Tag Archives: Ghaati trailer

ரீ எண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. விக்ரம் பிரபு நடிப்பில் GHAATI Trailer.. அந்த படத்தின் காபி மாதிரி இருக்கே..? 

நடிகர் விக்ரம் பிரபு கடந்த சில காலங்களாகவே கதை தேர்ந்தெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லவ் மேரஜ் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வர இருக்கும் திரைப்படம்  காத்தி. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களை அடிப்படையாக கொண்டு செல்கிறது. படத்தின் கதைப்படி இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்த ஒரு குழுவாக இந்த குழுவினர் இருக்கின்றனர்.

ஆனால் இப்போதைய காலத்தில் சில கும்பல் இவர்களை கஞ்சா உற்பத்திக்காக பயன்படுத்தி வருகின்றனர். நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அனுஷ்கா இருவருமே இந்த கிராமத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இப்படி கஞ்சா உற்பத்தி செய்வது தவறு என இவர்கள் நினைக்கின்றனர்.

அதனை தொடர்ந்து அந்த ரவுடி கும்பலை இந்த கிராமம் எப்படி எதிர்க்கிறது என்பதாக கதை செல்கிறது. முழுக்க முழுக்க இந்த கதை ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா திரைப்படத்தின் கதைக்களத்தோடு இந்த கதைக்களம் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது.