இயக்குனர் டேவிட் ப்ரைனி இயக்கத்தில் தற்சமயம் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் Eternity. அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளுக்கு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Miles Teller, Elizabeth Olsen, Callum Turner ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இறப்புக்குப் பின்பான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளம் செல்கிறது.
ஜோன் என்கிற பெண் லேரி என்கிற ஒரு நபரை திருமணம் செய்து இருக்கிறார் ஆனால் லாரிக்கு முன்பே இவர் லூக் என்பவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். லூக் இறந்த பிறகு தான் அவர் லேரியை திருமணம் செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் லுக் மற்றும் larry இருவருமே இறந்து விடுகின்றனர். இறப்புக்குப் பின்னான வாழ்வில் சொர்க்கத்தில் தன்னுடைய முதல் கணவரான லூக்கை சந்திக்கிறார் ஜோன்.
இந்த நிலையில் இறப்புக்கு பிறகு உள்ள வாழ்க்கையில் அவர் யார் கூட சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் பிரச்சனை தொடங்குகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் செல்கிறது.
ஏஞ்சல் மற்றும் டீமன்ஸ் என்கிற இந்த திரைப்படம் கிருஸ்துவ மதத்தை அடிப்படையாக கொண்டு செல்லும். இந்த படத்தின் கதைப்படி CERN என்கிற அமைப்பு பாதிரியார் ஒருவரின் கண்காணிப்பில் அணு ஆயுதங்களை செய்து வருகிறது.
அந்த அணு ஆயுதங்களை கடத்தும் இலுமினாட்டி என்கிற மர்ம குழு ரோமில் போப்பையும் கொன்று விடுகிறது. அதனை அடுத்து அடுத்த போப்பாண்டவராக யார் ஆக போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வருகிறது. அதற்காக 5 பேர் இருக்கின்றனர். ஆனால் அந்த ஐந்து நபர்களையுமே இலுமினாட்டி கும்பல் கடத்துகிறது.
இந்த நிலையில் அவர்கள் மர்மமாக கொலை செய்யப்படுகின்றனர். அதை குறித்து கண்டறிவதற்காக பிரபல ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் குறியீடு நிபுணர் ராபர்ட் லாங்க்டனையும் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஒரு பெண்ணையும் வரவழைக்கின்றனர். அவர்கள் இந்த கும்பலின் சதி வேலையை சரி செய்வதே கதையாக இருக்கும். ஏஞ்சல் அண்ட் டீமன்ஸ் படத்தின் தொடர்ச்சியாக டாவின்சி கோட் மற்றும் இன்ஃபட்நோ ஆகிய இரண்டு படங்களும் வந்தன.
உலகையே அழிக்க வல்ல வைரஸ் ஒன்று திடீரென காணாமல் போகிறது. அந்த வைரஸை பரப்புவதன் மூலம் உலகை சரி செய்யலாம் என ஒரு அமைப்பு நினைக்கிறது. அதுதான் வைரஸை திருடுகிறது. பைபிள் கதைப்படி உலகம் பாவங்களின் கூடாரமாக மாறியப்போது அதை கடவுள் அழித்து புது உலகை உருவாக்கினார். அதற்காக பெருவெள்ளத்தை உருவாக்கினார்.
அதே போல இந்த குழுவும் உலகை அழித்து புது உலகை உருவாக்க நினைக்கிறது. இந்த நிலையில் இதை தடுப்பதற்காக பிரபல ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் குறியீடு நிபுணர் ராபர்ட் லாங்க்டனிடம் உதவி கேட்கின்றனர்.
அவர் குறியீடுகள் மூலம் அந்த இயக்கத்தை கண்டறிந்து உலகை காப்பாற்றுவதே கதையாக இருக்கிறது.
இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதுதான் பொதுவாக அனைவரும் நம்பி வரும் விஷயமாக இருக்கிறது. யேசுவின் உருவம் என அனைவரும் நம்புவது பிரபல வரைப்பட கலைஞரான டாவின்சி வரைந்த திருவிருந்து புகைப்படம்தான்.
