Tag Archives: gnanavel

ரஜினி இயக்குனருடன் கூட்டணி போடும் நானி!..இதுதான் கதையாம்!.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களாக அறியப்படும் இயக்குனர்களில் தா.செ ஞானவேலும் முக்கியமானவர். ஜெய் பீம் திரைப்படத்திற்கு முன்பே இவர் ஒரு சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட அவருக்கான அடையாளமான திரைப்படமாக ஜெய் பீம் திரைப்படம் இருந்தது.

அதனை தொடர்ந்து அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் ஞானவேல். கடந்த ஒரு வருடங்களாக ரஜினியை கதாநாயகனாக வைத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தை இவர் இயக்கி வருகிறார். ஜெய் பீம் திரைப்படம் எப்படி காவலர்களின் அதிகார அத்து மீறலை பேசியதோ அதே போலவே வேட்டையன் திரைப்படமும் அமைந்துள்ளது.

Vettaiyan

போலி என்கவுண்டர்களை கதைக்களமாக வைத்து இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.

இதனை அடுத்து தெலுங்கு நடிகர் நானியை கதாநாயகனாக வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளாராம் தா.செ ஞானவேல். இந்த திரைப்படத்திற்கான திரைக்கதை வேலையில் இப்போதே இறங்கிவிட்டாராம். இந்த திரைப்படமும் சமூகத்திற்கு முக்கியமான கருத்தை முன் வைக்கும் கதை களத்தைதான் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்னமும் திரைத்துறையில் இருந்து இந்த திரைப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

செங்கல் சூளையில் வேலைக்கு அனுப்பிட்டார்!.. இயக்குனரிடம் வசமாக சிக்கிய ஜெய் பீம் நடிகர்!..

jai bhim actor manikandan: திரைப்படங்களை வெறும் கடமைக்காக எடுக்காமல் அதில் பல நுட்பங்களை கையாளக்கூடிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உண்டு. சிலர் மிகவும் ஆராய்ச்சி செய்து பாடுபட்டு நிறைய வேலைகள் பார்த்து ஒரு படத்தை எடுப்பார்கள்.

அப்படி எல்லாம் எந்த ஒரு கடுமையான வேலையும் பார்க்காமல் சும்மா சில கதைகளை காப்பி அடித்து படம் எடுப்பவர்களும் சினிமாவில் உண்டு. அப்படியே சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஞானவேல்.

ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஞானவேல் அடுத்தது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தற்சமயம் படம் இயக்கி வருகிறார். போலீஸ்களின் போலி என்கவுண்டர்களை மைய கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் கிட்டத்தட்ட 90 நாட்கள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெய் பீம் திரைப்படம் 45 நாட்கள்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு படத்தில் பணி புரிந்த மணிகண்டன் மற்றும் கதாநாயகி லிஜோமல் ஜோஸ் இருவரையுமே அந்த பழங்குடியின சமூகத்திடம் ஒரு மாதம் வேலை பார்க்க விட்டிருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.

ஏனெனில் அப்பொழுதுதான் அந்த சமூகத்தை குறித்து இவர்களால் தெரிந்து கொள்ள முடியும் தத்துரூபாவாக அவர்கள் போலவே இவர்களால் நடிக்க முடியும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர்.

இதனால் செங்கல் சூளையில் எல்லாம் மணிகண்டன் வேலை பார்த்து இருக்கிறார் இந்த படப்பிடிப்பின் வீடியோக்கள் தற்சமயம் வெளியாகி உள்ள நிலையில் அவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

தலைவர் 170 கன்ஃபார்ம்! – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்ட லைகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு லால் சலாம் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் லால் சலாம் திரைப்படத்தில் இவருக்கு குறைந்த அளவிலான ஒரு கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்பது குறித்து பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன. டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தியுடன் ரஜினி அடுத்த படம்  பண்ண போகிறார் என பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஆனால் கடைசி நேரத்தில் திடீரென சிபி சக்கரவர்த்தியின் கதை பிடிக்கவில்லை என ரஜினி கூறிவிட்டார். இதையடுத்து ஜெய் பீம் திரைப்பட இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தை ரஜினி நடிக்க இருக்கிறார் என்கிற பேச்சுக்கள் இருந்து வந்தன.

இதற்காக இயக்குனர் ஞானவேலின் படக்குழு திரைக்கதை வேலைகளையும் பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று லைக்கா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், ஞானவேல் கூட்டணி திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளது.

லைக்கா டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது “லைக்கா குடும்ப தலைவர் திரு சுபாஷ் கரன் அவர்கள் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றும் ஒரு பெருமைமிகு தருணம் இது தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இசை வழி நம் இதயங்களை இணைக்கும் திரு அனிருத் இசையில் பிரம்மாண்டமான திரைப்படங்களை படைத்தளிக்கும் திரு சுபாஷ் கரன் தயாரிப்பில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தலைமை பொறுப்பாளர் திரு ஜி கே எம் தமிழ் குமரன் அவர்களின் தலைமையில் தலைவர் 170 திரைப்படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியிடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழா தான். அவருடன் மீண்டும் இணைவதில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது அனைவரின் வாழ்த்துக்களோடு 2024 மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம். நன்றி.”  என கூறப்பட்டுள்ளது.

