Tag Archives: hotstar

ஹாட்ஸ்டாரில் வரும் காமெடி போலீஸ் சீரிஸ்.. Police Police hotstar TV Series

ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் வாங்கியது முதலே நிறைய புது புது சீரியஸ்கள் என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது.

முக்கியமாக இந்தியாவில் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் நிறைய விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. தமிழிலும் நிறைய தொடர்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறது ஹாட்ஸ்டார் நிறுவனம். அந்த வகையில் தற்சமயம் போலீஸ் போலீஸ் என்கிற ஒரு சீரிஸை ஹாட் ஸ்டார் உருவாக்கி இருக்கிறது.

சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக பிரபலம் அடைந்த நடிகர் செந்தில் இதில் போலீஸாக நடித்திருக்கிறார். இந்த சீரிஸ் முழுக்க முழுக்க ஒரு காமெடியான சீரிஸாக இருக்கும் என்று தெரிகிறது.

இதன் ப்ரோமோ இப்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. விரைவில் இது எப்போது வெளியாகும் என்கிற தேதியும் சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OTT Watch: திரும்ப வரும் காணாமல் போன பையன்.. பிரித்திவிராஜ் நடித்த Sarzameen Movie Review

சலார் திரைப்படத்திற்கு பிறகு பிரித்விராஜ் தேர்ந்தெடுக்கும் கதை களங்களில் நிறைய மாறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான சலார் திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் மூலம் பிரித்விராஜுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அவர் கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் பிரித்திவிராஜுக்கு இருந்த கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்தது.

இந்த நிலையில் பிரித்திவிராஜ் நடித்து தற்சமயம் ஓடிடியில் வெளியான திரைப்படம் Sarzameen. Sarzameenதிரைப்படத்தைப் பொறுத்தவரை இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி ராணுவ வீரராக இருக்கிறார் நடிகர் பிரித்திவிராஜ். ஒரு கட்டத்தில் தீவிரவாதிகள் பிரித்விராஜின் மகனை கடத்தி செல்கின்றனர் அவர்கள் கேட்கும் விஷயத்தை பிரித்விராஜ் செய்யாததால் அவரது மகனை கொன்று விடுகின்றனர்.

ஆனால் எட்டு வருடம் கழித்து இறந்த மகன் திரும்ப வருகிறான் அவன் எதற்காக வந்துள்ளான் ஒரு வேலை தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பானா என்று பிரித்விராஜ்க்கு பல கேள்விகள் மனதிற்குள் ஓடுகின்றது. இதற்கு நடுவே இவர்கள் இருவருக்கும் இடையே என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் செல்கிறது.

ஓடிடி வெளியீட்டுக்கு தயாரான டூரிஸ்ட் பேமிலி – எப்போ ரிலீஸ் தெரியுமா?

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இப்போது வரை அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஃபேமிலி மேன். இந்த திரைப்படத்தில் நடிகர் சசிக்குமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்திற்கு இந்த திரைப்படம்தான் முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படம் குறித்து ஒரு குடும்பத்தை மட்டும் அடிப்படையாக வைத்து செல்கிறது.

வர வர சினிமாவில் ஆக்‌ஷன் படங்களுக்குதான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் குடும்ப படங்களின் வருகை என்பது குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழில் வரும் குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படங்களுக்கு தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் எப்போது இந்த படம் ஓ.டி.டிக்கு வரும் என சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். ஏனெனில் திரையரங்க கட்டணங்கள் என்பது எல்லா மக்களுக்கும் கட்டுபடியாகும் அளவில் இல்லை. இதனால் ஓ.டி.டி வழியாக படத்தை பார்ப்பவர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர்.

அதன்படி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே 31 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது.

20 வருடங்களுக்கு முன்பு உலகை உலுக்கிய சுனாமி… நிஜ வீடியோக்கள் வழியாக காட்டும் ஆவணப்படம்.. தமிழில்..!

20 வருடங்களுக்கு முன்பு உலகையே புரட்டி போட்ட ஒரு விஷயமாக சுனாமி இருந்தது. டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிற்கு அருகில் கடலில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தின் காரணமாக இரண்டு பக்கமும் பெரிய அலைகள் உருவானது.

ஒரு பக்கம் இந்தோனேசியா தாய்லாந்து மாதிரியான நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்றொரு பக்கம் இலங்கை இந்தியா கென்யா மாதிரியான தேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுனாமியால் வந்த அழிவு:

இவ்வளவு பெரிய இயற்கை பேரழிவை இதற்கு முன்பு வரலாற்றில் மனித குலம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இல்லாத காரணத்தினால் முன்கூட்டியே சுனாமி குறித்த விஷயங்கள் ஹவாய் தீவுகளில் கண்டறியப்பட்டாலும் கூட அவர்களால் அந்த தகவலை அனைத்து நாட்டிற்கும் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில் அந்த சமயத்தில் சுனாமியை ஒவ்வொரு நாடும் எப்படி கையாண்டது என்பதை அப்பொழுது இருந்த சுற்றுலாப் பயணிகள் போன்றோர் எடுத்த வீடியோக்களின் அடிப்படையில் ஆவணப்படுத்தி இருக்கிறது நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம்.