அந்த புகைப்படத்தில் இயேசு அருகில் ஒரு பெண் இருப்பார். அவர் இயேசுவின் மனைவி என்பதாக இந்த படத்தின் கதை செல்லும். காலம் காலமாக இயேசுவின் வம்சாவளிகளை ஒரு குழு பாதுக்காத்து வரும்.
அதேசமயம் மற்றொரு குழு அந்த வம்சாவளியை அழித்து இயேசுவின் தூய்மையை பாதுக்காக்க வேண்டும் என அழைந்துக்கொண்டிருக்கும். இந்த இரண்டு குழுவுக்கும் இடையே பிரபல ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் குறியீடு நிபுணர் ராபர்ட் லாங்க்டன் அந்த இயேசுவின் வாரிசை தேடி செல்வதை வைத்து படத்தின் கதை அமைந்திருக்கும்.
விக்டர் நவோஸ்கி என்பவர் வேறு நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு வேலையாக வருவார். அந்த சமயத்தில் விக்டரின் தாயகத்தை அந்த நாட்டு இராணுவம் கைப்பற்றிவிடும். இதனால் விக்டரின் பாஸ்போர்ட் செல்லாது எனும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே அவரை நியூ யார்க் சிட்டிக்குள்ளும் அனுப்ப முடியாது.
அவரது நாட்டுக்கும் திரும்ப அனுப்ப முடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்த நிலையில் கென்னடி இண்டர்நேஷனல் ஏர்ப்போட்டிலேயே அவர் இருந்துக்கொண்டு என்ன செய்கிறார் என்பதாக கதை செல்லும். இது ஒரு உண்மையை கதையை தழுவிய படமாகும்.
திறமையான செக் மோசடி செய்யும் ஒரு நபர் இருக்கிறார். கதை 1969 இல் நடக்கிறது. அந்த காலங்களில் கணினி இணையம் வளர்ச்சி பெறவில்லை. இந்த காரணத்தால் ஒரு செக் என்பது ரூபாய் நோட்டு போல ப்ரத்யேகமான இங்க் கொண்டு தனிப்பட்ட பேப்பரில் செய்யப்படுகிறது.
அதை கொண்டுதான் அது நிஜ செக் என்பது உறுதி செய்யப்படும். இந்த நிலையில் பிராங்க் என்னும் நபர் தொடர்ந்து போலி காசோலைகளை செய்து வங்கிகளை ஏமாற்றி வருகிறார். அவரை கண்டுப்பிடிக்கும் காரல் ஹென்றி என்னும் எஃப்.பி.ஐ கதாபாத்திரத்தில் டாம் ஹேங்ஸ் நடித்திருப்பார்.
ஃப்ராங்க் கதாபாத்திரத்தில் டைட்டானிக் புகழ் லியார்னடோ டீகாப்ரியா நடித்திருப்பார். இதுவும்வே கூட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
Cast away
2000 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான சர்வைவல் ட்ராமா திரைப்படம்தான் கேஸ்ட் அவே. கொரியர் நிறுவனத்தில் பணிப்புரியும் சக் நோலண்ட் என்னும் இளைஞன் அந்த கொரியர் ப்ளைட்டில் செல்லும்போது விமானம் விபத்துக்குள்ளாகிறது.
ஆனால் சக் நோலண்ட் அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிவிடுகிறான். ஆனால் அவன் பசுபிக் பெருங்கடலின் நடுவே ஆள் இல்லாத தீவில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து அவன் தப்பிக்க சில வருடங்கள் ஆகின்றன. அதில் எப்படி அவன் வாழ்கின்றான் என்பதே படத்தின் கதையாகும்.
ஹாலிவுட்டில் எப்பொழுதும் பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு பஞ்சமே இல்லை என கூறலாம் அந்த அளவிற்கு ஹாலிவுட்டில் வருகின்ற படங்களில் முக்கால்வாசி படங்கள் அதிக பிரம்மாண்டத்துடன் வருகின்றன. ஆனால் அவற்றில் சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைகின்றன.
