நடிகர் தனுஷிற்கு வரிசையாக ஓ.டி.டியில் மட்டுமே படங்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு திரையில் வந்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு என்பதை இப்போது பார்க்கலாம்.
பல படங்களில் வருவது போல இந்த படத்திலும் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக தனுஷ் இருக்கிறார். டெலிவரி பாயாக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் நித்யா மேனன் இருக்கிறார். இவரும் நித்யா மேனனும் வெகு நாள் நண்பர்களாக இருக்கின்றனர். சில காரணங்களால் தனுஷ்க்கும் அவரது தந்தை பிரகாஷ் ராஜுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருக்கிறது.
இந்நிலையில் தனுஷூன் வாழ்க்கைக்குள் இரண்டு பெண்கள் வருகின்றனர். உணர்வு பூர்வமாக அவர்களுடன் தனுஷ்க்கு ஒரு உறவு ஏற்படுகிறது. அதன் பிறகு அந்த உறவுக்குள் ஏற்படும் சிக்கல்கள் முடிவில் அவரது காதல் வாழ்வு யாரோடு அமைகிறது என கதை செல்கிறது.
படத்தில் கதாநாயகிகள் மூவருமே தங்களுக்கு அளித்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தனர். தனுஷ் நடிப்பை பற்றி தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. வழக்கம் போலவே தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி இருந்தார்.
ஏற்கனவே ஹிட் அடித்த அனிரூத் பாடல்கள் திரையில் கேட்கும்போது இன்னுமுமே பிரமாதமாக இருந்தது. படத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை நம்மால் ஓரளவு அனுமானிக்க முடிந்தாலும் கூட கதையின் ஓட்டம் வேகமாக செல்வதால் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாக திருச்சிற்றம்பலம்.
மொத்தமாக குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு ஏற்ற ஒரு டீசண்டான கமெர்ஷியல் படமாக திருச்சிற்றம்பலம் உள்ளது என கூறலாம்.
தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஹாலிவுட் வரை பிசியாக நடித்து வருகிறார்.
முன்னதாக பக்கிரி என்ற படத்தில் நடித்தவர் தற்போது தி க்ரேமேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களான க்ரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டெ அர்மாஸ் என ஒரு நடிக பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் உற்சாகமாக காத்திருந்தனர்,
ஆனால் படத்தின் ட்ரெய்லர் வந்தபோது அதில் ஒரு காட்சியில் மட்டுமே தனுஷ் தோன்றினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். ஒருவேளை க்ரேமேன் திரைப்படத்தில் தனுஷ்க்கு முக்கிய கதாபாத்திரம் இல்லையோ என ரசிக வட்டாரத்தில் பேசி வந்தனர்.
இந்நிலையில் இதைப்பற்றி பேசிய ரஸ்ஸோ பிரதர்ஸ் ”க்ரேமேனில் தனுஷ் குறைந்த காட்சியில் வந்தாலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது. மேலும் அந்த கதாபாத்திரத்தை வைத்து அவருக்கென தனிப்படம் இயக்க உள்ளோம். ஏனெனில் நாங்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர்கள்” என கூறியுள்ளனர்.
இந்த செய்தியால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஹாலிவுட் வரை பிசியாக நடித்து வருகிறார்.
முன்னதாக பக்கிரி என்ற படத்தில் நடித்தவர் தற்போது தி க்ரேமேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களான க்ரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டெ அர்மாஸ் என ஒரு நடிக பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் உற்சாகமாக காத்திருந்தனர்,
இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையே அளித்தது. ஏனென்றால் கர்ணனுக்கு பிறகு தனுஷின் எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருந்தாலும் பரவாயில்லை என ட்ரெய்லருக்காக தீவிரமாக காத்திருந்தனர்.
நேற்று ட்ரெய்லர் வெளியான நிலையில் தனுஷை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2 நிமிடத்திற்கும் மேல் உள்ள படத்தின் ட்ரெய்லரில் தனுஷ் 20 நொடிகள் கூட காட்டப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் மாயி பட “வாம்மா மின்னலு” காமெடியை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். படத்திலாவது அதிக காட்சிகளுக்கு வருவாரா என காத்திருக்கிறார்களாம் ரசிகர்கள்.
தமிழ் திரையுலகில் முக்கியமான நட்சத்திரமும், பிரபலமுமாக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தனுஷ் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் திரை உலகிற்கு வந்து 20 வருடம் நிறைவடைந்தது. இது ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்ட் ஆகி வந்தது.
