Tag Archives: kavya arivumani

நயன்தாராவை பார்த்து வந்த ஆசை.. வெளிப்படையாக கூறிய காவ்யா அறிவுமணி.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பலர் வந்து கொண்டிருக்கின்றனர். எப்பொழுதுமே சினிமாவில் நடிகைகளுக்கு மட்டும் பஞ்சம் இருந்ததே கிடையாது. சின்ன திரையில் இருந்து முயற்சி செய்யும் நடிகைகள் சமூக வலைத்தளங்கள் வழியாக முயற்சி செய்யும் நடிகைகள் என்று பல நடிகைகள் தொடர்ந்து சினிமாவிற்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அப்படியான நடிகைகளில் நடிகை காவியா அறிவுமணியும் முக்கியமானவர் சன் டிவியில் சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார் நடிகை காவியா அறிவுமணி.

தற்சமயம் திரைப்படங்களில் இவர் நடிக்க துவங்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் சென்னைக்கு வந்த ஒரு பெண்ணின் கதையை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது வெளி மாநிலத்திலிருந்து சென்னைக்கு வந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது நகைக்கடை வாசலில் பெரிய விளம்பரத்தை பார்க்கிறார்.

அந்த விளம்பரத்தில் நயன்தாரா நின்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த விளம்பரத்தை பார்த்து தானும் அந்த மாதிரியான ஒரு இடத்தை தொட வேண்டும் என்று கனவு காண்கிறார்.

தொடர்ந்து அதற்கான முயற்சிகளையும் செய்கிறார். அப்படியான விளம்பரங்களில் நடித்து பிறகு சீரியல்களில் நடித்து திரைப்படங்களிலும் வாய்ப்பை பெற்றார். அந்த பெண் வேறு யாரும் அல்ல நான் தான் என்று கூறியிருக்கிறார் காவ்யா அறிவுமணி.

இதன் மூலமாக நயன்தாராதான் தனக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருந்தார் என்பதை விளக்கி இருக்கிறார் காவியா அறிவுமணி.

மாம்பழத்தில் ஜுஸ் போடலாமா..! உச்சம் காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!..

சின்னத்திரையில் அதிகமான வரவேற்பு பெற்று வெள்ளித்துறையில் பெரிதாக வரவேற்பு பெறாத ஒரு நடிகை தான் காவியா அறிவுமணி.

இவர் பல காலங்களாக சின்னத்திரையில் நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார்.

kavya-arivumani

விஜய் டிவியில் வரவேற்பு:

முக்கியமாக விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக இருந்த இரண்டு  சீரியல்களில் இவர் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்

kavya-arivumani

முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காவியா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார்.

முல்லை கதாபாத்திரம்:

kavya-arivumani

இவருக்கு முன்பு வேறு ஒருவர் அதில் நடித்துக் கொண்டிருந்தார். அவர் பாதியிலே விலகி விட்டதால் பிறகு முல்லை கதாபாத்திரத்தை எடுத்து நடித்தார்.

தன் மூலமாக இவருக்கு நிறைய வாய்ப்புகளும் வரவேற்புகளும் வர துவங்கின. தமிழில் பரத் நடித்த மிரள் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

kavya-arivumani

அந்த திரைப்படம் கொஞ்சமாக பேசப்பட்ட படமாக இருக்கிறது. அதற்கு பிறகு இவர் நடித்த திரைப்படம் பெரிதாக  பேசப்படாத படமாக இருந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் காவியா அறிவுமணி. மஞ்சள் உடையில் கையில் மாம்பழ சாறுடன் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு தான் இப்பொழுது வரவேற்புகள் அதிகரித்து வருகின்றன.