மார்வெல் சினிமா , ஸ்டார் வார்ஸ் தொடர்கள் இப்படி சில படங்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன அப்படி 2018 இல் வெளிவந்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் சற்று பிரபலமான ஒரு திரைப்படம் தி மெக்…
இந்த படத்தில் ஜேசன் ஸ்டார்ட்டம் கதாநாயகனாக நடித்திருந்தார் உலகிலேயே மிகப்பெரிய சுறா மீன் ஒன்று கற்பனையாக அந்த படத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை யாரும் பார்க்காத அளவில் பெரிய சுறா மீன் ஒன்றும் அதனுடன் கதாநாயகன் போராடுவது போன்றும் அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சுறா மீன், டைனோசர், பாம்புகள் தொடர்பான படங்கள் வரும்பொழுது அதிலிருந்து தப்பித்து மக்கள் போவது போலவே காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த சுறா மீனை கதாநாயகன் ஜெயிப்பது போல காட்சிகள் அமைந்திருக்கும் அதன் பிறகு தற்சமயம் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் தற்சமயம் மெக் 2 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது. படத்தின் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்
ஹாலிவுட் சினிமாக்களில் விசித்திரமான திரைப்படங்களுக்கு பஞ்சமே கிடையாது. தமிழ்நாட்டில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் போல ஆங்கிலத்தில் த்ரில்லர் நாவல் எழுதுவதற்கு என்றே பிரபலமாக உள்ள எழுத்தாளர்தான் ஸ்டீபன் கிங்.
ஸ்டீபன் கிங்கின் அதிகமான கதைகள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. இவர் எல்லாவிதமான கதைகளையும் எழுதுவார் என்றாலும் ஹாரர் கதைகளே இவரிடம் பிரபலமானவை. அப்படி அவர் எழுதி அவரே கதையாக்கிய திரைப்படம்தான் மேக்ஸிமம் ஓவர்ட்ரைவ்.
படத்தின் கதைப்படி அடையாளம் தெரியாத பச்சை நிற கதிர் ஒன்று பூமியை சூழ்ந்துக்கொள்கிறது. இந்த கதிர் ஏழு நாட்கள் பூமியை சுற்றி நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கதிரின் பாதிப்பால் பூமியில் உள்ள அனைத்து மின்சாரத்தால் இயங்கும் பொருட்களுக்கும் உயிர் வந்துவிடுகிறது. ஏ.டி.எம் மெஷின், ஹேர் ட்ரையரில் துவங்கி ட்ரக் வண்டிகள், ஏரோப்ளேன் என அனைத்திற்கும் உயிர் வந்துவிடுகிறது.
உயிர் வந்ததும் முதல் வேலையாக இவை அனைத்தும் மனிதனை கொல்வதற்கான வேலையில் இறங்குகின்றன. இந்த நிலையில் பல ட்ரக் வண்டிகளுக்கு நடுவே ஒரு கூட்டம் பெட்ரோல் வங்கியில் உள்ள ஒரு கடையில் மாட்டிக்கொள்கிறது. இந்த வண்டிகளிடம் இருந்து மனிதர்கள் தப்பிப்பதே கதையாக உள்ளது.
படத்தில் குறை என பார்த்தால் மின்சாதனங்களுக்கு உயிர் வருவதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ட்ரக் எல்லாம் உயிர் வந்து ஊருக்குள் சுற்றும்போது கார்களுக்கு மட்டும் உயிர் வரவில்லை. அந்த மாதிரி கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் சில மின்சார சாதனங்களுக்கு உயிர் வரவில்லை என்பது முரணான விஷயமாக இருந்தது.
அதை தவிர்த்து படம் ஒரு எண்டர்டெயின்மெண்ட் காம்போ ஆகும். 1986 இல் வந்தாலும் கூட இப்போதும் பார்ப்பவருக்கு ரசனையான படமாக மேக்ஸிமம் ஓவர்ட்ரைவ் இருக்கிறது.