Tsunami race against time என்கிற இந்த ஆவணப்படம் நாம் இதுவரை சுனாமி பற்றி காணாத பல விஷயங்களை கூறுவதாக இருக்கிறது. தற்சமயம் ஹாட்ஸ்டார் இல் தமிழில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படத்தில் மூன்று தொடர்கள் தமிழில் வந்துள்ளன இன்னும் ஒரு தொடர் மட்டும் தமிழில் வர வேண்டி இருக்கிறது சுனாமி பற்றிய மிக முக்கியமான விஷயங்களை பேசும் ஒரு ஆவண படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100 பேருடன் உறவு வச்சிக்கணும்.. சீரிஸிற்காக ஒப்புக்கொண்ட நடிகை வேதிகா..!

முனி திரைப்படத்தின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வேதிகா அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தது. பிறகு காளை திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வந்தார் நடிகை வேதிகா.

போகப்போக அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின பொதுவாகவே நடிகைகளை பொறுத்த வரை அவர்களுக்கு எவ்வளவு வேகத்திற்கு வரவேற்புகள் அதிகரிக்கிறதோ அதே அளவில் குறைந்துவிடும் என்று கூறலாம்.

வேதிகாவுக்கு கிடைத்த வரவேற்பு:

அந்த வகையில் நடிகை வேதிகாவிற்கு வெகு சீக்கிரத்திலேயே வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கிவிட்டன. ஆனாலும் தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வந்து கொண்டுள்ளார். இதற்கு நடுவே முனி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் பெரிதான வாய்ப்பு என்றெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது சாதாரணமான ஒரு கதாபாத்திரத்தில்தான் நடித்தார் வேதிகா. இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில் டிவி சீரிஸ்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதை அறிந்தார் வேதிகா.

அதனை தொடர்ந்து ஒரு டிவி சீரியஸில் முக்கிய கதாபாத்திரமாக களமிறங்கி இருக்கிறார் யக்ஷினி என்கிற இந்த டிவி சீரியஸை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த சீரியஸ் முழுக்க கவர்ச்சியான ஒரு தோற்றத்தில் வருகிறார் வேதிகா.

புதிய வாய்ப்பு:

ஏனெனில் யக்‌ஷி என்பதே ஆண்களை மனம் மயக்கி அவர்களை கொலை செய்யும் ஒரு துர் தேவதையாக பார்க்கப்படுகிறது என்னும் பொழுது அந்த கதாபாத்திரத்தில் வரும் வேதிகா எப்போதுமே கவர்ச்சியாக உடை அணிந்து வெளிப்படுகிறார்.

மேலும் இந்த சீரியஸின் கதைப்படி 100 ஆண்களுடன் உறவு கொண்டு அவர்களை கொலை செய்தால்தான் வேதிகா அவருடைய உலகத்திற்கு செல்ல முடியும் என்று கதை இருக்கிறது இந்த நிலையில் நூறாவது நபரை எப்படி கொலை செய்கிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது.

கதை கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் கூட வெகு நாட்கள் கழித்து கிடைக்கும் வாய்ப்பு விட வேண்டாம் என்று இதற்கு ஒப்பு கொண்டு  நடித்துள்ளார் வேதிகா தற்சமயம் இந்த தொடர் ஹாட்ஸ்டார் இல் ரிலீஸ் ஆகி உள்ளது.

வெளியானது மிஸ் மார்வெல் –  மார்வெல்லின் முதல் இந்திய சூப்பர் ஹீரோ

ஹாலிவுட்டில் தொடர்ந்து சூப்பர் ஹீரோ படங்களையும், தொடர்களையும் வெளியிட்டு வரும் நிறுவனமாக மார்வெல் உள்ளது. ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படங்களில் முக்கியமான படங்களாக எப்போதும் மார்வெல்லின் திரைப்படங்கள் இருக்கும்.

இதுவரை மார்வெல் படங்களில் வந்த கதாபாத்திரங்கள் அதிகப்பட்சம் அமெரிக்கர்களாகவே இருக்கும், அயர்ன் மேன், ஹல்க், ஸ்பைடர் மேன் என பலரும் அமெரிக்க ஹீரோக்களாகவே இருந்துள்ளனர்.

ஆனால் இந்தியாவிலும் மார்வலுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே மார்வெல் நிறுவனம் இந்தியாவிற்கான ஒரு சூப்பர் ஹீரோவாக மிஸ் மார்வெல் தொடரை எடுத்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் சூப்பர் ஹீரோவாக மாறுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கு இந்தியாவில் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் அதன் முதல் எபிசோட் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நாளை இந்த தொடர் குறித்த டிவீவ்களை எதிர்ப்பார்க்கலாம்.