Tag Archives: Jai bhim

ஜெய்பீம் மாதிரி கதை அமைப்பில் களம் இறங்கிய பருத்திவீரன் சரவணன்…  சட்டமும் நீதியும் ட்ரைலர்..!

தமிழில் அஜித் விஜய் காலகட்டங்களில் இருந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் சரவணன்.

ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது. கமர்சியல் திரைப்படங்களை காட்டிலும் குடும்ப திரைப்படங்கள் மீது அவர் அதிக ஈடுபாடு காட்டியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரவணன் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். சித்தப்பு என்கிற அவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் சரவணன்.

இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வரும் வெப் சீரிஸ் ஒன்று அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. சட்டமும் நீதியும் என்கிற ஜீ5 வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் சரவணன்.

இந்த வெப் சீரிஸை பாலாஜி செல்வராஜ் என்பவர் இயக்குகிறார். நீதிமன்றத்தில் சின்ன வேலைகளை பார்த்து வரும் ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார் சரவணன். இந்த நிலையில் ஒரு நபர் தீக்குளித்து இறந்து விடவே அந்த வழக்கை கையில் எடுக்கிறார் சரவணன்.

அதில் அவர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பதாக கதை செல்கிறது ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் கிரிமினல் ஜஸ்டிஸ் என்கிற தொடருக்கு இணையான ஒரு தொடராக இது இருக்கிறது. எப்படியும் இது சரவணனுக்கு வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா அனுமதி கொடுக்கலைனா அது நடந்திருக்காது.. உண்மையை உடைத்த நடிகர் மணிகண்டன்.!

ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் மணிக்கண்டன். அதற்கு முன்பே மணிகண்டன் விக்ரம் வேதா, ககக போ ஆகிய திரைப்படங்களில் எல்லாம் நடித்து வந்துள்ளார்.

சொல்லப்போனால் மிகவும் போராடிதான் மணிகண்டன் நடிப்பதற்கான வாய்ப்பையே பெற்றார். ஜெய் பீம் திரைப்படத்தில் சில நிமிடங்களே வரும் காட்சி என்றாலும் கூட மணிகண்டனின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

மேலும் மணிகண்டன் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு குட் நைட், லவ்வர் மாதிரியான திரைப்படங்களில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. மேலும் சமீபத்தில் அவருடைய நடிப்பில் நான்காவது திரைப்படமாக குடும்பஸ்தன் திரைப்படம் வெளியானது.

manikandan

இந்த நிலையில் தனது பழைய நினைவு ஒன்றை பகிர்ந்துள்ளார் மணிகண்டன். அதில் அவர் கூறும்போது ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்து வந்த அதே சமயத்தில்தான் நான் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படத்திலும் பணிப்புரிந்து வந்தேன்.

ஆரம்பத்தில் இயக்குனர் ஞானவேல் அழைத்தப்போது படம் நடிக்க அழைக்கிறார் என்றே தெரியாது. பிறகுதான் நான் ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் பண்ண வேண்டும் என கூறினார் ஞானவேல்.

நான் இதுக்குறித்து நயன்தாரா மேடமிடம் கேட்டேன். அதன் பிறகு நயன்தாரா மேம் எனக்கு அனுமதி கொடுத்து 20 நாட்களில் நான் நடித்துக்கொடுத்த படம்தான் ஜெய் பீம் என கூறியுள்ளார் மணிகண்டன்.

அந்த மக்களை பார்த்துதான் உண்மையான வாழ்க்கையை கத்துக்கிட்டேன்.. மணிகண்டனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லி கொடுத்த நிகழ்வு!.

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்து வருகிறார் நடிகர் மணிகண்டன். இவருக்கு ஜெய் பீம் திரைப்படம் முக்கியமான திரைப்படம். அதற்கு முன்பு காலா மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட ஜெய் பீம் திரைப்படத்தில்தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் மணிகண்டன்.