மார்வெல் சினிமாஸில் வெகுநாட்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப் குவாண்டமேனியா திரைப்படம். உலக அளவில் மார்வெல் ரசிகர்கள் இந்த படத்திற்கு காத்திருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
இதுவரை வந்த படங்களில் ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குவாண்டம் உலகில் நடப்பதால் படத்தின் மொத்த காட்சி அமைப்பும் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் மிஸ் மார்வல் மற்றும் கேப்டன் மார்வெல் வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்ட் மேன் கதாபாத்திரத்தின் மகளுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது.
இனி வரும் ஆண்ட் மேன் திரைப்படங்களில் இவர்தான் ஆண்ட் மேனாகவோ அல்லது வாஸ்ப்பாகவோ வருவார் என கூறப்படுகிறது. ரசிர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
வீடுகளில் டிவிடி ப்ளேயர்கள் இருந்த காலக்கட்டங்களில் பேய் படம் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது ஈவில் டெட் என்கிற திரைப்படம்தான்.
ஒற்றை கையில் ரம்பத்தை மாட்டிக்கொண்டு பேய்களை அறுத்து தள்ளும் நாயகனை பலரும் அப்போது வியந்து பார்த்திருப்போம். அதற்கு பிறகு எவ்வளவோ திரைப்படங்கள் வெளிவந்த பிறகும் ஈவில் டெட் திரைப்படம் தந்த அனுபவத்தை அவை தந்திருக்குமா? என்பது சந்தேகமே?
இந்த நிலையில் ஈவில் டெட் ரைஸ் என்கிற பெயரிலே புது பேய் படம் ஹாலிவுட்டில் தயாராகி வருகிறது. படத்தின் கதைப்படி மூன்று குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தையின் அம்மாவிற்கு பேய் பிடித்துவிடுகிறது. அவளிடமிருந்து குழந்தைகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதாக கதை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இது முதல் பாகம்தான். படத்தின் வெற்றியை பொறுத்து அடுத்தடுத்த பாகங்கள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனாலும் பழைய ஈவில் டெட் படத்திற்கும் இதற்குமிடையே எந்த வித ஒற்றுமையும் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் அதிருப்தி காட்டி வருகின்றனர்.
இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் டீசர் ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.
ஹாலிவுட் என்பது பெரும் மார்க்கெட்டை கொண்ட சினிமா துறையாகும். இதனால் ஹாலிவுட் திரைப்படங்கள் எளிதாக பல கோடிகள் வசூல் செய்துவிடும்.
ஆனாலும் உலக அளவில் ஹாலிவுட் திரையுலகை விஞ்சும் வகையில் சில படங்களும் டாப் 10க்குள் அரிதாக வருவதுண்டு. எனவே உலக அளவில் டாப் 10 வசூல் சாதனை படைத்த திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.
10.மூன் மேன் – Moon Man
மூன் மேன் என்பது ஒரு சீன திரைப்படமாகும். விஞ்ஞான படமாகவும், அதே சமயம் நகைச்சுவை திரைப்படமாகவும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. சந்திரனுக்கு செல்லும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக சந்திரனிலேயே மாட்டிக்கொள்கிறார்.
அங்கிருந்து எப்படி தப்பிக்க போகிறார் என்பதே படத்தின் கதை. இந்த படம் உலக அளவில் $460,237,662 டாலர்கள் வசூல் சாதனை செய்தது.
09.வாட்டர் கேட் ப்ரிட்ஜ் – Water Gate Bridge
வாட்டர் கேட் ப்ரிஜ்ட் ஒரு சீன திரைப்படமாகும். The Battle at Lake Changjin என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரியாவில் போர் நடக்கும்போது சீனாவை சேர்ந்த தன்னார்வ குழு ஒன்று அவர்களுக்கு உதவி செய்ய செல்கிறது. அந்த சமயத்தில் அவர்கள் செல்லும் பாதையில் அமெரிக்க படைகள் வருகின்றன. அவர்களை இந்த தன்னார்வ குழு எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை வைத்து கதை செல்கிறது.