சினிமா துறையில் நடிகர் தனுஷ்க்கு வருவாய் வருவது போலவே, யு ட்யூப் வழியாகவும் அவருக்கு வருவாய் வருகிறது. அவரின் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் ஸ்டுடியோஸ் பெயரில் யூ ட்யூப் சேனல் ஒன்றை தனுஷ் நடத்தி வந்தார். அதில் அவரது இயக்கத்தில் வரும் திரைப்படங்களின் பாடல்கள், ட்ரெய்லர்கள் போன்றவற்றை வெளியிட்டு வந்தார்.
தனுஷ் நடித்து யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ரவுடி பேபி பாடல் யு ட்யூப்பில் 100 கோடிக்கும் அதிகமான வீவ்களை பெற்று சாதனை புரிந்தது. தமிழ் பாடல்களில் 100 கோடி வீவ்களை பெற்ற முதல் பாடல் ரவுடி பேபி ஆகும்.
இந்த நிலையில் இன்று யாரோ நடிகர் தனுஷின் யு ட்யூப் அக்கவுண்டை ஹேக் செய்துள்ளனர். மேலும் யு ட்யூப்பில் பிரபலமாக இருந்த ரவுடி பேபி பாடலை அவர்கள் டெலிட் செய்துள்ளனர். அந்த சேனல் மூலம் வரும் வருவாயை விடவும் அந்த வீடியோ மதிப்பு மிக்கதாகும். ஏனெனில் தமிழில் முதன் முதலில் 100 கோடி வீவ் போன பாடல் என்ற பெருமை அதற்கு இருந்தது. இப்போது அந்த வீடியோவை புதிதாக பதிவிட்டாலும் கூட வீவ்கள் முதலில் இருந்தே கணக்கிடப்படும்.
இதே போல பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் யு ட்யூப் சேனலும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே தற்சமயம் இந்த இரண்டு சேனல்களுமே யு ட்யூப்பில் காணவில்லை. மேலும் அவை அப்லோட் செய்த வீடியோக்களும் யூ-ட்யூப்பில் இல்லை.
தமிழ் திரையுலகில் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக நடிகர் தனுஷ் இருக்கிறார். இன்றைய நாளானது நடிகர் தனுஷ்க்கு முக்கியமான நாளாகும்.
நடிகர் தனுஷ் சினிமாவிற்கு வந்து இன்றோடு 20 வருடங்கள் ஆகின்றன. முதன் முதலாக அவர் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படமானது 10 மே 2002 அன்று வெளியானது. எனவே தனுஷ் திரையுலகில் தனது பயணத்தை துவங்கி 20 வருடங்கள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக அனைவருக்கும் நன்றி கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டார் நடிகர் தனுஷ். அதில் இதுவரைக்கும் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். அதில் தனது சகோதரர் செலவராகவன் மற்றும் தனது தந்தை கஸ்தூரி ராஜாவிற்கும் நன்றியை தெரிவித்தார்.
ஆனால் அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமான நடிகர் ரஜினியை தனுஷ் மறந்துவிட்டார் என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். நடிகர் தனுஷ் ரஜினிக்கு மாப்பிளையாக ஆன பிறகு அவர் பெரிய வளர்ச்சியை கண்டார். மேலும் அவரது நடை, உடை பாவனைகளில் கூட நாம் அதிகம் ரஜினியை காண முடியும். அந்த அளவிற்கு நடிகர் தனுஷிக்கும், ரஜினிக்குமிடையே உறவு இருந்தது. ரஜினிக்கு மருமகன் ஆன பிறகே இயக்குனராகவும் இவர் நல்ல வளர்ச்சியை கண்டார்.
அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த நடிகர் ரஜினிக்கு அவர் நன்றி கூறாதது தவறான விஷயமாகும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் குடும்ப சிக்கல்கள் காரணமாகவும் அவர் ரஜினியை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் எனவும் பேச்சுக்கள் உள்ளன.
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் தனுஷ்.
இயக்குனர் செல்வராகவனின் தம்பியான இவர் தமிழில் ”துள்ளவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் “காதல் கொண்டேன்”, “திருடா திருடி” உள்ளிட்ட படங்கள் மூலமாக புகழ்பெற்றார்.
கடந்த சில பத்தாண்டுகளுக்குள் தமிழில் இருந்து இந்தி தொடங்கி ஹாலிவுட் வரை பிரபலமாகியுள்ள தனுஷ் திரைத்துறையில் கால் பதித்து இந்த வருடத்தோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சரியாக இதே மே 10, 2002ல் தான் தனுஷின் முதல் படம் “துள்ளுவதோ இளமை” வெளியானது. இந்நிலையில் தனுஷின் 20 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அவர் புதிதாக நடித்து வரும் “வாத்தி” படக்குழு ஒரு Tribute Poster ஐ வெளியிட்டுள்ளனர்.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips