Tag Archives: kamalhaasan decision

அந்த மாதிரி இனிமே நடிக்க மாட்டேன்.. கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு..!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே பிரபலமான நடிகர்களாக இருந்து வரும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன்.

கதை தேர்ந்தெடுப்பதை பொருத்தவரை மற்ற நடிகர்களில் இருந்து கமலஹாசன் மொத்தமாக வேறுபட்டவராக இருக்கிறார். எப்போதுமே மாறுபட்ட கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

ஆனால் விக்ரம் திரைப்படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு ஆக்சன் திரைப்படங்கள் மீது இப்பொழுது கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார் கமல்ஹாசன்.

kamalhaasan

அந்த வகையில்தான் தக் லைஃப் திரைப்படத்தில் அவர் நடித்தார். விக்ரம் திரைப்படத்திலும் சரி தக் லைஃப் திரைப்படத்திலும் சரி தயாரிப்பாளராக கமலஹாசன்தான் இருந்தார்.

இந்த நிலையில் இனி கமலஹாசன் நடிக்கும் அனைத்து திரைப்படங்களையும் அவரே தயாரிக்க இருப்பதாக முடிவு எடுத்திருக்கிறாராம் கமல்ஹாசன் அதனால் வேறு தயாரிப்பாளர்கள் படங்களில் அவர் நடிப்பதாக இல்லை என்று கூறப்படுகிறது.