இந்த படம் உலக அளவில் $626,571,697 வசூல் சாதனை செய்துள்ளது.
08.தோர் லவ் அண்ட் தண்டர் – Thor Love and Thunder
இந்த வருடம் வெளியான மார்வல் திரைப்படங்களில் மிகவும் நகைச்சுவையான ஒரு திரைப்படம் தோர் லவ் அண்ட் தண்டர்.
எண்ட் கேம் படத்திற்கு பிறகு தோர் கதாபாத்திரம் அமைதியாக வாழ்ந்து வருகிறது. அந்த சமயத்தில் கடவுளை கொலை செய்யும் வில்லன் ஒருவன் ஆஸ்கார்ட் மக்களின் குழந்தைகளை கடத்தி செல்ல, அவனிடம் இருந்து குழந்தைகளை மீட்க தோர் மேற்கொள்ளும் சாகசங்களே படத்தின் கதையாக உள்ளது.
இந்த படம் மொத்தமாக $760,928,081 டாலர்களுக்கு ஓடி சாதனை படைத்தது.
07.பேட்மேன் – Batman
டிசி நிறுவனத்திற்கு அடிக்கடி தங்களது சூப்பர் ஹீரோக்கள் கதைகளை முதலில் இருந்து எடுப்பதே வேலை. அப்படியாக புதிதாக வந்த பேட்மேனின் கதைதான் இந்த பேட்மேன் திரைப்படம்.
கோத்தம் சிட்டியில் நடக்கும் தவறுகளை கண்டறிய பேட்மேனே துப்பு துலக்குவது போல இந்த படம் அமைந்துள்ளது.
இந்த படம் அமெரிக்க டாலர்களில் $770,836,163 டாலருக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது.
06.ப்ளாக் பாந்தர் வகாண்டா பார் எவர் – Black panther Wakanda Forever
மார்வெல் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான மற்றுமொரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படம்தான் ப்ளாக் பாந்தர் வகாண்டா பார் எவர்.
ப்ளாக் பாந்தர் முதல் பாகத்தில் கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் இறந்த காரணத்தினால் இந்த படத்திற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
படக்கதைப்படி வகாண்டாவின் தலைவனான ப்ளாக் பாந்தர் இறந்து போக, அவரது இடத்தை பிடிக்கும் ப்ளாக் பாந்தரின் தங்கை ஷூரி எப்படி ஒரு தலைவியாய் மாறுகிறாள் என கதை செல்கிறது.
இந்த படத்தின் மொத்த வசூல் $801,155,401 டாலர்கள்
05.அவதார் த வே ஆஃப் வாட்டர் – Avatar the Way of the water
2009 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் அவதார் த வே ஆஃப் வாட்டர்.
கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகி பத்தே நாட்களில் உலக பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது அவதார். படம் வெளியாகி இதுவரை இந்த படம் $881,381,686 டாலர்கள் வசூல் செய்துள்ளது.
04.Minions: The Rise of Gru
இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் டாப் 10க்குள் வந்த ஒரே ஒரு அனிமேஷன் திரைப்படம் மினியன்ஸ் ரைஸ் ஆஃப் க்ரு. டெஸ்பிகபிள் மீ என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் எடுக்கப்பட்டது.
பெரும் வில்லனாக இருக்கும் க்ரூ எப்படி சிறு வயது முதலே வில்லதனமாக இருந்தார் என்பதை நகைச்சுவையாக கூறும் திரைப்படம் மினியன்ஸ் த ரைஸ் ஆஃப் க்ரூ.
இந்த படம் மொத்தம் $939,433,210 டாலர்கள் வசூல் சாதனை செய்தது.
03. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் – Doctor Strange Multiverse of Madness
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் மாய மந்திரங்கள் நிறைந்த படமாகும். மல்டிவெர்ஸை பயன்படுத்தி தனது இழந்த வாழ்க்கையை பெற நினைக்கும் ஸ்கேர்லெட் விட்ச். அதிலிருந்து உலகை காக்க போராடும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என படத்தின் கதை செல்கிறது.