மீண்டும் போலீசாக களம் இறங்கும் ரஜினி ! – ரஜினி அடுத்த படத்தின் அப்டேட்!

போன வருடம் பொங்கலை முன்னிட்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. அந்த படத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் எந்த ரஜினி படமும் வெளிவரவில்லை.

தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிப்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இதற்கு அடுத்ததாக ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி அடுத்த படத்தை நடிக்க உள்ளார். இந்த ஆண்டின் முடிவிற்குள் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த படத்தில் ரஜினி போலீஸாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி போலீஸாக நடித்த தர்பார் திரைப்படம் மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

ஆனால் இந்த படத்தை ஞானவேல் இயக்குவதால் அவர் சமூகத்திற்கு உதவும் கருத்துக்களை இதில் சேர்த்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

தலைவர் 171 கன்ஃபார்ம் –அடுத்த மாதம் அறிவிப்பு வரும்!

நடிகர் ரஜினி நடித்து தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கான படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படம் லால் சலாம்.

லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிக்கு அதிக காட்சிகள் கிடையாது என கூறப்படுகிறது. எனவே அந்த படத்தின் படப்பிடிப்புகள் கொஞ்சமாகதான் இருக்கும். எனவே எப்படி இருந்தாலும் இந்த வருடம் முடிவதற்கும் ரஜினியின் அடுத்த படமான 171 துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 171 ஐ முதலில் டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்ரவர்த்திதான் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் கதை ரஜினிக்கு திருப்தியாக இல்லாத காரணத்தால் அடுத்து ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ரஜினி.

ஞானவேலின் ஜெய்பீம் திரைப்படம் இந்தியாவை தாண்டி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இந்த நிலையில் ரஜினியை வைத்து அவர் இயக்கும் படம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கிறது என கூறப்படுகிறது. தற்சமயம் இந்த படத்திற்கான திரைக்கதை வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன.

ஜெய் பீம் இயக்குனரோடு இணையும் சூப்பர் ஸ்டார் ! – ஹாட் நியூஸ்!

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த திரைப்படம் ஜெய் பீம். இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அடுத்த படமும் கூட ஞானவேல் சூர்யாவை வைத்தே இயக்க இருக்கிறார் என கூறப்பட்டது. இந்த படத்தையும் சூர்யாவே தயாரிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் திடீரென சூர்யா வேறு சில படங்களில் பிஸி ஆனதால் ஞானவேல் படத்தில் இப்போது நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞானவேல் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் டான் திரைப்பட இயக்குனரான சிபி சக்ரவர்த்தியின் படத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் ரஜினிகாந்திற்கு அந்த கதை அவ்வளவாக பிடிக்காத காரணத்தால் அந்த படத்தில் இருந்து விலகினார். எனவே தற்சமயம் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா அடுத்த படம் யார் கூட? வெளியான அப்டேட்!

சூர்யா தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சூர்யா. மேலும் இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் மோஷன் போஸ்டரும் கூட அதிக வரவேற்பை தூண்டும் விதமாக இருந்தது.

தற்சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டன. இதற்கிடையே சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற ஹிட் படம் கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா ஒரு யோசனையில் இருந்தார்.

அதாவது தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கதையை தமிழிலும் ஹிந்தியிலும் படமாக்கலாம் என முடிவெடுத்தார். தமிழில் சூர்யாவை வைத்து எடுக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா.

அதே சமயம் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலும் கூட சூர்யாவை வைத்து ஜெய்பீமின் அடுத்த பாகம் எடுக்க இருக்கிறார்.

இந்நிலையில் சூர்யா தற்சமயம் சுதா கொங்கரா படத்தில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த படத்தை முடித்த பிறகுதான் ஜெய் பீம் படத்தின் இரண்டாம் வேலைகள் துவங்கும் என கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி – சூர்யாவுக்கு மறுபடியும் ஹிட் படமா?

நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் ஞானவேல் இயக்கி வெளியான திரைப்படம்தான் ஜெய் பீம். உண்மை நிகழ்வை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழும் முக்கிய பிரச்சனைகளை பேசியது.

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது. சீனாவிலும் கூட இந்த படம் திரையிடப்பட்டது.

அங்கும் அதிக அளவிலான வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஞானவேல் இதற்கு முன்னர் கூட்டத்தில் ஒருவன் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

அந்த திரைப்படமும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் படமாக இருந்தது. இந்நிலையில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மீண்டும் ஒரு திரைப்படம் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான வேலைகள் அடுத்த வருடம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.