங்கு சினிமாதான் முன்னணியில் இருக்கிறது.

இந்திய சினிமாவில் புதிய சாதனை.. ரஜினி,விஜய்யை பின்னால் தள்ளிய அல்லு அர்ஜுன்.. 4 நாட்களில் புஷ்பா பட வசூல்..!

மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. புஷ்பா 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பை விடவும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.

பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் சண்டை காட்சிகள் என்றாலே மக்கள் அதை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் வித்தியாசமான பல சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

காலில் கயிற்றை கட்டிக்கொண்டு தலைகீழாக தொங்கி கொண்டு அல்லு அர்ஜுன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் எல்லாம் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. லாஜிக்காக இந்த காட்சிகள் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தாலும் கூட ரசிகர்களுக்கு இந்த காட்சிகள் எல்லாம் வொர்க் அவுட் ஆகி இருக்கின்றன.

pushpa 2

புஷ்பா 2 வசூல்:

இந்த நிலையில் பட்டையை கிளப்பிக்கொண்டு உலக அளவில் நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது புஷ்பா 2 திரைப்படம். வெளியாகி நான்கே நாட்களில் கிட்டத்தட்ட 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது புஷ்பா திரைப்படம்.

புஷ்பா 2 திரைப்படம் தமிழில் விஜய் அஜித் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்கள் கூட நான்கு நாட்கள் இப்படி ஆன ஒரு வசூலை கொடுத்தது கிடையாது. அந்த வகையில் மிகப் பெரும் பேன் இந்தியா ஸ்டார் ஆக மாறியிருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது. கங்குவா திரைப்படம் 2000 கோடியை தொடும் என்று ஞானவேல் ராஜா கூறியது பலருக்கும் நினைவு இருக்கலாம் அந்த சாதனையை புஷ்பா 2 திரைப்படம் கண்டிப்பாக செய்யும் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.