மொத்தமாக $955,775,804 டாலர்கள் வசூல் செய்தது இந்த படம்
02.ஜூராசிக் வேல்டு – டொமினியன் – Jurrassic World – Dominion
ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட திரைப்படம் ஜூராசிக் வேல்டு. அதன் இறுதி பாகமாக வெளியான ஜூராசிக் வேல்டு டொமினியன் மிகவும் பிரபலமானது.
ஏனெனில் ஜூராசிக் பார்க் படத்தில் இருந்த நட்சத்திரங்கள் இதிலும் நடித்திருந்தனர். பூமிக்குள் பரவ துவங்கும் டைனோசர் இனம் எப்படி மனித இனத்தோடு சேர்ந்து வாழ துவங்குகிறது என்பதை விளக்கும் விதமாக இந்த படத்தின் கதை செல்கிறது.
இந்த படம் $1,001,136,080 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்தது.
01.டாப் கன் மாவ்ரிக் – Top Gun Maverick
30 வருடங்களுக்கு முன்பு வெளியான டாப் கன் திரைப்படத்தின் அடுத்த பாகமாக டாப் கன் மாவ்ரிக் எடுக்கப்பட்டது.
நடிகர் டாம் க்ரூஸ் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். விமான பைலட்டாக இருக்கும் கதாநாயகன் ஒரு சிறப்பு ஆப்ரேஷனுக்காக ட்ரெயினிங் கொடுக்க வருகிறார்.
மிகவும் கடினமான இந்த ஆப்ரேஷனில் எப்படி ஜெயிக்கிறார்களே என்பதே கதை. இந்த படம் மொத்தமாக $1,488,732,821 அமெரிக்க டாலர்களுக்கு ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த வருடம் வந்த திரைப்படங்களில் டாப் கன் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் அவதார் திரைப்படம் இந்த இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தில் விஜய் அஜித் போல ஹாலிவுட்டில் சண்டை போட்டுக்கொள்ளும் இரு போட்டி நிறுவனங்களில் ஒன்று மார்வெல் மற்றொன்று வார்னர் ப்ரதர்ஸ் அல்லது டிசி.
இரண்டு நிறுவனங்களுமே வரிசையாக சூப்பர் ஹீரோ திரைப்படங்களை தயாரித்து வருகின்றன. மார்வெல் எப்போதும் பல படங்களை ஒன்றிணைத்து ஒரு படத்தில் கொண்டு வந்து முடிக்கும்.
ஆனால் டி.சி அப்படி செய்ததே கிடையாது. ஏனெனில் டிசி அடிக்கடி படத்தின் நாயகர்கள் மற்றும் இயக்குனர்களை மாற்றியதே இதற்கு காரணமாகும்.
இதனால் பல படங்கள் ஒரே கதையை கொண்டு ஹீரோக்களை மட்டும் மாற்றி மாற்றி எடுத்துள்ளது டி.சி. இந்நிலையில் தற்சமயம் மேன் ஆஃப் ஸ்டீல், ஜெஸ்டிஸ் லீக், ப்ளாக் ஆடம் ஆகிய படஙக்ளில் சூப்பர் மேனாக நடித்தவர் ஹென்றி கேவில்.
தற்சமயம் அவரை சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் இருந்து நீக்கியுள்ளது டி.சி நிறுவனம். ஏற்கனவே பேட்மேனையும் இதே போல மாற்றியுள்ளது டி.சி நிறுவனம்.
இதனால் ஹென்றி கேவிலின் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு முன்பு பெண்டாஸ்டிக் பீஸ்ட் படத்திலும் க்ரிண்டல்வேல்ட் கதாபாத்திரத்தில் இருந்து ஜானி டெப்பை டிசி நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
எனவே அடுத்து வரவிருந்த ஜெஸ்டிக் லீக்கின் அடுத்த பாகம் வராது என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கிருஸ்மஸ் சாதரண பண்டிகையாக இருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக கிருஸ்மஸ் உள்ளது. எனவே கிருஸ்மஸ் தொடர்பான திரைப்படங்களும் கூட வெளிநாடுகளில் அதிகமாக வெளியாகின்றன.