அந்த படத்தின் மூலமாக பிறகு குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குட் நைட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த லவ் டுடே திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மணிகண்டன் தற்சமயம் தனது சம்பளத்தையும் நான்கு கோடியாக அவர் உயர்த்தி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

manikandan

இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். அதில் கூறும் பொழுது பழங்குடியின மக்களாக நான் நடிக்க இருந்ததால் பழங்குடியின மக்களோடு சேர்ந்து வாழ்ந்து பார்த்தால்தான் அந்த கதாபாத்திரத்தில் சரியாக நடிக்க முடியும் என்று இயக்குனர் என்னை அந்த மக்களோடு வாழ விட்டார்.

அப்பொழுதுதான் அந்த மக்கள் எவ்வளவு வறுமையில் தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பதே எனக்கு புரிந்தது. ஒரு மாதம் அந்த மக்களுடன் நான் வாழ்ந்து வந்தேன். எந்த ஒரு விஷயமும் அவர்களிடம் இல்லை என்றாலும் கூட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அப்போதுதான் ஒரு விஷயம் எனக்கு புரிந்தது. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் ஏதாவது ஒன்று கிடைத்தால்தான் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. முதலில் நாம் மனதில் நினைக்க வேண்டும் நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று அப்பதான் நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் இவ்வளவு துன்பங்களுக்கு இடையில் இவர்களே மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்பதுதான் எனக்கு அப்பொழுதைய கேள்வியாக இருந்தது என்று கூறுகிறார் மணிகண்டன்.

செங்கல் சூளையில் வேலைக்கு அனுப்பிட்டார்!.. இயக்குனரிடம் வசமாக சிக்கிய ஜெய் பீம் நடிகர்!..

jai bhim actor manikandan: திரைப்படங்களை வெறும் கடமைக்காக எடுக்காமல் அதில் பல நுட்பங்களை கையாளக்கூடிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உண்டு. சிலர் மிகவும் ஆராய்ச்சி செய்து பாடுபட்டு நிறைய வேலைகள் பார்த்து ஒரு படத்தை எடுப்பார்கள்.

அப்படி எல்லாம் எந்த ஒரு கடுமையான வேலையும் பார்க்காமல் சும்மா சில கதைகளை காப்பி அடித்து படம் எடுப்பவர்களும் சினிமாவில் உண்டு. அப்படியே சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஞானவேல்.

ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஞானவேல் அடுத்தது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து தற்சமயம் படம் இயக்கி வருகிறார். போலீஸ்களின் போலி என்கவுண்டர்களை மைய கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் கிட்டத்தட்ட 90 நாட்கள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெய் பீம் திரைப்படம் 45 நாட்கள்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு படத்தில் பணி புரிந்த மணிகண்டன் மற்றும் கதாநாயகி லிஜோமல் ஜோஸ் இருவரையுமே அந்த பழங்குடியின சமூகத்திடம் ஒரு மாதம் வேலை பார்க்க விட்டிருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.

ஏனெனில் அப்பொழுதுதான் அந்த சமூகத்தை குறித்து இவர்களால் தெரிந்து கொள்ள முடியும் தத்துரூபாவாக அவர்கள் போலவே இவர்களால் நடிக்க முடியும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர்.

இதனால் செங்கல் சூளையில் எல்லாம் மணிகண்டன் வேலை பார்த்து இருக்கிறார் இந்த படப்பிடிப்பின் வீடியோக்கள் தற்சமயம் வெளியாகி உள்ள நிலையில் அவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

தம்பி உனக்கு சோறு போட்டு எனக்கு முடியல!.. ஹோட்டல் ஓனரை கதறவிட்ட குட்நைட் நடிகர்.

Tamil Actor Manikandan: தமிழில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வந்து தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் ஜெய்பீம் மணிகண்டன். ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் மணிக்கண்டன்.

அதன் பிறகு காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ஜெய் பீம். ஜெய் பீம் திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மணிக்கண்டன்.

அதனை தொடர்ந்து தமிழில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அந்த வகையில் லோ பட்ஜெட்டில் மணிக்கண்டன் தற்சமயம் நடித்த திரைப்படம் குட் நைட். தற்சமயம் ஒரு பேட்டியில் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து வந்தார் மணிக்கண்டன்.

