தமிழ் சினிமாவில் நிறைய நல்ல நல்ல திரைப்படங்கள் பெரிய நடிகர்களின் கைக்கு போய் பிறகு சில காரணங்களால் கை மாறி உள்ளது. அப்படியாக ரவி மோகன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார்.
அந்த திரைப்படத்தின் கதைக்கூட அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக அப்போது பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அவருக்கு அதிக சம்பளத்தை பேசினாராம் அவரது மாமியார். அது தயாரிப்பாளருக்கு ஒத்து வரவில்லை என அவர்கள் ஹீரோவை மாற்றிவிட்டனர்.
இதுக்குறித்து அப்போதே பேச்சுக்கள் இருந்தன. இதனால் ஜெயம் ரவி தனது மாமியாருடன் சண்டையில் இருந்தார் என்றும் பேச்சுக்கள் இருந்தன. தற்சமயம் அந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு தலைவன் தலைவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.