அப்படியாக இந்த வருடம் வெளியான திரைப்படம்தான் falling for christmas என்கிற திரைப்படம். படக்கதைப்படி சியாரா ஒரு கார்ப்பரேட் முதலாளியின் மகள், ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலத்தை இவர் காதலித்து வருகிறார். கிருஸ்மஸை கொண்டாட இவர்கள் ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள்.
பனிமலையை ஒட்டியுள்ள அந்த கிராமத்தில் ஒரு லாட்ஜ் வைத்து நடத்தி வருபவர்தான் கதாநாயகன் ஜேக். இந்த நிலையில் காதலனுடன் மலைக்கு செல்லும் சியாரா அங்கு விபத்தாகிறார். அவரை கண்டறியும் ஜேக் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்.
தலையில் அடிப்பட்டதால் தான் யார் என்பதையே மறக்கிறார் சியாரா. எனவே ஜேக் அவரது லாட்ஜில் சியாராவை தங்க வைக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் வருகிறது. அதே சமயம் அந்த லாட்ஜ் நஷ்டத்தில் போய் கொண்டிருப்பதால் அதையும் கூட விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் கதாநாயகனின் காதல் கை கூடுமா? அந்த லாட்ஜை அவர் எப்படி காப்பாற்ற போகிறார்? என்பது கதையாக செல்கிறது. இந்த வருட கிருஸ்மஸ்க்கு பார்ப்பதற்கு ஏற்றப்படம் என இதை கூறலாம்.
நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்த படம் தமிழ் மொழியில் கிடைக்கிறது.
ஒவ்வொரு வருடம் குழந்தைகளுக்கான சிறப்பான கார்ட்டூன் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது ஹாலிவுட் சினிமாவின் முக்கியமான வேலையாகும்.
அந்த வகையில் 2021 இல் வெளியான மிகவும் குதுகலமான நகைச்சுவையான திரைப்படம்தாம் மிட்சில் வெர்சஸ் மெஷின் என்கிற இந்த ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம்.
இந்த படத்தின் இயக்குனர் மிச்சேல் ரியாண்டா, தனது வாழ்வில் அவரது குடும்பத்தின் இனிமையான நினைவுகளை ஒரு கற்பனை கதைக்குள் புகுத்தி இந்த கதையை எடுத்திருக்கிறார் என கூறலாம்.
படம் அதிகமான நகைச்சுவை காட்சிகளை கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக சென்றது. இந்த படம் இதுவரை 46 விருதுகளை உலக அளவில் பெற்றுள்ளது.
ஒரு குடும்பத்தின் கதைதான் இந்த படம். கேட்டி என்கிற பெண் சிறு வயது முதலே படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரது வீட்டில் அதற்கு எந்த ஒரு ஆதரவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள பட இயக்கம் தொடர்பான ஒரு பள்ளிக்கு செல்வதன் மூலம் தனது கனவை அடையலாம் என நினைக்கிறார் கேட்டி.
அவரது மனநிலையை புரிந்துக்கொண்ட அவரது குடும்பம், காரில் குடும்பமாக சென்று அவரை கலிபோர்னியாவில் விடுவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். இந்த நிலையில் பேல் என்கிற செயற்கை நுண்ணறிவு ஒன்று இந்த உலகத்தை கைப்பற்ற நினைக்கிறது. எனவே உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் சிறைப்பிடிக்க ரோபோ ஆர்மியை அனுப்புகிறது.
அந்த ரோபோ ஆர்மியிடம் இருந்து கேட்டியின் குடும்பம் மட்டும் தப்பிக்கிறது. ஏனைய மனிதர்கள் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பு இந்த குடும்பத்திற்கு வருகிறது. இத்தனை கருத்து வேறுபாடுகளுக்கு நடுவே கேட்டி அவளது குடும்பத்துடன் இணைந்து எப்படி இவற்றை சரி செய்ய போகிறாள் என்பதே கதை.