அதில் அவர் கூறும்போது, கல்லூரி காலங்களில் நான் மிகவும் அதிகமாக சாப்பிடுவேன். அப்போது அங்கு ஒரு ஹோட்டல் இருந்தது. அதில் அன்லிமிடெட் சாப்பாடு 35 ரூபாய்தான் விற்கும். அங்கே சென்று எப்போதும் பல தடவை உணவு வாங்கி சாப்பிடுவேன்.

இப்படி சாப்பிடுவதால் எனக்கு சாப்பாடு போடவே பயப்பட ஆரம்பித்துவிட்டார் ஹோட்டல் ஓனர் என தனது அனுபவத்தை மணிக்கண்டன் பகிர்ந்திருந்தார்.

இதெல்லாம் ரொம்ப தப்புங்க… தேசிய விருதால் கடுப்பான தமிழ் ரசிகர்கள்!..

எந்த ஒரு துறையிலும் பெரிய அங்கீகாரமாக விருதுகள் பார்க்கப்படுகின்றன. தமிழ் சினிமாவிலும் கூட மக்கள் விருதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு திரைப்படத்திற்கு விருது வழங்குவது என்பது அந்த படத்திற்கான பெரும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு அதிக முக்கியத்துவம் இருந்து வந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு துறைசார்ந்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் பெரிதாக தமிழ் படங்கள் எதுவும் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. கடைசி விவசாயி, ராக்கெட்டரி போன்ற திரைப்படங்களுக்கு மட்டும் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது தமிழில் வெளிவந்த முக்கிய படங்களான ஜெய் பீம், அசுரன், சார்பாட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களுக்கு எந்த ஒரு விருதும் வழங்கப்படவில்லை.

இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற விமர்சனத்துக்குள்ளான திரைப்படங்களுக்கு தேசிய விருது கொடுத்திருப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தேசிய விருது பெற தகுதியான திரைப்படங்கள் என நினைக்கும் படங்களை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்!..

அண்ணன் லீவ் எடுத்துக்குறேன்பா!.. ஜெய் பீம் இயக்குனருக்கு டாடா காட்டிய ரஜினி…

முன்பை விட தற்சமயம் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கிடையேயான போட்டி என்பது அதிகரித்து வருகிறது பொதுவாக நடிகர்களின் மார்க்கெட் என்பது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக அதிக சம்பளம் வாங்கி மார்க்கெட்டில் முதல் இடத்தில் இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். 

ஆனால் தற்சமயம் இளம் தலைமுறையினரின் விருப்பமான நடிகர்களாக விஜய் அஜித் போன்ற நடிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் சினிமாவில் ரஜினிக்கு போட்டியான ஒரு நடிகர்களாக இருக்கின்றனர். சம்பள அளவிலும் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக இவர்கள் உள்ளனர்.

எனவே திரும்ப சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் தனது இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறார் ரஜினிகாந்த். அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

அதன் பிறகு லால் சலாம் திரைபடத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டு தற்சமயம் இரண்டு மாதம் விடுமுறை எடுத்துள்ளார் ரஜினி. ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

ஆனால் தொடர்ந்து படம் நடிப்பது அவருக்கு அயர்ச்சியை ஏற்படுத்துவதால் தற்சமயம் இரண்டு மாத விடுமுறை எடுத்துக் கொண்டு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் ரஜினிகாந்த். ஏற்கனவே ரஜினியின் கால் சீட்டுக்காக வெகு காலமாக காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ஞானவேலுக்கு இது இன்னும் பெரிய இடைவெளியாக அமைந்துவிட்டது.

மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி – சூர்யாவுக்கு மறுபடியும் ஹிட் படமா?

நடிகர் சூர்யா நடித்து இயக்குனர் ஞானவேல் இயக்கி வெளியான திரைப்படம்தான் ஜெய் பீம். உண்மை நிகழ்வை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழும் முக்கிய பிரச்சனைகளை பேசியது.

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது. சீனாவிலும் கூட இந்த படம் திரையிடப்பட்டது.

அங்கும் அதிக அளவிலான வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஞானவேல் இதற்கு முன்னர் கூட்டத்தில் ஒருவன் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

அந்த திரைப்படமும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் படமாக இருந்தது. இந்நிலையில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மீண்டும் ஒரு திரைப்படம் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான வேலைகள் அடுத்த வருடம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.