இந்த போராட்டங்களுக்கு நிலையில் கேட்டிக்கு அவள் குடும்பத்துடன் உள்ள உறவு எந்த நிலைக்கு செல்கிறது என்பதையும் படம் விளக்குகிறது. இந்த நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழில் கிடைக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? முடியாதா? என்பதுக்குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைப்பெற்று வருகிறது. இந்தியாவில் கூட செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் குடிக்க தண்ணீர் இல்லாத, சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாத செவ்வாய் கிரகத்தில் ஒரு மனிதன் மாட்டி கொண்டால் என்னவாகும் என்பதை கருவாக கொண்டு 2015 ஆம் ஆண்டு வந்த படம்தான் த மார்ஷியன்.
இந்த படத்தை ரிட்லி ஸ்காட் என்னும் இயக்குனர் இயக்கியிருந்தார். இதில் நாயகராக மார்க் வெட்னி நடித்திருந்தார்.
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி தளமானது செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு குழுவை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. அந்த குழுவும் நல்லப்படியாக செவ்வாய் கிரகம் சென்று அங்கு உள்ளவற்றை ஆராய்ச்சி செய்கிறது.
இந்நிலையில் திடீரென செவ்வாய் கிரகத்தில் புயல் வீச துவங்குகிறது. இதனால் ஆராய்ச்சி செய்யும் அணி தனது விண்கலத்திற்கு சென்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அதிகமாக அடித்த காற்றினால் ஒரு சிக்னல் டவர் பறந்து வந்து ஆராய்ச்சியாளர் குழுவில் உள்ள மேட் டாமன் என்கிற நபர் மீது மோத அவர் பறந்து போய் எங்கோ விழுகிறார்.
அவர் இறந்துவிட்டார் என்று நினைத்த விண்வெளி குழு அங்கிருந்து கிளம்புகிறது. ஆனால் அவர் இறக்கவில்லை சிறு அடியுடன் தப்பிக்கிறார். ஆனால் அவர் விழிப்பதற்குள் விண்வெளி களம் அவரை விட்டு வெகுதூரம் சென்றுவிடுகிறது.
எப்படியும் இவர் இருக்கும் தகவல் அறிந்து இன்னொரு விண்வெளி தளத்தை அனுப்ப வேண்டும் என்றாலும் கூட அதற்கு 2 வருட காலம் ஆகும். ஏனெனில் அத்தனை தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.
இந்நிலையில் இரண்டு வருடம் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு அவருக்கு இருக்கும் ஒரே வழி அங்கு ஆராய்ச்சி குழு விட்டு சென்ற பொருட்கள்தான். ஆமாம் ஆராய்ச்சி குழு அங்கே தங்கி இருப்பதற்கு ஒரு கொட்டகையை போட்டிருப்பர். அங்கு நவீன பொருட்கள் பல இருக்கும்.
முக்கியமாக அந்த கொட்டகை செவ்வாய் கிரகத்தில் இருக்கும் காற்றை இழுத்து அதில் உள்ள ஆக்ஸிஜனை பிரித்து கொடுக்கும். மேலும் அங்கு உள்ள உபகரணங்களை சோலார் ப்ளேட் கொண்டு சார்ஜ் செய்துக்கொள்ளலாம். தாவரவியல் விஞ்ஞானியான கதாநாயகன் 2 வருடங்களுக்கு தேவையான அளவில் உருளைகிழங்குகளை விவசாயம் செய்கிறார்.
அதன் பிறகு அவர் எப்படி உயிர் பிழைக்கிறார், முதலில் உயிர் பிழைப்பாரா?, பூமியை அடைவாரா?, செவ்வாய் கிரகத்தில் எப்படி விவசாயம் செய்ய முடியும்? இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழலாம்.
படத்தை பார்ப்பதன் மூலம் அதற்கு உங்களால் விடை காண முடியும். இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது.